என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
தொடர் கனமழை எதிரொலி - இடுக்கி அணையில் இருந்து நீர் திறப்பு
- கனமழை காரணமாக கேரளாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.
- தொடர் மழையால் இடுக்கி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பின.
இடுக்கி மாவட்டத்தில் பெய்யும் கனமழை மற்றும் முல்லைப் பெரியாற்றில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் முழுவதும் இடுக்கி அணைக்குச் செல்கிறது. இதன் காரணமாக இடுக்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக இடுக்கி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. கனமழை காரணமாக இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் அணையின் ஒரு ஷட்டர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 500 கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முல்லை பெரியாறு கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.