search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hold"

    • புதிதாக குழந்தைகளுக்கு ஆதார் எடுத்தவர்கள் பள்ளியில் சேர்ப்பதற்கு ஜாதி சான்று, இருப்பிட சான்று முதலியவற்றிற்கு ஆதார் கட்டாயம் தேவைபடுவதால் அவர்கள் பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
    • குழந்தைகளுக்கு ஆதார் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று பொதுமக்களும், தன்னார்வ ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தவிட்டுப்பா–ளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 7-ந் தேதி ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இதில் பர்கூர், தாமரை பகுதியிலும், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் புதியதாக ஆதார் எடுக்க குழந்தைகள் மற்றும் ஆண்கள், பெண்கள் முகவரி மாற்றாம், பெயர் மாற்றம், புகைப்பட மாற்றம் செய்பவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு முகாமில் வந்து ஆதார் எடுத்து சென்றனர்.

    இதில் ஆதார் எடுத்தவர்கள் 70 சதவீதபேர்களுக்கு மீண்டும் எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அவர்கள் எடுத்த ஆதார் புகைப்பட எண்ணை பதிவு செய்து பார்க்கும்போது அதில் காரண விளக்கம் எதுவும் தென்படவில்லை என்ற பதிவு மட்டும் வருகிறது.

    எனவே முகாமில் புதிதாக குழந்தைகளுக்கு ஆதார் எடுத்தவர்கள் பள்ளியில் சேர்ப்பதற்கு ஜாதி சான்று, இருப்பிட சான்று முதலியவற்றிற்கு ஆதார் கட்டாயம் தேவைபடுவதால் அவர்கள் பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

    இதனை உடனடியாக சரி செய்து மீண்டும் குழந்தைகளுக்கு ஆதார் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று பொதுமக்களும், தன்னார்வ ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலம் மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வருகிற 31- ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை அனுமதியின்றி பொதுக் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • 5 நாட்களுக்கு முன்னரே போலீஸ் கமிஷனர் அவர்களிடம் அனுமதி பெற்ற பின்னரே கூட்டம் நடத்த வேண்டும்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வருகிற 31- ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை அனுமதியின்றி பொதுக் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பொதுக் கூட்டம் உள்ளிட்டவை நடத்த விரும்புவோர் முறையாக 5 நாட்களுக்கு முன்னரே போலீஸ் கமிஷனர் அவர்களிடம் அனுமதி பெற்ற பின்னரே கூட்டம் நடத்த வேண்டும்.

    திருமணம், இறுதிச்சடங்குகள் உள்ளிட்ட இன்றியமையாத நிகழ்ச்சிகளுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படும் என்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் 2-ந் தேதி ரெயில்களில் சைவ தின அனுசரிப்பு குறித்து ரெயில்வே வாரியத்தின் பரிந்துரையை மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கும்படி உத்தரவு பிறப்பித்தது. #VegetarianDay #IndianRailway
    புதுடெல்லி:

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி 2018, 2019, 2020 ஆகிய 3 ஆண்டுகளிலும் அக்டோபர் 2-ந்தேதியை சைவ தினமாக அனுசரிக்க பரிந்துரை செய்து அண்மையில் ரெயில்வே வாரியம், மண்டல ரெயில்வே மேலாளர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியது.

    அதில், சைவ தின அனுசரிப்பையொட்டி அன்று ரெயில்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்வேயின் இதர கட்டிடங்கள் எதிலும் அசைவ உணவு வினியோகிக்க கூடாது என்று கூறப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

    இதைத்தொடர்ந்து ரெயில்வே வாரியத்தின் பரிந்துரையை மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கும்படி அனைத்து மண்டலங்களின் ரெயில்வே தலைமை வர்த்தக மேலாளர்களுக்கும் ரெயில்வே அமைச்சகம் நேற்று அறிவுறுத்தி உத்தரவு பிறப்பித்தது.  #VegetarianDay #IndianRailway
    ×