என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Honor Killing"
- கடந்த 4 மாதங்களாக பிரவீன் எங்கு செல்கிறார்? என்பதை தினேசும் அவரது நண்பர்களும நோட்டமிட்டனர்.
- பள்ளிக்கரணையில் நடந்துள்ள இந்த ஆணவக்கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேளச்சேரி:
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிரவீன். 26 வயது வாலிபரான இவர் ஜல்லடியான்பேட்டை பகுதியை சேர்ந்த ஷர்மி என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். ஷர்மியும், பிரவீனை விரும்பினார்.
இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள். இதனால் இளம்பெண்ணின் காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஷர்மியின் அண்ணன் தினேஷ், பிரவீனின் சாதியை சுட்டிக்காட்டி, நீ அவனை திருமணம் செய்யக்கூடாது என்று தங்கையை எச்சரித்து உள்ளார்.
வாலிபர் பிரவீனை மறந்து விடு, உனக்கு நமது சாதியிலேயே நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என்று வீட்டில் கூறி வந்துள்ளனர். ஆனால் ஷர்மி இதனை ஏற்க மறுத்துள்ளார்.
இருப்பினும் மனதை மாற்றி எப்படியாவது பிரவீனிடம் இருந்து ஷர்மியை பிரித்துவிட வேண்டும் என்பதில் அண்ணன் தினேசும் அவரது குடும்பத்தினரும் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளனர்.
ஆனால் ஷர்மியோ தனது பெற்றோரின் பேச்சை கேட்காமல் பிரவீனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து உள்ளனர். இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிரவீன், ஷர்மியை அழைத்துச் சென்று காதல் திருமணம் செய்து கொண்டார்.
ஷர்மியின் குடும்பத்தினருக்கு தெரியாமல் இந்த திருமணம் நடந்து முடிந்து உள்ளது. இதனால் பிரவீன், ஷர்மியின் அண்ணன் தினேஷ் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார்.
இதுதொடர்பாக தனது நண்பர்களிடம் சொல்லி, தினேஷ் வருத்தப்பட்டு உள்ளார். எனது தங்கையை கூட்டிச் சென்று திருமணம் செய்து கொண்டதால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை என்று கூறி அவர் ஆதங்கப்பட்டு வந்துள்ளார்.
இதை தொடர்ந்து பிரவீனை கொலை செய்ய தினேஷ் திட்டம் போட்டார். கடந்த 4 மாதங்களாக பிரவீன் எங்கு செல்கிறார்? என்பதை தினேசும் அவரது நண்பர்களும நோட்டமிட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு பிரவீன் பள்ளிக்கரணையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த தினேசும் அவரது நண்பர்கள் 3 பேரும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பிரவீனை சுற்றி வளைத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவீன் அவர்களின் பிடியில் இருந்து தப்ப முயன்றார். ஆனால் அதற்குள் 4 பேரும் நவீனை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் விழுந்தது. அலறி துடித்தபடியே பிரவீன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.
அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிச்சென்று பிரவீனை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிரவீன் உயிரிழந்தார்.
நேற்று இரவு 9 மணி அளவில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்த நேரத்திலேயே நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிரவீனை கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கரணையில் நடந்துள்ள இந்த ஆணவக்கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட வாலிபரும், கொலை செய்த வாலிபர்களும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீஸ் பாது காப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
- கோழி அறுப்பதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, மகள் என்றும் பாராமல் தனது மகள் கவனாவின் கழுத்தை மஞ்சுநாத் அறுத்துள்ளார்.
- போலீசார் மஞ்சுநாத்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:
பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி தாலுகா பிதலூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 45). இவர் கோழி இறைச்சி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு கவனா(20) உள்பட 2 மகள்கள் உள்ளனர்.
கவனா தனியார் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்து இருந்தார். மஞ்சுநாத்தின் 2-வது மகள் வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த மஞ்சுநாத் தனது மகளை கண்டித்துள்ளார். எனினும் தந்தையின் பேச்சை கேட்காமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி 2-வது மகள் தனது காதலனுடன் மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு 17 வயதே ஆவதால் அவரை, போலீசார் மகளிர் பாதுகாப்பு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விவகாரத்தில் தங்கைக்கு கவனா உதவி செய்திருக்கலாம் என்று மஞ்சுநாத் சந்தேகித்தார். மேலும் அவர் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
இதற்கிடையே மூத்த மகள் கவனா தான் வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலிப்பதாக கூறி உள்ளார். இதைக்கேட்டு மஞ்சுநாத் அதிர்ச்சி அடைந்தார். ஏற்கனவே உனது தங்கை வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்து ஓடியுள்ளார். எனவே நீயும் வேறு சமுதாயத்தை சேர்ந்தவரை காதலிப்பதை நிறுத்தி விடு கவனாவிடம் தந்தை மஞ்சுநாத் கூறினார்.
இருப்பினும் கவனா தனது காதலை கைவிடாமல் இருந்து வந்தார். இது மஞ்சுநாத்திற்கு தெரிந்தது.
இதுதொடர்பாக அவர் தனது மகளிடம் வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் தனது மகளை கடுமையாக திட்டியதுடன், இரும்பு கம்பியால் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த கவனா மயங்கி விழுந்தார்.
அப்போது கோழி அறுப்பதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, மகள் என்றும் பாராமல் தனது மகள் கவனாவின் கழுத்தை மஞ்சுநாத் அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கவனா துடிதுடித்து உயிரிழந்தார்.
இதையடுத்து மஞ்சுநாத், விஸ்வநாதபுரம் போலீசில் சரண் அடைந்தார். மேலும் தனது மகளை ஆணவக்கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
உடனே போலீசார் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு சென்றனர். அங்கு ஒரு அறையில் கவனா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் கவனா, வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்ததால் அவரை மஞ்சுநாத் கொலை செய்தது உறுதியானது.
இதையடுத்து போலீசார் மஞ்சுநாத்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காதல் விவகாரத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜெகன், சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
- மாமனார் சங்கர், ஜெகனை கொலை செய்துவிட்டு நேரடியாக கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ஜெகன் (வயது28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரும் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யா (21) என்பவரும் காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜெகன், சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நேற்று மதியம் ஜெகன் இருசக்கர வாகனத்தில் தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் டேம் ரோடு மேம்பாலம் அருகில் சர்வீஸ் ரோடு சென்றபோது மாமனார் சங்கர் மற்றும் உறவினர்கள் 3 பேர் அரிவாளால் ஜெகனை வெட்டி சாய்த்தனர். இதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
இந்த கொலை குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த சங்கர் (45) நேற்று இரவு கிருஷ்ணகிரி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இது தொடர்பாக போலீசார் 341, 302, 506 (2) ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்தனர். கைதான அவரை நேற்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து தலைமறைவான உறவினர்கள் 2 பேரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையடுத்து மாமனார் சங்கர், ஜெகனை கொலை செய்துவிட்டு நேரடியாக கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார். அதனால் கொலை குறித்த தகவல்களை சேகரிக்க அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம். அதற்காக இன்னும் ஓரிரு நாட்களில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளோம் என போலீசார் தெரிவித்தனர்.
- இவர்களின் காதல் திருமணத்தை பெண்ணின் குடும்பத்தினர் ஏற்கவில்லை.
- ஜெகனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (வயது 28). இவர் சரண்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களின் திருமணத்தை பெண்ணின் குடும்பத்தினர் ஏற்கவில்லை.
இந்த நிலையில் இன்று மதியம் கே.ஆர்.பி. அணை அருகே ஜெகன் பைக்கில் சென்றபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. ஜெகனின் உறவினர்கள் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆணவக் கொலையில் தொடர்புடைய பெண்ணின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை அப்பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கிடையே பெண்ணின் தந்தை சங்கர், கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அப்போது, தனது மகளுக்கு வசதியான இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்த நிலையில், தன் மகளை காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் ஜெகனை கொன்றதாக நீதிபதி முன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்