search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GST Council meeting"

    • ஆயுள் காப்பீடு மற்றும் ஹெல்த் இன்சுரன்ஸ் ஆகியவற்றின் வரியை குறைப்பது குறித்து அடுத்து கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்
    • ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% வரி விதிக்கும் முடிவை தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 54 வது சரக்கு மற்றும் சேவை வரி [ஜிஎஸ்டி] கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. நொறுக்குத் தீனிகளுக்காக ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறிப்பிடப்பட்டுள்ளது

    மேலும் ஆயுள் காப்பீடு மற்றும் ஹெல்த் இன்சுரன்ஸ் ஆகியவற்றின் வரியை குறைப்பது குறித்து அடுத்து நவம்பர் மாதம் நடக்க உள்ள கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% வரி விதிக்கும் முடிவை தாற்காலிகமாக ஒத்திவைக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    ரூ. 2,000 வரையில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்க அரசு பரிசீலித்து வந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் அதற்கு ஆட்சேபனை  தெரிவித்துள்ளனர். சிறிய அளவிலான பரிவர்த்தனை செய்யும் நடுத்தர வகுப்பு மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் கூறியதால் இந்த முடிவை அரசு தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.

    • அனைத்து வகை பால் கேன்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
    • மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் 53-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில நிதி மந்திரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

    எஃகு, அலுமினியம், இரும்பு உள்ளிட்ட பால் கேன்களுக்கு ஒரே சீரான 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும்.

    அட்டை பெட்டிகளுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.

    மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு விலக்கு அளிக்கப்படும். மாணவர்கள் 90 நாட்கள் தங்கவேண்டும். மாத வாடகை ரூ.20 ஆயிரத்திற்கு மேல் இருக்கக்கூடாது என நிபந்தனை விதிக்கப்படுகிறது.

    ரெயில் நிலையங்களில் பயணிகள் ஓய்வெடுக்கும் அறை, பொருட்கள் வைக்கும் அறை, பயணிகள் பயன்படுத்தும் மின்சார வாகனங்களுக்கான சேவை, ரெயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட்டுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்படும் என தெரிவித்தார்.

    • 51-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று நடந்தது.
    • தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இதில் இணைய வழியாக பங்கேற்றார்.

    சென்னை:

    இணைய வழி விளையாட்டுகள் மீது ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பான விதிகளின் திருத்த வரைவின் சில கூறுகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத் தலைவர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 51-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமைச் செயலகத்திலிருந்து இணைய வழியாக கலந்து கொண்டார்.

    இணையவழி விளையாட்டுக்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றின் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவு, கூட்ட நடவடிக்கைப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

    தமிழ்நாட்டில், சமீபத்தில் இயற்றப்பட்ட தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டுக்கள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தினை கருத்தில் கொண்டு, இக்கூட்டத்தில் முன்மொழியப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவின் சில கூறுகளுக்கு எதிராக தங்கம் தென்னரசு வலிமையான கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன.

    இணையவழி சூதாட்டம், பணம் அல்லது பிற ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ள இணையவழி விளையாட்டுக்கள் மற்றும் குறிப்பிட்ட வாய்ப்புள்ள இணையவழி விளையாட்டுக்கள் ஏற்கெனவே தடை செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படுவதால், தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களை அத்தகைய மாநில சட்டங்களுக்கு இணக்கமான முறையில் அமைய வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.

    சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவில் குறிப்பிட்ட கூறுகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இணையவழி பண விளையாட்டுக்கான சட்ட வரையறையில், தற்போது நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டம், அல்லது அதன் கீழ் தடைசெய்யப்பட்ட, அல்லது வாய்ப்பின் அடிப்படையில் செயல்திறன் அல்லது விளைவுகள் இருக்கும் விளையாட்டுக்களை கொண்டுவரக்கூடாது என தெரிவித்தார்.

    மேற்கூறிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்த வரைவில் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் வரிமன்றத்தால் உறுதியளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜிஎஸ்டியில் பூஜ்யம், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என ஐந்து வரி அடுக்குகள் உள்ளன.
    • இந்தக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி. நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி பகிர்வு தொகை, பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிகளை மாற்றியமைப்பது போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 47-வது கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜூன் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெற உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் அனைத்து மாநில நிதி மந்திரிகள் பங்கேற்க உள்ளனர்.

    ஸ்ரீநகரில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் மாநிலங்களின் சார்பில் வைக்கப்பட்டுள்ள வரி மாற்றங்கள், கேளிக்கை விடுதிகள் (கேசினோக்கள்), குதிரை பந்தயம் (ரேஸ் கோர்ஸ்கள்), ஆன்லைன் விளையாட்டு மீதான ஜிஎஸ்டி வரி விகிதம் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    • ஜிஎஸ்டியில் பூஜ்யம், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என ஐந்து வரி அடுக்குகள் உள்ளன.
    • இந்தக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி. நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    புதுடெல்லி:

    மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி பகிர்வு தொகை, பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிகளை மாற்றியமைப்பது போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 47-வது கூட்டம் ஸ்ரீநகரில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜூன் 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெற உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் அனைத்து மாநில நிதி மந்திரிகள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் மாநிலங்களின் சார்பில் வைக்கப்பட்டுள்ள வரி மாற்றங்கள், கேளிக்கை விடுதிகள் (கேசினோக்கள்), குதிரை பந்தயம் (ரேஸ் கோர்ஸ்கள்), ஆன்லைன் விளையாட்டு மீதான ஜிஎஸ்டி வரி விகிதம் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    இந்நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 47-வது கூட்டம் ஸ்ரீநகருக்கு பதிலாக சண்டிகருக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    ரியல் எஸ்டேட் துறைக்கான வரி குறைப்பை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக 19-ந்தேதி நடத்த திட்டமிட்டு இருந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்துக்கு தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. #GSTCouncil #ElectionCommission
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஒரே சீரான வரி வசூலுக்காக ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த வரி அமலாக்கத்தை சீராக நடத்துவதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சிலும் அமைக்கப்பட்டது. மத்திய நிதி மந்திரி மற்றும் மாநில நிதி மந்திரிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த கவுன்சில், அவ்வப்போது கூடி ஜி.எஸ்.டி. குறித்து விவாதித்து பல்வேறு முடிவுகளை செயல்படுத்தி வருகிறது.

    அந்தவகையில் இந்த கவுன்சிலின் 34-வது கூட்டம் வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடத்த தீர்மானிக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் துறைக்கான வரியை குறைப்பது தொடர்பாக கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து வருகிற கூட்டத்தில் முடிவு செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.

    கட்டுமானப்பணியில் இருக்கும் வீடுகளுக்கான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகவும், குறைந்த விலை வீடுகளுக்கான ஜி.எஸ்.டி. 8 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகவும் குறைக்க கடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 10-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு தேர்தல் கமிஷனின் அனுமதி பெற வேண்டி இருந்தது. ஜி.எஸ்.டி. குறைப்பு உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த ஒப்புதல் அவசியமாகும்.

    எனவே இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதை பரிசீலித்த தேர்தல் கமிஷன் 19-ந்தேதி நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அனுமதி அளித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
    ஜி.எஸ்.டி. துணை கமிட்டி கூட்டம் 23-ந் தேதியும், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 24-ந் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. #GSTCouncilMeeting
    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 33-வது கூட்டம் நேற்று நிதி மந்திரி அருண்ஜெட்லி தலைமையில் தொடங்கியது. காணொலிகாட்சி மூலம் நடந்த இந்த கூட்டத்தில் கேரளா, டெல்லி, பஞ்சாப் உள்பட 6 மாநில நிதி மந்திரிகள் ரியல் எஸ்டேட், லாட்டரி சீட்டு போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அருண்ஜெட்லியிடம் கூறினார்கள். இதைத்தொடர்ந்து ஜி.எஸ்.டி. துணை கமிட்டி கூட்டம் 23-ந் தேதியும், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 24-ந் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அருண்ஜெட்லியும், ‘இன்றைய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்ட விவாதம் இன்னும் நிறைவுபெறவில்லை’ என்று தெரிவித்தார். ஜனவரி மாத ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் தேதியும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டு, நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்ய வேண்டும் என்றும், காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் இந்த மாத இறுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×