என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Holy"

    • மார்ச் 15-ந்தேதி இந்தி தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
    • நாட்டின் பெரும்பாலான இடங்களில் 15-ந்தேதி ஹோலி பண்டிகை நடைபெறும் என்பதால் மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க முடிவு.

    சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. 15-ந்தேதி இந்தி தேர்வு நடைபெறும் என ஏற்கனவே தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    நாட்டின் பல்வேறு இடங்களில் வருகிற 14-ந்தேதி ஹோலி பண்டியை கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது அல்லது 14-ந்தேதி ஹோலி பண்டியை 15-ந்தேதி வரை நீடிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஹோலி பண்டிகையால் தேர்வு எழுத முடியாத மாணவ-மாணவிகளுக்கு மறுவாய்ப்பு வழக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் வந்தது. இதனால் மறுவாய்ப்பு வழங்கப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

    சிபிஎஸ்இ கொள்கையின்படி, தேசிய அல்லது சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக சிறப்புத் தேர்வு நடத்தப்படும்போது, ஹோலி பண்டிகையின்போது தேர்வை தவறவிடும் மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    • பள்ளிவாசல்களில் புனித இரவு தொழுகை நடந்தது.
    • திரளானோர் பங்கேற்றனர்.

    கீழக்கரை

    ரம்ஜான் மாதத்தில் லைலத்துல் கத்ரு எனப்படும் புனித இரவில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து இரவு முழுவதும் தூங்காமல் பள்ளிவாசல்களில் திருக்குரான் ஓதி சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். இதன்படி நேற்று புனித இரவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி , பெரியபட்டணம், பனைக்குளம், திருப் புல்லாணி உள்பட மாவட் டத்தின் பல்வேறு பகுதி களிலும் உள்ள ஜும்மா பள்ளி வாசல்களில் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இதில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து நறுமணம் பூசி தொழுகை மற்றும் சிறப்பு துஆவில் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பின் உலக நன்மைக்காகவும், மக்கள் அனைவரும் நலமுடன் வாழவும், திருக்குர்ஆன் ஓதி சிறப்பு துஆ செய்தனர். அதனை தொடர்ந்து நேற்று இரவு பள்ளிவாசல்களில் விடிய விடிய இஸ்லாமிய மக்கள் திருக்குர்ஆன் ஓதி இறைவனை தொழுதனர்.

    அனைத்து ஊர்களிலும் ஜமாத் நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதிகாலை அனைத்து பள்ளி வாசல் களிலும் நோன்பு நோற்பதற்காக சகர் உணவு வழங்கப் பட்டது. பெண்களுக்கான தொழுகை மதரசாக்களிலும், வீடுகளிலும் நடந்தது.

    ×