search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband's death"

    • களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் முத்துநகரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 45)
    • கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கி குமார் இறந்துவிட்டார். இதனால் தமிழ்செல்வி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் முத்துநகரை சேர்ந்தவர் குமார். இவருக்கு தமிழ்செல்வி(வயது 45) என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர்.

    தற்கொலை

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கி குமார் இறந்துவிட்டார். இதனால் தமிழ்செல்வி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். கணவரை நினைத்து மிகவும் துக்கம் அடைந்த அவர் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தமிழ்செல்வி உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள் தீயை அணைத்துவிட்டு அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • பவானிசாகர் அருகே கணவர் இறந்த சோகத்தில் விஷம் குடித்த இளம் பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அடுத்த பகுத்தம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி வளர்மதி (28). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடத்த விபத்தில் தர்மராஜ் இறந்து விட்டார். கணவர் இறந்ததால் வளர்மதி சோகத்தில் இருந்து வந்தார். மேலும் கணவரை நினைத்து கொண்டு அவரின் படத்தை பார்த்து வளர்மதி அழுது கொண்டே இருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் சமாதானம் படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் வளர்மதி வீட்டில் சானி பவுடர் (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். அவரை பார்த்து அவரது மகன் அழுது கொண்டு இருந்தார். இதை கண்ட அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் அவரது வீட்டுக்கு வந்து பார்த்தனர்.

    அப்போது வளர்மதி மயங்கி கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×