என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "home"

    • மின்சாரம் சிக்கனமாக இருக்க எல்இடி பல்புகளை உபயோகப்படுத்துவது நன்மை தரும்.
    • 90 சதவீத கட்டிடங்கள் எம் சாண்ட்கொண்டு கட்டப்படுபவை தான்.

    வீட்டின் முக்கிய பகுதி தரை. மணல் தரையானது சிமெண்ட் தரையாக மாறி, மொசைக் என்பது நாகரிகத்தின் வளர்ச்சியாக கருதப்பட்ட காலம் எல்லாம் மலையேறி தற்போது மார்பில் கிரானைட் என்பதே அனைவராலும் விரும்பப்படுகிறது. இதன் விலை மிக அதிகம் என்பதால் மார்பிள் கிரானைட் போன்று தோற்றத்தை தரவல்ல வெட்ரிஃபைடு டைல்ஸ் என சொல்லப்படும் செயற்கை டைல்ஸ்கள் அதிக அளவு உபயோகப்படுத்தப்படுகிறது. தற்போதைய புதிய செய்தி என்னவென்றால் இத்தகைய வெட்ரிஃபைடு டைல்ஸ்கள் இரண்டுக்கு இரண்டு அடி அளவு உடையதாக விற்பனைக்கு வந்தன.

    தற்போது இவை இரண்டுக்கு நான்கு அடி, இரண்டுக்கு ஆறு அடி என பெரிய அளவிற்கு வருவதால் வீட்டில் கூடங்களில் புழங்கும் அறைகளில் தரையில் இத்தகைய டைல்ஸ்கள் பதிக்கப்படுகிறது. இவை அதிக இணைப்புகள் இல்லாமல் இருப்பதால் தரை பார்ப்பதற்கு அழகாகவும் சிறப்பான தோற்றம் உடையதாகவும் இருக்கும். மேலும் இவைகளை பதிக்கும் பொழுதும் மேடு பள்ளம் இல்லாமல் சமநிலையோடு பிற்காலத்தில் ஒரு டைல்ஸ் ஏறி ஒரு டைல்ஸ் இறங்கி என்பது மாதிரியான பிரச்சனைகள் தவிர்க்கும் படியாக அருமையாக பதிக்கப்படுகிறது.

    எம் சாண்ட் (கருங்கல் ஜல்லி மணல்) தன்மை குறித்து இன்னமும் கூட மக்கள் இது எந்த அளவுக்கு திறமான கட்டுமானத்தை தரும் என யோசிக்கின்றனர். அவ்வாறு யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த சில வருடங்களில் கட்டப்படும் கட்டிடங்களில் 90 சதவீத கட்டிடங்கள் எம் சாண்ட் கொண்டு கட்டப்படுபவை தான். 10 சதவீதம் கூட ஆற்று மணல் அருகே கிடைக்கக்கூடிய கட்டிடங்கள் மட்டுமே. எம் சாண்ட் வாங்கும் பொழுது பார்த்து அவற்றின் தரத்தை பொறியாளருடன் கலந்தாலோசித்து வாங்குவது நலம்.

    ஒரு வீட்டின் மாதாந்திர செலவில் மிக முக்கிய பங்கு வகிப்பது மின்சார செலவு. இதை குறைக்க வேண்டும் என்றால் நீங்கள் புது வீடு கட்டும்பொழுது மின்சாரம் சிக்கனமாக இருக்கும் படியாக எல்இடி பல்புகளை உபயோகப்படுத்துவது நன்மை தரும். தற்போது பல வகையான மாடல்களில் பார்ப்பவர்களின் கண்களை கவரும் வண்ணம் ஒவ்வொரு அறைக்கும் ஏற்ற வண்ணம் எல்இடி பல்புகள் கிடைக்கின்றன இவற்றின் விலை சற்றே கூடுதலாக இருப்பினும் இவற்றின் நீண்ட கால பயன்பாட்டை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் மின்சார சிக்கனத்திற்கு பெரிதும் உதவுவதால் மாதாந்திர செலவுகளில் மிச்சம் பிடிக்கலாம்.

    புது வீட்டிற்க்காக வாங்கக்கூடிய மின்சார ஒயர்களில் நீங்கள் எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது தரமான ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற எலக்ட்ரிக்கல் ஒயர்களை அந்தந்த தேவைக்கு ஏற்ற படி தகுதி வாய்ந்த மின்சார பொறியாளரின் ஆலோசனைப்படி தீ விபத்தின் போது பாதுகாப்பை தரவல்ல 'பயர் ப்ரூப்' ஒயர்களாக வாங்க வேண்டும். இது பிற்காலத்தில் எந்த பிரச்சனையும் எழாமல் தடுக்கும்.

    தளத்திற்கு மேல் முன்பெல்லாம் செங்கல் ஜல்லியுடன் கடுக்காய் வெல்லம் போன்றவற்றை சேர்த்து மரக்கட்டைகளால் அடித்து அதன் மேல் சதுரவோடு பதிப்பார்கள். இது சூரிய வெப்பத்தை தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருக்கும். மொட்டை மாடிக்கு கீழே அமைந்துள்ள வீட்டில் அதிக அளவு வெப்பத்தை தராமல் தடுக்கும். இப்போது இதற்கு மாறாக கூலிங் டைல்ஸ் எனப்படும் டைல்கள் பதிக்கப்படுகின்றன. இவை சூரிய வெளிச்சத்தை உள்வாங்கிக் கொள்ளாமல் 30 சதவீத வெப்பத்தை பிரதிபலித்து விடுகிறது. இதனால் வீட்டிற்குள் வெப்பம் அதிக அளவு இறங்காது. இத்தகைய டைல்ஸ்களில் தரமானவற்றை பார்த்து வாங்கி நீங்கள் உங்கள் வீடுகளில் பதிக்கலாம்

    • பெரும்பாலானோர் வங்கியில் கடன் வாங்கித்தான் வீடு கட்டுகிறார்கள்.
    • டாப் அப் லோன் பற்றி தெரிந்து கொள்வோம்.

    பெரும்பான்மை மக்களுக்கு வீடு வாங்குவது வாழ்வின் நோக்கமாக உள்ளது. வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப் பார் என்று ஒரு பழமொழி உண்டு. திட்டமிட்ட பட்ஜெட்டில் வீட்டை கட்டி முடிப்பது எல்லோராலும் இயலாது காரியம். பெரும்பாலானோர் வங்கியில் கடன் வாங்கித்தான் வீடு கட்டுகிறார்கள். வாங்கிய கடனை விட கூடுதல் பணம் தேவை பட்டால் என்ன செய்வது? யாரிடம் கேட்பது என்ற கவலை வேண்டாம். இப்படி ஒரு இக்கட்டான சூழல் உருவாகும் போது உதவ ஏற்கனவே கடன் கொடுத்து உதவிய அதே வங்கி இன்னொரு திட்டம் வைத்துள்ளது.

    அதற்கு பெயர் டாப் அப் லோன். இந்த டாப் அப் லோன் பற்றி தெரிந்து கொள்வோம். டாப் அப் லோன் என்றால் நீங்கள் வீடு வாங்க ஒரு வங்கியில் கடன் வாங்கி இருக்கிறீர்கள். இப்போது உங்களுக்கு கூடுதல் கடன் தேவைப்படுகிறது. அதே வங்கியில் ஏற்கனவே உள்ள கடன் கணக்கில் கூடுதலாக கடன் வாங்கலாம். . நீங்கள் வாங்கத் திட்டமிட்டிருக்கும் வீட்டைப் புதுப்பிக்க விரும்பினால் அல்லது உங்கள் மனதை மாற்றிக் கொண்டு, இன்னும் கொஞ்சம் விலையுள்ள வீட்டை வாங்க முடிவு செய்தால், நீங்கள் வீட்டுக் கடன் டாப்-அப்பைப் பெறலாம்.

    வீட்டுக் கடன் டாப்-அப், வீட்டுப் பதிவுக் கட்டணம், புரோக்கரேஜ் அல்லது பராமரிப்புக் கட்டணம் போன்ற செலவுகளைக் கவனித்துக்கொள்ள உதவும். உங்கள் வீட்டுக் கடனில் டாப்-அப் செய்வதற்குப் பல நன்மைகள் உள்ளன.

    வீட்டுக் கடன் டாப் அப் நன்மைகள்

    நீங்கள் வீட்டுக் கடனாகப் பெற்ற பணத்தை, உங்கள் வீட்டைப் புதுப்பிப்பதில் இருந்து பதிவு/பரிவர்த்தனைக் கட்டணங்களைக் கவனிப்பது வரை பல்வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம்.

    நீங்கள் எடுக்கும் வங்கியைப் பொறுத்து, டாப் அப் பணத்தை தனிப்பட்ட மற்றும் வணிகச் செலவுகளுக்குப் பயன்படுத்தலாம்.

    கட்டுமானம் அல்லது புதுப்பித்தல் நோக்கங்களுக்காக நீங்கள் டாப் அப் பணத்தை கண்டிப்பாகப் பயன்படுத்தினால், 1961 இன் வருமான வரிச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வரிச் சலுகைகளைப் பெறலாம். டாப்-அப்பிற்காக நீங்கள் அதே கடன் வழங்குபவரைக் கையாள்வீர்கள் என்பதால், ஒப்பீட்டளவில் விரைவாகவும் எளிதாகவும் உங்கள் ஒப்புதல் கிடைக்கும்.

    டாப்-அப் வீட்டுக் கடன் தகுதி

    எந்தவொரு கடனாளியும் தங்களுடைய வீட்டுக் கடனில் இருப்பு பரிமாற்ற வசதியைப் பெற விரும்பும் ஒரு டாப்-அப் கடன் வசதியைப் பெறலாம். சம்பளம் பெறுபவர்கள் மற்றும் சுயதொழில் புரிபவர்கள் இருவரும் டாப்-அப் கடன் பெரும் தகுதிகளை பெற்றிருந்தால் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

    வீட்டுக் கடன் பெற்றிருப்பவர்கள் 6 மாதங்களுக்கு தடங்கல் இல்லாமல் தவணை செலுத்தி இருக்க வேண்டும். (குறைந்தபட்சம் 1 தவணை தவறி இருந்தால் நெகிழ்வுத்தன்மை வழங்கப்படும்).

    • நீண்ட நாட்கள் உழைக்கும் நல்ல தரமான மர சாமான்களை பார்த்து வாங்க வேண்டும்.
    • மர சாமான்களை அதிகமாக பாதிப்புக்குள்ளாக்குவது கரையான்களே.

    அனைத்து வீடுகளிலும் மரச்சாமான்கள் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றாகும். ஒவ்வொரு வீட்டின் அமைப்புக்கு ஏற்றவாறு அழகழகாக மரச்சாமான்கள் உபயோகிக்கப்படுகிறது. ட்ரெஸ்ஸிங் டேபிள், டைனிங் டேபிள், சேர், சோபா, நாற்காலிகள், கட்டில், பீரோ சமையலறையில் வைக்கப்படும் அலமாரிகள் என பலவிதமான மரச்சாமான்கள் நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது.

    நீண்ட நாட்கள் உழைக்கும் நல்ல தரமான மர சாமான்களை பார்த்து வாங்க வேண்டும். இவ்வகை மரச்சாமான்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது அவசியம்.

    மரச்சாமான்களின் மேல் தூசிகள் கீறல்கள் படாத வண்ணம் நல்ல அழகான துணிகளை அதன் மீது விரித்து அலங்கரிக்கலாம். தூசிகளை துடைக்கும் போது மென்மையான துணிகளை உபயோகப்படுத்த வேண்டும். கரடு முரடான பொருள்களை பயன்படுத்தி சுத்தம் செய்தல் கூடாது.

    சோப்பு நீர் உபயோகித்து மெல்லிய இதமான துணியால் தூசிகளை துடைக்க வேண்டும். வெயிலில் அதிக நேரம் மரச்சாமான்களை உலர்த்துவதை தவிர்க்க வேண்டும். வீட்டின் உள்ளே 30 முதல் 45° ஈர பதமும் 60 முதல் 80 டிகிரி வரை உள்ள வெப்பநிலையும் மரச்சாமான்களுக்கு சாதகமான ஒன்றாகும். அதற்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

    சூடான பாத்திரங்களை டைனிங் டேபிள் மேல் வைக்கும் போது அதற்கான விரிப்புகளை உபயோகிக்க வேண்டும். மரச்சாமான்களின் மீது கறைகள் படும்போது கத்தி போன்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்தக்கூடாது. சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி அழுந்த துடைக்க வேண்டும். பின்பு நன்கு காய விட்டு அதன் மேல் வாக்ஸ் அல்லது வார்னிஷ் கொண்டு பாலிஷ் செய்ய வேணும். அதிகபட்சமான வெயிலில் உலர்த்துவதை தவிர்க்க வேண்டும்.

    ஃபோல்டிங் சாமான்களை தகுந்த முறையில் கையாள வேண்டும் . எண்ணெய் மற்றும் வார்னிஷ் உபயோகிப்பதால் மரசாமான்கள் பளபளப்பாகவும் சீராகவும் அதிக நாட்கள் வரை பாதுகாப்பாக இருக்கும் .

    நாற்காலிகள் மீது ஈரத் துணிகளை காய வைப்பது தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கிருமிகள் அதில் அடைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

    இவ்வித மர சாமான்களை அதிகமாக பாதிப்புக்குள்ளாக்குவது கரையான்களே. மரச்சாமான்கள் மீது ஈரப்பதம் அதிகமாக இருந்தால் கரையான்கள் அரிக்க வாய்ப்புள்ளது. குளிர் மற்றும் மழைக்காலங்களில் இந்த கரையான்களின் பாதிப்பு மர சாமான்களின் மீது அதிகமாக இருக்கும்.

    நாற்காலிகள் கட்டில் கதவுகள் மீது கரையான்கள் அரிக்காத வண்ணம் மிக கவனமாக பாதுகாக்க வேண்டும். அதற்கான தற்காப்பு மருந்துகளை தெளிக்க வேண்டும்.

    இதுபோன்று எல்லா அறைகளில் உள்ள மரச்சாமான்களையும் பாதுகாப்பான முறையில் உபயோகித்தால் நீண்ட நாட்கள் உழைக்கும். நல்ல உயர்ந்த தரமான மரத்தால் செய்த பொருள்களை வாங்குவதும் நீண்ட காலம் உழைக்க ஏற்றவையாக இருக்கும்.

    • எதிர்பாராத விபத்தால் வீடு சேதமடைய நேர்ந்தால் காப்பீட்டின் மூலம் தகுந்த இழப்பீடு கிடைக்கும்.
    • காப்பீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை இதோ:

    நமது வாழ்நாளில் நாம் செய்யும் மிகப்பெரிய செலவு ஒரு வீட்டை வாங்குவது அல்லது கட்டுவது ஆகும். அவ்வாறு பல்வேறு கனவுகளுடன் கட்டி வாழ்ந்துகொண்டு இருக்கும் வீட்டை காப்பீடு செய்வது முக்கியமானது. நிலநடுக்கம், புயல், சூறாவளி, வெள்ளம் ஆகிய இயற்கை பேரழிவுகள், எதிர்பாராத விபத்துகள் போன்ற காரணங்களால் வீடு சேதமடைய நேர்ந்தால் காப்பீட்டின் மூலம் தகுந்த இழப்பீடு கிடைக்கும். அந்தத் தொகை வீட்டை சீர்படுத்துவதற்கும், இழப்பை ஈடு செய்வதற்கும் உதவும். காப்பீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை இதோ:

    * நாம் தேர்ந்தெடுக்கும் காப்பீட்டைப் பற்றிய முழு விவரங்களையும், விதிமுறைகளையும் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், தேவைப்படும் நேரத்தில் காப்பீட்டின் முழுப் பயனையும் பெற முடியும்.

    * உங்கள் தேவையைப் புரிந்து கொண்ட பின்னர் சிறந்த காப்பீட்டை வாங்கும் முயற்சியைத் தொடங்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தில், உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் பாலிசிகளின் பட்டியலை உருவாக்க வேண்டும். காப்பீட்டின் சிறப்புகள், வரம்புகள், விலக்குகள் மற்றும் காப்பீட்டுத் தொகை ஆகியவற்றின் அடிப்படையில் பாலிசிகளை ஒப்பிட வேண்டும்.

    * தேர்ந்தெடுக்கும் காப்பீடு தனிப்பட்ட விபத்துக்கள் மற்றும் டி.வி., கணினி போன்ற மின்னணு சாதனங்களுக்கு எதிராக, விரிவான பாதுகாப்பை வழங்குகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

    * காப்பீட்டாளர் நிதிச் சிக்கலை எதிர்கொண்டால், காப்பீட்டின் பயனை பெறுவதில் பாதிப்பு ஏற்படலாம். எனவே, காப்பீட்டாளரின் நிதிப் பின்னணியை உறுதி செய்வது அவசியம்.

    * காப்பீட்டு நிறுவனத்தின் இழப்பீடு வழங்கும் விகிதம், நிறுவனம் ஒரு ஆண்டில் எத்தனை இழப்பீடுகளை தந்திருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

    • அலங்காரத்தை விரும்பாத பெண்கள் எவரும் இல்லை.
    • வார விடுமுறை நாட்களை வெளியிடங்களுக்கு சென்று செலவிட பெரும்பாலான பெண்கள் ஆசைப்படுவார்கள்.

    தன் நலம் பேணாமல் குடும்பத்தினர் நலனில் அக்கறை கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக கையாளும் சுபாவம் கொண்டவர்கள் குடும்பத் தலைவிகள். அவர்களை மகிழ்விக்கும் வண்ணம் அவ்வப்போது பரிசுகளோ, இனிப்பு பண்டங்களோ கொடுத்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அது தங்கள் நலனில் குடும்பத்தினர் அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தை அவர்களிடத்தில் விதைக்கும். மேலும் உற்சாகத்துடன் செயல்படவும் அவர்களை தூண்டும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    * அலங்காரத்தை விரும்பாத பெண்கள் எவரும் இல்லை. ஒப்பனை விஷயத்தில் கூடுதல் அக்கறை கொள்வார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு ஒப்பனை செய்வதற்கு போதிய நேரம் ஒதுக்க முடிவதில்லை என்ற மனக்கவலை அவர்களிடம் இருக்கும். அவர்கள் செய்யும் எளிய ஒப்பனையை பாராட்டினாலே குஷியாகிவிடுவார்கள். 'உன்னுடைய ஹேர் ஸ்டைல் வழக்கத்தைவிட ஸ்டைலாக இருக்கிறது, உன் முகமும் இன்னைக்கு பொலிவாக இருக்கிறது' என்று பாராட்டுவது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடும்.

    * புது ஆடை உடுத்தும்போது கணவர் ஏதாவது கருத்து சொல்வாரா? என்ற எதிர்பார்ப்பு பெண்களிடம் மேலோங்கும். அதனை புரிந்து கொண்டு 'இந்த ஆடை உனக்கு சூப்பராக இருக்கிறது, உன் வயதும் கொஞ்சம் குறைந்துவிட்டது போன்று தோன்றுகிறது' என்பது போன்ற வார்த்தைகள் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

    * திருமணமான பிறகு உடல் எடை சற்று அதிகரிப்பது இயல்பானதுதான். பெண்கள் பலர் அதனை விரும்ப மாட்டார்கள். எப்படியாவது உடல் எடையை குறைத்துவிட வேண்டும் என்று திட்டமிடுவார்கள். ஒவ்வொரு நாளும் எடையை குறைக்கும் முயற்சிகளிலும், பயிற்சிகளிலும் ஈடுபடுவார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, 'நீ பயிற்சி செய்ய தொடங்கிய சில நாட்களிலேயே மாற்றம் தெரிய தொடங்கி இருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் உடல் எடை கட்டுக்குள் வந்துவிடும் போலிருக்கே' என்பது போன்ற வார்த்தைகள் அவர்களை உற்சாகப்படுத்தும். உடல் எடையை இன்னும் குறைப்பதற்கான பயிற்சிகளில் தீவிரமாக களமிறங்கிவிடுவார்கள். உடற்பயிற்சியாளர்களின் ஆலோசனையின்றி உடல் எடையை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது என்பதையும் அவர்களிடம் கூறிவிடுங்கள். அதற்கான ஏற்பாடுகளை நீங்களே முன்னின்று மேற்கொள்வது அவர்களுக்கு ஊக்கமளிக்கும்.

    * உண்மையான வயதை காட்டிலும் வயதை சற்று குறைத்து பேசுவதும் பெண்களை உற்சாகப்படுத்தும்.

    * வார விடுமுறை நாட்களை வெளியிடங்களுக்கு சென்று செலவிட பெரும்பாலான பெண்கள் ஆசைப்படுவார்கள். காரிலோ, மோட்டார் சைக்கிளிலோ துணையுடன் பயணம் மேற்கொள்வதும் அவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். விடுமுறை காலங்களில் ஓரிரு நாள் வெளி இடங்களுக்கு சென்று வரும்படியான சுற்றுலா பயணங்களை திட்டமிடுங்கள். அவர்களின் பள்ளி, கல்லூரி பருவ காலத்தில் சென்றிருந்த இடமாக அது இருந்தால் இன்னும் சந்தோஷமடைவார்கள். தங்களுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவும் ஆசைப்படுவார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ஆர்வமுடன் கேட்க தொடங்கினால் குதூகலமாகிவிடுவார்கள்.

    * பிறந்தநாள், திருமண நாளின்போது அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை, அவர்கள் எதிர்பார்க்காத பரிசுகளை கொடுத்தாலோ உற்சாக வெள்ளத்தில் மிதப்பார்கள்.

    • வாஸ்து முறைப்படி வீடுகளை அமைக்க வேண்டும் என்று பலருக்கும் எண்ணம் இருக்கிறது.
    • வீடுகளில் சில பிரச்சினைகள் ஏற்படலாம் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    வாஸ்து முறைப்படி வீடுகளை அமைக்க வேண்டும் என்று பலருக்கும் எண்ணம் இருக்கிறது. அப்படி அமையாத வீடுகளில் சில பிரச்சினைகள் ஏற்படலாம் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்களும் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    * பசு நெய் அல்லது நல்லெண்ணெயால் தினமும், மாலை வேளையில் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும்.

    * வீட்டை தினமும் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

    * வீட்டில் தினமும் வாசனை திரவியங்கள், சாம்பிராணி, தூபம் போட்டு வர வேண்டும்.

    * சங்கு, மயில் இறகு போன்ற பொருட்களை வீட்டில் வைக்கலாம்.

    * வீட்டு முன் வாசலில் எலுமிச்சைப் பழம், பச்சை மிளகாய் போன்றவற்றை கட்டி தொங்க விடலாம்.

    * ஒரு குவளையில் நீர் வைத்து, அதில் எலுமிச்சைப் பழத்தை போட்டு வைக்கலாம்.

    * வீட்டின் நான்கு பக்கங்களிலும் கண்ணாடி அல்லது பீங்கான் குவளையில் கல் உப்பு போட்டு வைக்கவும். வாரம் ஒரு முறை உப்பை மாற்றவும். பழைய உப்பை வாஷ்பேஷனில் கொட்டிவிடவும்.

    * தோஷம் உள்ள இடங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கவும்.

    * வீட்டில் கணபதி ஹோமம், வாஸ்து தோஷம் செய்யலாம்.

    * வீட்டில் கூட்டுப் பிரார்த்தனை செய்யலாம்.

    * வாசல் படிகளில் மஞ்சள், குங்குமம் இட வேண்டும். தலைவாசலில் மாவிலை கட்டி தொங்க விடலாம்.

    * வீட்டில் துளசி மாடம் அமைப்பது நல்லது. அதனை தினமும் நல்ல முறையில் பராமரித்து வழிபட வேண்டும்.

    * ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு வேளையில் வீட்டில் இருப்பவர்களுக்கு திருஷ்டி சுற்றிப் போடலாம்.

    * வீட்டில் தெய்வீக சுலோகங்கள், இறைவனின் நாமங்கள், மந்திரங்களை ஒலிக்க விடலாம்.

    • எனது மகன், மருமகள் ஆகியோர் சேர்ந்து கொண்டு எங்களை அடித்து துன்புறுத்துகின்றனர்.
    • அரசால் வழங்கப்படும் மாத உதவி தொகையையும் அபகரித்து கொள்கின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மானோஜிப்பட்டியை சேர்ந்த தாமஸ் மனைவி மலர்கொடி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    எங்களுக்கு மனவளர்ச்சி குன்றிய மகள் உள்பட 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். எனது கணவர் தாமஸ் இறந்து 40 நாள் ஆகிறது. அவருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை கூட செய்யவில்லை. இந்நிலையில் எனது மகன், மருமகள் ஆகியோர் சேர்ந்து கொண்டு எங்களை அடித்து துன்புறுத்துகின்றனர். அரசால் வழங்கப்படும் மாத உதவி தொகையையும் அபகரித்து கொள்கின்றனர்.

    மேலும் வீட்டையும் அபகரித்து விட்டனர். எனவே மகனிடம் இருந்து வீட்டை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாசற்படிக்கு மேல் ஒரு படிகாரம் கல்லை கருப்புநிற கயிற்றில் கட்டி தொங்க விட வேண்டும்.
    • ஒரு வீட்டின் முன்பாக விநாயகர் படம் அல்லது விநாயகர் சிலை இருப்பது நல்லது.

    தெய்வீகத் தன்மை வாய்ந்த நேர்மறை சக்திகள் நம் வீட்டுக்குள் நுழைந்து நிரந்தரமாக தங்கி நமக்கும் நமது பிற்கால சந்ததியினருக்கும் எல்லாவிதமான நன்மைகளையும் ஏற்படுத்தி நிறைவான வாழ்க்கையை வாழ உதவும் சில எளிய குறிப்புகளை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்

    ஒருவரது வீட்டில் எப்போதும் நேர்மறையான ஆற்றல்கள் தங்கியிருக்க வீட்டில் இருக்கும் பெண்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தினத்தன்றும் வீட்டு வாசற்படியை சுத்தம் செய்து, அந்த வாசற்படியில் மஞ்சள் பூசி குங்குமம் இட்டு வருவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும் இப்படி செய்வதால் செல்வ மகளான லட்சுமி தேவி, அந்த வீட்டிற்குள் நிரந்தரமாக தங்கி, அந்த வீட்டில் நிறைவான செல்வம் இருக்கும்படி வழிவகை செய்வாள்

    வீட்டின் முன்பாக நிலை வாசற்படிக்கு மேல் ஒரு படிகாரம் கல்லை கருப்புநிற கயிற்றில் கட்டி தொங்க விட வேண்டும். இப்படிச் செய்வதால் அந்த வீட்டிற்குள் நுழைய முயல்கின்ற எதிர்மறை ஆற்றல்களை அந்தப்படிகாரக்கல் ஈர்த்துக் கொண்டு நாம் வாழும் வீட்டை தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும்.

    ஒரு வீட்டின் முன்பாக விநாயகர் படம் அல்லது விநாயகர் சிலை இருப்பது அந்த வீட்டிற்கு இருக்கின்ற வாஸ்து குறைகளை போக்குவதோடு வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல்கள் நுழையாமல் காக்கிறது. அதிலும் அந்த விநாயகர் சிலை வெள்ளருக்கு மரக்கட்டையால் செய்யப்பட்ட விநாயகர் சிலையாக இருந்து அந்த வெள்ளெருக்கு விநாயகர் சிலைக்கு தினம் மலர் சாற்றி தீப தூபம் காட்டி வருவதால் அந்த வீட்டில் வசிப்பவர்களின் வாழ்வில் நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படும். உங்கள் வீட்டிற்கு முன்பாக இருக்கும் சுவர் அல்லது கதவில் செம்புக் கம்பியால் செய்யப்பட்ட "ஓம்" என்கிற பிரணவ மந்திர வடிவத்தை மாட்டி வைப்பதால் வீட்டில் வசிப்பவர்களுக்கு நன்மைகளை உண்டாக்கும்

    சிவன் கோவில்களில் இருக்கின்ற பைரவருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்ற விபூதியை வாங்கி கொண்டு வந்து உங்கள் வீட்டின் வெளிப்புற வாயில் பகுதியின் இரண்டு புறமும் சிறிதளவு போட்டு வைப்பதால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு தீய ஆற்றல்களிடமிருந்து பாதுகாப்பை கொடுக்கும்

    உங்கள் வீட்டிற்கு முன்பாக இருக்கின்ற நிலை வாயில் கதவில் "சுவஸ்திக்" சின்னம் அல்லது "திரிசூலம்" சின்னத்தை வரைந்து வைப்பது நல்லது. முருகப்பெருமானின் ஆயுதமான "வேல்" சின்னத்தையும் வீட்டின் கதவுக்கு முன்பாகவோ அல்லது அதற்கு மேலாக இருக்கின்ற இடத்திலோ வரைந்து வைப்பது நல்லது. உங்கள் வீட்டின் நிலை வாசலில் இரண்டு புறமும் மஞ்சள் கிழங்கு மாலையை மாட்டி வைப்பது நேர்மறையான ஆற்றல்களை உங்கள் வீட்டுக்குள் நுழைய வழிவகை செய்யும்.

    உங்கள் வீட்டின் வாயிற்படியின் இரண்டு பக்கத்திலும் மரம் அல்லது மண் கொண்டு செய்யப்பட்ட யானை பொம்மைகளை வைப்பதால் மங்களகரமான பலன்கள் அந்த வீட்டில் இருப்பவர்களின் வாழ்வில் உண்டாகும். மேலும் வீட்டு நிலை வாசல் படியின் மேலாக ஒன்று அல்லது ஏழு குதிரைகள் இருக்கின்ற வகையான படத்தினை மாட்டி வைப்பது உங்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்து விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற செய்யும் குதிரை படம் இல்லாதவர்கள் வண்டி இழுக்கும் குதிரையின் காலில் இருந்து கழண்ட பழைய குதிரை லாடத்தை மாட்டி வைப்பதும் மேற்சொன்ன பலன்களை உங்களுக்கு தரும்.

    தாங்கள் வசிக்கின்ற வீடுகளில் ஏதாவது ஒரு குறையினால் பொருளாதார ரீதியான கஷ்டங்களை அனுபவிப்பவர்கள் மஞ்சளில் தோய்த்த ஒரு பருத்தித் துணியில் பூஜையறையில் பூஜை செய்யப்பட்ட ஒரு தேங்காயை எடுத்து அந்த மஞ்சள் துணியில் வைத்து அதனுடன் சிறிது நாணயங்களை வைத்து முடிச்சி போன்று கட்டி உங்கள் வீட்டு வாயிற்படியில் மேலாக கட்டி வைப்பதால் பணம் சம்பந்தமான பிரச்சினைகளில் உங்களுக்கு நன்மையான பலன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

    • மேட்டூரை அடுத்த தொட்டில்பட்டியில் உள்ளது. அங்கு அனல் மின் நிலைய உதவி செயற்பொறியாளரான சந்திரகலா குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
    • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

    மேட்டூர்:

    ேசலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு சொந்தமான குடியிருப்பு மேட்டூரை அடுத்த தொட்டில்பட்டியில் உள்ளது. அங்கு அனல் மின் நிலைய உதவி செயற்பொறியாளரான சந்திரகலா குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    நேற்று திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

    பீரோவில் இருந்த நகைகள், பணம் கொள்ளை போய் இருந்தது. இதுதொடர்பாக கருமலைக்கூடல் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று துப்பு துலக்கி வருகிறார்கள்.

    • பட்ஜெட் போட்டு செயல்படும் போது செலவுகளை எளிதாக குறைக்க முடியும்.
    • ஒவ்வொரு பொருளிலும் கவனம் செலுத்தினால் பெருமளவு செலவை குறைக்கலாம்.

    வருமானத்திற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு செலவு செய்வதால் சேமிப்பு அதிகரிக்கும். பட்ஜெட் போட்டு செயல்படும் போது செலவுகளை எளிதாக குறைக்க முடியும். பெண்கள் மளிகைபொருட்கள் வாங்குகையில் சில வழிமுறைகளை பின்பற்றினால் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

    மளிகைப்பொருட்களை சிறுக சிறுக வாங்காமல் ஒரு மாதத்திற்கு தேவையானவற்றை மொத்தமாக வாங்குவது நல்லது.

    ஒவ்வொரு மாதமும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு முன்பு பட்டியல் தயார் செய்வது அவசியமானது.

    சமையல் அறைக்குள் சென்று என்னென்ன பொருட்கள் தேவை? என்பதை கவனித்த பின்பு பட்டியல் போடலாம்.

    முந்தைய மாதத்தில் வாங்கிய பொருட்களில் ஏதேனும் மீதம் இருந்தால் இந்த மாதம் வாங்க இருக்கும் பொருட்களின் அளவை குறைத்து கொள்ளலாம்.

    அடிக்கடி சமைக்கும் உணவுகளுக்கு தேவையான பொருட்களை மட்டும் அதிகமாக வாங்கிகொண்டு மற்றவற்றை குறைத்து கொள்வது சிறந்தது.

    பலசரக்கு அங்காடிகளில் பொருட்கள் வாங்கும் போது கண்ணில் பட்டதையெல்லாம் எடுத்துக்கொண்டிருக்காமல் முதலில் நமக்கு தேவையான பொருட்களை வாங்கிய பின்னரே மற்றவற்றை வாங்க வேண்டும். இது பணம் விரயமாகாமல் தடுக்க உதவும்.

    பண்டிகை காலங்களில் தேவைக்கு ஏற்றவாறு மளிகைப்பொருட்கள் வாங்குவது பணத்தை சேமிக்க உதவும்.

    மளிகை பொருட்களளுக்கான பட்ஜெட் போடும் போது காய்கறிகள், பழங்கள், இறைச்சி போன்றவற்றுக்கும் சேர்த்து பணம் ஒதுக்க வேண்டும்.

    ஷாப்பிங் செய்யும் போது தள்ளுபடி என்ற வார்த்தையை பார்த்து மயங்காமல் அவசியமான பொருட்களை மட்டும் வாங்கினால் பணத்தை சேமிக்கலாம்.

    அந்தந்த சீசனுக்குரிய காய்கறிகள், பழங்களை வாங்கினால் விலை குறைவாக இருக்கும். பணமும், மிச்சமாகும்.

    காய்கறிகளை மொத்தமாக வாங்கி வைத்து வீணாக்காமல் என்ன சமைக்கலாம் என்ற திட்டமிடுதலோடு வாராவாரம் வாங்கினால் பணத்தை சேமிக்கலாம்.

    மளிகைப்பொருட்களை பட்டியல் போடுவதற்கு முன்பு குடும்பத்தினரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.

    உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்பவர்கள் தாங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் உணவுகளுக்கு ஏற்றவாறு மளிகைப்பட்டியல் தயார் செய்யலாம்.

    இவ்வாறு ஒவ்வொரு பொருளிலும் கவனம் செலுத்தினால் பெருமளவு செலவை குறைக்கலாம்.

    • வீட்டில் இருக்கும் ஒரு சில மூலைகளில் குப்பையை வைத்தால் பண கஷ்டம் ஏற்படும்.
    • எந்த மூலையில் குப்பையை வைக்கக்கூடாது என்று தெரிந்துக்கொள்வோம்.

    வீட்டைக்கூட்டி குப்பையை வீட்டில் இருக்கும் மூலையில் ஒதுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஆம். அப்படி செய்தால் வீட்டில் தரித்திரம் உண்டாகும் என நம்புகின்றார்கள். ஆனாலும் அதை நம் காதில் எடுத்துக்கொள்வதில்லை. வீட்டைக்கூட்டி மூலையில் தான் வைப்போம்.

    வீட்டில் குப்பையை வைத்தால் வீட்டில் நிகழும் சுப நிகழ்ச்சிகளுக்கு தடங்கள் ஏற்படும்.

    அதுபோலவே வீட்டில் இருக்கும் ஒரு சில மூலைகளில் குப்பையை வைத்தால் பண கஷ்டம் ஏற்படுமாம். அது எந்த மூலை என்று முதலில் தெரிந்துக்கொள்வோம்.

    நாம் வீடு கட்டும் போதே வாஸ்து பார்த்து கட்டுவது தான் வழக்கம். வீட்டில் இருக்கும் படுக்கையறை, சமையலறை, குளியலறை மற்றும் கதவு என்பவைகளை வாஸ்து பார்த்து தான் கட்டுவோம்.

    அவ்வாறு கட்டினால் தான் வீட்டில் நன்மைகள் ஏற்படும். தென்கிழக்கு மூலையை தான் பொதுவாக அக்னி மூலை என்று கூறுவோம்.

    தென்கிழக்கு திசையில் தான் பொதுவாகவே சமையலறை அமைப்பார்கள். சமையலறை இருக்கும் இடங்களில் குளியலறை இருக்க கூடாது. அதாவது நீரை பயன்படுத்தி எதுவும் செய்ய கூடாது.

    அதுபோலவே தென்கிழக்கு மூலையில் குப்பைகளையும் ஒதுக்க கூடாது. அவ்வாறு செய்யதால் வீட்டில் சம்பாதிக்கும் பணம் நீடிக்காது.

    பணக்கஷ்டம், தொழிலில் கஷ்டம் மற்றும் குடும்பத்தில் பிரச்சினை என்பவை ஏற்படும். ஆகவே வீட்டில் இருக்கும் தென்கிழக்கு மூலையில் குப்பைகளை ஒதுக்கி வைக்க கூடாது என்பதை மறக்கக்கூடாது.

    • நமக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் தான்.
    • பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது.

    பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளவில் உண்டு. ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும்.

    பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது. 2 அல்லது 4 துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். இதனை பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும்.

    நமக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் தான். பச்சைக்கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்க கூடிய துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியே போய் விடும்.

    அதனால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். அதுமட்டுமல்லாது பச்சை கற்பூரத்திற்கு பணத்தினை ஈர்க்கும் தன்மை இருப்பதால் வீட்டில் பணத்திற்கு கஷ்டம் இல்லாமல் வீட்டில் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். வீண் செலவுகள் இருக்காது.

    இந்த கற்பூரத்தினை பணம் இருக்கும் இடத்தில் வைக்கும் போது, அங்கு வரும் எதிர்மறையான வாசங்களையும், சக்திகளையும் இது தடுத்து நிறுத்தும். 2 பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும்.

    தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம்.

    வீட்டில் நடைபெறக்கூடிய எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பச்சை கற்பூரத்தை இடம் பெற செய்வது நல்லது.

    பச்சை கற்பூரத்தை எடுத்து குலதெய்வத்தையும், இஷ்டதெய்வங்களையும் மனதார வணங்கி நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து அந்த பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்துவிட வேண்டும். இப்படி செய்வதால் நம் வீட்டில் உள்ள துர்சக்திகள், கெட்ட சக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகி செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும்.

    வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடிகொள்வாள். ஆதலால் பணம் புழங்கும் இடங்களில் வாசனை மிக்க பச்சை கற்பூரமானது இருந்தால் செல்வம் செழிக்கும்....!!!

    ×