என் மலர்
நீங்கள் தேடியது "Home Secretary"
- வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
- சந்தன கடத்தல் வீரப்பன் முதல் 12க்கும் மேற்பட்டோரை வெள்ளத்துரை என்கவுன்ட்டர் செய்துள்ளார்.
ஓய்வு பெற ஒருநாள் முன்னதாக ஏடிஎஸ்பி வெள்ளத்துரையை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டிருந்தார்.
2013ம் ஆண்டு சிவகங்கையில் காவல் நிலைய மரண வழக்கில் விசாரிக்கப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
சிபிசிஐடி விசாரணையில் தன் மீது தவறு ஏதும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக வெள்ளத்துரை தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டது. சந்தன கடத்தல் வீரப்பன் முதல் 12க்கும் மேற்பட்டோரை வெள்ளத்துரை என்கவுன்ட்டர் செய்துள்ளார்.
இந்நிலையில், வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவு தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையை அமுதா தன்னிச்சையாக பணியிடை நீக்கம் செய்துள்ளதாக புகார்.
ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் உத்தரவை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை எனவும் இதுதொடர்பாக உள்துறை செயலாளர் அமுதாவை முதலமைச்சர் கண்டித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- மத்திய உள்துறை செயலாளராக இருந்து வருபவர் அஜய் பல்லா.
- இவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
புதுடெல்லி:
மத்திய அரசின் உள்துறை செயலராக அஜய்குமார் பல்லா இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், புதிய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதலின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது கோவிந்த் மோகன் கலாசாரத்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார்.
அஜய் குமாரின் பதவிக்காலம் கடந்த ஆண்டே மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- எழுத்தர் ஜடா முனி பல்வேறு விஷயங்களில் தலையிடுவதாக கூறி உள்துறை செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
- ஆயுதப்படையிலிருந்து தன்னிச்சையாக எனது கவனத்திற்கு தெரிவிக்காமல் நேரடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சரவணன். இவர் கடந்த 16 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் சரவணன், தமது அதிகாரத்தை முழுமையாக போலீஸ் நிலையத்தில் செயல்படுத்த முடியவில்லை எனவும், திருவாடானை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக எழுத்தர் ஜடா முனி பல்வேறு விஷயங்களில் தலையிடுவதாக கூறி உள்துறை செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
அதில் இந்த போலீஸ் நிலையத்தில் பணி செய்ய இயலவில்லை என கூறி அந்த கடிதத்தை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு இருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், திருவாடானை டி.எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து தொடர்ந்து தன்னிடம் கேட்காமல் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தன்னிச்சையாக அலுவல் பணிகள் ஒதுக்கப்படுகிறது.
மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு தன்னை கேட்காமலேயே போலீசாரை நியமித்து வருகிறார்கள். தற்போது காவல் நிலைய சரகத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலை நாட்ட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து வருகின்றனர். ஆயுதப்படையிலிருந்து தன்னிச்சையாக எனது கவனத்திற்கு தெரிவிக்காமல் நேரடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
உத்திரகோசமங்கை ஆருத்ரா தரிசன விழாவிற்கு என்னுடைய ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையத்தில் இருந்து 14 போலீசாரை என்னிடம் தெரிவிக்காமல் பணியமர்த்தி உள்ளனர் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்து, என்னை கேட்காமல் காவல் நிலையத்திலிருந்து போலீசாரை திடீர், திடீரென சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு அனுப்புவதால் போலீஸ் நிலையத்தில் பணிகள் முடங்கி கிடக்கிறது என்று தெரிவித்தார்.
இதுதொடர்பான விசாரணை நடத்தப்பட்ட நிலையில் உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பிய இன்ஸ்பெக்டர் சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. அபிநவ்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.