search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guru Pujai"

    • திருவாதவூரில் மாணிக்கவாசகர் குருபூஜை நடந்தது.
    • மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். மாணிக்கவாசகர் பிறந்தார். அவர் பிறந்த மக நட்சத்திர நாளில் அங்கு குரு பூஜை விழா நடந்தது.

    இதையொட்டி ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. திருவாதவூரில் உள்ள திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோவிலில் மதுரை நகரத்தார் மற்றும் சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதல் செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து அங்கிருந்து மாணிக்கவாசகர் தன் பிறந்த வீட்டிற்கு செல்லும் நிகழ்ச்சி மேளதாளங்களுடன் நடந்தது. அங்கு அவருக்கு அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடந்தது.

    பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.

    • மாணிக்கவாசகர் மண்டபத்தில் ஆனி மாத மகம் நட்சத்திரத்தினை முன்னிட்டு மாணிக்கவாசகர் குருபூஜை நடைபெற்றது.
    • விழாவில் கலந்து கொண்ட அனைவ ருக்கும் அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் செட்டியார் தெருவில் உள்ள மாணிக்கவாசகர் மண்டபத்தில் ஆனி மாத மகம் நட்சத்திரத்தினை முன்னிட்டு மாணிக்கவாசகர் குருபூஜை நடைபெற்றது.

    விழாவின் நிகழ்வாக காலை 8 மணிக்கு மாணிக்க வாச பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனைத் தொடர்ந்து திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. மதியம் மகேஸ்வர பூஜை உடன் அன்னம் பாலிப்பு நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவ ருக்கும் அன்னதானமும் பி ரசாதமும் வழங்கப்பட்டது.

    ×