search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "headgear"

    • பாபநாசம் பழைய பஸ் நிலையம் வழியாக, கீழ வீதி அண்ணா சிலையை சென்று அடைந்தது.
    • தலைக்கவசம் அவசியம் அணிவது குறித்து விழிப்புணர்வு.

    பாபநாசம்:

    பாபநாசம் ரோட்டரி சங்கம், இந்திய செஞ்சிலுவை சங்கம், திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிகுலேசன் பள்ளி, ஆகியவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை பாபநாசம் புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. பாபநாசம் ரோட்டரி சங்க தலைவர் கே.எஸ். அறிவழகன் தலைமை வகித்தார்.

    மண்டலம் 13 உதவி ஆளுநர் ராஜா காளிதாஸ், சாலை பாதுகாப்பு சேர்மன் ஆர்.ரவிச்சந்திரன், ஆபிதீன் பள்ளி தாளாளர் சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உறுப்பினர் குழு தலைவர் சரவணன் வரவேற்றார்.

    பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பி.பூரணி சாலை பாதுகாப்பு பேரணியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    இப்பேரணி பாபநாசம் புதிய பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, கடை வீதி, தெற்கு ராஜ வீதி, பாபநாசம் பழைய பஸ் நிலையம் வழியாக, கீழ வீதி அண்ணா சிலையை சென்று அடைந்தது.

    பேரணியின் போது வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் அவசியம் அணிவது குறித்தும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும், பதாகைகள் ஏந்தியும், பள்ளி மாணவ-மாணவிகள் கோஷங்கள் எழுப்பி சென்றனர்.

    தொடர்ந்து வாகனங்க ளுக்கு முகப்பு விளக்கு களுக்கு கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இப்பேரணியில் பாபநாசம் வணிகர் சங்கம், பாபநாசம் ரோட்டரி சங்கம், இந்திய செஞ்சிலுவை சங்கம், திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிகுலேசன் பள்ளி, பாபநாசம் லயன்ஸ் சங்கம் மற்றும் கிங்ஸ் லயன்ஸ் சங்கம் ஆகியவற்றின் தலைவர், செயலாளர், பொருளாளர், இயக்குனர்கள், நிர்வாகிகள், உறுப்பினர், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் பாபநாசம் ரோட்டரி சங்க செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.

    • இருசக்கர வாகன விபத்துக்களை தடுக்க தலைக்கவசம் அணிய வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • காவல் கண்காணிப்பாளர் மனோகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில், நடைபெற்றது. அப்போது அவர் ேபசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் இரு சக்கர வாகன விபத்துகளில், தலையில் அடிப்பட்டு அதனால் ஏற்படும் உயிழப்புகள் அதிகமாக உள்ளது. எனவே தலைக்கவசத்தின் பயன் குறித்து பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு எற்படுத்த வேண்டும். மேற்படி விழிப்புணர்வினை அரசு அலுவலகங்களிலிருந்து அரசு அலுவலர்கள் மூலமாக முதற்கட்டமாக ஏற்படுத்த வேண்டும்.

    அதன்படி, வருகிற 5-ந் தேதி அரசு அலுவலங்களுக்கு இருசக்கர வாகனத்தில் வருகிற அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தலைக்கவசம் அணிந்து, விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

    இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியும் விழிப்புணர்வினை படிப்படியாக பொது மக்களிடமும் கொண்டு சென்று, பொதுமக்களும் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஒட்டுவதை ஊக்குவிக்க காவல்துறையினர் மூலமாக அறிவுறுத்த வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×