search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "health insurance"

    • 23 ஆயிரத்து 394 பேருக்கு ரூ.82 கோடியே 94 லட்சம் மதிப்பில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • கலெக்டர் அலுவலகத்தில் அறை எண்.3-ல் புகைப்படம் எடுத்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 5 லட்சத்து 59 ஆயிரத்து 149 குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் 23 ஆயிரத்து 394 பேருக்கு ரூ.82 கோடியே 94 லட்சம் மதிப்பில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தாராபுரத்தில் நடந்த முகாமில் 74 பேருக்கும், காங்கயத்தில் நடந்த முகாமில் 149 பேருக்கும் புதிதாக மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டன. திருநங்கைகளுக்கு நடத்தப்பட்ட முகாமில் 60 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது.

    மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை எடுக்காதவர்கள் ரேஷன் கார்டு நகல், ஆதார் கார்டு நகல் மற்றும் வருமான சான்று (ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்குள்) ஆகிய ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் அறை எண்.3-ல் புகைப்படம் எடுத்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 73730 04271 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • பிரீமியம் குறைவாக இருக்கிறது என்பதற்கான பாலிசியை தேர்ந்தெடுக்கக் கூடாது.
    • பாலிசி மூலம் கிடைக்கும் பலன்களை பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

    பொருளாதாரம் நாளுக்கு நாள் மாறிவரும் நிலையில், நமது வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. வசதிகள் அதிகரித்ததால் நாம் உடல் நலத்தில் கவனம் செலுத்தத் தவறிவிட்டோம். மருத்துவமனை செலவுகள் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில், அந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கி நின்ற அனுபவம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருக்கவே செய்கிறது. இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார்கள், நிதி ஆலோசகர்கள்.

    மருத்துவச் செலவுகளுக்கு என்று பணம் சேர்த்து வைப்பதைவிட ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும். குறைந்த செலவில் குடும்பத்தினர் அனைவருக்குமான மருத்துவ செலவுகளை இதன் மூலம் சமாளிக்கலாம். இந்த காப்பீடு தனித்தனியாகவும், குடும்பத்தினருக்கும் சேர்த்து புளோட்டர் என இரண்டு வகையிலும் கிடைக்கிறது. தனிநபர் பாலிசியில், காப்பீடு செய்பவர் மட்டும் கிளைம் செய்து கொள்ளலாம். புளோட்டர் பாலிசியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கிளைம் செய்து கொள்ளலாம்.

    திருமணத்துக்கு முன்பு தனிநபர் பாலிசி எடுத்திருந்தால் திருமணத்துக்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளையும் இணைத்துக் கொண்டு புளோட்டர் பாலிசியாக மாற்றிக்கொள்ளலாம். முதியவர்களுக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும். எனவே இவர்களை புளோட்டர் பாலிசியில் சேர்க்காமல் தனிதனி தனிநபர் பாலிசி எடுத்துக் கொள்வதும் நல்லது. 3 மாத குழந்தை முதல் 86 வயது வரை இந்த பாலிசி அனுமதிக்கப்படுகிறது. நமது மருத்துவ தேவைகளைப் பொறுத்து மருத்துவக் காப்பீட்டை முடிவு செய்ய வேண்டும். பிரீமியம் குறைவாக இருக்கிறது என்பதற்கான பாலிசியை தேர்ந்தெடுக்கக் கூடாது. பாலிசி மூலம் கிடைக்கும் பலன்களை பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

    பாலிசியின் வரம்புகளுக்கு ஏற்ப கிளைம் செய்து கொள்ளலாம். மருத்துவக் காப்பீட்டை அனுமதிக்கும் மருத்துவமனைகள் குறித்த விவரம் பாலிசிதாரர்களுக்குக் கொடுக்கப்படும். இந்த மருத்துவமனைகளில் உள்நோயாளியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் காப்பீட்டு தொகையில் இருந்து மருத்துவ செலவுகளை கழித்துக் கொள்வார்கள். புறநோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவை கிளைம் செய்து கொள்ள முடியாது. ஆனால் பாலிசி அனுமதிக்கும் பட்சத்தில் இதற்கு ஆகும் செலவுகளையும் கிளைம் செய்து கொள்ளலாம். சில நோய்களுக்கு புற நோயாளியாக தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்போம். சில நோய்களுக்கு மருத்துவ பரிசோதனை அடிக்கடி எடுக்க வேண்டியிருக்கும். மேலும் சில நோய்கள் மருத்துவமனையை விட்டு வந்த பிறகும் நீடிக்கும். இது போன்று நிலைமைகளில் பாலிசி அனுமதிக்கும் வரை கிளைம் செய்து கொள்ள முடியும்.

    • திருநங்கைகளுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு கிடைக்கும்.
    • அடித்தட்டு மக்கள் கண்ணியத்துடன் வாழ மத்திய அரசு அக்கறை செலுத்துகிறது.

    திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வகை செய்யும் புதிய ஒப்பந்தம், தேசிய சுகாதார ஆணையம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி வீரேந்திர குமார் ஆகியோர் பங்கேற்றனர். 


    அவர்கள் முன்னிலையில், தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஆர்.எஸ்.சர்மா, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலாளர் ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், திருநங்கைகளுக்கு சுகாதார சேவைகள் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். திருநங்கைகளுக்கான தேசிய இணையதளம் வழங்கிய சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு அனைத்து மருத்துவ சிகிச்சை பயன்களும் கிடைப்பதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளதாக அவர் கூறினார். 


    திருநங்கைகளுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்குவதற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் நிதி அளிக்கவுள்ளது என்று தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் திட்ட பயன்களுடன் திருநங்கைகளுக்கான பாலியல் அறுவை சிகிச்சை திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் அடிப்படை சமூக மாற்றத்திற்கான ஒரு முக்கியமான தினமாக இது அமைகிறது என்றும், இந்த நடவடிக்கை பாலியல் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும் அப்பாற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்

    பின்னர் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி வீரேந்திர குமார், சமூகத்தில் அடித்தட்டு மக்கள், கல்வி, கண்ணியத்துடன் வாழ்தல், சுகாதார உதவி, வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளில் மத்திய அரசு அக்கறை செலுத்தி வருவதாகத் தெரிவித்தார். 

    ஏழை பெண்கள் திருமணத்துக்கு ரூ.25 ஆயிரம், ரூ.10 லட்சம் வரை மருத்துவ காப்பீடு என ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் இன்று பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். #NaveenPatnaik #healthinsurance #marriageassistance #LSpolls
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து மாநில சட்டசபைக்கான தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் 29 வரை நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

    இம்மாநிலத்தின் ஆளும்கட்சியான பிஜு ஜனதா தளத்திடம் இருந்து ஆட்சியை பறிக்க பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இவ்விரு கட்சிகளும் நேற்று ஒடிசா மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டன.

    ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.10 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு, ஏழை பெண்கள் திருமணத்துக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி, பள்ளிகளில் மழலையர் வகுப்பில் இருந்து இறுதியாண்டு வரையிலும், மற்றும் மருத்துவம், பொறியியல் படிப்புகள் வரையிலும் கல்லூரிகளில் பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும்.

    மேலும், பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வசதி, 500 கோடி ரூபாய் நிதிதொகுப்புடன் நெல் கொள்முதல் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான சீருடை தயாரிப்பில் பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு முன்னுரிமை என பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையும் நவீன் பட்நாயக் இன்று அளித்துள்ளார். #NaveenPatnaik #healthinsurance #marriageassistance #LSpolls
    ×