என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Income tax audit"
- திருமண மண்டபம் பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
- வீட்டில் இருந்த பணம் மற்றும் ஆவணங்களை வருமானவரி துறையினர் எடுத்துச் சென்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ். இவருடைய உறவினர் நவீன் குமார் (வயது 42).
இவர் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி எதிரே உள்ள காந்திபேட்டை திருநாத முதலியார் தெருவில் வசித்து வருகிறார்.
திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் டிஜிட்டல் ஸ்டுடியோ பேனர் கடை வைத்துள்ளார். மேலும் திருமண மண்டபம் பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று இரவு வருமானவரி துறை அதிகாரிகள் நவீன் குமார் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்தனர். அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரித்தனர்.
மேலும் நவீன் குமார் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.40 லட்சம் வரை பணம் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த பணம் மற்றும் ஆவணங்களை வருமானவரி துறையினர் எடுத்துச் சென்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் யாருடையது என்பது குறித்து வருமான வரி துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருப்பத்தூர் சுற்றுலா மாளிகையில் 10-க்கும் மேற்பட்ட வருமானவரி துறையினர் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நாட்டிலேயே ஒரு சோதனையில் பிடிபட்ட மிக அதிக தொகை இதுவாகும்.
- தீரஜ் சாகுவின் செயலுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேல்சபை எம்.பி தீரஜ் குமார் சாகு. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து இவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
தீரஜ்குமார் சாகு தொடர்புடைய பால்டியோ சாகு குழுமத்துக்கு மேற்கு ஒடிசாவில் பவுத் டிஸ்டிலெரி என்ற மதுபான ஆலை உள்ளது. மிகப் பெரிய அளவில் மதுபானங்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனமும் ஒன்று.
பால்டியோ சாகு குழுமத்தினர் வரி ஏய்ப்பு செய்வதாக கிடைத்த தகவலையடுத்து, ஒடிசாவின் சம்பல் பூர், ரூர்கேலா, பொலாங்கிர், சுந்தர்கர் மற்றும் புவனேஸ் வரில் இந்த குழுமத்துக்கு சொந்தமான இடங்களிலும், தீரஜ்குமாருக்கு சொந்தமான இடங்களிலும், மேற்கு வங்கத்தில் உள்ள அலுவல கங்களிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
கடந்த 4 தினங்களாக வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இன்று 5-வது நாளாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பணக் குவியல்களை காண முடிந் தது. இதுவரை 176 பண மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை ஒடிசாவின் பொலாங்கிரில் உள்ள ஸ்டேட் வங்கி கிளைக்கு எடுத்து செல்லப்பட்டு எண்ணப்பட்டன. பெரும்பாலும் ரூ.500 கட்டுகளாக இருந்தன. தொடர்ந்து பணத்தை எண்ணியதால் பணம் எண்ணும் எந்திரங்கள் சேதமடைந்தன.
இதனால் பல வங்கிகளில் இருந்து எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு விடிய, விடிய எண்ணப்பட்டன. பணத்தை எண்ண முடியாமல் வருமானவரி அதிகாரிகள் திணறினார்கள்.
இதுவரை ரூ.300 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. 3 இடங்களில் 7 அறைகள் மற்றும் 9 லாக்கரில் இன்னும் எண்ணப்படவில்லை. அலமாரிகள் மற்றும் நாற்காலிகளில் இந்த பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.
இன்னும் பல இடங்களில் நகை, பணம் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனால் பறிமுதல் செய்யப் படும் பணத்தின் மொத்த மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
ரூ.350 கோடி வரை சிக்கும் என்று எதிர்பார்ப்ப தாக வருமானவரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே ஒரு சோதனையில் பிடிபட்ட மிக அதிக தொகை இதுவாகும். இதனால் பணக் குவியலை பார்த்த அதிகாரிகள் திகைத்துவிட்டனர்.
இந்த சோதனையில் வரு மானவரித்துறை அதிகாரி கள் 150 பேர் ஈடுபட்டனர். ஐதராபாத்தில் இருந்து 20 அதிகாரிகள் வர வழைக்கப்பட்டு மது ஆலையின் டிஜிட்டல் ஆவணங்களை சோதனையிடுகின்றனர். சோதனையின்போது ரூ.500 நோட்டுகள் கிழிந்த நிலையில் கிடந்தன. அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே தீரஜ் சாகுவின் செயலுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறும் போது, "தீரஜ் சாகுவின் வணிகங்களுடன் கட்சிக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை" என்றார்.
- என் வீட்டில் ஒரு பைசா கூட எடுக்கவில்லை
- அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு பேட்டி
திருவண்ணாமலை:
வருமான வரி சோதனைக்கு எல்லாம் தி.மு.க. வோ, தி.மு.க. தலைவரோ, தி.மு.க. தொண்டர்களோ பயப்படுகிறவர்கள் அல்ல என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
கடந்த 5 நாட்களாக நடைபெற்ற வருமானவ ரித்துறை சோதனைக்கு பின்னர் நேற்று இரவு பொதுப்ப ணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
1991-ம் ஆண்டு எனது தாய் சரஸ்வதி அம்மாள் பெயரில் கல்வி அறக்கட்டளையை நான் தொடங்கினேன். அதன் மூலம் பல கல்வி நிறுவ னங்களை உருவாக்கினோம்.
திருவண்ணாமலை நகரைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த பலர் இன்று பொறியாளர்களாக உள்ளார்கள் என்றால் அதற்கு இந்த கல்வி நிறுவனங்கள் உறுது ணையாக இருந்துள்ளது.
6 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு தொண்டு செய்துள்ளேன். பொதுவாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடித்து வருகிறேன். 2006-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி என்னை உணவுத்துறை அமைச்ச ராக்கினார்.
அன்றைய தினமே சரஸ்வதி அம்மாள் அறக்கட்டளையில் இருந்து நான் வெளியே வந்துவிட்டேன்.
எனது குடும்பத்தினர் அந்த அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். அந்த அறக்கட்டளைக்கு எனது முதல் மகன் எ.வ.குமரன் தலைவராக உள்ளார். எனக்கு சொந்தமான சொத்து என்றால் 48 ஏக்கர் 33 சென்ட் நிலம், திருவண்ணாமலை காந்தி நகரில் வீடு கட்டும் சங்கம் சார்பில் எனக்கு ஒதுக்கப்பட்ட இடம் (ஒரு மருத்துவமனைக்கு 33 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளேன்) சென்னையில் ஒரு வீடு இது தான் எனது சொத்து.
இதை நான் தேர்தல் நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் போதும் குறிப்பிட்டுள்ளேன்.
ஆண்டுதோறும் வருமான வரியை நான் முறையாக செலுத்தி வருகிறேன். வருமான வரித்துறையை ஏமாற்றுபவன் நான் அல்ல. 2006 முதல் 2011 வரையில் நான் உணவுத்துறை அமைச்சராக இருந்த போது அந்த துறையை சிறப்பாக செயல்படுத்தியதாக அப்போதைய முதல் -அமைச்சர் கருணாநிதி பாராட்டினார். அதுமட்டுமின்றி உச்ச நீதிமன்றமே இந்த துறையை பாராட்டியது.
2013-ம் ஆண்டு என் மீது 11 லட்ச ரூபாய் சொத்து சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். திருவண்ணாமலை நீதிமன்றம் இது அரசியல் உள்நோக்கத்தோடு போடப்பட்ட வழக்கு என தீர்ப்பளித்தது.
அதன் பிறகு உச்சநீதி மன்றம் வரை வழக்கு சென்றது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கு உள்நோக்கத்தோடு போடப்பட்ட வழக்கு என தள்ளுபடி செய்தது.
தமிழ்நாட்டில் பாஜகவை சேர்ந்த தொழிலதிபர்களே இல்லையா, இந்த வருமான வரி சோதனைக்கு எல்லாம் தி.மு.க. வோ, தி.மு.க. தலைவரோ, தி.மு.க. தொண்டர்களோ பயப்படுகிறவர்கள் அல்ல. எனது அரசு பணியைத்தான் கடந்த 5 நாட்களாக உங்களால் முடக்க முடிந்தது.
தி.மு.க.வின் மாணவர் அணி போல பாஜக அரசின் ஒரு அணியாக வருமான வரித்துறை செயல்படுகிறது என தமிழக விளையா ட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. வினரை வருமான வரித்துறையை வைத்து அச்சுறுத்துவது எந்த வகையில் நியாயம்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மிசாவையே பார்த்தவர். அவரால் அரவணைக்கப்பட்ட எங்களுக்கு ஒரே இலக்கு நாடாளுமன்ற தேர்தலில் 40 க்கு 40 வெற்றியை வென்றெடுப்பதுதான். இந்த சோதனை என்பது எங்களை முடக்குவதற்கான செயல். எனக்கும் சரஸ்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காசா கிராண்டே மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கும், அபிராமி ராமநாதனுக்கும் எனக்கும் என் துறைக்கும் 100 சதவிகிதம் எந்த சம்பந்தமும் இல்லை. உயர்ந்த மனிதர் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இது போன்று தமிழ்நாட்டில் எதிர் கட்சிகள் தங்கள் கருத்தை சொல்ல முடியாத அளவுக்கு அரசியல் என்ற பெயரில் ரெய்டு நடந்ததா?
4 தினங்களாக சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்களில் கற்பனைக்கு எட்டாத செய்திகளை வெளியிட்டுள்ளார்கள். நான் நேர்மையானவனாக, மனசாட்சிக்கு பயந்தவனாக, தி.மு.க. தலைமைக்கு கட்டுப்பட்டவனாக என்றைக்கும் இருப்பேன். என் வீட்டிலோ, எனது மனைவி வீட்டிலோ, எனது பிள்ளைகள் வீட்டிலோ, கல்லூரி வளாகத்திலோ ஒரு பைசாவை வருமான வரித்துறையினர் எடுத்திருந்தால் அதற்கு நான் பொறுப்பேற்று பதில் அளிக்கிறேன்.
என்னுடன் பழகு பவர்கள், மனு அளித்தவர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து அங்கு எடுத்த பணம் எனக்கு சொந்தமானது என்று கூறுவது முற்றிலும் தவறானது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மகன்கள் எ.வ.குமரன், டாக்டர் எ.வ.வே.கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, எம்.எல்.ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, வசந்தம் கார்த்தி கேயன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் ப்ரியா விஜயரங்கன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், டிவிஎம் நேரு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- காசாகிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று சோதனை நடந்தது.
- எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.18 கோடி பறிமுதல்.
தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று தொடர்ந்து 4-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது.
சென்னை, திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிண்டியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சிறப்பு விருந்தினர் மாளிகையில் கடந்த 3 நாட்களாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான ஆழ்வார்பேட்டை வீட்டில் சோதனை எதுவும் நடைபெறவில்லை.
இது தவிர காசாகிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று சோதனை நடந்தது. மேலும் கோவையில் உள்ள அமைச்சரின் நெருக்கமான பிரமுகர் ஒருவர் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை 3-ந் தேதி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
எனினும் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் குறித்து எந்த தகவலையும் வருமான வரித்துறை வெளியிடாமல் இருந்தது.
இந்நிலையில், அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.18 கோடி பறிமுதல் என தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 4 நாட்களாக நடைபெற்று வந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.250 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
- மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 840 மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 யூனிட்கள் செயல்பட்டு வருகிறது.
- இந்நிறுவனம் சார்பில் 800 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக அனல்மின் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 840 மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 யூனிட்கள் செயல்பட்டு வருகிறது.
தனியார் நிறுவனம்
இந்த 2 அனல் மின் நிலையங்களிலும் சென்னையை தலைமையி டமாக கொண்டு இயங்கும் தனியார் என்ஜினீயரிங் நிறுவனம் நிலக்கரி கையா ளும் பிரிவு, முதன்மை அரவை மற்றும் 2-ம் நிலை அரவை, கொதிகலன் குழாய் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்த பணிகளை எடுத்துள்ளது. இந்நிறுவனம் சார்பில் 800 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக அனல்மின் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் தமிழ்நாடு மின்சார துறையில் பல்வேறு ஒப்பந்தங்களையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
முறைகேடு புகார்
இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரி யத்திற்கு சப்ளை செய்த பொருட்களில் இந்நிறு வனம் முறைகேடுகள் செய்து வரி ஏய்ப்பு செய்துள்ள தாக புகார்கள் எழுந்தது. இதன் காரணமாக அந்த நிறுவனத்துக்கு சொந்த மான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை யில் ஈடுபட்டனர்.
சோதனை
இதன் அடிப்படையில் மேட்டூர் அனல்மின் நிலைய பணிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்து உள்ளதா? வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய மேட்டூர் அனல்மின் நிலை யத்தில் செயல்பட்டு வரும் இந்த தனியார் நிறுவனத்தில் நேற்று காலை 7 மணிக்கு வருமானவரித் துறையை சேர்ந்த 5 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
13 மணி நேரம்
இதில் அலுவலகத்தில் இருந்த கோப்புகள், கணினி யில் பதிவாகி இருந்த தகவல்களை சோதனை செய்தனர். மேலும் அங்கு பணியாற்றிய ஊழியர்களி டமும் அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தி னர். இந்த சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது.
வருமான வரித்துறையி னரின் இந்த 13 மணி நேர சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதி காரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது. ஆனால் கைப் பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்தத் தகவல்களை யும் அதிகாரிகள் தெரிவிக்க வில்லை.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக மேட்டூர் அனல்மின் நிலையத்தில் வருமான வரித்துறை அதி காரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
- சாரதா மோட்டார்ஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
- சோதனை முடிவில் வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
செங்கல்பட்டு:
கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனமான சாரதா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இன்று வருமான வரி சோதனை நடைபெற்றது.
செங்கல்பட்டு மகேந்திரா சிட்டி வளாகத்தில் இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வருமான வரிதுறை அதிகாரிகள் சுமார் 10 பேர் இன்று காலையில் சென்றனர். அவர்கள் சாரதா மோட்டார்ஸ் நிறுவனத்தில் அனைத்து பகுதிகளிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் இரவு பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் நிறுவனத்தின் வளாகத்திலேயே தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். காலையில் பணிக்கு வந்தவர்கள். மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோன்று இருங்காட்டுக்கோட்டை, சோமங்கலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சாரதா மோட்டார்ஸ் நிறுவனத்திலும் இன்று சோதனை நடைபெற்றது.
சாரதா மோட்டார்ஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
சோதனை முடிவில் வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- பட்டு சேலை கடைகளில் வருமானவரி துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சோதனை 2 அல்லது 3 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதியில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழுமம் முதன்மையாக கலாமந்திர், மந்திர், காஞ்சீபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் மற்றும் கே.எல்.எம். பேஷன் மால் என்ற பிராண்ட் பெயர்களில் பெண்களுக்கான பிரத்தியேக புடவை விற்பனை செய்து வருகிறது.
குறிப்பாக காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே உள்ள வரமகாலட்சுமி பட்டு சேலை கடைகளில் வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தி.நகரிலும் இந்த கடைகளில் சோதனை நடைபெற்றது.
இதன் தலைமையகமான ஐதராபாத்தில் உள்ள நிறுவனத்தில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒவ்வொரு இடத்திலும் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த குழுமத்தை பொறுத்தவரை அதிகப்படியான லாபத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததன் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த சோதனை 2 அல்லது 3 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையின் முடிவில் எவ்வளவு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. எவ்வளவு கோடி ரூபாய் இவர்கள் வரி ஏய்ப்பு செய்திருக்கிறார்கள் என்ற முழு தகவல் செய்தி குறிப்பாக வெளியிடப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- கடந்த 6 நாட்களாக தொடர்ச்சியாக வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.
- சென்னையில் 22 இடங்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வந்தது.
சென்னை:
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுவரும் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருமானவரி துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருமான வரி துறை அதிகாரிகள் கடந்த 24 -ந்தேதி முதல் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்திவந்தனர்.
சென்னையில் 22 இடங்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வந்தது. இந்த சோதனையின் போது வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 6 நாட்களாக தொடர்ச்சியாக வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை இந்த சோதனை அனைத்தும் நிறைவு பெற்றது. நீலாங்கரை பகுதியில் இன்று காலையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 6 நாட்களாக நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்னென்ன என்பது பற்றிய விரிவான அறிக்கையை விரைவில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
- பி.பி.சி. அலுவலகங்களில் நடந்த சோதனைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
- இந்த ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறோம் என பி.பி.சி. தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
லண்டனை மையமாகக் கொண்ட பி.பி.சி. நிறுவனம் குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக 2 ஆவணப் படங்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. குஜராத் கலவரத்தின்போது நரேந்திர மோடி முதல் மந்திரியாக இருந்தார். இந்த பின்னணியில் ஆவணப்படம் வெளியாகி இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
மத்திய அரசு இந்த ஆவணப் படத்துக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.
இதற்கிடையே டெல்லி, மும்பையில் உள்ள பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினார்கள். வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நடந்தது. நேற்று 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தின. இந்த சோதனையின்போது அதிகாரிகள் செல்போன்கள், லேப்டாப்களை பறிமுதல் செய்தனர். 2012-ம் ஆண்டின் வரவு-செலவு கணக்குகள் அனைத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
பி.பி.சி. அலுவலகங்களில் வருமானவரி சோதனைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கடந்த 60 மணி நேர ஆய்வு பணி இன்று இரவு 10:45 மணிக்கு நிறைவடைந்தது. நாளையும் சோதனை தொடரும் என கூறப்படுகிறது. இந்த ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறோம் என பி.பி.சி. தெரிவித்துள்ளது.
- வருமான வரித்துறையின் இந்த ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக பி.பி.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- பி.பி.சி. அலுவலகங்களில் வருமானவரி சோதனைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
லண்டனை மையமாக கொண்ட பி.பி.சி. நிறுவனம் குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக 2 ஆவண படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. குஜராத் கலவரத்தின்போது நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தார்.
இந்த பின்னணியில் ஆவணப்படம் வெளியாகி இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மத்திய அரசு இந்த ஆவண படத்துக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.
இந்தநிலையில் டெல்லி, மும்பையில் உள்ள பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நடந்தது. இன்று 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின்போது அதிகாரிகள் செல்போன்கள், லேப்டாப்களை பறிமுதல் செய்தனர். 2012ம் ஆண்டின் வரவு- செலவு கணக்குகள் அனைத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
வருமான வரித்துறையின் இந்த ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக பி.பி.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனை காரணமாக ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்யும்படி பி.பி.சி. நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. அதிகாரிகளின் கேள்விகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கு மாறும் கேட்டுக்கொண்டு உள்ளது.
பி.பி.சி. அலுவலகங்களில் வருமானவரி சோதனைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
- 3-வது நாளாக தொடர்ந்தது
- தொழிற்சாலையில் இருந்து ஆவணங்களை எடுத்து வந்தனர்
ஆம்பூர்:
ஆம்பூரில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை சுமார் 6 மணியளவில் சென்னை வருமானம் வரித்துறை முதன்மை சந்தோஷ் தலைமையில் 4 காரில் வந்த 15 வருமானவரித்துறை அதிகாரிகள் கொமேஸ்வரம் ஏ.கஸ்பாவில் உள்ளே 2- உள்ளிட்ட தோல் தொழிற்சாலையில் அதிரடியாக நுழைந்தனர்.
பின்னர் தொழிற்சாலைகளில் உள்ள பதிவேடுகள், கணக்கு விவரங்கள் முக்கிய ஆவணங்களை சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து இன்று 3-வது நாளாக சோதனையை தீவிர படுத்தினர். இந்த நிலையில் தொழிற்சாலையில் இருந்து ஆவணங்களை எடுத்து வந்தனர்.
இதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கம்பெனியிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
- 20 ஆயிரம் பக்க ஆவணங்களை கைப்பற்றி விசாரணை
- தொழிற்சாலை முன்பு போலீஸ் பாதுகாப்பு
ஆம்பூர்:
சென்னையை தலைமை யிடமாக கொண்டு செயல்படும் பரிதா குழுமத்துக்கு பரிதாஷூஸ், பரிதா லெதர் வார் உட்பட 11 துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த குழுமம் ஷூ பெல்ட் பை உள்பட பல்வேறு தோல் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
சென்னை, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, புதுச்சேரி என பரிதா குழும தொழிற்சாலைகள் மற்றும் நிர்வாகிகளுக்கு சொந்தமான வீடு அலுவலகம் தொழிற்சாலை என 32 இடங்களில் நேற்றுமுன்தினம் காலை 8 மணி முதல் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.
இதேபோல சென்னை நுங்கம்பாக்கத்தில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் கே.எச் இந்தியா குழுமத்திற்கு சொந்தமான தோல் தொழிற்சாலைகளிலும் நேற்றுமுன்தினம் காலை 8 மணி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல் விஷாரம், வேலூர் பெருமுகை, ஆம்பூர் ஆகிய இடங்களில் இந்த குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த 2 நிறுவனங்கள் தொடர்புடைய மொத்தம் 62 இடங்களில் இன்று 3-வது நாளாக வருமானவ ரித்துறை சோதனை நடந்து வருகிறது.
பரிதா குரூப்பில் உள்ள தோல் தொழிற்சாலைகள், ஷூ கம்பெனியில் ஆண்டுக்கு ரூ.1600 கோடி ரூபாய் மதிப்பிலான வியாபாரங்கள் நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி செலுத்திய விவரங்களை சேகரித்து வருகின்றனர். ஆம்பூர் பரிதா குழும நிறுவனங்களில் 20 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களை ஜெராக்ஸ் காப்பி எடுத்தனர்.
அலுவலகத்தில் இருந்த ஏற்றுமதி இறக்குமதி நிர்வாக மேலாளர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போன்று இந்தியா ஷூ, ஆற்காடு ஷூ, அஷ்டான் ஷூ, கம்பெனியில் ஜாப் ஒர்க் என்கிற பெயரில் ஆம்பூரை சுற்றியுள்ள பல்வேறு தனியார் ஷூ கம்பெனியில் ஜாப் ஒர்க் செய்து வந்த பரிதா குழுமத்தின் கணக்கு மற்றும் நிர்வாகம் செயல்பாடுகளை விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்று 3-வது நாளாக தொடர்ந்து சோதனை நடந்து வருவதால் தொழிற்சாலை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்