என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Human Brain"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனித மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தி சோதிக்கும் ஆய்வுக்கு அமெரிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.
    • சோதனையை சில மாதங்களில் நியூராலிங்க் நிறுவனம் தொடங்க உள்ளது.

    வாஷிங்டன்:

    உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம், மனித மூளையில் "சிப்" பொருத்தி கணினியுடன் இணைத்து, நரம்பியல் தொடர்பான நோய்களுக்கு தொழில்நுட்பம் மூலம் மருத்துவ உதவிகளை வழங்க ஆய்வு நடத்தி வருகிறது.

    நரம்பியல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களும், பக்கவாதம், பார்வை குறைபாடு உள்ளவர்களும் ஸ்மார்ட்போன் கணினி போன்ற ஸ்மார்ட் டிவைஸ்களை எளிதாக பயன்படுத்தும் நோக்கத்துடன் அவர்களது மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

    இதன் மூலம் கண் பார்வை, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறது.

    இதில் பல கட்ட சோதனையில் குரங்குகளின் மூளையில் 'சிப்'பை பொருத்தி நடத்தப்பட்ட பரிசோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன.

    இது தொர்பான ஆய்வறிக்கைகைளை அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் நியூராலிங்க் நிறுவனம் சமர்ப்பித்து அடுத்த கட்டமாக மனிதர்களிடம் ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டது.

    இந்த நிலையில் மனித மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தி சோதிக்கும் ஆய்வுக்கு அமெரிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த ஒப்புதலுக்கு அமெரிக்க அரசிடம் நியூராலிங்க் நிறுவனம் பலமுறை விண்ணப்பித்து இருந்தது. ஆனால் அவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது அனுமதி வழங்கி உள்ளது.

    இது தொடர்பாக நியூராலிங்க் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, "ஒருநாள் எங்கள் தொழில்நுட்பம் ஏராளமானோருக்கு உதவி செய்ய போவதன் முக்கிய முதல்படிதான் இது.

    நியூராலிங்க் குழுவினர் மேற்கொண்ட மிகவும் இன்றியமையாத பணிகளின் காரணமாக அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் இந்த அனுமதியை அளித்திருக்கிறது" என்று கூறியுள்ளது.

    மேலும் மூளையில் உள்ள தகவல்களை ப்ளுடூத் மூலம் மின் பொருட்களுக்கு அனுப்புவது குறித்து மேற்கொள்ளப்படும் சோதனையில் பங்கேற்பவர்களை பதிவு செய்யும் பணிகள் குறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் அளிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இச்சோதனையை சில மாதங்களில் நியூராலிங்க் நிறுவனம் தொடங்க உள்ளது.

    • மூளையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
    • மனித உடலில் கொழுப்பால் ஆன முக்கிய உறுப்பும் மூளைதான்.

    மனித மூளையைப் பற்றி ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. அதன் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தும் மூளையின் எடை 1.37 கிலோ. 60 சதவீதம் கொழுப்புகளால் ஆன ஓர் உறுப்பு. அத்துடன் மனித உடலில் கொழுப்பால் ஆன முக்கிய உறுப்பும் மூளைதான்.

    23 வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் மனித மூளையிடம் இருக்கிறது. உடலில் உற்பத்தியாகும் ரத்தம் மற்றும் ஆக்சிஜனில் 20 சதவீதத்தை மூளை எடுத்துக்கொள்கிறது. இன்னும் மூளையின் முக்கியத்துவத்தை அடுக்கிக்கொண்டே போகலாம்.

     உடலின் மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதிதான் நம்முடைய மூளை. தகவல்களை பெறுவதற்கும் அனுப்புவதற்கும் அதிக திறனை கொண்டுள்ளது மூளை பகுதி. மூளையின் அமைப்பானது 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை முன் மூளை, நடு மூளை, பின் மூளை என்று தனி தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. உடலில் அதிகமாக ஆற்றலை அதிகரிக்கக்கூடியது மூளை பகுதி தான்.

    வயது வந்தவர்களின் மூளையானது சுமார் 1.4 கிலோ கிராம் எடை அளவிற்கு இருக்கும். மனிதரின் உடல் எடையில் மூளையானது 2 சதவிகிதத்தினை கொண்டுள்ளது.

    பெண்கள் மூளையை விட 10% ஆண்களுடைய மூளையானது பெரியது. ஆண்களின் மூளையானது கிட்டத்தட்ட 1274 கன செ.மீ அளவிற்கு இருக்கும். சராசரியாக பெண்களின் மூளையின் அளவானது 1131 கன செ.மீ அளவு இருக்கும்.

    மூளையின் முக்கியப் பகுதியாக இருப்பது பெருமூளை. மண்டை ஓட்டின் முன் பகுதியில் அமைந்துள்ள மூளையின் முக்கிய பகுதியாக விளங்கும் பெருமூளையின் எடை 85 சதவீதம் இருக்கும். மூளையானது 75 சதவீதம் நீரினை கொண்டது. அதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து காணப்படும் போது மூளையின் செயல்பாடுகளில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.

    மனித மூளையானது சுமார் 18 வயதில் இருந்து வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். 25 வயதில் முழு முதிர்ச்சியை மூளை அடைகிறது. முதல் வருடத்தில் இதனுடைய வளர்ச்சி மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.

     கழுத்து பகுதி, தலையின் தசைகள் மற்றும் நரம்புகளுடன் சேர்ந்து மூளையில் ஏற்படக்கூடிய ரசாயன எதிர்வினை காரணமாக தலைவலி பிரச்சனை உண்டாகிறது. மனித மூளையில் சுமார் 10,000 கோடி நியூரான்கள் உள்ளது.

    மனிதர்கள் தங்களுடைய மூளையில் 10 சதவீதம் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பது தவறான விஷயம். உண்மையில் நாம் மொத்த மூளையையும் பயன்படுத்துகிறோம். இரவில் தூங்கும் பொழுது 10 சதவீதத்திற்கும் மேலாக மூளையை பயன்படுத்துகிறோம்.

    நீங்கள் கண்களால் பார்க்கக் கூடிய, மனதால் நினைக்கக்கூடிய, செய்யக்கூடிய எல்லா தகவல்களும் உங்களுடைய மூளையில் உள்ள நியூரான்களுக்கு இடையில் நடைபெறுகிறது. நியூரான்கள் தகவல்களை வேறுபட்ட வேகத்தில் நகர்த்துகிறது. நியூரான்களுக்கு இடையில் தகவல்கள் அதிகபட்சமாக 402 கிலோமீட்டர்கள் வேகத்தில் அனுப்பப்படுகிறது.

    மனித மூளையனாது 20 வயதிற்கு பிறகு சில நினைவு திறன மற்றும் அறிவாற்றல் திறனை இழக்க தொடங்குகிறது. நமக்கு வயது அதிகரிக்கும் போது மூளை பகுதியானது சிறியதாக தொடங்கும். மனித மூளையில் 160000 கிலோமீட்டர் நீளத்திற்கு ரத்த நாளங்கள் உள்ளது.

    மூளையானது நமது உடலில் 20 சதவீதம் ஆக்சிஜன் மற்றும் ரத்தத்தை பயன்படுத்துகிறது. ஒவ்வொரு முறையும் இதயம் துடிக்கும் போது தமனிகள் உங்கள் ரத்தத்தில் 20 முதல் 25 சதவீதம் அளவிற்கு மூளைக்கு எடுத்துச் செல்கிறது. ஒவ்வொரு நிமிடமும் 750-ல் இருந்து 1000 மில்லி லிட்டர் ரத்தம் மூளை வழியாக செல்கிறது.

    • மூளைக்கு வலி என்ற உணர்வு கிடையாது.
    • உடலின் மற்ற பகுதிகள் தூங்கினாலும் மூளை மட்டும் தூங்காது.

    * சில மணி நேரங்கள் வேலை செய்தாலே நமது உடல் களைத்து விடும். ஓய்வு தேவைப்படும். ஆனால் உடலின் மற்ற பகுதிகள் தூங்கினாலும் மூளை மட்டும் தூங்காது. தூங்கும்போதும் ஒருசில செயல்பாடுகள், மூளையில் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

    * புதிய நினைவுகளை சேமிக்க, பழைய நினைவுகளை மூளை தானாகவே அழித்துக்கொள்ளும். இதற்காக நாம் அதிகம் நினைக்காத, நமக்கு மேற்கொண்டு தேவைப்படாத தகவல்களை மூளையே தேர்ந்தெடுக்கும்.


    * மூளைக்கு வலி என்ற உணர்வு கிடையாது. உடலின் பிற பகுதிகளில் வலி ஏற்பட்டால் எப்படி செயலாற்ற வேண்டும் என்பதுதான் மூளைக்குத் தெரியும். இதைச் சுற்றியுள்ள ரத்தக்குழாய்கள், நரம்புகள், திசுக்களில் ஏற்படும் வலி மூளையில் ஏற்படும் வலி அல்ல.

    * மொத்த உடல் எடையில் மூளையின் அளவு 2 சதவீதம்தான். ஆனால் உடல் சேமித்து வைத்திருக்கும் ஆற்றலில் 20 சதவீதத்தை மூளைதான் பயன்படுத்தும். உடல் பாகங்களில் மிக அதிக ஆற்றலைப் பயன்படுத்துவது இதுதான். இதன் செல்கள் சிறப்பாகச் செயல்பட மூளை மிகவும் முக்கியமானது. அதேபோல் இதன் எடையில் சராசரியாக 75 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

    * நாம் விழித்திருக்கும்போது மூளையில் உற்பத்தியாகும் மின்சாரத்தைக் கொண்டு குறைந்த வாட் விளக்கு எரிய வைக்க முடியும்.

    * நமது உடல் உறுப்புகளை வலுவாக்க பயிற்சிகள் செய்வதுபோல் மூளையை வலுவாக்கவும் சில பயிற்சிகள் உண்டு. இதற்காக சிறப்பாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. பிடித்த பாட்டுக்கு நடனமாடுதல், நன்றாக உறங்குதல், சரிவிகித உணவு உண்ணுதல், புதிய இடங்களுக்குச் செல்லுதல், பிடித்த விளையாட்டுகளை விளையாடுதல் ஆகியவையே மூளைக்கான பயிற்சிகளாகும். இது மூளையைப் புத்துணர்வாக்கும்.

    * 90 நிமிடங்களுக்கு உடல் வியர்த்தால் மூளை தற்காலிகமாகச் சுருங்கி விடும். காய்ச்சல் வந்தால் நமது உடல் அதிகமாக வியர்க்கும். அப்போது இது தற்காலிகமாக சுருங்குவதால்தான் தலைவலி ஏற்படுகிறது.

    * ஒரு நொடியில் மூளையில் நடக்கும் வேதிமாற்றங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு மேல். அதேபோல் எல்லா மூளை செல்களும் ஒரே மாதிரியானவை அல்ல. பத்தாயிரம் வகையான நியூரான்கள் இதில் உள்ளன.

    * ஒரு நாளைக்கு நமது மூளையில் தோன்றும் எண்ணங்களின் எண்ணிக்கை 50 ஆயிரம். ஆனால் இவற்றில் 70 சதவீதம் எதிர்மறையான சிந்தனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.


    * நமது மூளையின் மொத்த எடையில் 60 சதவீதம் கொழுப்பால் ஆனது.

    * மூளைக்கு வலி தெரியாது. ஏனென்றால் வலியை உணரும் வலி வாங்கிகள் இல்லை. நமது மண்டை ஓட்டுக்குள் மூளை நகரும்போதும், உந்தும்போதும் வலியை உணராது.

    * நாம் விழித்திருக்கும்போதே நமது மூளையில்அறுவைச் சிகிச்சை செய்ய முடியும். வலி வாங்கிகள் இல்லாததால் இது சாத்தியமாகிறது. மயக்கநிலையில் மூளை அறுவைச் சிகிச்சை செய்ய டாக்டர்கள் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால், நமது மூளையின் செயல்பாடுகளை உணர்வுடன் இருக்கும்போதுதான் டாக்டர்களால் அறியமுடியும்.

    * 25 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன்கொண்டது மூளை. அதாவது ஒரு மின்விளக்கை எரியவைக்கும் அளவுக்கான மின்சாரத்தை நமது மூளையே தரமுடியும்.

    * எந்த ஒரு விஷயத்தையும் சரியாக பார்க்க மூளை உதவுகிறது. நமது கண்கள் நிஜத்தில் ஒரு பொருளை தலைகீழாகத்தான் பதிவுசெய்கின்றன. ஆனால், மூளைதான் அதை சீராக்கி நமக்கு உதவுகிறது.

    * மூளை பெரிதாக இருந்தால் அறிவும் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை. மூளையின் அளவுக்கும் அறிவுத்திறனுக்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த ஆய்வும் நிரூபிக்கவில்லை.


    * மூளையில் உள்ள நரம்பு இழைகளின் நீளம் ஒரு லட்சத்து 61 ஆயிரம் கிலோமீட்டர் என்கிறார்கள். இந்த நரம்பு இழைகள் உந்துவிசைகளை நமது உடலின் அனைத்து பாகங்களிலும் உள்ள அணுக்களுக்கு அனுப்ப உதவுகின்றன.

    * 20 வயதுகளை அடையும்போது உடலின் பெரும்பகுதியான உறுப்புகள் வளர்ச்சியை நிறுத்தி விடுகின்றன. ஆனால் மூளை வித்தியாசமானது. நமது 40 வயதாகும்வரை மூளையின் வளர்ச்சி நிற்காது. புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்பினால் நமது மூளை அதை எப்போதும் ஏற்றுக் கொள்ளும்.

    * வெண்ணெய் போன்ற கொழகொழப்பான தன்மையுடையதுதான் நமது மூளை என்கிறார்கள்.

    * நாம் எந்நேரமும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம். ஒரு நாளில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான விஷயங்களை சிந்திக்கிறோம்.


    * நீங்கள் வேகமாக சிந்திப்பதாக எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா? ஒரே நேரத்தில் நீங்கள் இரண்டு விஷயங்களை சிந்திக்க முடியும். ஒரு தகவல் நமது மூளைக்குள் மணிக்கு 418 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

    * நமது மூளை எப்போதும் ஒய்வெடுக்காது. நாம் விழித்திருக்கும்போது செயல்படுவதைக் காட்டிலும் உறங்கும்போது கூடுதலாக செயல்படும்.

    * மூளையின் அடர்த்திக்கும் அது உட்கொள்ளும் சக்தியின் அளவுக்கும் தொடர்பே இருக்காது. நமது உடலின் மொத்த எடையில் மூளை 2 சதவீதம்தான் இருக்கும். ஆனால், நமது மொத்த சக்தியில் 25 சதவீதத்தை அது பயன்படுத்துகிறது.

    * மூளை தனித்தன்மை வாய்ந்தது. அது நமக்குள் தந்திர விளையாட்டுகளை விளையாடுகிறது. மேலே உள்ள படத்தில் உள்ள ஏ மற்றும் பி கட்டங்கள் வெவ்வேறு வண்ணங்கள் என்று நினைப்பீர்கள். உண்மையில் அவை இரண்டும் ஒரே வண்ணம்தான்.

    * நமது மூளையின் பாதி அளவு இருந்தால் நாம் உயிர்வாழப் போதுமானது. நமது மூளையின் ஒரு பகுதி சேதம் அடைந்தாலும், செயல்படும் பகுதியே, சேதமடைந்த பகுதி என்ன செய்ததோ அதை கற்றுக்கொண்டு செயல்பட தொடங்கிவிடும்.

    * மூளையின் செயல்பாடு வினாடிக்கு 1 லட்சம் ரசாயன மாற்றங்களை நிகழ்த்துகிறது. அதாவது, பொருட்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டு, பொருட்களை நினைவுபடுத்திக்கொண்டு, கம்ப்யூட்டரில் டைப்பிங்கும் செய்ய முடியும்.

    * நீங்கள் நம்பினால் நம்புங்கள்… நமது மூளையின் அணுக்களின் எண்ணிக்கை இரண்டு வயதில் எத்தனை இருந்ததோ அதே அளவுதான் கடைசிவரை இருக்கும். ஒருவேளை குறையலாம் அல்லது அதே அளவுக்கு தொடரலாம்.

    * கர்ப்பகாலத்தில் பெண்ணின் மூளை வித்தியாசமாக இருக்கும். அந்த பெண்ணின் மூளை அவள் குழந்தையை பிரசவித்து ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் இயல்பான அளவுக்கு திரும்பும்.

    * நமது வாழ்நாளில் நமது மூளை சேமிக்கும் தகவல்கள் எவ்வளவு தெரியுமா? ஆயிரம் லட்சம் கோடி துணுக்குகள் என்கிறார்கள். ஆங்கிலத்தில் குவாட்ரில்லியன் என்றால் ஒன்றுக்கு பின்னால் 15 ஜீரோக்கள்தானே. போட்டுப் பாருங்கள். இதுவும் மூளையின் விளையாட்டுதானே…

    * நமது மூளையின் உருவம் வளராது. நாம் பிறக்கும்போது என்ன அளவில் இருந்ததோ அதே அளவில்தான் எப்போதும் இருக்கும். குழந்தை பிறக்கும்போது பார்த்தால் அதன் உடலைக் காட்டிலும் தலை பெரிதாக இருப்பதை காண முடியும்.

    • மனித மூளையில் மைக்ரோபிளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல்
    • சராசரியாக, ஆய்வு செய்யப்பட்ட மூளை மாதிரிகளில் சுமார் 7 கிராம் மைக்ரோபிளாஸ்டிக் இருந்துள்ளன

    உலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், மனிதர்களுடைய மூளையில் மைக்ரோபிளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது

    நேச்சர் மெடிசின் என்ற ஆய்விதழில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக பேசிய நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தின் ரீஜண்ட்ஸ் பேராசிரியரும் மருந்து அறிவியல் பேராசிரியருமான மாத்யூ காம்பன், "குறிப்பாக கடந்த 8 ஆண்டுகளில் மனித மூளையில் மைக்ரோபிளாஸ்டிக் அளவு அதிகரித்து வருவது 50% அதிகரித்துள்ளது. சராசரியாக, ஆய்வு செய்யப்பட்ட மூளை மாதிரிகளில் சுமார் 7 கிராம் மைக்ரோபிளாஸ்டிக் இருந்துள்ளன. இது ஒரு பிளாஸ்டிக் ஸ்பூனில் எடைக்கு சமம் என்று தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், "சிறுநீரகம் மற்றும் கல்லீரலை விட மூளையில் 7 முதல் 30 மடங்கு அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் உள்ளதாகவும் சராசரியாக 45 அல்லது 50 வயதுடைய சாதாரண நபர்களின் மூளை திசுக்களில் ஒரு கிராமுக்கு 4,800 மைக்ரோகிராம்கள் மைக்ரோபிளாஸ்டிக் இருந்தது என்றும் டிமென்சியா எனும் மராத்தி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் இதை விட 10 மடங்கு அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் இருந்ததாக" அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

    ×