search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harry Potter"

    • ஹாரி பாட்டர் திரைப்பட சீரிஸில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல் கதாபாத்திரத்தில் மேகி ஸ்மித் நடித்திருந்தார்
    • 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயங்கி வந்த மேகி ஸ்மித் 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    ஜே.கே. ரவுலிங் எழுதிய நாவல்களைத் தழுவி உருவாக்கப்பட்ட ஹாரி பாட்டர் திரைப்பட சீரிஸில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல் கதாபாத்திரத்தில் நடித்த பிரிட்டிஷ் நடிகை மேகி ஸ்மித் [89 வயது]. இவர் வயது மூப்பு காரணமாக இன்று [செப்டம்பர் 27]  அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

    2 மகன்கள் மற்றும் 5 பேரக்குழந்தைகளை கொண்ட மேகி ஸ்மித் குடும்பத்தினர் முன்னிலையில் அமைதியான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இயங்கி வந்த மேகி ஸ்மித் 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    தி பிரைம் ஆஃப் மிஸ் ஜீன் பிராடி(The Prime of Miss Jean Brodie) மற்றும் கலிபோர்னியா சூட்(California Suite) ஆகிய படங்களுக்காக 2 ஆஸ்கார் விருதுகளையும் பெற்றுள்ளார். பேராசிரியர் கதாபாத்திரம் மூலம் காலத்தால் அழியாது என்றும் வாழ்வார் என்று ஹேரி பாட்டர் ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

     

    • ஹாரி பாட்டர் நாவல் தொடர்களை எழுதிய பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங் பெயர் இடம்பெற்றுள்ளன.
    • 'சிவப்பு பனியன் அணிந்த அந்த ஏமாற்றுக்காரரை அனுமதித்தது முழுக்க முழுக்க நிர்வாகத்தின் தவறு'

    இமானே கெலிஃப் புகாரில் ஹாரி பாட்டர் எழுத்தாளரும் எலான் மஸ்க்க்கும் இடம்பெற்றுள்ளனர்

    ரத்தத்தில் முடிந்த குத்துச்சண்டை 

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்துமுடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப் -பின் பாலினம் குறித்த சர்ச்சை விவாதங்களுக்கு வழிவகுத்தது.

    66 கிலோ உடல் எடைப்பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவின் இமானே கெலிப்புடன் மோதினார். இதில் இமானே விட்ட குத்தில் கரினியின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது.

    முதல் சுற்றில் 46 வினாடிகள் மட்டும் ஆட்டம் நடந்த நிலையில் கரினி, தொடர்ந்து விளையாட மறுத்தார்.தனது விளையாட்டு வாழ்க்கையில் இவ்வளவு கடினமான குத்துகளை யாரிடமும் வாங்கியதில்லை என்று கண்ணீர் மல்க கூறி வெளியேறினார். இதைத்தொடர்ந்து இமானே கெலிஃப்புக்கு ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக ஏற்கனவே சர்ச்சை கிளம்பியது. ஆனால் ஒலிம்பிக் கமிட்டி அவருக்கு துணை நின்றது. உலகம் முழுவதும் அவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடந்தது.

     

    இதற்கிடையே இறுதிப்போட்டியில், சீன வீராங்கனை யாங்க் லியூவை வீழ்த்தி தங்கம் வென்றார் இமானே கெலிஃப். அனைவரையும் போல் தானும் ஒரு முழுமையான பெண்தான் என்று வெற்றிக்குப் பிறகு அவர் தெரிவித்திருந்தார்.

    இமானேவின் சட்டப் போராட்டம் 

    அதைத்தொடர்ந்து , பாலின ரீதியாக சமூக வலைதளங்களில் தன்மீது அவதூறு பரப்பியவர்களை சட்டரீதியாக தண்டிக்க வலியுறுத்தி பிரான்ஸில் இமானே புகார் அளித்தார். மேலும் இமானே கெலிஃப் பாலின கேலி புகாரில் ஹாரி பாட்டர் எழுத்தாளரும் எலான் மஸ்க்க்கும்!.. சொன்னது என்ன?

    வழக்கு தொடர்ந்து வழக்கறிஞர் மூலம் சட்டப்பூர்வமான போராட்டத்தை முன்னெடுப்பதில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

    இந்நிலையில் இமானே அளித்துள்ள புகாரில் தொழிலதிபர் மற்றும் எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்கின் பெயரும் ஹாரி பாட்டர் நாவல் தொடர்களை எழுதிய பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

     

    மஸ்க் -ரௌலிங் சொன்னது என்ன?

    போட்டிகளின் போது இமானேவின் பாலினம் குறித்த சர்ச்சை எழுந்தபோது, எலான் மஸ்க், தனது எக்ஸ் பக்கத்தில், ஆண்களுக்கு பெண்களின் விளையாட்டில் இடமில்லை என்று இமானேவை விமர்சித்த பதிவை ரீபோஸ்ட் செய்து கண்டிப்பாக என்று மஸ்க் தெரிவித்திருந்தார்.

    மேலும் ஜே .கே ரவுலிங் தனது எக்ஸ் பதிவில், 'இமானே குத்துச்சண்டை களத்தில் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, இதை பார்த்துவிட்டு, உங்களின் பொழுதுபோக்குக்காக ஒரு பெண்ணை ஆண் அடிப்பதை பற்றி விளக்கம் கொடுங்கள். சிவப்பு பனியன் அணிந்த அந்த ஏமாற்றுக்காரரை அனுமதித்தது முழுக்க முழுக்க நிர்வாகத்தின் தவறு, இது பெண்களுக்கு எதிராக ஆண்கள் தங்களின் சக்தியைக் காட்டிக்கொள்ளும் செயல்' என்று தெரிவித்துருந்தார். 

    எலான் மஸ்க் மற்றும் ஜெ.கே.ரௌலிங் ஆகிய இருவரும் தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்ட lgbtq  சமூகத்தினருக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவது  குறிப்பிடத்ததக்கது .  

    • 1997-ல் வெளிவந்த ஹாரிபாட்டரும், தத்துவ ஞானியின் மந்திரக்கல்லும் என்ற முதல் நாவலை ப்ளூம்ஸ்பரி வெளியிட்டது.
    • ஏலத்தில் இந்த புத்தகம் ரூ.11 லட்சத்திற்கு விற்பனையாகி உள்ளது.

    உலகம் முழுவதும் பலகோடி சிறுவர்-சிறுமிகளின் ஆதர்ஷ நாயகனான ஹாரிபாட்டரை பற்றிய புத்தகங்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. பிரிட்டனை சேர்ந்த ஜோன் ரவ்லிங் என்ற ஆசிரியர் தனது ஓய்வு நேரத்தில் எழுத தொடங்கிய மந்திர, தந்திர கதைகள் ஹாரிபாட்டர் என்ற டீன் ஏஜ் சிறுவனை நாயகனாக வடிவமைத்து எழுதப்பட்டவை ஆகும்.1997-ல் வெளிவந்த ஹாரிபாட்டரும், தத்துவ ஞானியின் மந்திரக்கல்லும் என்ற முதல் நாவலை ப்ளூம்ஸ்பரி வெளியிட்டது.

    லேமினேட் செய்யப்பட்ட அட்டையுடன் கூடிய இந்த புத்தகம் சமீபத்தில் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது. இந்த புத்தகம் முதல் பதிப்பு 500 புத்தகங்களில் ஒன்றாகும். மேலும் நூலகங்களுக்கு அனுப்பப்பட்ட 300 புத்தகங்களில் ஒன்றாகும். இந்நிலையில் ஏலத்தில் இந்த புத்தகம் ரூ.11 லட்சத்திற்கு விற்பனையாகி உள்ளது. இது தற்போது சமூக வலைதளங்ளில் வைரலாகி உள்ளது.

    • ஹாரிபார்ட்டர் திரைப்படங்களுக்கு உலக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது.
    • ஹாரிபார்ட்டர் படத்தில் ரூபியஸ் ஹஹ்ரிட் கதாபாத்திர நடிகர் மரணமடைந்தார்.

    எடின்பர்க்:

    பிரபல தொடரான ஹாரிபார்ட்டர், 7 புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு ஹாரிபார்ட்டர் தொடர் இதுவரை 8 திரைப்படங்களாக வெளியிடப்பட்டுள்ளது. ஹாரிபார்ட்டர் திரைப்படங்களுக்கு உலக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது.

    ஹாரிபார்ட்டர் திரைப்பட தொடரில் ரூபியஸ் ஹஹ்ரிட் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்காட்லாந்து நடிகர் ரூபி கால்ட்ரனி (72).

    இதற்கிடையே, நடிகர் ரூபி கால்ட்ரனி உடல்நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரூபி கால்டரனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    வயது முதிர்வு மற்றும் சிகிச்சை பலனின்றி ரூபி கால்ட்ரனி உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×