என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indemnity"

    • பிரீமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும்.
    • பயிர் காப்பீடு தொடர்பாக மீண்டும் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்டத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்த மத்திய குழுவிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பிரதிநிதி ஜீவக்குமார் தலைமையில் விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.

    எனவே நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக கொள்முதல் செய்ய நிரந்தர உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மழையால் நெல் சாய்ந்து பாதிக்கப்படுவதால் அதற்கு ஏற்ற புதிய ரகங்களை அறிமுகம் செய்ய வேண்டும்.

    பயிர் காப்பீட்டு பிரீமியம் செலுத்திய அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும். ஏற்கனவே சர்வே முடிந்த பிறகு தான் பருவம் தவறிய மழை பெய்தது.

    எனவே தற்போதைய நிலவரத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பயிர் காப்பீடு தொடர்பாக மீண்டும் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராஜாராமன் ஒரு இரும்பு கம்பத்தை தொட்ட பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
    • ராஜாராமன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.

    கடலூர்:

    புவனகிரி குரியமங்கலம் செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. நேற்று இரவு கீழ்மணகுடியைச் சேர்ந்த வீரப்பன் மகன் ராஜாராமன் (வயது 45) என்பவர் மது பாட்டில் வாங்க சென்றார். அப்பொழுது திடீரென்று பலத்த மழை பெய்ய தொடங்கியது அதனால் அவர் அந்த கடையின் ஓரம் ஒதுங்கி அங்குள்ள ஒரு இரும்பு கம்பத்தை தொட்ட பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

    அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அவருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டியும், அந்த மதுபான கடையை நிரந்தரமாக மூட வேண்டியும், ராஜாராமன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டியும் சுமார் 500-க்கும் மேற்ப்பட்டோர் புவனகிரி போலீஸ் நிலையத்தில் குவிந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    ×