என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "import duty"
- முன்னணி நிறுவனங்கள் அதிகளவில் முதலீடுகளை செய்து வருகின்றன.
- மெட்டல் மூலம் உருவக்கப்பட்ட இதர மெக்கானிக்கல் பாகங்கள் அடங்கும்.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்வதற்காக முன்னணி நிறுவனங்கள் அதிகளவில் முதலீடுகளை செய்து வருகின்றன.
அந்த வரிசையில், தற்போது இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருப்பதால், ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய அறிவிப்பின் படி மொபைல் போன்களின் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி 15-இல் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.
இதில் மொபைல் போன்களின் பேட்டரி கவர், முன்புற கவர், மிடில் கவர், மெயின் லென்ஸ், பேக் கவர், ஜி.எஸ்.எம். ஆன்டெனா, பி.யு. கேஸ், சீலிங் கேஸ்கெட், சிம் சாக்கெட், ஸ்கிரீயூ மற்றும் பிளாஸ்டிக், மெட்டல் மூலம் உருவக்கப்பட்ட இதர மெக்கானிக்கல் பாகங்கள் என அனைத்தும் அடங்கும்.
இறக்குமதி வரியை குறைக்க மொபைல் போன் உற்பத்தியாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தது.
- மத்திய நிதி அமைச்சகம் இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைத்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், மத்திய நிதிஅமைச்சகம் நேற்று இரவு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரியை (சுங்ககட்டணம்) 15 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைத்துள்ளது.
செல்போன் உதிரிபாகங்களான பின் கவர்கள், பேட்டரி கவர்கள், ஜிஎஸ்எம் ஆன்டெனா, மெயின் கேமரா லென்ஸ் மற்றும் இதர பிளாஸ்டிக் மற்றும் உலோக மெக்கானிக்கல் பொருட்களுக்கான இறக்குமதி வரி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை மத்திய அரசின் வருவாய்த்துறை குறைத்துள்ளது.
உதிரிபாகங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உள்ளீடுகளின் மீதான இறக்குமதி வரி பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த இறக்குமதி வரி குறைப்பு உலகளாவிய உற்பத்தியாளர்களுக்கு இந்தியாவில் பெரிய அளவிலான மொபைல் அசெம்பிளி லைன்களை அமைக்க உதவும், மேலும் செல்போன்களின் ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்கும்.
இந்த நடவடிக்கை இந்தியாவின் செல்போன் உற்பத்தியை மேலும் போட்டித்தன்மை கொண்டதாக மாற்றும் என இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.
இறக்குமதி வரிகுறைப்பு மூலம் செல்போன் துறையில் ஒரு நன்மை பயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்மூலம் செல்போன் விரிவாக்கம் ஊக்குவிக்கப்படுகிறது மற்றும் உலகளாவிய சந்தையில் போட்டித்தன்மையை மேம்படுத்த இது உதவுகிறது
- தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
- 11 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் உயர்த்தி 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
புதுடெல்லி:
தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரியை 11சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
கடந்த 2 மாதமாக தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு வரியை உயர்த்தியுள்ளது. இறக்குமதி வரியை 4 சதவீதம் அளவுக்கு உயர்த்தி மத்திய நிதியமைச்சகம் அரசாணை வெளியிட்டது.
தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான நாணயங்கள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியானது தற்போதுள்ள 11 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் ஆக உயர்த்தப்படுகிறது என அறிவித்து உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் மீதான வரி ஏய்ப்புகளைத் தடுப்பதே இதன் நோக்கமாகும். மேலும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுக்க தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வால் இந்தியாவில் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதேபோன்று, விலைமதிப்பற்ற உலோகங்கள் அடங்கிய வினையூக்கிகள் மீதும் இறக்குமதி வரியானது 14.35 சதவீதம் வரை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் என்ற அளவிலும், 4.35 சதவீதம் வேளாண் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வரியாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு கூடுதல் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விகிதங்கள் ஜனவரி 22-ம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- நூற்பாலை பயன்பாட்டுக்கு மட்டும் 283 லட்சம் பேல் பஞ்சு தேவை.
- 6 மாதங்களாகிய நிலையில் 155 லட்சம் பேல் பஞ்சு மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது.
மங்கலம் :
நடப்பு பருத்தி ஆண்டில் (அக்டோபர் 2022 - செப்டம்பர் 2023), 315 லட்சம் பேல் பருத்தி விளைச்சல் இருக்கும் எனவும், 12 லட்சம் பேல் இறக்குமதி செய்யப்ப டும் எனவும் தொடக்க கையிருப்புடன் 399 லட்சம் பேல் பஞ்சு கிடைக்குமென கணக்கிடப்பட்டது. இந்திய பருத்தி கழகம் வெளியிட்ட ஆண்டறிக்கை யில், நூற்பாலை பயன்பாட்டுக்கு மட்டும் 283 லட்சம் பேல் பஞ்சு தேவை. சிறு, குறு தொழில்களுக்கு 19 லட்சம், நூற்பு இல்லாத தேவைக்கு 16 லட்சம், ஏற்றுமதி 41 லட்சம் பேல் என 359 லட்சம் பேல் தேவைப்படு மென தெரிவித்துள்ளனர்.
பருத்தி சீசன் துவங்கியதில் இருந்தே பருத்தி பஞ்சு வரத்து குறைவாக இருந்தது. சீசன் துவங்கி 6 மாதங்களாகிய நிலையில் 155 லட்சம் பேல் பஞ்சு மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. அதிகபட்சமாக பிப்ரவரி - 33.77 லட்சம், மார்ச் - 30.07 லட்சம், நவம்பர் - 27.03 லட்சம், டிசம்பர் - 27.96 லட்சம், ஜனவரி - 26.66 லட்சம், அக்டோபர் - 9.71 லட்சம் பேல் பஞ்சு விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்து நூற்பாலைகள் தரப்பினர் கூறுகையில், நடப்பு பருத்தி ஆண்டில் சீசன் துவங்கிய ஆறு மாதங்க ளாகியும், உற்பத்தியான பஞ்சில் 50 சதவீதம் கூட விற்பனைக்கு வந்து சேரவில்லை. கூடுதல் விலை கிடைக்கும் என பஞ்சை விற்பனைக்கு எடுக்காமல் வைத்துள்ளனர்.பருத்தி வரத்தில் அசாதாரண சூழல் நிலவினாலும், விலை சீராக இருக்கிறது.
இருப்பினும் பஞ்சு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்து பஞ்சு இறக்குமதி க்கான வரியை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்றனர்.
- பஞ்சுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய முடியாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.
- 560 கிலோ பஞ்சு உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது அது 450 கிலோவாக குறைந்துள்ளது.
திருப்பூர் :
இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கருதப்படுவது ஜவுளித் தொழில். நாடு முழுவதும் ஜவுளித் தொழிலில் சுமார் 1.10 கோடி பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். தமிழகத்தில் குறிப்பாக, திருப்பூர் பஞ்சை நம்பியே இயங்கி வருகிறது. இந்நிலையில் அண்மைக் காலமாக பஞ்சு விலையில் காணப்படும் நிலையற்றத்தன்மை காரணமாக ஜவுளி மற்றும் அதைச்சார்ந்த அனைத்துத் தொழில்களும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.
இந்நிலையில் ஜவுளித் தொழிலைக் காக்கும் வகையில் பஞ்சு இறக்குமதிக்கான வரி 11 சதவிகிதத்தை ரத்து செய்ய வேண்டும் தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பஞ்சுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய முடியாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அண்மையில் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு ஜவுளித் தொழில் துறையினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்து ரத்தினம் கூறுகையில், ''உலக அளவில் பருத்தி சாகுபடியில் முன்னணியில் இருந்த இந்தியாவில், படிப்படியாக பருத்தி சாகுபடி குறைந்து கொண்டே வருகிறது. மத்திய அரசின் புள்ளிவிவரப்படி ஒரு ஹெக்டேர் பரப்பில் 560 கிலோ பஞ்சு உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது அது 450 கிலோவாக குறைந்துள்ளது. இதனால், பஞ்சு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தொழில் தேவைக்காக இறக்குமதி செய்யப்பட்ட பஞ்சுகளை நாடவேண்டி உள்ளது.
இந்தியாவில் தற்போது ஒரு கேண்டி ரூ.67 ஆயிரமாக உள்ளது. வெளிநாட்டு பஞ்சு விலை ஒரு கேண்டி ரூ.55 ஆயிரமாக உள்ளது. இரண்டுக்கும் இடையே 12 ஆயிரம் ரூபாய் விலை வித்தியாசம் உள்ளது. ஜிஎஸ்டி, மின்சாரக் கட்டணம், நூல் விலை உயர்வு ஆகிய காரணங்களால் திருப்பூரில் மட்டும் 70 சதவீதம் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூருக்கு வந்த ஆர்டர்கள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு செல்ல தொடங்கிவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்தது போய், இன்று வங்கதேசத்தில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
இந்தியாவில் 50 சதவீதம் நூற்பாலைகள் தமிழகத்தில்தான் உள்ளன. மேலும், திருப்பூரில் ஆயிரக்கணக்கான ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மூலப் பொருளான பஞ்சை நம்பியே ஜவுளித் தொழில் இயங்கிவரும் நிலையில் பஞ்சுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய முடியாது என மத்திய அரசு எடுத்துக்கும் நிலைப்பாடு, ஜவுளித் தொழிலை ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் நடவடிக்கையாக அமையும். இதன் மூலம் உள்நாட்டு வியாபாரிகளால் பஞ்சுப் பதுக்கல் அதிகரித்து, செயற்கை விலையேற்றம் செய்ய வாய்ப்புகள் உள்ளன.
மத்திய அரசின் இந்த முடிவு, செயற்கை இழை ஆடை தயாரிப்பில் உள்ள பெருநிறுவனங்களுக்கு சாதகமாக அமையுமே தவிர, எங்களைப் போல், பருத்தியை நம்பி உள்ளோருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி குறையும்போதுதான் இதன் பாதிப்பை மத்திய அரசு உணரும். ஜவுளித் தொழிலை நஷ்டத்தில் இருந்து மீட்க பஞ்சு இறக்குமதிக்கான வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்.
- உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது.
- உடுமலை கால்வாய் கரையில் 23 இடங்களில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது.
உடுமலை :
உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உடுமலை தாசில்தார் கண்ணாமணி, ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது:-
மவுனகுருசாமி:- உடுமலை கால்வாய் கரையில் 23 இடங்களில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் சென்று சேராத நிலை ஏற்படுகிறது. பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
மதுசூதனன்:- தொடர்ந்து தேங்காய் மற்றும் அதனைச்சார்ந்த பொருட்கள் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது.இதனைத் தடுக்க ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்.கொப்பரையை அரசு கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். பாமாயிலுக்கு மீண்டும் இறக்குமதி வரி விதிக்க வேண்டும். மேலும் உரக்கடைகளில் அதிக அளவில் ரசாயன உரங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. விலைப்பட்டியல், இருப்பு விவரம் உள்ளிட்ட எதுவும் முறையாக கடைபிடிப்பதில்லை. அதிகாரிகள் வெறும் கண்துடைப்புக்காக ஆய்வு செய்கின்றனர். குறைதீர் கூட்டங்களில் கொடுக்கப்படும் பல மனுக்களுக்கு தீர்வு கிடைப்பதில்லை.3 ஆண்டுகளாக மனு கொடுத்தும் பட்டா மாறுதல் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.
பரமசிவம்:- பல ஆண்டுகளாக நிலவும் ஜம்புக்கல் கரடு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்குவதுடன் அதனை வியாபார நோக்கத்தில் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். இதேப்போல் பல்வேறு விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்