search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gutka smuggling"

    • வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் மூட்டை மூட்டையாக தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து வாகனத்தில் இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர்கள் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை மங்கலம் அருகே உள்ள குடோனுக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட மங்கலத்தை சேர்ந்த பக்ருதீன் (வயது 47) , அப்துல் ரஹீம்(43). பொல்லி காளிபாளையத்தை சேர்ந்த முத்து கிருஷ்ணன் (40) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், 1100 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • கடைகளில் அவ்வப்போது சென்று சோதனை செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டத்தில் சமீபகாலமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் புழக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.

    இதன் பேரில் மாவட்ட முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகளில் அவ்வப்போது சென்று சோதனை செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே நசியனூர் ரவுண்டானா பகுதியில் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது காரின் உள்ளே மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து காரில் இருந்த 2 வாலிபர்களை விசாரணைக்காக சித்தோடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அசோக் குமார் (34) மற்றும் கோவில் (28) என தெரிய வந்தது. 2 பேரும் தற்போது ஈரோடு கொல்லம்பாளையம் இந்திரா நகர் பகுதியில் வாடகை குடியிருந்து வந்ததும் தெரிய வந்தது.

    தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரில் இருந்து கார் மூலமாக குட்கா பொருட்கள் கொண்டு வந்து ஈரோடு, பெருந்துறை, பவானி உட்பட பல்வேறு ஊர்களில் உள்ள சின்ன, சின்ன வியாபாரிகளுக்கு விற்றது தெரியவந்தது. காரில் மொத்தம் 80 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.70 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 80 கிலோ குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதைப் பொருட்களையும் காரையும் பறிமுதல் செய்த போலீசார் 3 பேர் மீது குட்கா கடத்தல் வழக்கு பதிந்தனர்.
    • சக்தி வேல், தண்டபாணி கைது செய்யப்பட்டனர். போதைப் பொருளை சப்ளை செய்த அசோக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் பஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த வெள்ளை நிற டாடா இண்டிகா வாகனத்தை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அந்த காரில் ஹான்ஸ் 20 கிராம் அளவு கொண்ட 2250 பாக்கெட்டில் 45 கிலோவும், கூல்லிப் 9 கிராம் அளவு உள்ள 720 பாக்கெட்டில் 6.480 கிலோவும் விமல் பாக்கு 2.8 கிராம் அளவுள்ள 4500 பாக்கெட்டில் 12.600 கிலோவும் வி.ஐ. பாக்கு 8.4 கிராம் அளவுள்ள 1800 பாக்கெட்டில் 18.00 கிலோவும் உள்ள போதை பொருட்களை இருந்தது.

    விசாரணையில் சிதம்பரம் கூளப்பாடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த சக்திவேல் (வயது 29) அதே கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தண்டபாணி (வயது 47) ஆகியோர் 65 கிலோ குட்காவை கடத்தி வந்துள்ளனர்.அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில் சேலம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரிடத்தில் இருந்து போதை பொருட்களை வாங்கி வந்துள்ளனர் .என்பது தெரிய வந்துள்ளது. போதைப் பொருட்களையும் காரையும் பறிமுதல் செய்த போலீசார் 3 பேர் மீது குட்கா கடத்தல் வழக்கு பதிந்தனர்.

    இதில் சக்தி வேல், தண்டபாணி கைது செய்யப்பட்டனர். போதைப் பொருளை சப்ளை செய்த அசோக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்

    • 11 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி அருகே ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் ஓடும் ரெயில்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என சோதனை செய்து வந்தனர்.

    அப்போது ஜார்கண்ட் மாநிலம் டாடா நகர் பகுதியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் ரெயிலில் சோதனை செய்தனர்.

    வாணியம்பாடி - கேத்தாண்டப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே சோதனை மேற்கொண்ட போது கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை பார்த்த போது அதில் 11 கிலோ குட்கா, பான் மசாலா இருந்தது தெரியவந்தது.

    அதனை பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் ஓடும் ரெயிலில் போதைப் பொருட்கள் கடத்தியது யார் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கர்நாடகாவிலிருந்து வந்த ஹூண்டாய் காரை சோதனை செய்தனர்.
    • திண்டிவனம் செஞ்சி போன்ற பல்வேறு கடைகளுக்கு இவர்கள் சப்ளை செய்ய எடுத்து வந்தார்களா என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    பெங்களூரில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக திண்டிவனம் ஏ.எஸ்.பி அபிஷேக் குப்தாவுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் இன்று காலை ரோசனை இன்ஸ்பெக்டர் பிரு ந்தா,தலைமை காவலர் வெற்றிவேல்,காவலர்கள் அறிவுமணி,தர்மா, போலீசார், வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, கர்நாட காவிலிருந்து வந்த ஹூண்டாய் காரை சோதனை செய்தனர். அந்த காரில் 40 மூட்டையில் குட்கா பொருட்கள் இருந்தன. காரில் வந்த 3 பேரை பிடிப்பதற்கு முன்பு அவர்கள் தப்பி ஓடினர்.

    போலீசரும் அவர்களைபின் தொடர்ந்து சேற்றில் இறங்கி மடக்கிப் பிடித்து போலீசாரும் குட்கா கொள்ளையர்களும் சேற்றில் புரண்டு ஓடியதை பார்த்தவுடன் அங்கிருந்த பொதுமக்கள் இங்கு சினிமா சூட்டிங் நடக்கிறதோ அல்லது வேறுஏதேனும் சண்டையோ எனபொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். அவர்களைப் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, அவர்கள் பெங்களூரை சேர்ந்த கிஷோர்,(வயது 29),சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த கைலாஷ், ,செஞ்சி காந்தி நகரைச் சேர்ந்த சங்கரான ராம்,என்பதும், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, திண்டிவனம்,செஞ்சி,பகுதிகளில்குட்காவை கடத்தி செல்வதும் தெரிந்தது. திண்டிவனம் செஞ்சி போன்ற பல்வேறு கடைகளுக்கு இவர்கள் சப்ளை செய்ய எடுத்து வந்தார்களா என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் மேலும் 3 பேரையும் கைது செய்த போலீசார், 3 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் 25 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ேமாட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது..குட்கா கொள்ளையர்களை போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பொது மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • விழுப்புரம் அருகே குட்கா கடத்த முயன்ற அண்ணன்- தம்பிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
    • சப்- இன்ஸ்பெக்டர் மருது தலைமையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது வேகமாக வந்து கொண்டிருந்த மினி லாரியை தடுத்து நிறுத்தினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்திற்கு பேருந்துகள் மற்றும் மினி லாரிகள்,போக்குவரத்து லாரிகள் இரண்டு சக்கர வாகனம் மூலம் குட்கா கடத்தப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கண்டாச்சிபுரம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கண்டாச்சிபுரம் சப் இன்ஸ்பெக்டர் மருது தலைமையில் போலீசார் கடைவீதியில் உள்ள பெட்டி கடைகளிலும் சோதனை மேற்கொண்டார். அப்பொழுது பல இடங்களில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்கள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் கண்டாச்சிபுரம் ஒரத்தூர் சாலையில் சப்- இன்ஸ்பெக்டர் மருது தலைமையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது வேகமாக வந்து கொண்டிருந்த மினி லாரியை தடுத்து நிறுத்தினர். அதில் குட்கா, புகையிலை பொருட்கள் ஏற்றி வந்தனர். விசாரணையில் மணிகண்டன், அவரது சகோதரர்கள் மூர்த்தி, கார்த்திக் என தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் வெள்ளபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள்என தெரியவந்தது.தெரியவந்தது. 

    திருவேற்காட்டில் குடோனில் பதுக்கிய ரூ. 3 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்கப்படுவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    தனிப்படை போலீசார் குட்கா விற்கப்படும் கடைகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதில் திருவேற்காடு, சுந்தரசோழபுரம் விநாயகர் கோவில் தெருவில் உள்ள குடோனில் இருந்து குட்கா புகையிலை சப்ளை செய்யப்படுவது தெரிந்தது.

    இதைத் தொடர்ந்து தனிப் படை போலீசார் அந்த குடோனில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு மூட்டை, மூட்டையாக குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக குடோன் உரிமையாளர் வியாபாரி வீரமணியை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ. 3 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

    தடை செய்யப்பட்ட குட்கா பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்டதாக தெரிகிறது. இதில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கர்நாடக சொகுசு பஸ்களில் கடத்தி சென்ற 18 குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் பஸ் டிரைவர்கள் 2 பேரை கைது செய்தனர்.
    சேலம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்திச் செல்லப்படுகிறது. இதை தடுக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு செல்லும் சொகுசு பஸ்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவதாக அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சேலம் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக பதிவெண் கொண்ட 2 சொகுசு பஸ்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, ஒரு சொகுசு பஸ்சில் பொருட்கள் வைக்கும் அறையில் 6 மூட்டைகளும் மற்றொரு சொகுசு பஸ்சில் 12 மூட்டைகளும் இருந்தது.

    இந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த 18 மூட்டைகளும் பறிமுதல் செய்து, சூரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அந்த பஸ்களை ஓட்டி வந்த டிரைவர்கள் திருச்சியை சேர்ந்த கண்ணன், பெருந்துறையை சேர்ந்த வெங்கடேஷ் ஆகிய இருவரிடமும் கோவைக்கு சென்று பயணிகளை இறக்கி விட்டு விட்டு, திரும்ப சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அதன்படி 2 டிரைவர்களும் கோவையில் பயணிகளை இறக்கி விட்டு, சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள்.

    இதையடுத்து அவர்களிடம் குட்காவை அனுப்பி வைத்தது யார்?, இதை எங்கு கொண்டு செல்ல முயன்றீர்கள்? இதற்கு யார்? யார்? உடந்தை என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் அவர்கள் போலீசாரிடம், குட்கா கடத்தல் சம்பவம் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சம்பந்தப்பட்டவர்ளை கைது செய்தவதற்கான நடவடிக்கையில் போலீசார் மும்முரமாக இறங்கி உள்ளனர்.

    ஆஜரான 2 சொகுசு பஸ் டிரைவர்களிடம் விசாரணை முடிந்ததும், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

    இதையடுத்து கண்ணன், வெங்கடேஷ் ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    ×