என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேலூர், ஆம்பூர் தோல் நிறுவனங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை நீடிப்பு
- 20 ஆயிரம் பக்க ஆவணங்களை கைப்பற்றி விசாரணை
- தொழிற்சாலை முன்பு போலீஸ் பாதுகாப்பு
ஆம்பூர்:
சென்னையை தலைமை யிடமாக கொண்டு செயல்படும் பரிதா குழுமத்துக்கு பரிதாஷூஸ், பரிதா லெதர் வார் உட்பட 11 துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த குழுமம் ஷூ பெல்ட் பை உள்பட பல்வேறு தோல் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
சென்னை, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, புதுச்சேரி என பரிதா குழும தொழிற்சாலைகள் மற்றும் நிர்வாகிகளுக்கு சொந்தமான வீடு அலுவலகம் தொழிற்சாலை என 32 இடங்களில் நேற்றுமுன்தினம் காலை 8 மணி முதல் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.
இதேபோல சென்னை நுங்கம்பாக்கத்தில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் கே.எச் இந்தியா குழுமத்திற்கு சொந்தமான தோல் தொழிற்சாலைகளிலும் நேற்றுமுன்தினம் காலை 8 மணி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் மேல் விஷாரம், வேலூர் பெருமுகை, ஆம்பூர் ஆகிய இடங்களில் இந்த குழுமத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த 2 நிறுவனங்கள் தொடர்புடைய மொத்தம் 62 இடங்களில் இன்று 3-வது நாளாக வருமானவ ரித்துறை சோதனை நடந்து வருகிறது.
பரிதா குரூப்பில் உள்ள தோல் தொழிற்சாலைகள், ஷூ கம்பெனியில் ஆண்டுக்கு ரூ.1600 கோடி ரூபாய் மதிப்பிலான வியாபாரங்கள் நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி செலுத்திய விவரங்களை சேகரித்து வருகின்றனர். ஆம்பூர் பரிதா குழும நிறுவனங்களில் 20 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களை ஜெராக்ஸ் காப்பி எடுத்தனர்.
அலுவலகத்தில் இருந்த ஏற்றுமதி இறக்குமதி நிர்வாக மேலாளர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போன்று இந்தியா ஷூ, ஆற்காடு ஷூ, அஷ்டான் ஷூ, கம்பெனியில் ஜாப் ஒர்க் என்கிற பெயரில் ஆம்பூரை சுற்றியுள்ள பல்வேறு தனியார் ஷூ கம்பெனியில் ஜாப் ஒர்க் செய்து வந்த பரிதா குழுமத்தின் கணக்கு மற்றும் நிர்வாகம் செயல்பாடுகளை விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்று 3-வது நாளாக தொடர்ந்து சோதனை நடந்து வருவதால் தொழிற்சாலை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்