search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Health Ministry"

    • குரங்கம்மை தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

    புதுடெல்லி:

    குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, தமிழகத்திலும் விமான நிலையத்தில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தற்போது வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், குரங்கம்மை நோய் பாதிப்புள்ள நாட்டில் இருந்து வந்தவருக்கு அறிகுறி காணப்பட்டது. குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் வந்த பயணி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    • துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பும், தகவல் தொடர்பும் இல்லாததால், நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
    • ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் பல்வேறு இணை நோய்களுடன் இருப்பதால், பல துறைகளின் கவனிப்பு அவசியம் ஆகிறது.

    புதுடெல்லி:

    ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவ நிபுணரின் ஆலோசனை தேவைப்பட்டால், அவரிடம் சிகிச்சை பெற நோயாளிக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

    அப்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை முதல்முறையாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நோயாளிகளுக்கு பரிந்துரை செய்வதில், முரண்பாடுகளும், பொறுப்பேற்கும் தன்மையும் இல்லாததால், இந்த நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. தான் அனுமதிக்கப்படும் துறையை தவிர, நோயாளிக்கு சிறப்பு மருத்துவமோ, பகுப்பாய்வோ, மருத்துவ ஆலோசனையோ தேவைப்பட்டால், அவருக்கு உடனடியாக பரிந்துரை செய்யப்பட வேண்டும்.

    அந்த பரிந்துரையை சம்பந்தப்பட்ட டாக்டர்களே எழுத வேண்டும். முதுநிலை பயிற்சி மருத்துவர்கள், தங்கள் டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தாமல் அந்த பரிந்துரையை முடித்துவிடக்கூடாது.

    ஒவ்வொரு டாக்டரும் முந்தைய நாள் தங்களது குழுவினர் கவனித்த பரிந்துரை நோயாளிகளின் பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான், நோயாளிகள் பராமரிப்பையும், பயிற்சி மருத்துவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும் முடியும்.

    துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பும், தகவல் தொடர்பும் இல்லாததால், நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் பல்வேறு இணை நோய்களுடன் இருப்பதால், பல துறைகளின் கவனிப்பு அவசியம் ஆகிறது.

    பயிற்சி மருத்துவர்களுக்கும் இது நல்ல பயிற்சி முறையாக அமைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று ஒரே நாளில் 16 ஆக உயர்ந்துள்ளது.
    • தொற்றுடன் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் 50ஐ நெருங்கியது.

    தமிழகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்து இரட்டை இலக்கமாக உயர்ந்தது.

    கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தினசரி பாதிப்பு 9 வரை பதிவான நிலையில் இன்று ஒரே நாளில் 16 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் 50ஐ நெருங்கியது.

    தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை பொது சுகாதாரத் துறை அதிகரித்துள்ளது. அதன்படி, தினசரி பரிசோதனை எண்ணிக்கை 300ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 110 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மான்டவியா தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த 266 நாட்களில் இல்லாத அளவிற்கு நேற்று கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

    இந்நிலையில், தமிழகம் உட்பட பல்வேறு மாநில சுகாதார மந்திரிகளுடன் மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று ஆலோசனை நடத்தினார். 

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் உட்பட பல்வேறு மாநில சுகாதார மந்திரிகள், மாநில சுகாதாரத் துறை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். காணொலி வாயிலாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:

    பஸ் ஸ்டாண்ட், ரெயில் நிலையங்களில் தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். நடமாடும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட வேண்டும். நாட்டில் 12 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த தயாராக உள்ளனர்.

    தற்போது வரை 79 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 38 சதவீதம் பேர் இரண்டாம் தவணை செலுத்தி உள்ளனர்.

    நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாக முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அதனை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த பின்னர் 45 மாதங்களில் மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. #MaduraiAIIMS #MaduraiHC
    மதுரை:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து, அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், எய்ம்ஸ் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், எய்ம்ஸ் அமைவதற்கான அனுமதியை அரசிதழில் வெளியிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு  விளக்கம் அளிக்கும்படி கூறியிருந்தது.

    இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய சுகாதாரத்துறை சார்பில் எய்ம்ஸ் பணிகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிதிக்குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.


    நிதிக்குழு ஒப்புதல் அளித்ததும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கோரப்படும் என்றும், அமைச்சரவை ஒப்புதல் அளித்தபின்னர் 45 மாதங்களில் எய்ம்ஸ் செயல்படத் தொடங்கும் என்றும் மத்திய சுகாதாரத்துறை கூறியது. இதையடுத்து கே.கே.ரமேஷ் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. #MaduraiAIIMS #MaduraiHC
    ×