என் மலர்
நீங்கள் தேடியது "Gukesh D"
- தமிழ்நாடு செஸ் சங்கம் மற்றும் ரஷிய அறிவியல் கலாச்சார மையம் ஆகியவை சார்பில் டி.குகேசுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது.
- ஜூன் 25 முதல் ஜூலை 5 வரை ருமேனியாவில் நடைபெறும் செஸ் போட்டியில் டி.குகேஷ் பங்கேற்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
சென்னை:
கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் சமீபத்தில் நடந்த கேண்டிடேட் செஸ் போட்டியில் 17 வயதான சென்னை கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரனுடன் அவர் மோதுகிறார். உலக போட்டியில் விளையாடும் இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். குகேஷ்-டிங் லிரன் மோதும் உலக செஸ் போட்டி நவம்பரில் நடக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு செஸ் சங்கம் மற்றும் ரஷிய அறிவியல் கலாச்சார மையம் ஆகியவை சார்பில் டி.குகேசுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது.
இந்தியா ஒலிம்பிக் சங்கத்தின் மூத்த துணை தலைவர் அஜய் படேல், சர்வதேச செஸ் சம்மேளன துணைத் தலை வர் டி.வி. சுந்தர் தமிழ்நாடு செஸ் சங்க தலைவர் எம்.மாணிக்கம், அகில இந்திய செஸ் சம்மேளன முன்னாள் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், வேலம்மாள் கல்வி நிறுவனத்தை சேர்ந்த எம்.வி.எம்.வேல்மோகன், இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டரான மானுவேல் ஆரோன தமிழ்நாடு செஸ் சங்க பொதுச் செயலாளர் பி.ஸ்டீபன் பாலசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று டி.குகேஷை பாராட்டினர்.
பாராட்டுக்கு நன்றி தெரிவித்து 'டி.குகேஷ் பேசும்போது சீன வீரர் டிங் லிரனுடன் மோதும் உலக செஸ் போடடியில் எனது சிறந்த நிலையை வெளிப்படுத்த முயற்சிப்பேன்' என்றார்.
ஜூன் 25 முதல் ஜூலை 5 வரை ருமேனியாவில் நடைபெறும் செஸ் போட்டியில் டி.குகேஷ் பங்கேற்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
- ஆண்கள் பிரிவில் குகேஷ், அர்ஜூன் எரிகாசி ஆகியோர் வெற்றியை வசப்படுத்தினர்.
- பிரக்ஞானந்தா மற்றும் விடித் குஜராத்தி ஆகியோர் தங்களது ஆட்டத்தை டிரா செய்தனர்.
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று நடந்த 5-வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி அஜர்பைஜானை தோற்கடித்தது.
இதன் மூலம் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் அணி தொடர்ந்து 5வது வெற்றியை பதிவு செய்துள்ளது. அஜர்பைஜானை 3-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் இந்திய அணி 2.5-1.5. என்ற கணக்கில் கஜகஸ்தானை தோற்கடித்தது.
ஆண்கள் பிரிவில் குகேஷ், அர்ஜூன் எரிகாசி ஆகியோர் சிறப்பாக விளையாடி தங்களது ஆட்டங்களில் வெற்றியை வசப்படுத்தினர். நிஜாத் அபாசோவ் மற்றும் ஷக்ரியார் மமேத்யரோவ் ஆகியோருக்கு எதிராக ஆர் பிரக்ஞானந்தா மற்றும் விடித் குஜராத்தி ஆகியோர் டிரா செய்தனர். அய்டின் சுலைமான்லியை டி குகேஷ் தோற்கடித்தார்.
- குகேஷ் 2775.2 புள்ளிகளையும், எரிகைசி 2788.1 புள்ளிகளையும் பெற்றுள்ளார்.
- மேக்னஸ் கார்ல்சன் 2832.3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
வரலாற்றில் முதல் முறையாக நேரடி செஸ் தரவரிசையில் முதல் 5 இடங்களில் 2 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய செஸ் வீரர்கள் அர்ஜுன் எரிகைசி மற்றும் குகேஷ் டி ஆகியோர் நேரடி செஸ் தரவரிசையில் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பெற்றுள்ளனர்.
குகேஷ் 2775.2 புள்ளிகளையும், எரிகைசி 2788.1 புள்ளிகளையும் பெற்றுள்ளார். நேரடி செஸ் தரவரிசையில் இரண்டு இந்தியர்கள் முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை. மேக்னஸ் கார்ல்சன் 2832.3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்
- டிங் லிரென் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
- வரலாற்றிலேயே இளம் சாம்பியன் ஆனார் குகேஷ்.
18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று குகேஷ் சாதனைப் படைத்துள்ளார். 14 மற்றும் கடைசி சுற்று போட்டியில் சீனாவை சேர்ந்த டிங் லிரெனை எதிர்கொண்ட இந்திய வீரர் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இந்தப் போட்டியில் 58வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிங் லிரென் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
இதன் மூலம் இறுதிப் போட்டியில் வென்றதோடு, உலகின் செஸ் சாம்பியன் பட்டத்தை குகேஷ் வென்றார். இதனை சர்வதேச செஸ் கூட்டமைப்பு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. அந்த பதிவில், "வரலாற்றிலேயே இளம் சாம்பியன் ஆனார் குகேஷ் டி," என்று குறிப்பிட்டு இந்திய தேசிய கொடி, தீ மற்றும் கைத்தட்டுவதை குறிக்கும் எமோஜிக்களை இணைத்து இருந்தது.
உலகின் இளம் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்-க்கு பிரதமர் மோடி துவங்கி பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், உலக செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் 2024 பட்டத்தை வெல்பவருக்கு மொத்த பரிசுத் தொகை 2.5 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 20 கோடியே 75 லட்சம் ஆகும். சர்வதேச செஸ் கூட்டமைப்பு விதிகளின் படி வீரர்கள் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் 2 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 கோடியே 68 லட்சம் வழங்கப்படும்.
இதை தவிர்த்த மீதித் தொகை இரு வீரர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். 2024 செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் குகேஷ் மூன்று (3வது, 11வது மற்றும் 14வது) போட்டிகளில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் 6 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 5 கோடியே 04 லட்சம் பெறுவார். இவரை எதிர்த்து விளையாடிய டிங் 1 மற்றும் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 கோடியே 36 லட்சம் வென்றுள்ளார்.
அந்த வகையில் மீதமுள்ள 1.5 மில்லியன் டாலர்கள் குகேஷ் மற்றும் டிங் இடையே பகிர்ந்து அளிக்கப்படும். இதில் குகேஷ் 1.35 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 11 கோடியே 34 லட்சமும், டிங் 1.15 மில்லியன் இந்திய மதிப்பில் ரூ. 9 கோடியே 66 லட்சமும் பெறுவார்கள் என்று தெரிகிறது.
- 10 வயது நிரம்பாத சிங்கப்பூர் சிறுமி ஒருவர் குகேஷை நெருங்கினாள்.
- சிறுமியின் அன்பை கண்டு பூரித்துபோன குகேஷ் பேரன்புடன் அதில் தனது ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார்.
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழக வீரர் குகேஷ் சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன்மூலம் 18 வயதில் உலக சாம்பியன் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு, முன்னாள் சாம்பியன் கார்ல்சன் தொடங்கி உலக பணக்காரரான எலான் மஸ்க் வரை உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. போட்டி முடிந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பில் குகேஷ் கலந்து கொண்டார். அப்போது 10 வயது நிரம்பாத சிங்கப்பூர் சிறுமி ஒருவர் குகேஷை நெருங்கினாள்.
தான் குகேஷின் தீவிர ரசிகை எனக்கூறியபடி தன் கைகளால் செய்யப்பட்ட தலையணை ஒன்றை அவரிடம் காண்பித்து 'ஆட்டோகிராப்' போடும்படி கேட்கிறார். சிறுமியின் அன்பை கண்டு பூரித்துபோன குகேஷ் பேரன்புடன் அதில் தனது ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார்.
இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி 20 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
- இளம் செஸ் சாம்பியன் ஆக வேண்டும் என்பது எனது கனவு.
- செஸ் ஒரு அழகான விளையாட்டு. அதை அழுத்தம் இல்லாமல் விளையாட வேண்டும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இளம் வயதில் உலக சாம்பியன் ஆன வீரர் என்ற வரலாற்று சாதனையையும் இவர் படைத்தார்.
இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் இன்று தாயகம் திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை தரப்பிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய குகேஷ், "எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. நீண்ட காலம் செஸ் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடியது கடினமாக இருந்தது. டை பிரேக் வரும் என எதிர்பார்த்தேன். நானே எதிர்பார்க்காத நேரத்தில் இந்த வெற்றி கிடைத்துள்ளது.
இளம் செஸ் சாம்பியன் ஆக வேண்டும் என்பது எனது கனவு. வெற்றி பெற்ற தருணம் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. சிறிய வயதில் இருந்தே ஆசைப்பட்டது நிறைவேறிய தருணம் நெகிழ்ச்சியாக இருந்தது. செஸ் ஒரு அழகான விளையாட்டு. அதை அழுத்தம் இல்லாமல் விளையாட வேண்டும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் எல்லா சூழலிலும் தேவையான நிதியுதவி வழங்கி ஊக்குவித்தனர். சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் தொடரை அரசு நடத்தியது எனக்கு பெரும் உதவியாக இருந்தது. இதுபோல தொடர் ஆதரவு கிடைத்தால் பல இளம் செஸ் வீரர்கள் வருவார்கள்" என்று தெரிவித்தார்.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷூக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நாளை பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், தமிழக கிராண்ட் மாஸ்டர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
- டி.குகேஷ் சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
- இந்த விருது 2025-ம் ஆண்டில் இன்னும் கடினமாக உழைக்க மற்றும் நாட்டிற்காக அதிக விருதுகளை அடைய என்னை ஊக்குவிக்கும்.
புதுடெல்லி:
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுகளை வழங்கி வருகிறது. 2024-ம் ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் துப்பாக்கி சூடு வீராங்கனை மனு பாக்கர், செஸ் வீரர் டி.குகேஷ், ஆக்கி வீரர் ஹர்மன்பிரீத் சிங், மாற்று திறனாளி வீரர் பிரவீன்குமார் ஆகியோர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையை சேர்ந்த டி.குகேஷ் சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இளம் வயதில் உலக செஸ் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார்.
இதுகுறித்து குகேஷ் கூறியதாவது:-
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் எனக்கும் எனது சாதனைகளை அங்கீகரிக்கவும் மதிப்புமிக்க மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதை அறிவித்ததை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்திய அரசு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இந்த விருது 2025-ம் ஆண்டில் இன்னும் கடினமாக உழைக்க மற்றும் நாட்டிற்காக அதிக விருதுகளை அடைய என்னை ஊக்குவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த தொடரின் 12-வது சுற்று போட்டி நேற்று நடைபெற்றது.
- குகேஷின் 7-வது டிராவாக இது அமைந்தது.
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நெதர்லாந்திரில் நடைபெற்று வருகிறது. 13 சுற்றுகளை கொண்ட இந்த தொடரின் 12-வது சுற்று போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் உலக சாம்பியன் சென்னை கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் உள்ளளூரை சேர்ந்த ஜோர்டான் வான் பாரஸ்டை எதிர்கொண்டார். நீண்ட நேரம் நீடித்த நிலையில், இந்த ஆட்டம் டிரா ஆனது. இதனால் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் கிடைத்தது. இந்த தொடரில் குகேஷின் 7-வது டிராவாக இது அமைந்தது.
மற்றொரு சென்னை கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா செர்பியாவை சேர்ந்த அலெக்சியை 29-வது காய் நகர்தலுக்கு பிறகு தோற்கடித்தார். இது அவரது 5-வது வெற்றியாக அமைந்தது. தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து பிரக்ஞானந்தா முன்னேற்றம் அடைந்துள்ளார்.
12 சுற்றுகளின் முடிவில், பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகிய இருவரும் தலா 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். இன்று நடைபெறும் 13-வது மற்றும் இறுதி சுற்று போட்டி சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும்.
சேலஞ்சர்ஸ் பிரிவில் சென்னையை சேர்ந்த வைஷாலி, திவ்யா தேஷ்முக் தங்களது ஆட்டங்களில் தோற்றனர். வைஷாலி 5 புள்ளியுடன் 11-வது இடத்திலும், திவ்யா தேஷ்முக் 3 புள்ளியுடன் 13-வது இடத்திலும் உள்ளனர்.