search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guinness"

    • சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை கௌரவிக்கும் வகையில், 50 மணி நேர இடைவிடாத நேரலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • செப்டம்பர் 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு முடிவடைந்த இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

    RJ விக்னேஷ்காந்த் மற்றும் 'சுட்டி' அரவிந்த் ஆகியோர் இணைந்து பிளாக் ஷீப் தமிழ் என்ற யூட்யூப் சேனலை நடத்தி வருகின்றனர்.

    இந்த யூட்யூப் சேனலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை கௌரவிக்கும் வகையில், 50 மணி நேர இடைவிடாத நேரலை நிகழ்ச்சியை RJ விக்னேஷ்காந்த் நடத்தினார். இந்த நிகழ்ச்சி சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல மாலில் நடைபெற்றது.

    ரஜினியின் 50 ஆண்டுக் கால திரை வாழ்க்கையை போற்றும் விதமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், திரைப்படத் துறையைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் ரஜினியின் ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    செப்டம்பர் 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு முடிவடைந்த இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இயக்குநரும் நடிகருமான சசிகுமார் கின்னஸ் சாதனை சான்றிதழை விக்னேஷ்காந்திடம் வழங்கினார்.

    இந்நிலையில், 50 மணி நேர இடைவிடாத போட்காஸ்ட் நேரடி ஒளிபரப்பு நடத்தியதற்காக ஆர்.ஜே.விக்னேஷ்காந்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

    விக்னேஷ்காந்த் மற்றும் அவரது குழுவினர் அதிகம் சிரமப்பட வேண்டாம் என்று வாய்ஸ் நோட் ஒன்றை ரஜினிகாந்த் அனுப்பியுள்ளார். அதில், அவர்களின் கடின உழைப்புக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.



    • 1931 இல் திருமணம் செய்துகொண்ட மரியாவுக்கு 3 குழந்தைகள், 11 பேரக் குழந்தைகள் மற்றும் 13 கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர்.
    • 1908 ஆம் ஆண்டு மே 23 இல் பிறந்த இதூக்கா, இளமைக்காலங்களில் மலையேற்ற வீரராக இருந்துள்ளார்.

    உலகின் மிக வயதான பெண்மணி என்று கின்னஸ் சாதனை படைத்த மரியா பிரான்யாஸ் தனது 117 வயதில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் பிறந்த மரியா பிரான்யாஸ் இரண்டு உலகப் போர்களை பார்த்ததுடன், ஸ்பெயின் உள்நாட்டுப் போர், 1918 ஆம் ஆண்டு பெரிய அளவில் பரவிய காய்ச்சல் மற்றும் கோவிட் தொற்று ஆகியவற்றை பார்த்தவர் ஆவார்.

     

    மரியா பிரான்யாஸ் கடந்த 1907 ஆம் ஆண்டு, மார்ச் 4ஆம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். அதன்பின் அவரது குடும்பம் சொந்த நாடான ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்தது.

    1931 இல் திருமணம் செய்துகொண்ட மரியாவுக்கு 3 குழந்தைகள், 11 பேரக் குழந்தைகள் மற்றும் 13 கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர். வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள ஓலோட் நகரில் சாண்டா மரியா என்ற முதியோர் இல்லத்தில் வசித்து வந்த மரியா பிரான்யாஸ் நேற்று முன் தினம் [ஆகஸ்ட் 20] காலமானார். மரியா அவர் விரும்பியபடியே தூக்கத்தில் அமைதியான முறையில் வலியில்லாமல் உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    உலவகின் மிக வயதான பெண்மணியாக மரியா பிரன்யாஸ் உயிரிழந்ததை அடுத்து ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 116 வயது மூதாட்டியான தொமிக்கோ இதூக்கா [Tomiko Itooka] உலகின் மிக வயதான பெண்மையாக கின்னஸ் புத்தக அங்கீகாரத்தை பெற்றுள்ளார். 1908 ஆம் ஆண்டு மே 23 இல் பிறந்த இதூக்கா, இளமைக்காலங்களில் மலையேற்ற வீரராக இருந்துள்ளார். 3 குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் இதூக்கா ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள அசியா [Ashiya] நகரின் வசித்து வருகிறார்.   

     

    • டேவிட் ரஷ் என்பவர் 13.64 வினாடிகளில் ஒரு லிட்டர் லெமன் ஜூஸை (எலுமிச்சை சாற்றை) குடித்து உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
    • உலகில் உள்ள எந்தவொருவரையும் விட அதிக சாதனைகளைச் செய்ய வேண்டும் என்பதையே டேவிட் தனது வாழ்நாள் இலக்காகக் கொண்டுள்ளார்.

    அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தைச் சேர்ந்த டேவிட் ரஷ் என்பவர் 13.64 வினாடிகளில் ஒரு லிட்டர் லெமன் ஜூஸை (எலுமிச்சை சாற்றை) குடித்து உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.இதற்கு முன்பு 16.5 வினாடிகளில் 1 லிட்டர் (4.2 கப்) லெமன் ஜூஸை 16.5 வினாடிகளில் வேகமாகக் குடித்தவர் என்ற பட்டத்தை டேவிட் தன்வசம் வைத்திருந்தார்.

    ஆனால் இடைப்பட்ட காலத்தில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தொடர் சாதனையாளர் ஆண்ட்ரே ஆர்டோல்ஃப் 16 வினாடிகளில் 1 லிட்டர் லெமன் ஜுஸை குடித்து டேவிட்டின் பட்டதைத் தட்டிச் சென்றார். அதை முறியடிக்கும் முயற்சியில் இறங்கிய டேவிட் தற்போது இந்த சாதனையைப் படைத்துள்ளார். 13.64 வினாடிகளில் 1 லிட்டர் லெமன் ஜூஸ் அருந்திய அனுபவம் குறித்து டேவிட் கூறுகையில், இந்த அனுபவம் இனிமையானதாக இல்லை என்றும் இதனால் கடுமையான வயிற்றுவலிக்கு ஆளானதாகவும் தெரிவித்தார்.

    எப்போதும் புதுமையான விஷயங்களை முயற்சி டேவிட் பார்க்கும் இதுவரை 250க்கும் மேற்பட்ட கின்னஸ் உலக சாதனைகளை முறியடித்துள்ளார். மேலும் தற்போது அவர் நிகழ்த்திக்காட்டியுள்ள சாதனையையும் சேர்ந்து 165 பட்டங்களை டேவிட் ரஷ் தன்வசம் வைத்துள்ளார். உலகில் உள்ள எந்தவொருவரையும் விட அதிக சாதனைகளைச் செய்ய வேண்டும் என்பதையே டேவிட் தனது வாழ்நாள் இலக்காகக் கொண்டுள்ளார். 

    • பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரி மாணவிகள் கின்னஸ் சாதனை படைத்தனர்
    • மாவட்ட போலீஸ் எஸ்.பி.ஷ்யாம்ளாதேவி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்டமான சிவப்பு ரிப்பன் குறியீட்டினை அமைக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்று வரும் விழிப்புணர்வு வாரத்தின் மூன்றாம் நாளான நேற்று பெரம்பலூர் பாலக்கரையிலிருந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி கலந்துகொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். கல்லீரல் புற்று நோய்க்கான எமரால்டு பச்சை நிறமும் நுரையீரல் புற்றுநோய்க்கு வெள்ளை நிறமும் மார்பகப் புற்றுநோய்க்கு இளஞ்சிவப்பு நிறமும் எலும்பு புற்றுநோய்க்கு மஞ்சள் நிறமும் என பல்வேறு வகையான புற்றுநோய்களை குறிக்கும் வகையில் 12 வகையான நிறங்களில் டி-சர்ட்களை மாணவிகள் அணிந்துகொண்டு புற்றுநோய் விழிப்புணர்வு வாசங்கள் கொண்ட பதாகைகளை ஏந்திச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    பேரணியைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்டமான சிவப்பு ரிப்பன் குறியீட்டின் மூலம் புதிய கின்னஸ் சாதனைப் படைத்தனர். டாக்டர்.ஜெட்லியின் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சிக்கான பதக்கங்கள் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டியது. இந்நிறுவனம் இந்நிகழ்வினை உலக சாதனை புத்தகத்திற்கு பரிந்துரைத்துள்ளது. இந்த கேடயம் மற்றும் விருது, சான்றிதழ் ஆகியவற்றை எஸ்பி ஷ்யாம்ளாதேவி வழங்கி பாராட்டினார். விழிப்புணர்வு பேரணியில்தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி முதல்வர் பேராசிரியர் உமாதேவி பொங்கியா மற்றும் ஆயிரக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர்.


    சியோமி இந்தியா நிறுவனம் புதிய உலக சாதனை படைத்து கின்னஸ்-இல் இடம் பிடித்துள்ளது. #Xiaomi



    சியோமி இந்தியா நிறுவனம் உலகின் மிகப்பெரிய மின்விளக்கு மோசேக் லோகோ கட்டமைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

    சியோமியின் Mi லோகோ 9,690 மின்விளக்குகளால் உருவாக்கப்பட்டுள்ளது. சியோமி இந்தியாவின் விளபம்ர பரிவினரின் சிறப்பு திட்டத்தின் கீழ் இந்த மின்விளக்கு மோசேக் லோகோ செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் Mi பிரான்டை மேலும் பிரபலப்படுத்தும் விதமாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.



    இந்தியாவில் சியோமி பிரான்டு பிரபலமாக முக்கிய காரணமாக இருக்கும் சியோமி இந்தியா ஊழியர்கள் மற்றும் Mi பிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரம்மாண்ட சின்னமாக இந்த லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் விளம்பர துறையில் சியோமியின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது.

    புதிய உலக சாதனையுடன் Mi ஹோம் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் ஒன்றை பெங்களூருவில் புதிதாக திறந்துள்ளது. இந்த விற்பனை மையம் சியோமி தலைமையக கட்டிடத்தின் தரைதளத்தில் அமைந்துள்ளது.
    தேனி மாவட்டம் போடி அருகே ஒன்றரை நிமிடத்தில் 160 மூலிகைகளின் பெயரை மனப்பாடமாக ஒப்புவித்த சிறுமியின் பெயர் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்வதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. #vikasinirecites #160herbsname #guinnessattempt
    தேனி:

    தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் துரைராஜபுரம் காலனியை சேர்ந்த கனகராஜ்-வனிதா தம்பதியின் மகள் விகாசினி. தற்போது ஐந்து வயது சிறுமியாக உள்ள  விகாசினி, சமீபத்தில் 1 நிமிடம் 27.5 நொடிகளில் 160 வகையான மூலிகைகளின் பெயரை மனப்பாடமாக  உலக சாதனை அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் முன்னிலையில் ஒப்புவித்தார். 

    இதற்கு முன்னர், 3 நிமிடத்தில் 160 மூலிகைகளின் பெயர் ஒப்புவித்த நிகழ்ச்சி இன்றுவரை உலக சாதனையாக இருந்துவரும் நிலையில், அதைவிட குறைந்த நிமிடத்தில்  தற்போது மனப்பாடமாக ஒப்புவித்துள்ள விகாசினியின் பெயர் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. #vikasinirecites #160herbsname  #guinnessattempt
    ×