search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hijacking"

    • கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பல்கள் அதிகரித்துள்ளனர்.
    • மேலும் வழிப்பறி கும்பலை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    மேலூர்

    மதுரை மாவட்டம், மேலூர் முகமதியாபுரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா. இவர் ஒத்தக்கடையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டி ருந்தார்.

    மேலூர் 4 வழிச்சாலையில் உள்ள கட்டப்பட்டி பகுதியில் வந்தபோது மற்றொரு மோட்டார் வந்த வாலிபர் ஒருவர் வழிகேட்பதுபோல் பேச்சு கொடுத்தார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது திடீரென அந்த நபர் ஷேக் அப்துல்லாவை மறித்தார். அப்போது அவரது கூட்டாளிகள் 2 பேர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். தொடர்ந்து 3 பேரும் கத்தியை காட்டி மிரட்டிய அந்த கும்பல் ஷேக் அப்துல்லா விடம் பணம் கேட்டனர். ஆனால் அவர் தர மறுத்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கத்தியால் கையில் வெட்டி செல்போன், பணத்தை பறித்து சென்றது.

    இந்த சம்பவம் நடந்த சில மணிநேரத்தில் அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த சொக்கம்பட்டியை சேர்ந்த மணிவாசகம் என்பவரிடம் இதே கும்பல் கத்திமுனையில் மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது. குற்றவாளிகள் அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள்.

    இதுதொடர்பாக 2 பேரும் மேலூர் போலீசில் புகார் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ேஜாதி, தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை ேதடி வருகின்றனர்.

    மேலூர் 4 வழிச்சாலையில் இரவு நேரங்களில் தனியாக செல்வோரை குறிவைத்து அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது. ஒரு குறிப்பிட்ட கும்பல் நோட்டமிட்டு இதனை செயல்படுத்தி வருகின்றனர். எனவே போலீசார் மேற்கண்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    மேலும் வழிப்பறி கும்பலை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபடுகின்றனர்.
    • வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள சிலைமான் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (39). இவர் சம்பவத்தன்று ஆரப்பாளையம் சோனையாகோவில் தோப்பு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டில் பழனிவேலிடம் ரூ.1300-ஐ பறித்து சென்றார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வழிப்பறியில் ஈடுபட்டது ஆரப்பாளையம் கிராஸ் ரோடு கிருஷ்ணாபாளையம் 2-வது தெருவை சேர்ந்த மாடசாமி மகன் ஆனந்த குமார் (24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    மதுரை மேலத்தொப்பு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(31). இவர் சம்பவத்தன்று புதுமா காளிப்பட்டி ரோடு சந்திப்பில் நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணத்தை பறித்து சென்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் வழிப்பறியில் ஈடுபட்டது சோலை அழகுபுரம் முதல் தெரு பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேகர் மகன் உமையகுமார் என்ற பெரிய எலி (23), சோலையழகுபுரம் ஜானகி நகர் முதல் தெரு சுரேஷ்குமார் மகன் மணிகண்டன் என்ற பாட்டில் மணி (22), சோலை அழகுபுரம் பாண்டி மகன் மாரிச்செல்வம் (22) என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை நகரில் அண்மை காலமாக வழிப்பறி, நகைப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பட்டப்ப கலிலும் தனியாக செல்லும் பெண்கள், முதியவர்களை குறிவைத்து தைரியமாக வழிப்பறியில் ஈடுபடு கின்றனர். மேலும் கத்தியை காட்டி மிரட்டு வதும் சில சமயங்களில் ஆயுதங்களால் பொதுமக்களை தாக்கு வதும் நடந்து வருகிறது. எனவே போலீசார் கூடுதல் ரோந்து சென்று வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கத்தியை காட்டி மிரட்டி ஓட்டல் அதிபர்- வாலிபரிடம் பணம் பறிக்கப்பட்டது.
    • ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரை செல்லூர் மீனாம் பாள்புரம் பாரதிதாசன் ரோட்டை சேர்ந்தவர் மகுதுரபீக்ஒலி(வயது43). இவர் பி.பி.குளம் முல்லை நகரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு வந்த 6 பேர் அவரை கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.5ஆயிரத்தை பறித்துச் சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து ஓட்டல் உரிமையாளர் மகுதுரபீக்ஒலி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பி.பி.குளம் யோகராஜ் (31), கார்த்திகேயன் என்ற வெள்ளையன் கார்த்திக் (31), கோகுல் விஜய் (29), அனிபாண்டி ராஜா (46), கிருஷ்ணன் என்ற ஜப்பான் ராஜா (31), சுரேஷ் (31) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் உசிலம் பட்டியை சேர்ந்தவர் ஒச்சு காளை (30). இவர் ஜெய் ஹிந்துபுரம் 2-வது மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவரை 3 வாலிபர்கள் வழிமறித்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஒச்சுக்காளையிடம் இருந்து பணத்தை பறித்து சென்றனர். இது குறித்து ஒச்சுக்காளை ஜெய்ஹிந்து புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த சஞ்சய் (23), ஜாகிர் உசேன் (22), சூர்யா என்ற ஆட்டோ பாஸ்கர் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • வாலிபர்களிடம் செல்போன், பணம் வழிப்பறி செய்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த முகம்மது மகன் நூர் (18). இவர் சம்பவத்தன்று நள்ளிரவு, மதுரை பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

    இந்த தொடர்பாக கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம், ராமசுப்ரமணியபுரத்தை சேர்ந்தவர் ராமராஜ் ( 26). இவர் நேற்று நள்ளிரவு மதுரை டோக் நகர் பகுதியில் நடந்து சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நர்சரி பள்ளிக்கூடம் அருகே வழிமறித்து, கத்தி முனையில் செல்போன் மற்றும் மணிபர்சை பறித்து சென்றனர்.

    இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவரது 14 வயது மகள் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 18-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர், பிப்.9-ககள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா நன்னவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42). விவசாயி. இவரது 14 வயது மகள் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 18-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் புகார் அளித்தார். புகாரின் பேரில் காணமல் போன 9-ம் வகுப்பு மாணவியை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    இதில் அதே ஊரில் செங்கல் சூளையில் டிரைவராக பணியாற்றிய நடையன் (21) என்பவர் மாணவியிடம் ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்றது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து டிரைவர் நடையனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் செங்கல்பட்டு பகுதியில் பணி செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவருடன் அந்த மாணவியை தங்க வைத்திருப்பதும் தெரியவந்தது.தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் செங்கல்பட்டு அருகேயிருந்த செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்த டிரைவர் நடையனை போக்சோ சட்டடத்தின் கீழ்கைது செய்தனர். உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 9-ம் வகுப்பு மாணவியை மீட்டு விழுப்புரம் அரசு காப்பகத்திற்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

    • வழிப்பறியில் ஈடுபட்ட 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
    • மதுரை ஆரப்பாளையம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மாதவன், சல்மான், கரிமேடு கார்த்திக், புட்டுத்தோப்பு பார்த்தசாரதி ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 2 செல்போன், பணத்தை பறிமுதல் செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூரை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 47). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    தீபாவளியையொட்டி சொந்த ஊருக்கு வந்த பொன்ராஜ் பண்டிகை முடிந்ததும் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் செல்வதற்காக கப்பலூர் பஸ் நிறுத்தத்திற்கு நடந்து வந்தார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் மர்ம நபர்கள் பொன்ராஜை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.1500 ரொக்கம் மற்றும் செல்போனை பறித்து விட்டு சென்று விட்டனர்.

    திருப்பரங்குன்றத்ைத சேர்ந்தவர் விஜயகுமார் (35). இவர் மினி வேனில் ஆவின் பால் எடுத்து கொண்டு திருமங்கலம் பகுதியில் விநியோகம் செய்ய சென்றார். அப்போது 4 மர்ம நபர்கள் அவரை மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர்.

    இதுபற்றிய புகாரின்பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் 2 கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல்தான் என தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட மதுரை ஆரப்பாளையம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மாதவன், சல்மான், கரிமேடு கார்த்திக், புட்டுத்தோப்பு பார்த்தசாரதி ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 2 செல்போன், பணத்தை பறிமுதல் செய்தனர்.

    ×