என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Illegality"
- தங்கச் சுரங்கத்தில் உள்ள குறுகிய குழியில் உள்ளூர் கிராமவாசிகள் 33 பேர் தங்கத்தை தோண்டியெடுக்கும் பணியில் ஈடுயப்பட்டிருந்தனர்.
- 18 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று [ஜூலை 7] ஞாயிற்றுக்கிழமை சுலவேசி தீவின் கோரோண்டாலோ பகுதியில் உள்ள போன் பொலாங்கோ என்ற இடத்தில சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் உள்ள குறுகிய குழியில் உள்ளூர் கிராமவாசிகள் 33 பேர் தங்கத்தை தோண்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென மேரோபகுதியில் இருந்த மண் சரிந்து குழிக்குள் இருந்தவர்கள் மீது விழுந்து அடைத்தது. இந்த விபத்தில் 12 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்டுப்படையினர் 12 பேரின் உடல்களை மண்ணுக்குள் இருந்து மீட்டனர். இந்த விபத்தில் சிக்கிய மேலும் 18 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் டி.எஸ்.பி ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- இளங்கோவன், தலைமை போலீசார் ஏழுமலை, ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ்குப்பம் போலீஸ் நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டல் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் டி.எஸ்.பி ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணாபுரம் டாஸ்மாக் அருகே உள்ள பாரில் சட்ட விரோதமாக 988 மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
பின்னர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கள்ளக்குறிச்சி கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. ரமேஷ் முன்னிலையில் 988 மது பாட்டில்களை கொட்டி அழிக்கப்பட்டது. இதில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், கீழ்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன், நயினார் பாளையம் தீயணைப்பு வீரர்கள் குமரவேல், ஹரிதாஸ், இளங்கோவன், தலைமை போலீசார் ஏழுமலை, ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- மது விற் பனை நடைபெறுவதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது
- ரூ.38,௬௮௦ ஆகியவற்றை கைப்பற்றி காடாம்புலியூர் போலீசில் ஒப்படை த்தனர்.
கடலூர்:
பண்ருட்டி ஒன்றியம் முத்தாண்டி குப்பம் அடுத்த வல்லம் பஸ்நிறுத்தம் அருகே சட்ட விரோதமாக மது விற் பனை நடைபெறுவதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனைத்தொடர்ந்து கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி படை போலீசார் சோதனை செய்த தில் ரூ10லட்சம் மதிப்பிலான 1,245 மது பாட்டில்கள்மற்றும் பணம் ரூ.38,680ஆகியவற்றை கைப்பற்றி காடாம்புலியூர் போலீசில் ஒப்படை த்தனர்.காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பாப்பன் கொல்லை குமார் ,அருள்முருகன்ஆகியோர் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பண்ருட்டி அருகே மணல் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- அருண்குமார் சட்டத்திற்கு விரோதமாக மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த மேல் குமாரமங்கலம் தென் பெண்ணை ஆறுகளிலிருந்து மாட்டு வண்டிகளில் இரவில் சட்ட விரோதமாக மணல் ஏற்றி வருவதாக, பண்ருட்டி போலீஸ் நிலையத்திற்குத் தகவல் வந்தது. இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீஸார், இன்று அதிகாலை அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டு இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (26) சட்டத்திற்கு விரோதமாக மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார், அவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்து மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அரசாணையை எதிர்த்து வக்கீல் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
- மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள 4 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த அரசாணையில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனவும் பொது நலனுக்கு எதிரானதும் இல்லை என, தமிழ்நாடு அரசு சென்னை ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளது.
திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து, தமிழ்நாடு அரசு சிறப்பு உரிமத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பின்னர், பொது இடங்களான திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் பரிமாற வகை செய்யும் விதிகள் ரத்து செய்யப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து வக்கீல் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறும் வகையில் உரிமம் வழங்குவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் உள்துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலாளர் சார்பில் மதுவிலக்கு துறை ஆணையர் ரத்னா பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், திருமணம் போன்ற நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற வகை செய்யும் பிரிவுகள் நீக்கப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுபான விற்பனை விதிகளின்படியும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படியும் தான் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற ஒன்று அல்லது சில நாட்களுக்கு மட்டும் உரிமம் வழங்கப்படும்.
கல்வி நிறுவனங்களுக்கு அருகில் நடக்கும் நிகழ்வுகளுக்கு இந்த உரிமம் வழங்கப்படாது என்று பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்த உரிமங்கள் வழங்கப்படும்.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், வருவாய் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டு இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு தவறானது. மேலும் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள 4 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதனால், அரசின் உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை, பொதுநலனுக்கு எதிரானதும் இல்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசின் பதில்மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்டு வழக்கின் விசாரணையை ஜூலை 5-ந்தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அது வரை ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்