என் மலர்
நீங்கள் தேடியது "hugging"
- இருவருக்கும் இடையேயான பந்தத்தை பலப்படுத்தவும் செய்யும்.
- நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
உறவுகளை வலுப்படுத்துவதற்கு அவசியமான அன்பு, பாசம், பச்சாதாபம், புரிதல் போன்ற உணர்ச்சிகளை கட்டிப்பிடித்தல் மூலம் வெளிப்படுத்த முடியும். இருவருக்கும் இடையேயான பந்தத்தை பலப்படுத்தவும் செய்யும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஏன் கட்டிப்பிடிப்பது முக்கியம் என்பது பற்றி பார்ப்போம்.
உடல் நலம்
வலி நிவாரணம்:
உடல் ரீதியான தொடுதல், மசாஜ் அல்லது எளிய அரவணைப்பு போன்றவை இயற்கை வலி நிவாரணிகளான எண்டோர்பின்களின்வெளியீட்டை தூண்டும். வலியின் உணர்வை குறைக்கவும், அசவுகரியத்தை போக்கவும் உதவும்.
நோய் எதிர்ப்பு:
கட்டிப்பிடிப்பது போன்ற நேர்மறையான உடல் தொடர்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கட்டிப்பிடிப்பதன் மூலம் மன அழுத்தம் குறைவதும், ஆக்சிடாசின் வெளிப்படுவதும் நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதய ஆரோக்கியம்:
உடல் தொடுதல், குறிப்பாக கட்டிப்பிடித்தல் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு குறைவதற்கு வழிவகுக்கும். கட்டிப்பிடிக்கும் பழக்கத்தை தொடர்வது காலப்போக்கில் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கும்.
மன நலம்
மனநிலை மேம்பாடு:
கட்டிப்பிடிப்பது உட்பட உடல் ரீதியான தொடுதல் எண்டோர்பின்களின் வெளியீட்டை தூண்டும். அதன் மூலம் மனநிலையை மேம்படுத்தி மகிழ்ச்சிக்கு வித்திடும். உணர்வுகளை சீராக கடத்துவதற்கு வழிவகை செய்யும். இயற்கையாகவே மன நிலையை மேம்படுத்துவதில் அரவணைப்புக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
கவலை-மனச்சோர்வு:
கட்டிப்பிடித்தல் போன்ற உடல் ரீதியான தொடுதல் ஆறுதலையும், உணர்ச்சிப்பூர்வமான ஆதரவையும் அளிக்கும். கவலை மற்றும் மனச்சோர்வுக்கான அறிகுறிகளை குறைப்பதற்கும் வழிவகுக்கும். பாதுகாப்பு உணர்வையும் தரும்.
மன அழுத்தம்:
தொடுதல் ஆக்சிடாசின் வெளியீட்டை தூண்டி மன அழுத்ததிற்கு காரணமான கார்டிசோலின் அளவை குறைக்கும். அதனால் மன அழுத்தம் குறையும். நாள்பட்ட மன அழுத்தத்தில் இருந்தால் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். கட்டிப்பிடிப்பதன் மூலம் மன அழுத்தத்தை குறைப்பது நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்யும். மன அழுத்த மேலாண்மையை நிர்வகிக்கும் கருவியாக செயல்படும். அன்றாட வாழ்வின் சவால்களை சமாளிப்பதற்கும் வழிவகுக்கும்.
உணர்ச்சி:
கட்டிப்பிடித்தல் என்பது வாய்மொழி அல்லாத சக்தி வாய்ந்த தொடர்பு வழிமுறையாகும். உறவுகளை வலுப்படுத்துவதற்கு அவசியமான அன்பு, பாசம், பச்சாதாபம், புரிதல் போன்ற உணர்ச்சிகளை கட்டிப்பிடித்தல் மூலம் வெளிப்படுத்த முடியும். இருவருக்கும் இடையேயான பந்தத்தை பலப்படுத்தவும் செய்யும்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை தவிர செல்லப்பிராணிகளை கட்டிப்பிடிக்கவும் மறவாதீர்கள். தன்னைத்தானே கட்டிப்பிடிப்பதும் கூட சிறப்பானதுதான். மூச்சை ஆழமாக உள் இழுத்தவாறு இரு கைகளையும் தோள்பட்டைகளில் அழுத்தி தழுவி அரவணையுங்கள். சுய இரக்கத்துடனும், சுய அன்புடனும் கைகளை தழுவுவது இனிமையான உணர்வுகளை வெளிப்படுத்தும்.
அன்பு, பாசம், இன்பம், துக்கம் என அத்தனை வகை உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் சக்தி வாய்ந்த பிணைப்பாக அரவணைப்பு அமைந்திருக்கிறது. கட்டிப்பிடிப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை காப்பதில் முக்கிய பங்கு வகிப்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன. கட்டிப்பிடிப்பது ஆக்சிடாசின் ஹார்மோன் வெளியீட்டை தூண்டச் செய்யும். இது காதல் ஹார்மோன், பிணைப்பு ஹார்மோன் என்று குறிப்பிடப்படுகிறது.
கட்டிப்பிடிக்கும் நபரிடத்தில் நம்பிக்கை, பச்சாதாபம், இணக்கம் போன்ற உணர்வுகளை ஊக்குவிக்கும். மன அழுத்தத்தைக் குறைப்பதில்இருந்து உணர்ச்சி ரீதியான தொடர்பை மேம்படுத்துவது வரை கட்டிப்பிடிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெற முடியும்.
- தன்னை அறியாமல் அந்த சிறுவனை கட்டிப்பிடித்து தூக்கி கொலின் மன்ரோ மகிழ்ச்சி அடைந்தார்
- இந்த காட்சி தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது
பாகிஸ்தான் சூப்பர் லீக் 2024 டி20 கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடந்தது. இந்த ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் 29 ரன்கள் வித்தியாசத்தில் பெஷாவர் சல்மியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது சுவாரசியமான சம்பவம் இடம்பெற்றது.
7-வது ஓவரின் கடைசி பந்தில், இஸ்லாமாபாத் வேகப்பந்து வீச்சாளர் பஹீம் அஷ்ரப் வீசிய பந்தை சல்மியின் அமீர்ஜமால் எதிர் கொண்டார். பந்து சிக்சர் நோக்கி பாய்ந்து சென்றது .அப்போது பீல்டர் கொலின் மன்ரோ பாய்ந்து சென்று பந்தை பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் பந்து, எல்லையை தாண்டி சென்றது. அப்போது அந்த பந்தை பால் பாய் ஒருவர் லாவகமாக கேட்ச் செய்தார்.
இந்த காட்சியை பார்த்ததும் தன்னை அறியாமல் அந்த சிறுவனை கட்டிப்பிடித்து தூக்கி கொலின் மன்ரோ மகிழ்ச்சி அடைந்தார்.இந்த காட்சி தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
- விலா எலும்புகள் உடைந்ததால் இளம்பெண் சில மாதங்கள் வேலைக்குச் செல்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்றிருக்கிறார்.
- கட்டிப் பிடித்ததால் தான் இப்படி ஆனது என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? என நண்பர் கேட்டதால் நீதிமன்றத்தை நாடினார்
பீஜிங்:
அன்பு மிகுதியால் கட்டியணைப்பது எல்லோருக்கும் பிடிக்கும். அதுவும் சரியான நபரிடமிருந்து சரியான சமயத்தில் அந்த அரவணைப்பை பெறும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஆனால், அதுவே விலா எலும்புகளை உடைக்கும் அளவுக்கு முரட்டு அணைப்பாக இருந்தால் எப்படி இருக்கும்? அத்தகைய வலி நிறைந்த அனுபவத்தை பெற்றுள்ளார் சீனாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண்.
சீனாவின் ஹுனான் மாகாணம், யுயாங் நகரைச் சேர்ந்த அந்தப் பெண், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த மே மாதம் தனது அலுவலக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் விளையாட்டாக அவரை திடீரென கட்டி அணைத்திருக்கிறார். அப்போது அந்தப் பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர், மாலை பணிமுடிந்து வீடு திரும்பியிருக்கிறார். இரவு வலி அதிகமாக இருக்கவே, சூடு நீரில் ஒத்தடம் வைத்துக்கொண்டு படுத்திருக்கிறார். மறுநாளும் வலி குறையாததால் விடுமுறை எடுத்து விட்டு வீட்டிலேயே இருந்துவிட்டார்.
தொடர்ந்து வலி அதிகமாக இருந்ததால் 5 நாட்களுக்கு பிறகு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர். அதில் இளம்பெண்ணின் மூன்று விலா எலும்புகள் உடைந்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து, அந்த இளம்பெண் சில மாதங்கள் வேலைக்குச் செல்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில், மருத்துவ சிகிச்சை முடிந்து வேலைக்கு திரும்பிய அந்த இளம்பெண், இறுக அணைத்து தன் விலா எலும்புகளை உடைத்த அந்த நபரிடம் தன்னுடைய மருத்துவ செலவுகளுக்கான பில்களை காட்டி பணம் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நபர், ``நான் கட்டிப் பிடித்ததால் தான் உனக்கு இப்படி ஆனது என்பதற்கான ஆதாரம் என்ன உள்ளது?" எனக்கூறி சிகிச்சை செலவை ஏற்க மறுத்து விட்டார்.
அதையடுத்து இளம்பெண் கோர்ட்டை நாடியிருக்கிறார். அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள், ``மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்த அந்த 5 நாட்களில் எலும்பு முறிவு ஏற்படக் கூடிய எந்தச் செயலிலும் அந்தப் பெண் ஈடுபட்டார் என்பதற்கு ஆதாரம் இல்லை. எனவே, இளம்பெண்ணை இறுக அணைத்து அவர் எலும்புகள் உடைவதற்கு காரணமாக இருந்த இளைஞர் 10,000 யுவான் அந்தப் பெண்ணுக்கு வழங்கவேண்டும்" என உத்தரவிட்டனர்.
திருச்சி:
திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெண் போலீஸ் ஏட்டு ஒருவரை அதே போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பாலசுப்பிரமணியன் (வயது 53) என்பவர் இரவுப்பணியின் போது கட்டிப்பிடித்து முத்தமிட்ட சம்பவம் நடந்தது.
அப்போது திடீரென அங்கு வந்த உளவுப்பிரிவு ஏட்டு இதைபார்த்து திடுக்கிட்டார். உடனே அந்த பெண் போலீஸ் ஏட்டு, தன்னை சப்-இன்ஸ்பெக்டர் வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தமிட்டதாக கூறினார்.
இது குறித்து பெண் போலீஸ் ஏட்டு திருச்சி மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு ஜியாவுல்ஹக்கிடம் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து உடனடியாக சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
அப்போது போலீஸ் சூப்பிரண்டிடம் அந்த பெண் போலீஸ் ஏட்டு, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் திடீரென கட்டிப் பிடித்ததை எதிர்பார்க்காததால் ஆத்திரத்தில் அவரை தான் அணிந்திருந்த காலணியால் அடித்ததாகவும் கூறினார்.
இந்த நிலையில் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தில் பெண் போலீஸ் ஏட்டு சம்மதத்துடனேயே லீலை நடந்ததாக போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்குக்கு ஒரு தகவல் வந்தது.
உடனே போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான வீடியோ காட்சிகளை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைப்பார்த்த போது அதில் இரவு 10 மணிக்கு வெளியில் ரோந்து பணிக்கு செல்ல வேண்டிய பாலசுப்பிரமணியன் 10.29 மணிக்கு போலீஸ் நிலையத்திற்கு வருகிறார்.
அப்போது கம்ப்யூட்டர் நாற்காலியில் அமர்ந்து இருக்கும் பெண் போலீஸ் ஏட்டு அருகில் சென்று பேசுகிறார். பிறகு அவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிடுகிறார். பிறகு உதட்டுடன் உதடு வைத்து முத்தமிடுகிறார்.
இந்த காட்சி 2 நிமிடம் 50 வினாடிகள் ஓடுகிறது. இதை பார்த்த உயர் அதிகாரிகள் பெண் போலீஸ் ஏட்டு சம்மதத்துடனேயே இது நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பெண் போலீஸ் ஏட்டு மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்கிடையே போலீஸ் நிலையத்தில் காம லீலை நடத்திய சிறப்பு சப்-இன்பெக்டர் பாலசுப்பிரமணியன் மீதும் பெண் போலீஸ் ஏட்டு மீதும் அடுக்கடுக்கான புகார்கள் குவிகின்றன. சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிர மணியன் ஏற்கனவே திருச்சி மாவட்டம் ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போது புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் தவறாக நடந்து சர்ச்சையில் சிக்கியவர் என தெரியவந்துள்ளது.
அதேபோன்று சோமரசம் பேட்டை போலீஸ் நிலையத்திற்கு பணிக்கு வந்தது முதல் சக போலீசாருடன் கருத்து வேறுபாட்டிலேயே இருந்துள்ளார். இரவு ரோந்து பணி கொடுக்கப்பட்டாலும் அவர் ரோந்து செல்லாமல் போலீஸ் நிலையத்திற்கு வந்து விடுவார்.
இதற்கிடையே பெண் போலீஸ் ஏட்டு வேறு போலீசாருடனும் பழக்கத்தில் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட போட்டியில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிர மணியன் பொறி வைத்து சிக்க வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனை தொடர்ந்து மேலும் சிலர் மீது நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது. இதற்காக கடந்த சில மாதங்களில் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து அங்குள்ள காமிராவில் பதிவான காட்சிகளை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே போலீஸ் நிலையத்தில் நடந்தது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் முதலில் பெண் போலீஸ் ஏட்டு புகார் தெரிவிக்க மறுத்துள்ளார். புகார் கொடுத்தால் அனைத்தும் அம்பலமாகி விடும் என நினைத்து பயந்துள்ளார்.
ஆனால் அவரை மட்டும் காப்பாற்றி விடலாம் என நினைத்து அவரை அழைத்து சென்று புகார் கொடுத்ததால் தீவிர விசாரணை நடத்தப்பட்டு இன்று அனைத்து குட்டுகளும் அம்பலத்திற்கு வந்துள்ளது. இதனால் அந்த பெண் போலீஸ் ஏட்டு கலக்கத்தில் உள்ளார்.
இந்த விவகாரத்தில் மேலும் சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதால் மற்ற போலீசாரும் கலக்கத்தில் உள்ளனர். அதே போல் போலீஸ் நிலையத்தில் பதிவான வீடியோக காட்சிகள் வெளியே கசிந்தது எப்படி என்பது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.
கடந்த 18-ந்தேதி நடந்த பாகிஸ்தான் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட இந்தியாவின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வாவை கட்டித் தழுவினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சித்துவின் இந்த செயலுக்கு எதிராக பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல் சுதிர்குமார் என்பவர் புகார் மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் பலர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு காரணமான பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வாவை சித்து கட்டித் தழுவி இருப்பது என்னைப்போன்ற ஏராளமான இந்தியர்களின் உணர்வை காயப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது, நாட்டுக்கு தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை கேலி செய்வதாகவும் உள்ளது. எனவே சித்து மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு வருகிற 24-ந்தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மாஜிஸ்திரேட்டு தெரிவித்தார். #NavjotSinghSidhu