என் மலர்
நீங்கள் தேடியது "Healthy Recipes"
- காபியில் உள்ள கொழுப்பின் அளவு நீண்ட நேரத்திற்கு பசி ஏற்படாமல் தடுக்கும்.
- பட்டர் காபி குடல் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கிறது.
தேவையான பொருட்கள்:
தண்ணீர் - 1 கப்
பால் - 1 கப்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
காபி தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
செய்முறை:
* தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும். கொதிக்க வைத்த தண்ணீரில் காபித்தூளை சேர்த்து நன்றாக கலக்கவும்.
* பின்னர் அதில் நன்றாக கொதிக்கும் பாலை சேர்த்து கலக்கவும்.
* அடுத்து உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். அல்லது மிக்சியில் போட்டு இந்த கலவை மிருதுவாகும் வரை சுமார் 3 முதல் 4 நிமிடங்கள் கலக்க வேண்டும்.
* காபி அதிக நுரை மற்றும் கிரீம் பதம் வரும் போது எடுத்து கண்ணாடி கப்பில் ஊற்றி பருகவும்.
* அவ்வளவுதான் உங்கள் பட்டர் காபியை 10 நிமிடங்களில் தயார் செய்து விடலாம்.
* பால் விரும்பாதவர்கள் பால் சேர்க்காமலும் செய்யலாம்.
- சமையலைப் பொருத்தவரையில் பக்குவம் என்பது மிக மிக முக்கியம்.
- ஐய்யங்கார் வீட்டு சாம்பார் ஆளை அசத்தும் சுவையில் இருக்கும்.
தேவையான பொருள்கள்
தனியா - கால் கிலோ
குண்டு மிளகாய் - 125 கிராம்
துவரம்பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
மிளகு - 25 கிராம்
வெந்தயம் - 10 கிராம்
விரளி மஞ்சள் - 25 கிராம்
செய்முறை
மேற்கண்ட பொருள்கள் அனைத்தையும் தனித்தனியாக மூன்று நாள் நல்ல சுல்லென்று அடிக்கும் வெயிலில் போட்டு உலர்த்த வேண்டும். பின்னர் தனித்தனியே எண்ணெய் எதுவும் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.
சூடாக இருக்கும் பொழுது பொடி திரிக்கக் கூடாது. வறுத்த அல்லது நன்கு காய வைத்த மசாலாப் பொருள்கள் சூடு ஆறியவுடன் அரவை மில்லில் கொடுத்து நைசாக அரைத் வாங்கிக் கொள்ளுங்கள்.
அரைத்த பொடியை அப்படியே சூடாக அடைத்து வைக்கக்கூடாது. அது விரைவில் கெட்டி தட்டியோ கெட்டுப் போகவோ வாய்ப்புண்டு. அதனால் சிறிது ஆறவிட்டு, டைட்டான கண்டெய்னரில் போட்டு சேமித்து வையுங்கள். தினசரி பயன்பாட்டுக்கு சிறிய டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் அய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி.
- சர்க்கரை நோயாளிகளுக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம்.
- உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் சக்தி கொள்ளுக்கு உண்டு.
தேவையான பொருட்கள்
அரிசி - 1 கப்
கம்பு - 1 கப்
கொள்ளு - கால் கப்
காய்ந்த மிளகாய் - 5
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - சுவைக்கு
செய்முறை
அரிசியை, வெந்தயத்தை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
கொள்ளு, கம்பை நன்றாக கழுவி 8 மணிநேரம் ஊறவைக்கவும்.
நன்றாக ஊறியதும் அரிசியை, வெந்தயத்தை தனியாக அரைத்து கொள்ளவும்.
கொள்ளு, கம்புடன் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து அதனுடன் அரைத்த அரிசி மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
உப்பு சேர்த்து புளிக்க விடவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
சூப்பரான கம்பு - கொள்ளு தோசை ரெடி.
- சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
- அரிசியை விட 8 மடங்கு அதிக இரும்புச்சத்து கம்பில் உள்ளது.
தேவையான பொருட்கள்
கம்பு - 1 கப்
உளுந்தம் பருப்பு - 1 குழிக்கரண்டி
வெந்தயம் - 2 ஸ்பூன்
கருப்பட்டி - 300 கிராம்
ஏலக்காய் - 2
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை
கம்பு, உளுந்து, வெந்தயத்தை நான்கு மணிநேரம் ஊற வைக்கவும்.
கருப்பட்டியை சிறு சிறு துண்டுகளாக நொறுக்கிக் கொள்ளவும்.
ஏலக்காயை ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும்.
ஊறிய கம்பை மிக்சியில் போட்டு அதனுடன் கருப்பட்டியை சேர்த்து அரைக்கவும்.
அடுத்து நசுக்கிய ஏலக்காயைச் சேர்த்து இட்லிப் பதத்தில் அரைத்து கொள்ளவும்.
இந்த மாவை ஐந்து மணி நேரம் புளிக்க வைக்கவும்.
குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து கல் சூடு ஏறியதும் குழிகளில் சிறிது எண்ணெய் தடவவும்.
- இட்லி, தோசைக்கு இந்த சட்னி அருமையாக இருக்கும்.
- இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். ருசியோ அருமை.
தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் - 10
பூண்டு பல் - 3
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு
தாளிக்க:
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
செய்முறை
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியை சேர்த்து 1 நிமிடம் கிளறி விட்டு அடுப்பை அணைக்கவும்.
சுவையான காரசாரமான செட்டிநாடு மிளகாய் சட்னி தயார்.
இட்லி, தோசையுடன் பரிமாறவும்.
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் .
- சளி, இருமல், காய்ச்சலை குணமாக்கும்.
தேவையான பொருட்கள் :
தூதுவளை இலைகள் - 10.
பூண்டு - 5 பல்,
தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா - தலா கைப்பிடியளவு
உப்பு, மிளகுத்தூள் தேவைக்கு, துளசி இலைகள் - சிறிதளவு,
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்).
செய்முறை:
வாணலியில் தூதுவளை இலைகள், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, வெங்காயம், துளசி இலைகள், தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும்.
பிறகு இறக்கி வடிகட்டி மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து சூடாக பருகவும்.
- கத்திரிக்காயை வைத்து சாம்பார், புளிக்குழம்பு மட்டுமே செய்திருப்போம்.
- இன்று கத்தரிக்காயில் அருமையான சட்னி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - கால் கிலோ
தக்காளி - 3
பெ. வெங்காயம் - 2
ப. மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 4
கடுகு, உளுந்து - 1 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கறிவேப்பில்லை - சிறிதளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளி, கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் தண்ணீர் ஊற்றி கத்திரிக்காய், 1 வெங்காயம், தக்காளி, ப. மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும்.
பின்னர் ஆவி அடங்கியதும் தக்காளியின் தோலை மட்டும் நீக்கி கொள்ளவும்.
தோல் நீக்கிய பின் மிக்ஸியில் இந்த கலவையை நன்கு அரைத்து கொள்ளவும்.
இப்பொழுது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர் நாம் அரைத்து வைத்த கத்திரிக்காய் கலவையை தேவையான தண்ணீருடன் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
எண்ணெய் பிரிந்து கெட்டி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
இப்பொழுது இட்லி தோசைக்கு சூப்பரான சைடு டிஷ் கத்திரிக்காய் சட்னி தயார்.
- இந்த இட்லி பொடியை சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
- இந்த ரெசிபி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள் :
இறால் கருவாடு - 250 கிராம்
காய்ந்த மிளகாய் - 10
சின்ன வெங்காயம் - 7
பூண்டு - 8 பல்
சீரகம் - அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 200 கிராம்
புளி - எலுமிச்சை அளவு
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கருவாட்டை நன்கு தண்ணீரில் அலசி, உலர வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு அடுப்பைக் குறைத்து வைத்து கருவாட்டைச் சேர்த்து மொறுமொறுப்பாக வரும்வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
பிறகு, மற்றொரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்து தனியே எடுத்துவைக்கவும்.
அதே வாணலியில் சீரகம் சேர்த்துப் பொரிந்ததும், சின்னவெங்காயம், பூண்டு, புளி சேர்த்து நன்கு வதங்கியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து தீயைக் குறைத்து வைத்து, பொன்னிறமாக வரும் வரை கலவையை வறுக்கவும்.
இதை கருவாடு, காய்ந்த மிளகாயுடன் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்.
இந்த இறால் பொடி சாதம், இட்லி, தோசை எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
- டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த ரெசிபி சாப்பிடலாம்.
- சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த சிற்றுண்டி இது.
தேவையான பொருட்கள்
கோதுமை சேமியா - 200 கிராம்,
நறுக்கிய உருளை, பீன்ஸ், வேகவைத்த பட்டாணி - 1 கப்,
வெங்காயம், தக்காளி - தலா 1,
நறுக்கிய பச்சைமிளகாய் - 4,
உப்பு - தேவைக்கு,
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்.
தாளிக்க...
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து - சிறிது,
கறிவேப்பிலை - 10.
செய்முறை
சேமியாவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துகொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் காய்கறிகள், பட்டாணியை சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
காய்கறிகள் வெந்ததும் கோதுமை சேமியா சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறி வெந்தவுடன் இறக்கவும்.
பின் எலுமிச்சைச்சாறு பிழிந்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான கோதுமை சேமியா கிச்சடி ரெடி.
- சிறுதானியங்களில் நிறைய தாதுச்சத்துகளும், வைட்டமின்களும் உள்ளன.
- அரிசியில் இருப்பதைவிட இதில் அதிக நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்:
குதிரைவாலி அரிசி - 100 கிராம்,
இட்லி அரிசி - 100 கிராம்,
உளுந்து - 25 கிராம்,
வெந்தயம் - அரை தேக்கரண்டி,
கருப்பட்டி - 200 கிராம்,
இளநீர் - அரை கப்.
செய்முறை:
குதிரைவாலி அரிசியுடன் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் நைசாக அரைக்கவும். இளநீரை முதல் நாளே வாங்கி வைத்துப் புளிக்க வைக்க வேண்டும்.
புளித்த இளநீரை அரைத்து வைத்துள்ள மாவுடன் கரைத்து 6 மணி நேரம் புளிக்க விடவும்.
கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைத்து, கொதித்ததும் அப்படியே சூடாக வடிகட்டி மாவுடன் சேர்க்கவும்.
ஆப்பச் சட்டியை அடுப்பில் வைத்து லேசாக எண்ணெய் தடவி தேவையான மாவினை ஊற்றி ஒரு சுற்று சுற்றி மூடி வைத்து வேக விடவும்.
ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும்.
சத்தும், சுவையுமிக்க குதிரைவாலி கருப்பட்டி ஆப்பம் தயார்.
- குழந்தைகளுக்கு இந்த டிபன் மிகவும் பிடிக்கும்.
- கேழ்வரகில்(ராகி) அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு சேமியா - 1 பாக்கெட்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி
வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை :
தேங்காயை துருவிக்கொள்ளவும்.
கால் கப் தண்ணீரில் உப்பு கலந்து அதை கேழ்வரகு சேமியாவில் தெளித்து 5 நிமிடம் ஊற விடவும்.
பின்னர் ஊறிய கேழ்வரகு சேமியாவை இட்லி தட்டில் வேக வைத்து கொள்ளவும்.
வெந்ததும் அதில் வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து கலந்து பரிமாறவும்.
சத்தான கேழ்வரகு சேமியா புட்டு ரெடி.
- ரவை கிச்சடிக்கு மாற்றாக இந்த கிச்சடி செய்யலாம்.
- குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 1 கப்
பாசி பருப்பு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2மேசைக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பிரியாணி இலை - சிறிதளவு
பட்டை - 1 சிறிய துண்டு
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 10 பற்கள்
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 2
தக்காளி - 2
உப்பு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை:
தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பாஸ்மதி அரிசி மற்றும் பாசி பருப்பை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
ஊறவைத்த அரிசி மற்றும் பருப்பை குக்கரில் போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவைக்கவும்.
ஒரு பானில் எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் சீரகம், பிரியாணி இலை, பட்டை சேர்த்து வறுக்கவும்.
அடுத்து நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் உப்பு, மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், பெருங்காயத் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து வேகவைத்த அரிசி பருப்பை சேர்த்து கலக்கவும்.
இறுதியாக நெய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.
இப்போது சூப்பரான பருப்பு கிச்சடி தயார்!