search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gujarat minister"

    • குஜராத் மாநில அமைச்சர் ருஷிகேஷ் பாய்படேல் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
    • பல வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் இருந்து சவுராஷ்ட்டிரா மக்கள் புலம்பெயர்ந்து தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

    நெல்லை:

    குஜராத் மாநில அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து சவுராஷ்டிரா தமிழ்சங்கம் விழாவை கடந்த 17- ந்தேதி முதல் தொடங்கி நடத்தி வருகிறது.

    சவுராஷ்டிரா தமிழ்சங்கமம் விழா

    இதன் தொடர்ச்சியாக பாளை கே.டி.சி. நகரில் உள்ள தனியார் அரங்கத்தில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் விழா சங்க மாநிலத் தலைவர் அனந்தராமன் தலை மையில் நடைபெற்றது.

    இதில் குஜராத் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, உயர் மற்றும் தொழில்நுட்பக்கல்வி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ருஷிகேஷ் பாய்படேல் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு சங்கமம் விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    பல வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் இருந்து சவுராஷ்ட்டிரா மக்கள் புலம்பெயர்ந்து தமிழகத்திற்கு வந்துள்ளனர். இங்கு தமிழ் மக்களோடு இணைந்து தமிழக மக்களாகவே மாறி தொழில், கல்வி, வியாபாரம் என அனைத்து நிலைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். மேலும் இங்குள்ள மக்களுக்கு சேவை யாற்றியும் வருகின்றனர். அந்த மக்களை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    தமிழ்நாடு, குஜராத் என அனைத்தும் ஓரே நாடுதான். ஒருவரோடு ஒருவர் நன்கு நட்பு பாராட்ட வேண்டும். இரு மாநிலங்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை இரு மாநிலத்த வர்களும் அறிந்து கொள்ள வேண்டும்்.

    தொழில் ரீதியாக, வியாபார ரீதியாக தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டே இந்த சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    பாதுகாப்பான மாநிலம்

    தமிழ்நாட்டை பொறுத்த வரை அனைத்து மொழி பேசுபவர்களும் வாழ பாதுகாப்பான அமைதியான மாநிலமாகும். இங்குள்ளவர்கள் நட்பை பேணுவதிலும், வரவேற்ப திலும் சிறந்தவர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விழாவில் குஜராத் மாநிலம் மகேஷன் மாவட்ட கலெக்டர் நாகராஜன், சவுராஷ்டிரா பல்கலைக்கழக துணை வேந்தர் க்ரிஷ்பாய்பீமணி, மற்றும் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளை சேர்ந்த சவுராஷ்டிரா மக்கள் கலந்து கொண்டனர்.

    மோடி நின்றால் கம்பீரமான குஜராத் சிங்கம் போல் தெரிகிறது. ஆனால், சீனா அல்லது பாகிஸ்தான் வீசும் ரொட்டிக்கு வாலாட்டும் நாய்க்குட்டி போல் ராகுல் காந்தி தெரிகிறார் என குஜராத் மந்திரி குறிப்பிட்டுள்ளார். #Gujaratminister #Rahul #Rahulpuppy #GanpatVasava
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அம்மாநில மந்திரி கன்பத் வசவா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்தார்.

    பிரதமர் மோடி எழுந்து நின்றால் கம்பீரமான குஜராத் சிங்கம் நிற்பதுபோல் தெரிகிறது. ஆனால், ராகுல் காந்தி நின்றால் வாலாட்டும் நாய்க்குட்டி போல்  தெரிகிறார்.  சீனா ஒரு ரொட்டியை வீசினால் அவர் சீனாவுக்கு போவார்.  

    பாகிஸ்தான் வீசும் ரொட்டிக்காக பாகிஸ்தானுக்கு போவார் என கன்பத் வத்சவா செய்திருக்கும் விமர்சனத்துக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    அவரது கருத்துக்கு குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பரபரப்பான தேர்தல் பிரசார காலங்களில் இதுபோன்ற தரக்குறைவான தனிநபர் விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். #Gujaratminister #Rahul #Rahulpuppy #GanpatVasava
    குஜராத் மாநிலத்தில் குடிநீர் பற்றாக்குறைக்காக போராட்டம் நடத்திய பெண்களிடம் நீங்கள் எனக்கு போட்ட ஓட்டின் அளவுக்கு தான் தண்ணீர் கிடைக்கும் என்று கூறிய மந்திரியின் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது. #KunwarjiBavaliya #Gujaratminister
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் பல இடங்களில் ஏரிகளில் உள்ள நீர்மட்டம் குறைந்து சில மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்காக அம்மாநிலத்தின் ஆளும்கட்சியான பாஜக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. குடிநீர் பிரச்சனையை மையமாக வைத்து ராஜ்கோட் மாவட்டத்தில் கனேசாரா கிராமத்தில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக குஜராத் மாநில குடிநீர் வினியோகம் மற்றும் கால்நடைத்துறை மந்திரி கன்வர்ஜி பவாலியா வாக்கு சேகரிக்க வந்தார். அவரை வழிமறித்த பெண்கள் தங்கள் பிரச்சனையை கூறி முறையிட்டனர்.


    அவர்களிடம் கடுகடுப்பாக பேசிய மந்திரி கன்வர்ஜி பவாலியா, கடந்த தேர்தலில் நான் உங்களிடம் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டு பிரசாரம் செய்தும் நீங்கள் எனக்கு 55 சதவீதம் வாக்குகளை தானே அளித்தீர்கள்? என்று கிண்டலாக கேட்டார்.

    அவருடன் வந்திருந்த அந்த தொகுதியின் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. பரத் கோக்ரா நீங்கள் ஓட்டு போட்டது போல் பாதி அளவு தண்ணீர் மட்டுமே கிடைக்கும் என கேலியாக குறிப்பிட்ட சம்பவம் குஜராத் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #KunwarjiBavaliya #Gujaratminister
    குஜராத் மாநிலத்தில் வரும் 31-ஆம் தேதி நடைபெறும், சர்தார் வல்லபாய் பட்டேல் உருவ சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #PatelStatue #StatueOfUnity #EdappadiPalaniswami
    சென்னை:

    இந்தியாவின் முதல் துணை பிரதரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படும் தலைவருமான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு உலகிலேயே மிக, மிக உயரமான, பிரமாண்ட சிலை குஜராத்தில் நிறுவப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு சிலை தொடக்கப்பணிகள் ஆரம்பித்தன. இதற்கு தேவையான கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தானமாக பெறப்பட்டது.

    தற்போது இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்ட நிலையில், சர்தார் வல்லபாய் பட்டேலில் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதி சிலை திறக்கப்படுகிறது. திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

    இந்நிலையில், குஜராத் மாநில அமைச்சர் கன்பத் சின்கா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். அப்போது, சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கி, விழாவில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டனர்.



    சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். சிலையின் மொத்த உயரம் 182 மீட்டராகும். 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு உள்ள தீவில் இந்த சிலை கம்பீரமாக நிற்கப் போகிறது. இந்த சிலையை சுற்றி 12 சதுர கி.மீ. அளவுக்கு செயற்கை ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் மிக சிறந்த சுற்றுலா தலங்களுள் ஒன்றாக மாற்ற குஜராத் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா வருகிற 31-ந்தேதி நடைபெற உள்ளது. #PatelStatue #StatueOfUnity #EdappadiPalaniswami

    ×