என் மலர்
நீங்கள் தேடியது "ICU"
- தீராத நோயால் பாதிக்கப்பட்டு, மேற்கொண்டு சிகிச்சைக்கான வாய்ப்பு இல்லாதவர்கள், சிகிச்சை அளித்தாலும் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லாதவர்கள் ஆகியோரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கக்கூடாது.
- தீவிர சிகிச்சை பிரிவில் சேர காத்திருக்கும் நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, இதய துடிப்பு, ஆக்சிஜன் அளவு, சுவாச நிலவரம், நரம்பியல் நிலவரம் பரிசோதிக்க வேண்டும்.
புதுடெல்லி:
ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யு.) நோயாளிகளை சேர்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவற்றை 24 நிபுணர்கள் தொகுத்துள்ளனர்.
அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒரு நோயாளிக்கு உறுப்புகள் செயல் இழந்தாலோ அல்லது அவருக்கு மாற்று உறுப்பு தேவைப்பட்டாலோ அல்லது அவரது உடல்நிலை மேலும் மோசமடையும் நிலை இருந்தாலோ அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கலாம்.
சுவாச கருவிகளின் உதவி தேவைப்பட்டாலோ அல்லது டாக்டர்களின் தொடர் கண்காணிப்பு தேவைப்படும் அளவுக்கு கடுமையான நோயாக இருந்தாலோ அத்தகைய நோயாளியையும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கலாம்.
இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள், வேறு பெரிய அறுவை சிகிச்சையை மேற்கொண்டவர்கள், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பவர்கள் ஆகியோரையும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கலாம்.
ஆனால், நோயாளியோ அல்லது அவருடைய குடும்பத்தினரோ தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்க மறுப்பு தெரிவித்தால், அத்தகைய நோயாளியை அப்பிரிவில் சேர்க்கக்கூடாது.
தீராத நோயால் பாதிக்கப்பட்டு, மேற்கொண்டு சிகிச்சைக்கான வாய்ப்பு இல்லாதவர்கள், சிகிச்சை அளித்தாலும் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லாதவர்கள் ஆகியோரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கக்கூடாது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட இடங்களில் படுக்கை, ஆக்சிஜன் உள்ளிட்ட கட்டமைப்புகள் குறைவாக இருக்கும் நிலையில், அத்தகைய நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கக்கூடாது.
தீவிர சிகிச்சை பிரிவில் சேர காத்திருக்கும் நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, இதய துடிப்பு, ஆக்சிஜன் அளவு, சுவாச நிலவரம், நரம்பியல் நிலவரம் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும்.
நோயாளியின் நோய் நிலவரம் சீராகிவிட்டால், குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டால், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தனது அணியினருடன் விமானத்தில் ஏறினார் மயான்க் அகர்வால்.
- மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் மயான்க் அகர்வால் தற்போது ரஞ்சி தொடரில் விளையாடி வருகிறார். கர்நாடக அணி கேப்டனான மயான்க் அகர்வால் தனது அணியினருடன் டெல்லி புறப்பட விமான நிலையம் சென்றார். அணியினருடன் விமானத்தில் ஏறிய மயான்க் அகர்வாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
விமானத்தில் இருந்த படி சில முறை அவர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விமானத்தில் இருந்து அவசரஅவசரமாக வெளியேறிய மயான்க் அகர்வால் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோப்புப்படம்
மேலும், எதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்பதை கண்டறிவதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உடல்நலக்குறைவு காரணமாக மயான்க் அகர்வால் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
விரைவில் தனது 33-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் மயான்க் அகர்வால் இந்திய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். நேற்று திரிபுரா அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் கர்நாடகா அணி வெற்றி பெறவும் மயான்க் அகர்வால் முக்கிய பங்காற்றியுள்ளார்.
- அனுமதிக்கப்பட்டுள்ள தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது.
- லக்னோ மருத்துவமனை ஐசியுவில் தனித்துவமான திருமணம் ஒன்று அரங்கேறியுள்ளது.
தந்தையின் விருப்பத்தை மகள்கள் நிறைவேற்றும் வகையில் லக்னோ மருத்துவமனை ஐசியுவில் தனித்துவமான திருமணம் ஒன்று அரங்கேறியுள்ளது.
லக்னோ சவுக்கில் வசிக்கும் முகமது இக்பால், தனது மகளின் திருமண தேதி நெருங்கி வரும் வேளையில் திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
லக்னோவில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது.
முகமது இக்பாலின் உடல் நலம் மோசமாக உள்ளதால், தந்தையின் உடல் நலத்தை கருத்தில் கொண்ட மகள், அவர் முன்பாகவே திருமணம் நடைபெற முடிவு செய்தார்.
அதன்படி, மருத்துவமனையின் ஒப்புதலோடு ஐசியுவில் தந்தை முன்பாக இஸ்லாமிய முறைப்படி ஒரு வித்தியாசமான திருமண விழா நடந்தது. அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மகளின் இந்த செயல் தந்தை மீது அவர் வைத்திருக்கும் அன்பு மற்றும் மரியாதையின் வெளிப்பாடு என இணைய வாசிகள் மணமகளை வாழ்த்தி வருகின்றனர்.
இதற்கிடையே, திருமணம் முடிந்த நிலையில் குடும்பத்தினர் முகமது இக்பால் குணமடைய தொடர்ந்து நம்பிக்கையும் பிரார்த்தனையும் செய்து வருகின்றனர்.
- செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- மதிய உணவு சாப்பிட்ட பிறகு, நெஞ்சு வலிப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
இதையடுத்து, செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதிய உணவு சாப்பிட்ட பிறகு, நெஞ்சு வலிப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
இதைதொடர்ந்து, செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
புழல் சிறையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பரிசோதனைக்கு பிறகு மருத்துவர்கள் பரிந்துரையை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டார்
இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை காலை இருதயவியல் மூத்த மருத்துவர்கள் மீண்டும் பரிசோதனை செய்த பின்னர் அடுத்தக்கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
- சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
- இ.சி.ஜி., எக்கோ, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை பலத்த பாதுகாப்புடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதன் பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஏற்கனவே அவர் இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர் என்பதால் அது தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர். இ.சி.ஜி., எக்கோ, எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதில் செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பரிசோதனைகள் அனைத்தும் முடிந்த பிறகு அவரது டிஸ்சார்ஜ் பற்றி முடிவு செய்யப்படும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
- பீகார் அரசுத் தேர்வில் நடந்த முறைகேட்டை கண்டித்து அவர் சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்தார்.
- பாதிக்கப்பட்டு காலையில் பாட்னாவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
ஜன் சூராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் , பாட்னாவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டார்
பீகார் அரசுத் தேர்வில் நடந்த முறைகேட்டை கண்டித்து அவர் சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்தார். பாட்னாவில் காந்தி மைதானத்தில் ஜனவரி 2 முதல் உண்ணாவிரதம் இருந்து வந்த வார் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தியதாக அவர் மீது போலீஸ் குற்றம்சாட்டியது.

அந்த இடத்தில் இதுபோன்ற ஆர்ப்பாட்டம் நடத்த பாட்னா உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இருப்பினும் நீதிமன்றத்தின் நிபந்தனையற்ற ஜாமீனில் பிரசாந்த் கிஷோர் வெளிவந்தார். இந்நிலையில் இன்று [செவ்வாய்க்கிழமை] நீரிழப்பு மற்றும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலையில் பாட்னாவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சில மருத்துவப் பிரச்சனைகளை முழுமையாகப் பரிசோதிக்க வேண்டியுள்ளது. அவர் தொற்று மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகிறார். அவர் பலவீனமாகவும் அசௌகரியமாகவும் இருக்கிறார் என்று மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
வினாத்தாள் கசிந்ததாக கடந்த மாதம் நடத்தப்பட்ட பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (பிபிஎஸ்சி) தேர்வுகளை ரத்து செய்யக் கோரி, சிவில் சர்வீஸ் தேர்வர்கள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டங்களில் கிஷோர் தன்னை இணத்துக்கொண்டு தீவிரமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக பதவி வகித்தபோது, கால்நடை தீவனம் வாங்குவதில் ஊழல் செய்த குற்றத்துக்காக 3 வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் இருந்தார். சமீபத்தில் மருத்துவ காரணங்களுக்காக 6 வார கால ஜாமீன் கோரியிருந்த லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், உடல் நிலை மோசமடைந்த காரணத்தினால், பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் லாலு பிரசாத் யாதவ் அனுமதிக்கப்பட்டுள்ளார். #laluprasadyadav #admittedinICU