search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "idukki dam"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருகிற 31-ந்தேதி வரை சுற்றுலா பயணிகள் இடுக்கி அணையை பார்வையிடலாம்.
    • அணையின் அருகே சுற்றுலா பயணிகள், குழந்தைகளுடன் பொழுதைபோக்க பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    மூணாறு:

    கேரளாவில் உள்ள மிகப்பெரிய அணையாக இடுக்கி அணை விளங்குகிறது. இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய அணையாக கருதப்படுகிறது. இடுக்கி அணையின் துணை அணையாக செருதோணி அணை உள்ளது.

    ஆண்டுதோறும் ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகை காலங்களில் இந்த 2 அணைகளையும் சுற்றுலா பயணிகள் பாா்வையிட அரசு சார்பில் அனுமதி வழங்கப்படும். இதனால் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அணையை பார்வையிட்டு செல்வார்கள். அதன்படி, இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி இடுக்கி அணையை நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகள் பார்வையிட அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது. அதில் வருகிற 31-ந்தேதி வரை சுற்றுலா பயணிகள் இடுக்கி அணையை பார்வையிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. அணையை பார்வையிட நுழைவுக் கட்டணமாக முதியவர்களுக்கு ரூ.40, சிறுவர்களுக்கு ரூ.20 வசூல் செய்யப்படுகிறது. அணையின் உள்ளே சுற்றுலா பயணிகள் செல்போன், கேமரா ஆகிய எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அணையை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம். வாரத்தில் புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினம் மட்டும் சுற்றுலா பயணிகள் அணையை பார்வையிட முடியாது. வயது முதிர்ந்தோர் அணையை சுற்றி பார்க்க பேட்டரி கார் இயக்கப்படுகிறது. அந்த காரில் 8 பேர் பயணம் செய்ய ரூ.600 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.

    அணையின் அருகே சுற்றுலா பயணிகள், குழந்தைகளுடன் பொழுதைபோக்க பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி இடுக்கி அணையை சுமார் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இடுக்கி மாவட்டம் உருவாகி 50ம் ஆண்டை முன்னிட்டு கோடை சுற்றுலா சீசனை கருத்தில் கொண்டு இடுக்கி அணையை மே 31ந் தேதி வரை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
    • சுற்றுலா பயணிக ளுக்கு அக்டோபர் 31ந் தேதி வரை அனுமதி அளித்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க இடுக்கி அணை உள்ளது. ஆர்ச் வடிவிலும் அதன் அருகே செருதோனி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டபோதிலும் தண்ணீர் ஒன்றாக தேங்கு கிறது. மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணை பலத்த பாதுகாப்பு வளையத்துக்கு உட்பட்டது.

    ஓணம், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு ஆகிய பண்டிகைகளின் போது மட்டும் சுற்றுலா பயணிகள் அணையை காண அனுமதிக்கப்படுகின்றனர். இடுக்கி மாவட்டம் உருவாகி 50ம் ஆண்டை முன்னிட்டு கோடை சுற்றுலா சீசனை கருத்தில் கொண்டு இடுக்கி அணையை மே 31ந் தேதி வரை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு ஆக.31ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஓணம், தசரா பண்டிகைகள் நெருங்குவ தால் இடுக்கி அணையை காண சுற்றுலா பயணிக ளுக்கு அக்டோபர் 31ந் தேதி வரை அனுமதி அளித்து நீட்டிக்கப்பட்டு ள்ளது.

    காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அணையை கண்டு ரசிக்க லாம். நுழைவு கட்டணம் ரூ.40, சிறுவர்களுக்கு ரூ.20 வசூலிக்கப்படுகிறது. காமிரா, செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரண மாக புதன்கிழமைகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கனமழை காரணமாக கேரளாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • தொடர் மழையால் இடுக்கி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பின.

    இடுக்கி மாவட்டத்தில் பெய்யும் கனமழை மற்றும் முல்லைப் பெரியாற்றில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் முழுவதும் இடுக்கி அணைக்குச் செல்கிறது. இதன் காரணமாக இடுக்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், தொடர் மழை காரணமாக இடுக்கி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. கனமழை காரணமாக இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் அணையின் ஒரு ஷட்டர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 500 கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முல்லை பெரியாறு கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    கேரளாவில் கனமழை காரணமாக 26 ஆண்டுகளுக்கு பின் கடந்த மாதம் திறக்கப்பட்ட இடுக்கி அணையில் நீர் வரத்து குறைந்ததை அடுத்து நீர் திறக்கப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. #IdukkiDam
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மிகப்பெரிய சேதங்களை சந்தித்த கேரளாவில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. 

    2403 அடி உயரமான இடுக்கி அணைக்கு அதிகளவு நீர் வந்ததன் காரணமாக 26 ஆண்டுகளுக்கு பின் கடந்த மாதம் 9-ம் தேதி அணை திறக்கப்பட்டது.

    தற்போது, மழை இல்லாததால் நீர் வரத்தும் குறைந்தது. அணையில் 2391 அடி தண்ணீர் இப்போது உள்ளது. இதன் காரணமாக நீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. 
    கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. #KeralaRain #KeralaFloods #IdukkiDam
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவுக்கு, கடும் கனமழை பெய்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரியாறு நதியில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர். மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்து விட்டன. விவசாய பயிர்களும் மழையால் நாசமடைந்துள்ளது.



    முழு கொள்ளளவை எட்டியுள்ள இடுக்கி அணை 26 வருடங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மீட்புப் பணிக்காக பேரிடர் மீட்பு குழு, ராணுவம் மற்றும் கப்பற்படை வீரர்கள் கேரளா விரைந்துள்ளனர்.

    இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.

     

    கனமழை காரணமாக இடுக்கி, கொல்லம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaRain #KeralaFloods #IdukkiDam

    இடுக்கி அணையில் நீர் மட்டம் முழு கொள்ளளவை நெருங்கியதையடுத்து 26 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Idukkidam
    திருவனந்தபுரம்:

    கேரளாவின் பெரிய அணைகளில் ஒன்று இடுக்கி. இங்கு 2403 அடிக்கு தண்ணீர் தேக்கலாம். இந்த அணையில் 2398 அடி தண்ணீர் தேங்கினால் அணை திறக்கப்பட வேண்டும். கடந்த 1992-ம் ஆண்டு இந்த அணை திறக்கப்பட்டது. அதன்பின்பு இப்போது தான் அணைக்கு நீர் வரத்துஅதிகரித்துள்ளது.

    இன்று காலை இந்த அணையின் நீர்மட்டம் 2398.98 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் மதகுகள் இன்று மதியம் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக அணையில் இருந்து வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.



    அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதை அடுத்து அணை பகுதியில் வசிக்கும் கரையோர மக்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தண்ணீர் வரும் பாதையில் செல்பி எடுக்கவோ, மீன் பிடிக்கவோ யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். #Idukkidam

    இடுக்கி அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால் அணையை திறக்க வாய்ப்புள்ளதாக அணை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #IdukkiDam
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

    பலத்த மழை காரணமாக கேரளாவின் அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. கேரளாவில் நீர் மின்சார திட்டத்திற்கு பயன்படும் இடுக்கி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது.

    2,403 அடி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையில் நேற்று 2,395 அடி தண்ணீர் உள்ளது. இன்னும் 8 அடி தண்ணீர் வந்தால் அணை முழு கொள்ளளவை எட்டும்.

    இடுக்கி அணை திறந்து விடப்பட்டால் பெரியார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதனால் திருச்சூர், ஆலுவா மாவட்டங்களில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதிப்புக்கு ஆளாவார்கள். அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுமென்று கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    இந்த பகுதிகளில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

    தற்போது அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால் அணையை திறக்க வாய்ப்புள்ளதாக அணை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 26 ஆண்டுகளாக இடுக்கி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதில்லை. இதனால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டதில்லை. இப்போது அணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டினால் 26 ஆண்டுகளுக்கு பிறகு அணையை திறக்கும் வாய்ப்பு உள்ளது.

    அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் இடுக்கி அணையையொட்டி உள்ள செறுதோணி அணையிலும் அதிகாரிகள் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர்.

    24 மணி நேரமும் அங்கு போலீசாரும், அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. #IdukkiDam
    கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணையின் இன்றைய நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கி வருவதால் தேசிய பேரிடர் நிவாரணப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். #Idukkidam
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் இடுக்கி, செருத்தோனி, குலமாவு ஆகிய நீர்தேக்கங்களுக்கான இடுக்கி அணைக்கட்டு உள்ளது. இந்த நீர்தேக்கத்தையொட்டி இடுக்கி புனல் மின்சார உற்பத்தி நிலையம் இயங்கி வருகிறது.

    இந்நிலையில், சமீபத்தில் கேரளாவின் பல பகுதிகளில் பெய்த பெருமழையால் இடுக்கி நீர்தேக்கத்தில் அதிகமான நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அணைக்கட்டு பகுதிக்கு பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இடுக்கி அணையின் முழு கொள்ளளவு 2403 அடியாக உள்ள நிலையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 2,394.72 அடியாக இருந்தது. நீர்மட்டம் 2395 அடியாகும்போது, வெள்ள எச்சரிக்கை விடுக்கப்படும். 2397 அடியாக உயரும்பட்சத்தில் ஓரிரு மணி நேரத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கு திறந்து விடப்படும் நீர் அருகாமையில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தின் வழியாக பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும். இந்நிலையில், வெள்ளத்தால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க எர்ணாகுளம் மாவட்டம் மற்றும் இடுக்கியில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


    எர்ணாகுளம், திருச்சூர், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் கேரளாவில் உள்ள தேசிய பேரிடர் நிவாரணப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

    ராணுவம், விமானப்படை மற்றும் சிறியரக படகுகளுடன் கப்பற்படையினரும் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

    கடைசியாக கடந்த 1992-ம் ஆண்டு இடுக்கி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் 26 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் இந்த அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது, குறிப்பிடத்தக்கது. #Idukkidam  #Idukkidamfulllevel #Idukkidamalert 
    26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. #IdukkiDam
    இடுக்கி:

    26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. எனவே அணையில் இருந்து எந்த நேரமும் தண்ணீர் திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மாநிலத்திலேயே பெரிய அணையான இடுக்கி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறந்தால் கரையோர பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    இதில் மின்சாரத்துறை மந்திரி எம்.எம்.மணி, வருவாய்த்துறை முதன்மை செயலாளர் குரியன், இடுக்கி மாவட்ட கலெக்டர் ஜீவன்பாபு உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவது, தண்ணீர் செல்லும் ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி பெரியார், செருதோணி ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இடுக்கி அணையின் மொத்த உயரமான 554 அடியில், நேற்று முன்தினம் நிலவரப்படி 552 அடி வரை தண்ணீர் இருந்தது. இதனால் அணையில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) தண்ணீர் திறப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று அணையின் நீர்மட்டம் 553 அடியாக உயர்ந்தது. இதற்கு முன்பு 1992-ம் ஆண்டு அணை நிரம்பியது. இதனால் 26 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அணை முழு கொள்ளளவை எட்டியது.

    இதனால் இடுக்கி அணையின் துணை அணையான செருதோணி அணையில் உள்ள 5 மதகுகளில் இருந்து எந்த நேரமும் தண்ணீர் திறக்கப்படலாம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் பெரியார், செருதோணி ஆறுகளின் கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக அணை திறந்தவுடன் வெளியேறும் தண்ணீர், அணையின் நீர்வரத்து ஆகியவற்றை ஆய்வு செய்த பின்புதான், அடுத்தக்கட்ட நீர்திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். மேலும் அணை திறந்தால் சுற்றுலா பயணிகள் அணைப்பகுதிக்கு சென்று பார்வையிட அனுமதி மறுக்கப்படும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த தண்ணீர் செருதோணி, பெரியார் ஆறுகள் வழியாக லோயர்பெரியார் ஹாம்லா அணையில் வந்து சேரும். பின்னர் அங்கிருந்து நேரியமங்கலம், மலையாற்றூர், காலடி, பல்லார்பாடம், முளவுகாடு, பொன்னாரிமங்கலம் சென்று ஆலுவா ஆற்றில் கலந்து அரபிக்கடலில் சங்கமிக்கும். 
    ×