search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Honey Trap"

    • லல்லு என்ற 50 வயது முதியவருக்கு ஒரு பெண்ணிடமிருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது.
    • முதியவரை மர்ம கும்பல் கடத்தி வைத்து ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

    உத்திரபிரதேச மாநிலத்தில் 'பிளைண்ட் டேட்டிங்' சென்ற 50 வயது முதியவரை மர்ம கும்பல் கடத்தி வைத்து 3 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரை சேர்ந்த லல்லு என்ற 50 வயது முதியவருக்கு ஒரு பெண்ணிடமிருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது. தன்னிடம் செல்போனில் பேசிய பெண்ணை சந்திப்பதற்காக அந்த முதியவர் ஜான்சி நகருக்கு டேட்டிங் சென்றுள்ளார்.

    அந்த இடத்தில அந்த முதியவரை மர்ம கும்பல் கடத்தி வைத்து அவரது குடும்பத்தினரிடம் ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் முன்பணமாக ரூ.1 லட்சத்தை கடத்தகாரர்களிடம் அவரது குடும்பத்தினர் கடத்தல்காரர்களிடம் கொடுத்துள்ளனர்.

    இதனையடுத்து, லல்லுவின் மகன் போலீசில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ரகசிய ஆப்ரேசன் நடத்திய போலீசார் கடத்தல்காரர்களிடம் இருந்து லல்லுவை மீட்டனர்.

    லல்லு கடத்தப்பட்ட வழக்கில் ஒரு பெண் பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பெண்களை பயன்படுத்தி 'ஹனிட்ராப்' முறையில் ஏற்கனவே பலரை இந்த கும்பல் கடத்தியுள்ளது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இன்ஸ்டாகிராம் மூலம் பணக்கார இளைஞர்களை குறிவைத்து பணம் பறித்துள்ளார்.
    • ஜாய் ஜமீமாவிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகாரளிக்க முன்வர போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இளைஞர்களை குறிவைத்து ஹனி ட்ராப் மூலம் பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

    28 வயதான ஜாய் ஜமீமா என்ற பெண் இன்ஸ்டாகிராம் மூலம் பணக்கார இளைஞர்களை குறிவைத்து பணம் பறித்துள்ளார்.

    பணக்கார இளைஞர்களிடம் இன்ஸ்டாகிராமில் பேசி பழகி வீட்டுக்கு வரவைத்து போதை வஸ்து கொடுத்து, ஆடைகள் இன்றி புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட இளைஞர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார்.

    வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் இப்பெண்ணை கைது செய்துள்ளனர்.கைதான ஜாய் ஜமீமாவிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகாரளிக்க முன்வர போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

    ×