என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Hitman"
- மீரட் நகரில் வசிக்கும் அஞ்சலி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- அஞ்சலி கொலை தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேசத்தில் கூலிக்காக கொலை செய்யும் காண்டிராக்ட் கில்லர் ஒருவர் தான் செய்த கொலைக்கு கொடுப்பதாக கூறப்பட்ட பணம் தனக்கு கிடைக்கவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜூன் 7 அன்று, மீரட் நகரில் உள்ள உமேஷ் விஹார் காலனியில் வசிக்கும் அஞ்சலி என்பவர் பால் பண்ணையிலிருந்து வீடு திரும்பியபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட அஞ்சலி தனது முன்னாள் கணவர் நிதின் குப்தாவின் பெயரில் இருந்த வீட்டில் வசித்து வந்தார். அவரது மாமியார் அந்த வீட்டை யஷ்பால் மற்றும் சுரேஷ் பாட்டியாவுக்கு விற்றுள்ளார். ஆனால் அஞ்சலி அந்த வீட்டை காலி செய்யமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துள்ளார்.
இதனையடுத்து, யஷ்பால் மற்றும் சுரேஷ் ஆகியோர் நீரஜ் ஷர்மா என்பவரிடம் அஞ்சலியை கொலை செய்தால் 2 லட்ச ரூபாய் பணம் தருவதாக பேரம் பேசியுள்ளனர்.
பின்னர் இந்த கொலை தொடர்பாக யஷ்பால், சுரேஷ், நீரஜ் ஷர்மா மற்றும் அஞ்சலியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த 2 பேர் என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட அப்பெண்ணின் முன்னாள் கணவர் மற்றும் மாமியாரை போலீசார் விடுவித்தனர்.
இந்நிலையில், ஒரு வருடத்திற்கு பிறகு ஜாமினில் வெளியே வந்த நீரஜ் ஷர்மா, இந்த கொலையில் அஞ்சலியின் முன்னாள் கணவர் மற்றும் அவரது மாமியாருக்கு தொடர்பு உள்ளது என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக போலீசாரிடம் பேசிய நீரஜ், "அஞ்சலியை கொலை செய்தால் ரூ.20 லட்சம் பணம் தருவதாக கூறிய அவர்கள் 1 லட்ச ரூபாயை முன்பணமாக கொடுத்தனர். கொலை செய்த பின்பு போலீசில் பிடிபட்டதால் மீதமுள்ள 19 லட்ச ரூபாயை என்னால் வாங்க முடியவில்லை. தற்போது ஜாமினில் வெளியே வந்த பின்பு மீதமுள்ள பணத்தை தரும்படி அவர்களிடம் கேட்டபோது அந்த பணத்தை தரமுடியாது என்று அவர்கள் மறுத்துவிட்டனர். ஆகவே அஞ்சலியின் மாமியார் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றுகூறி அவர்கள் இருவருக்கும் இடையிலான செல்போன் அழைப்புகளை இதற்கான ஆதாரங்களாக அவர் வழங்கியுள்ளார்.
- அதிரடியாக விளையாடிய ரோகித் 41 பந்துகளில் 92 ரன்கள் விளாசினார்.
- ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டும் ஹசில்வுட் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.
டி20 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் - கோலி களமிறங்கினர். தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விராட் கோலி 0 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய பேட்டிங் சொதப்பலாக இருக்க போகிறது என்று எதிர்பார்த்த நிலையில் ரோகித் ருத்ரதாண்டவம் ஆடினார்.
இடது கை வேகபந்து வீச்சாளர் ஓவரில் தடுமாடுவார் என்ற நிலை மாறி ஸ்டார்க் வீசிய 3-வது ஓவரில் 29 ரன்களை ரோகித் குவித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 19 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார். நடப்பு டி20 தொடரில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் மற்றும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர், அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.
அடுத்து வந்த ரிஷப் பண்ட் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 92 ரன்னில் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து துபே- சூர்யகுமார் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 16 பந்தில் 32 ரன்கள் எடுத்த நிலையில் சூர்யகுமார் யாதவ் ஸ்டார்க் பந்தில் நடையைகட்டினார். அதனை தொடர்ந்து துபே மந்தமாக விளையாடி 22 பந்தில் 28 ரன்களுடன் வெளியேறினார். இறுதியில் பாண்ட்யா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி 200 ரன்களை எடுக்க உதவினார்.
இதனால் இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டும் ஹசில்வுட் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.
- விராட் கோலி 5 பந்தில் 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- இந்திய அணியின் ஸ்கோர் 52- ஆக இருக்கும் போது ரோகித் சர்மாவின் ரன் 50-ஆக இருந்தது
டி20 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் - கோலி களமிறங்கினர்.
கோலி டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனை தொடர்ந்து ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். குறிப்பாக ஸ்டார்க் வீசிய 3-வது ஓவரை சிக்சர் பவுண்டரியுமாக பறக்க விட்டார். அந்த ஓவரில் மட்டும் 4 சிக்சர் 1 பவுண்டரி அடங்கும்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்துள்ளார். இதை தவிர நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிவேக அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 19 பந்தில் அரை சதம் விளாசி அசத்தி உள்ளார்.
இந்திய அணியின் ஸ்கோர் 52- ஆக இருக்கும் போது ரோகித் சர்மாவின் ரன் 50-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய விராட் கோலி, பாபர் அசாம் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை ரோகித் சர்மா (4165) பிடித்துள்ளார். அடுத்த இரு இடங்கள் முறையே பாபர் அசாம் 4145 ரன்களும் விராட் கோலி 4103 ரன்களும் எடுத்துள்ளனர்.
31 வயதாகும் ரோகித் சர்மா 2007-ல் ஒருநாள் போட்டியிலும், டி20 போட்டியிலும் அறிமுகமானார். ஆனால் 7 வருடம் கழித்து டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக கொல்கத்தாவில் ஆடிய முதல் போட்டியிலேயே 177 ரன்கள் குவித்து அசத்தினார்.
அதன்பின் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத காரணத்தினால் தொடர்ந்து டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சமீபத்தில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக டெஸ்ட் தொடரின்போது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் ஆப்கானிஸ்தான் டெஸ்டிற்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவிற்கு இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் கவலையடவில்லை. மாறாக என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை பாதி முடிவடைந்து விட்டது. டெஸ்ட் சாதனைப் பற்றி யோசனை செய்வதற்கு ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘ஒரு வீரராக எல்லோருக்கும் ஒரு குறிப்பிட்ட காலம்தான் உண்டு. நான் அதில் பாதியை முடித்துவிட்டேன். நான் அணியில் தேர்வு செய்வது அல்லது தேர்வு செய்யாதது பற்றி மீதியிருக்கும் பாதி காலத்தில் சிந்திப்பதற்கு ஒன்றுமில்லை. நான் எவ்வளவு காலம் விளையாட முடியுமோ, அதை எதிர்பார்த்து சென்று கொண்டிருக்கிறேன்.
அணியில் நான் இருக்கிறேனா அல்லது இல்லையா என்பதை பற்றி கவலைப்படும் நிலையில் நான் இல்லை. என்னுடைய ஆட்டத்தை மகிழ்ச்சியாக வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் எனக்கு தேவையானது. என்னுடைய முதல் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில்தான் நான் அணியில் இடம்பெறுவேனா? இல்லையா? என்பதை பற்றி யோசித்திருக்க வேண்டும். தற்போது எல்லாம் மகிழ்ச்சியாக விளையாட வேண்டும் என்பதுதான். அணியில் இடம்பிடிப்பது குறித்து யோசித்தால் அது நெருக்கடியை உண்டாக்கும்’’ என்றார்.
ரோகித் சர்மா இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதம், 9 அரைசதங்களுடன் 1479 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரி 39.97 ஆகும்.
பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியாதது குறித்து ரோகித் சர்மா டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது ஏமாற்றத்தை அளிக்கிறது. விளையாட்டாக இருந்தாலும், வாழ்க்கையாக இருந்தாலும், நாம் எதை விரும்புகிறமோ, அதை எப்பொழுதுமே பெற முடியாது. நாங்கள் கடுமையாக போராடினோம். ஆனால், எதிரணிகள் எங்களை விட சற்று சிறப்பாக செயல்பட்டனர். அடுத்த வரும் இதில் இருந்து மீண்டு வருவதை எதிர்பார்க்கிறோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்