search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In water"

    • சேலம் லீ பஜார் மேம்பாலத்தின் கீழ் பகுதி யில் தண்ணீர் தேங்கியுள்ளது.
    • தண்ணீரில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இன்று பிணமாக மிதந்தார்.

    சேலம்:

    சேலம் லீ பஜார் மேம்பாலத்தின் கீழ் பகுதி யில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீரில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இன்று பிணமாக மிதந்தார்.

    இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் விசாரணையில் இறந்து கிடந்தவர் சேலம் செவ்வாய்பேட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரன் மகன் சீனிவாசன் (வயது 38) என்பது தெரியவந்தது.

    மேலும் அங்குள்ள திண்டில் அமர்ந்து மது குடித்த போது அவர் தவறி விழுந்திருக்கலாம் என்றும், இது போல் ஏற்கனவே 4 பேர் அந்த பகுதியில் தவறி விழுந்து இறந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • எருமைப்பட்டி அருகே பழையபாளையம் ஏரி உள்ளது. கொல்லிமலையில் பெய்யும் மழையால் 2 ஆண்டுகளாக இந்த ஏரி நிரம்பி காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • இந்த ஏரி வழியாக 20-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அமைத்து மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே பழையபாளையம் ஏரி உள்ளது. கொல்லிமலையில் பெய்யும் மழையால் 2 ஆண்டுகளாக இந்த ஏரி நிரம்பி காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .

    அதே சமயம் இந்த ஏரி வழியாக 20-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அமைத்து மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது . இந்த மின் கம்பங்கள் ஆண்டு முழுவதும் தண்ணீர் உள்ளதால் அடிப்பகுதி பெயர்ந்தும் சேதமடைந்தும் காணப்படுகிறது.

    சில மின் கம்பங்கள் கம்பிகளின் உதவியுடன் தொங்கியபடி உள்ளன. சில மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. முற்றிலும் சாய்ந்தால் பெரும் அசம்பாவிதம் நடக்கும், உயிர்ப்பலி ஏற்படும் என்பதால் அந்த பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே ஏரியில் உள்ள மின்கம்பங்களை மாற்றி வேறு இடத்தில நட மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டம், வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள பிராந்தகம், பெரியபாளையம் பட்டி பகுதியை சேர்ந்தவர் கிணற்றில் நீச்சல் பழகிய போது தண்ணீரில் மூழ்கி பலியானார்.
    • அவரது உடல் நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள பிராந்தகம், பெரியபாளையம் பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் கோகுலபிரகாஷ் (22).

    இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கோகுல பிரகாஷ் பெரியபாளையம் பட்டியில் உள்ள வடக்குத் தோட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் நீச்சல் பழகினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேலக வுண்டம்பட்டி போலீசார் கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் மோட்டார் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை இறைத்து கோகுலபிரகாஷின் உடலை மீட்டனர்.

    பின்பு அவரது உடல் நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்ககிரி அருகே உள்ள தேவூர் சரபங்கா நதி தடுப்பணை நிரம்பி தண்ணீர் வழிந்தோடி வருகிறது.
    • ஓய்வு பெற்ற கண்டக்டர் தங்கவேல் (வயது 67) என்பவர் தேவூர் சரபங்கா நதி தடுப்பணையில் சென்ற போது சறுக்கி, தவறி அணையில் விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

    சங்ககிரி:

    சங்ககிரி அருகே உள்ள தேவூர் சரபங்கா நதி தடுப்பணை நிரம்பி தண்ணீர் வழிந்தோடி வருகிறது. இந்த தடுப்பணையின் வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் சென்று வருகிறார்கள். மேலும் கடந்த ஜூன் மாதம் முதல் தண்ணீர் வழிந்தோடுவதால், அந்த பகுதி பாசி படர்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை மயிலம்பட்டி பகுதியை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற கண்டக்டர் தங்கவேல் (வயது 67) என்பவர் தேவூர் சரபங்கா நதி தடுப்பணையில் சென்ற போது சறுக்கி, தவறி அணையில் விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். இது குறித்து தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தோட்டப் பகுதியில் உள்ள சுமார் 5 அடி ஆழமுள்ள தண்ணீர் தேங்கி நின்ற ஒரு குழியில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர்.
    • இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள தேவி பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்.

    இவர் தனது குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள மகாலிங்கம் என்பவரது தோட்டத்தில் தங்கி கூலிவேலை செய்து வருகிறார். இவரது மகன் ஹரிக்குமார் (வயது 14). இவர் பரமத்தியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாணவர் ஹரிக்குமார் காலையில் அங்கிருந்த தோட்டப்பகுதிக்கு‌ சென்றவர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் தோட்டப் பகுதியில் உள்ள சுமார் 5 அடி ஆழமுள்ள தண்ணீர் தேங்கி நின்ற ஒரு குழியில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர்.

    பின்னர் இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக

    பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் குழியில் தவறி விழுந்து இறந்தது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ×