என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "himself"
- திருபுவனை அருகே கலித்தீர்த்தாள் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் குமார்.
- சம்பத் குமார் உளுந்தூர் பேட்டையில் டைல்ஸ் கடை நடத்தி வந்தார்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே கலித்தீர்த்தாள் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் குமார். இவருக்கு திருமணமாகி பிரேமாவதி என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். சம்பத் குமார் உளுந்தூர் பேட்டையில் டைல்ஸ் கடை நடத்தி வந்தார்.
ஆனால் இத்தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் சம்பத் குமார் அத்தொழிலை கைவிட்டுவிட்டார். இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி சம்பத் குமாரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு மனமுடைந்து இருந்து நிலையில் மனைவியும் பிரிந்து சென்றதால் சம்பத் குமார் வேதனையை மறக்க மது குடிக்க தொடங்கினார்.
படிப்படியாக போதைக்கு அடிமையான அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்றுவீட்டின் தோட்டத்தில் உள்ள மரத்தில் கேபிள் ஒயரில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மயிலானந்துவின் அம்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- ஈரோடு சூரம்பட்டி போலீசில் மயிலானந் சகோதரி ரூபி ஸ்ரீ அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு சாஸ்திரிநகர் திருவள்ளுவர் 2-வது வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் மயிலானந் (23). இவர் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மயிலானந்துவின் அம்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனால் மயிலானந் மனஉளைச்ச–லுடன் இருந்து வந்தார். அவரும் தற்கொலை செய்து கொள்வதாக அடிக்கடி கூறி வந்ததால் மயிலானந்த்திற்கு அவரது தந்தை மற்றும் சகோதரி ஆறுதல் கூறி வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மயிலானந் அவரது சகோதரியை போனில் தொடர்பு கொண்டு வீட்டில் தனியாக இருப்பதால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும், அடிக்கடி அம்மா நியாபகம் வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து வைக்கும்படியும் கூறி உள்ளார். அதற்கு அவர் ஐதராபாத்துக்கு சென்றுள்ள தந்தை வீட்டுக்கு திரும்பியதும் பேசிக்கலாம் என்று கூறினார்.
இந்நிலையில், அன்றைய தினம் மாலையே வீட்டின் படுக்கை அறையில் துப்பட்டாவினால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் மயிலானந்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு மயிலானந் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசில் மயிலானந் சகோதரி ரூபி ஸ்ரீ அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
- வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (37). இவர் சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் செல்வகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆனந்த் அடிக்கடி குடித்துவிட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது
- வீட்டின் விட்டத்தில் ஆனந்த தூக்கு மாட்டி கொண்டிருந்தது தெரியவந்தது.
பவானி
பவானி அருகே உள்ள காடையாம்பட்டி முருகன் கோவில் வீதியில் வசிப்பவர் ஆனந்த் (21). கட்டிட தொழிலாளி.
மது பழக்கத்துக்கு அடிமையான ஆனந்த் அடிக்கடி குடித்துவிட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் ஆனந்தின் தாய் கண்டித்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டின் கதவை சாத்திக்கொண்டு வெகு நேரம் ஆகியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டின் விட்டத்தில் ஆனந்த தூக்கு மாட்டி கொண்டிருந்தது தெரியவந்தது.
உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து அவர்கள் வந்து பார்த்த போது ஆனந்த் இறந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக பவானி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் பவானி சப்இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று இறந்து கிடந்த ஆனந்த் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வீட்டில் சிவக்குமார் வேட்டியால் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.
- இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்த பெரிய வேட்டுவபாளையம், அரிஜுன காலனி பகுதியை ேசர்ந்த சிவக்குமார் (வயது 26). இவர் பெருந்துறை பஞ்சாயத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.
இவருக்கு திருமணம் ஆகி அகல்யா என்ற மனைவியும், கோபிகாஸ்ரீ என்ற மகளும், ஸ்ரீவர்ஷன் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் சிவக்குமாருக்கும் அவரது மனைவிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடும்பத் தகராறு ஏற்பட்டு அகல்யா குழந்தைகளுடன் அவரது அம்மாவிடான ஈரோடு கொல்லம்பாளையத்திற்கு சென்று விட்டார். அதில் இருந்து சிவக்குமார் சரியாக வேலைக்கு போகாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.
இதனால் சிவக்குமார் தந்தையும், தாயும் அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்தினர். எனினும் சிவக்குமார் மனைவி மற்றும் குழந்தைகளை நினைத்து புலம்பி கொண்டிருந்தார்.
மேலும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே சிவக்குமார் இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது தந்தை மாலை கடைக்கு சென்றார். பின்னர் கடையில் இருந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சிவக்குமார் வேட்டியால் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.
உடனடியாக அவரது தந்தை சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிவகுமாரை கீழே இறக்ககினர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சிவக்குமார் இறந்து விட்டதாக கூறினர்.
இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
- புதுவை கொசப்பாளையம் சாத்தானி வீதியை சேர்ந்த தயாளராஜன். இவரது மகன் சுப்பிரமணி வக்கீலுக்கு படித்துள்ளார்.
- தனது தந்தையுடன் இணைந்து தொழில் செய்து வந்தார்
புதுச்சேரி:
புதுவை கொசப்பாளையம் சாத்தானி வீதியை சேர்ந்த தயாளராஜன். இவரது மகன் சுப்பிரமணி வக்கீலுக்கு படித்துள்ளார்.
தனது தந்தையுடன் இணைந்து தொழில் செய்து வந்தார். இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி யோகபிரியா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர்.
இதனிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் இவரது தாய்-தந்தை இருவரும் அடுத்தடுத்து இறந்து போனார்கள். அந்த சோகத்தை மறக்க முடியாமல் சுப்பிரமணி குடிபழக்கத்திற்கு ஆளாகினார்.
அடிக்கடி நண்பர்களுடன் வெளியில் சென்று குடித்து வந்தார். மனைவி தட்டிக்கேட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டி வந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் சுப்பிரமணி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்று நண்பர்களுடன் மது குடித்தார். மாலை 6 மணிக்கு திரும்ப வந்த அவர் மனைவியிடம் பணம் கொடுத்து ஜவுளி வாங்கிக்கொள்ளுமாறு கூறினார்.
உடனே யோகப்பிரியா ஜவுளி எடுக்க கடைக்கு சென்றுவிட்டு இரவு 9 மணியளவில் வீட்டிற்கு வந்தார். இதனிடையே மது போதையில் இருந்த சுப்பிரமணி வலிப்பு ஏற்பட்டு சாலையிலேயே விழுந்து கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சுப்பிரமணி மனைவியிடம் சாப்பாடு கேட்டார். உடனே யோகபிரியா சாப்பாடு வாங்க வெளியில் சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்தபோது சுப்பிரமணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மது குடிப்பதை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- புதுவை பிச்சைவீரன்பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாகரன்.
புதுச்சேரி:
மது குடிப்பதை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுவை பிச்சைவீரன்பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி கம்சலா. இவரது மகன் கதிரவன் (வயது26).
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருணாகரன் இறந்து விட்டார். இதனால் கம்சலா அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். கதிரவன் அவ்வப்போது சுமை தூக்கும் வேலை மற்றும் டைல்ஸ் வேலைக்கு செல்வார்.
இதற்கிடையே கதிரவனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. சம்பாதிக்கும் பணத்தை இவர் மது குடித்து செலவழித்து வந்தார். இதனை அவரது தாய் கம்சலா கண்டித்து வந்தார்.
இதுபோல் தினமும் மது குடித்தால் திருமணம் செய்ய யார் பெண் கொடுப்பார்கள் என அறிவுரை கூறி வந்தார். ஆனால் அதனை கதிரவன் ஏற்காமல் தொடர்ந்து மது குடித்து வந்தார்.
கடந்த தீபாவளி முதல் கதிரவன் வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்து வீட்டில் இருந்து வந்தார். நேற்றும் இவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது தாய் கண்டித்து விட்டு பூமியான்பேட்டையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார்.
பின்னர் பிச்சைவீரன்பேட்டில் உறவினர் வீட்டில் நடந்த பூமுடிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கம்சலா வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மின் விசிறியில் கதிரவன் சேலையால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு திடுக்கிட்டு அலறினார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதிரவனை தூக்கில் இருந்து மீட்டு தான் வேலை பார்க்கும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கதிரவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கம்சலா கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு தாமரைசெல்வி அவரது அம்மா வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.
- இதனால் மனவேதனை அடைந்த நவீன்குமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் கணபதி நகரை சேர்ந்தவர் நவீன் என்ற நவீன்குமார்(30). கூலி தொழிலாளி. இவருக்கு தாமரைசெல்வி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனா்.
நவீன்குமாருக்கு மதுப்பழக்கம் இருப்பதால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு தாமரைசெல்வி அவரது அம்மா வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். இந்நிலையில் நவீன்குமார் தாமரை செல்வியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.
அதற்கு அவர் எப்போது குடிப்பழக்கத்தை கைவிடு வீர்களோ அப்போதுதான் வருவேன் என்று கூறினார். இதனால் மனவேதனை அடைந்த நவீன்குமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- குடும்பத்த–கராறு காரணமாகவே தங்கராசு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
- தற்கொலை செய்து கொண்ட ெதாழிலாளி உடலை போலீசாருக்கு தெரியாமல் எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோபி:
கோபி செட்டிபாளையம் அருகே உள்ள எல்லமடை பாரதிநகரை சேர்ந்தவர் தங்கராஜ்(43). கூலி தொழிலாளி. இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், ரகுபதி, அஸ்விந்த் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
தங்கராஜூக்கும் அவரது மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தங்கராஜூவிற்கும் அவரது மனைவி ஈஸ்வரிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து ஈஸ்வரி வேலைக்கு சென்று விட்டார். ரகுபதி, அஸ்விந்த் பள்ளிக்கு சென்று விட்டனர்.
பின்னர் மாலை பள்ளியில் இருந்து ரகுபதியும், அஸ்விந்தும் வீட்டிற்கு வந்த போது வீட்டில் தங்கராஜ் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சிய–டைந்தனர்.
அதைத்தொடர்ந்து தங்கராசுவின் உடலை கோபி போலீசாருக்கு தெரியாமல் எரித்துவிட அவரது உறவினர்கள் முயற்சி செய்து தங்கராசு–வின் உடலை மயானத்திற்கு எடுத்து சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த கோபிசெட்டி–பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தங்கராசுவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதில் குடும்பத்த–கராறு காரணமாகவே தங்கராசு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து தங்கராசுவின் உடலை போலீசார் பிரேத பரிசோதனை–க்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட ெதாழிலாளி உடலை போலீசாருக்கு தெரியாமல் எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்