என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "homer robbery"
கோவை:
அன்னூர் அருகே உள்ள சானாம்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜன் (50). பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 20-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான திருப்பத்தூருக்கு சென்றார். நேற்று காலை வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த நாகராஜன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ. 65 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து நாகராஜன் அன்னூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
போரூர்:
விருகம்பாக்கம் நாராயண முதலி தெருவைச் சேர்ந்தவர் பிரியதர்சினி. கடந்த ஆண்டு இவரது வீட்டில் 14பவுன் நகை திருடு போனது. இதேபோல மேல்தளத்தில் வாடகைக்கு இருந்தவர் வீட்டிலும் 6 பவுன் நகை மாயமானது.
இதுகுறித்து வடபழனி உதவி கமிஷனர் ஆரோக்ய பிரகாசம் உத்தரவின் பேரில் விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் கோமதி விசாரணை நடத்தி வந்தார்.
இந்த இரண்டு வீட்டிலும் வீட்டு வேலை பார்த்த சாலிகிராமம் ஏகாம்பரம் தெருவைச் சேர்ந்த ஐஸ்வர்யாவை நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது கடந்த 10 மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யா விருகம்பாக்கம் பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.அவரிடமிருந்து 11 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
தாம்பரம்:
மேற்கு தாம்பரத்தில் ஜெருசலேம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் சிவா என்கிற கருப்பசாமி (45). இவர் வட்டி தொழில் செய்து வருகிறார். உறவினர் திருமணத்துக்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்றிருந்தார். இன்று காலை திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ மூலம் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த ஹேமசந்திரா நகரைச் சேர்ந்தவர் கமல். நகை கடை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 17-ந் தேதி குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 60 சவரன் நகை, ரூ. 15 ஆயிரம், ¼ கிலோ வெள்ளி திருடு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து கமல் மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
இப்பகுதியில் அடிக்கடி கொள்ளைபோவது குறித்து பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
திருநின்றவூர் அடுத்த செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன்.திருநின்றவூர் சி.டி.எஸ் சாலையில் எலெக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார்.
இன்று காலை கடையின் ஷெட்டர் பாதி திறந்து கிடந்தது. இது பற்றி ஸ்ரீனிவாசனுக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். உடனே அவர் கடைக்கு வந்து உள்ளே சென்ற பார்த்தார். அப்போது கடையில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து திருநின்றவூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குபதிவு செய்து அந்த பகுதியில் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
செங்குன்றத்தை அடுத்த அழிஞ்சிவாக்கம் செல்வ விநாயகர் நகரை சேர்ந்தவர் வாசுதேவன். சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவர் குடும்பத்துடன் செய்யாறில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 21 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த நந்தியம் பாக்கம் ரெயில் நிலையம் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இங்கு 10 வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு வீட்டில் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை செய்யும் பிரபல் குடியிருக்கிறார். இன்னொரு வீட்டில் வட சென்னை அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர் வினோத் குடும்பத்துடன் வசிக்கிறார். மற்றொரு வீட்டில் தேவிகா (65) குடியிருக்கிறார்.
நேற்று 3 வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டு பிரபல் வீட்டில் 50 ஆயிரம் பணம், 2 சவரன் நகை, வினோத் வீட்டில் 5 ஆயிரம் பணம், 1 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், தேவிகா வீட்டில் அரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மற்ற 7 வீடுகளில் வெளியே தாழ்ப்பாள் போட்டு விட்டு கொள்ளை அடித்துள்ளனர்.
இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செவ்வாப்பேட்டை:
வேப்பம்பட்டு, அருண் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ராஜி. இவரது மருமகளின் வளைகாப்பு நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்தது. இதில் கலந்துகொள்ள ராஜி வீட்டை பூட்டிவிட்டு சென்றார். நேற்று இரவு திரும்பி வந்தபோது வீட்டு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 7 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகன் விசாரித்து வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்