என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hidden"

    • வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கிய 24 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தவர்களை வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகேயுள்ள வாணிப்புத்தூர், காளியூர் மற்றும் கெம்மநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் நேற்று பங்களாப்புதூர் போலீசார் ரோந்து ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது டி.ஜி.புதூர்-கே.என்.பாளையம் சாலையில் உள்ள காளியூர் பிரிவு பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீசார் சென்றபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் பையுடன் நின்றிருந்த கே.என்.பாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த வேட்டையன் (50) மற்றும் நாராயணன் (58) ஆகிய இருவரும் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் விரட்டிய போது, அருகில் வந்தால் நாட்டு வெடியை வீசி கொன்று விடுவோம் என்று போலீசாரை பார்த்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தப்பியோட முயன்ற இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில், இருவரும் வனப்பகுதியில் இருந்து வரும் விலங்குகளை அச்சுறுத்தவும், காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்கும், அவுட்காய்கள் எனப்படும் நாட்டுக்காயை வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் நான்கு நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து, வேட்டையன், நாராயணன் ஆகிய இருவர் மீதும் கொலை மிரட்டல், வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் புளியம்பட்டி பகுதியிலும் நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது. மொத்தம் 24 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்தது தெரிய வந்தது.

    இதுபோன்ற சட்ட விரோதமாக வெடிபொருட்கள் வைத்திருப்பவர்கள் சம்பந்தமாக புகார் அளிக்க விரும்புபவர்கள் ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னிடம் நேரடியாகவோ, அல்லது தனது வாட்ஸ்அப் எண் 9655220100 என்ற எண்ணுக்கும் புகார் தெரிவிக்கலாம்.

    மேலும் காவல் அலுவலகத்தில் உள்ள காவல் உதவி ஆப் மூலமாகவும் தெரிவிக்கலாம். இதுகுறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் கொடுப்பவரின் பெயர் முகவரி ரகசியமாக வைக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் சென்னையில் மாநகர அரசு போக்குவரத்து கழகம் இயக்கும் மினி பஸ்களில் இடம் பெற்றிருந்த இரட்டை இலை படம் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டுள்ளது. #LSPolls
    சென்னை:

    தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொது இடங்களில் உள்ள கட்சி சின்னங்கள், பெயர்கள் மறைக்கப்பட்டு உள்ளன.

    சென்னையில் மாநகர அரசு போக்குவரத்து கழகம் இயக்கும் மினி பஸ்களின் பின் பகுதியில் இரட்டை இலை படம் பச்சை வண்ணத்தில் இடம் பெற்றுள்ளது.

    ஏற்கனவே இது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. அப்போது அது இரட்டை இலை சின்னம் அல்ல என்று மறுத்தனர்.

    இந்த நிலையில் இப்போது மினி பஸ்களில் இடம் பெற்றிருந்த இரட்டை இலை படத்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்துள்ளனர்.

    அனைத்து பஸ்களிலும் வெள்ளை வண்ண ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டுள்ளது. #LSPolls

    வந்தவாசியில் கடையில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி டவுன் பொட்டி நாயுடு தெருவை சேர்ந்தவர் சங்கர்லால் (வயது 28). இவர் சீதாராம நாயுடு தெருவில் மொத்த விற்பனைக் கடை வைத்துள்ளார். இவரது கடையில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக வந்தவாசி குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் கடைக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர். போலீசாரை கண்டதும் கடை உரிமையாளர் சங்கர்லால் அவரது சகோதரர் சேட்டான் (22) தப்பியோடி விட்டனர். கடை ஊழியர்களான சிவராம் (21), அரிஷ் (20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கடை உரிமையாளர்கள் 2 பேரை தேடி வருகின்றனர்.

    ×