என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "HOUSE PATTA"
- 11 பேருக்கு கடந்த 2022 ம் ஆண்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலையில், இதுவரை நிலம் அளந்து கொடுக்கப்படவில்லை
- உப்புப்பாளையம் பகுதியில் கடந்த 2007 ம் ஆண்டு நிலமெடுப்பு செய்யப்பட்டு 61 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளகோவில்:
வெள்ளக்கோவில் உள்வட்டத்தைச் சோ்ந்த பகுதிகளுக்கு காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவா் ச.கருப்பையா அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-
காங்கயம் வட்டம், வெள்ளக்கோவில்-உப்புப்பாளையம் பகுதியில் கடந்த 2007 ம் ஆண்டு நிலமெடுப்பு செய்யப்பட்டு 61 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.இதில், தகுதி இல்லாத 20 நபா்களின் பட்டாவை ரத்து செய்ய கோரியும், உப்புப்பாளையம், குட்டக்காட்டு புதூா் ஆகிய பகுதியில் வசிக்கும் வீடு இல்லாத மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பட்டா வழங்க வலியுறுத்தியும் அரசு அதிகாரிகளுக்கும், காங்கயம் ஆதிதிராவிட நலத் துறை தனி வட்டாட்சியருக்கும் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் உப்புப்பாளையத்தை சோ்ந்த 11 பேருக்கு கடந்த 2022 ம் ஆண்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலையில், இதுவரை நிலம் அளந்து கொடுக்கப்படவில்லை. எனவே உப்புப்பாளையம் பகுதியில் நீண்ட காலமாக வசிக்கும் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்குவதுடன் பட்டா வழங்கப்பட்டவா்களுக்கு நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
- ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினார்.
திருப்பூர் :
திருப்பூர் கலெக்டர் அலு வலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது.இக்கூ ட்டத்தில், பொதும க்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலை வசதி,குடிநீர் வசதி வேண்டி யும் என பல்வேறு கோரி க்கைகள் தொட ர்பாக 381 மனுக்களை பெற்றுக் கொண்டதுடன் மனு தாரர்கள் முன்னிலை யிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நட வடிக்கை யினை மேற்கொ ள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் வினீத் அறி வுறுத்தினார். தொடர்ந்து, ஆதி திரா விடர் நலத்துறையின் சார்பில் 15 பயனாளி களுக்குவிலையில்லா வீட்டுமனை ப்பட்டாக்களை கலெக்டர் வினீத் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சு மணன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அம்பாயிரநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அ லுவலர் ரவிச்சந்திரன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறை களின் அலுவ லர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சமத்துவபுரத்தில் அரசு இடத்தில் சுமார் 20 வருடங்களாக குடியிருக்கும் 25 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.
- மனுவைப்பெற்றுக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி, மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
உடன்குடி:
தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை, உடன்குடி தேர்வு நிலைபேரூராட்சி 17-வது வார்டு கவுன்சிலர் ஹமீதா ஷபானா நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், உடன்குடி பேரூராட்சி 17-வது வார்டு புதுமனை பள்ளிவாசல் தெரு சமத்துவபுரத்தில் அரசு இடத்தில் சுமார் 20 வருடங்களாக குடியிருக்கும் 25 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி இருந்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி, மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
- அம்பேத்கர் நற்பணி மன்றம் என்ற பதாகை வைத்து தனித்தனியாக குச்சிகளை நட்டு சாலை அமைப்பதற்கு முயன்றனர். .
- வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் நம்பியாம்பாளையம் ஊராட்சி எ.டி.காலனியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் 40 பெண்கள் உள்ளிட்ட 60 க்கு மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள 99/3 என்புறம்போக்கு இடத்தில் அம்பேத்கர் நற்பணி மன்றம் என்ற பதாகை வைத்து வீட்டுமனை பட்டா வேண்டும் என்று அவர்கள் தனித்தனியாக குச்சிகளை நட்டு சாலை அமைப்பதற்கு முயன்றனர்.
இது பற்றி அவர்கள் கூறுகையில், நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம்.எங்களுக்கு குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லை. ஏற்கனவே வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இங்கு பட்டா கேட்டு வந்துள்ளோம் என்றனர். தகவல் அறிந்து அவினாசி தாசில்தார் ராஜேஸ், கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி, உதவியாளர் நடராஜ், அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து அவர்களிடம் இது குட்டை புறம்போக்கு இடம். இங்கு வீட்டுமனை பட்டா தருவதற்கு சாத்தியமில்லை .வேறு இடம் பார்த்து தருவதாக கூறினர். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்து பலகாலமாக எங்கள் மூதாதையர் இங்கு குடிசை போட்டு வாழ்ந்துள்ளனர். எனவே இந்த இடத்தில் எங்களுக்கு வீட்டுமனை பட்டா வேண்டும் என்று நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் வருவாய்துறையினரும் போலீசாரும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அவசியம் வேறு நல்ல இடத்தில் வீட்டுமனை பட்டா தருவதாக வலியுறுத்தி கூறிய பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- இச்சிப்பட்டி கிராமசபை கூட்டம் ,மக்கள் குறை தீர்க்கும் முகாம் உள்ளிட்ட அரசு மக்கள் தொடர்பு முகாம்களில் மனு அளித்தனர்.
- புறம்போக்கு இடத்தை நத்தமாக வகைமாற்றம் செய்து பயனாளிகளுக்கு வழங்க உகந்த இடமா என ஆய்வு செய்ய வந்தனர்.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம் இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் பல ஆண்டுகளாக வீடில்லாமல் வாடகை வீட்டில் வசிக்கும் பொதுமக்கள் இச்சிப்பட்டி கிராமசபை கூட்டம் ,மக்கள் குறை தீர்க்கும் முகாம் உள்ளிட்ட அரசு மக்கள் தொடர்பு முகாம்களில் மனு அளித்தனர்.
இந்தநிலையில் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ரீஸ்ருதன் ஜெய் நாராயணன், பல்லடம் தாசில்தார் நந்தகோபால், இச்சிப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி கார்த்திக், இச்சிப்பட்டி வருவாய்த்துறை அதிகாரி சந்திரகலா உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொத்துமுட்டிபாளையம் பகுதியில் உள்ள 5 ஏக்கர் 66 சென்ட் வண்டிப்பாதை புறம்போக்கு இடத்தை நத்தமாக வகைமாற்றம் செய்து பயனாளிகளுக்கு வழங்க உகந்த இடமா என ஆய்வு செய்ய வந்தனர்.
அப்போது 5 ஏக்கர் 66 சென்ட் இடத்தில் கொத்துமுட்டிபாளையம் பொதுமக்கள் தாவரவியல் பூங்கா என்ற பெயரில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை சப் கலெக்டர் பார்வையிட்டார். அவரிடம் கொத்துமுட்டிபாளையம் பகுதி பொதுமக்கள் , கடந்த 7 ஆண்டுகளாக நாங்கள் இந்த இடத்தில் தாவரவியல் பூங்கா என்ற பெயரில் சுமார் 6000 மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகிறோம் .மேலும் தாவரவியல் பூங்காவில் உள்ள மரங்களை அழித்துவிட்டு வீட்டுமனை பட்டா வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஒரு தரப்பினர் தெரிவித்தனர்.
சப் கலெக்டர் வரும் தகவலை அறிந்த வீட்டுமனை கேட்டு மனு அளித்த கோம்பக்காடு,தேவராயன்பாளையம் புதூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொத்துமுட்டிபாளையம் கிராமத்தில் காத்திருந்து சப்கலெக்டரை சந்தித்தனர். அப்போது இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சப்கலெக்டரிடம் கொத்துமுட்டிப்பாளையம் பகுதியில் வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் எனவும்,கொத்துமுட்டி பாளையம் பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை வீட்டிற்கு 4 மரங்கள் என பராமரிக்கிறோம். எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என மற்றொரு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.2 தரப்பினரிடமும் "பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சப்-கலெக்டர் கூறி சென்றார்.
- 6 மாதத்திற்குள் வீட்டு மனை பட்டா வழங்க அதிகாரிகள் உறுதி அளித்தனர்
- சுக்கிரன்குண்டு கிராமமக்கள் போராட்டம் எதிரொலி:
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள சுக்கிரன்குண்டு கிராமத்தில் சுமார் 40 ஆ ண்டுகளுக்கு மேலாக வசிக்கும் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வீட்டும னை பட்டா வழங்க கோரி, தே.மு.தி.க. தெற்கு மாவட்ட செயலாளர் மன்மதன் தலைமையில் அப்பகுதி மக்கள் கைகாட்டி பகுதியில் கைக்குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில்,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அணவயல் எல்என்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட சுக்கிரன்குண்டு கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா இ ல்லாததால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், வரு வாய் துறையினருக்கும் மனு கொடுத்தும் இதனால் வரை எந்த பலனும் இல்லை.
இந்நிலையில் பல ஆண்டு காலமாக நாங்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா கேட்டு போராடிவரும் நிலையில் தற்போது எங்கள் பகுதியை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைக்க முயல் வதாகவும், அதனால் அதனை தடுத்து நிறுத்தி நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள பட்டா வழங்க கோரியும் அல்லது அதற்கு பதிலாக அடிப்படை வசதிக ளுடன் கூடிய இடத்தையோ, வீட்டையோ தங்களுக்கு வழங்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது என்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தை அறிந்து அங்குவந்த வட்டாட்சியர் செந்திலநாயகி தலைமையிலான வருவாய் துறையினர், டிஎஸ்பி தீபக் ரஜினி, வடகாடு காவல் ஆய்வாளர் மற்றும் கீரமங்கலம் வருவாய் அலுவலர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டத்தில் ஆறு மாத காலத்திற்குள் வீட்டு மனை பட்டா வழங்குவதாக வாய்மொழி உத்தரவாக அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்