என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "I.N.D.I.A. coalition"
- இந்தியா கூட்டணியின் நான்காவது சந்திப்பு புது டெல்லியில் நடைபெற்றது
- கடந்த முறை டீ, பிஸ்கட், சமோசா வழங்கினர் என்றார் பின்டு
அடுத்த வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் உள்ளிட்ட பல மாநிலங்களின் முக்கிய கட்சிகளை உள்ளடக்கிய 25 கட்சிகளுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கினர்.
இக்கூட்டணியின் முதல் சந்திப்பு பாட்னாவிலும், இரண்டாவது சந்திப்பு பெங்களூரூவிலும், 3-வது சந்திப்பு மும்பையிலும் நடந்தது.
நான்காவது சந்திப்பு இரு தினங்களுக்கு முன் புது டெல்லியில் நடைபெற்றது.
இச்சந்திப்பில், தேர்தலில் கூட்டணி கட்சிகளின் இட பங்கீடு, பேரணிகள், பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் விவாதிப்பதாக இருந்தது.
பிரதமர் வேட்பாளர் பெயரில் இந்த சந்திப்பில் எந்த ஒருமித்த கருத்தும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், இச்சந்திப்பில் பங்கேற்ற பீகார் மாநில ஐக்கிய ஜனதா தள எம்.பி. சுனில் குமார் பின்டு இந்த கூட்டம் குறித்து தெரிவித்ததாவது:
பல பெரிய தலைவர்கள் பங்கேற்றனர். சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் நிதி நெருக்கடியில் இருப்பதனால் மக்களிடம் நன்கொடை கேட்டது.
கடந்த சில சந்திப்புகளில் டீ, பிஸ்கட், சமோசா அளித்து உபசரித்தனர்.
ஆனால், இந்த முறை சமோசா இல்லை; டீ, பிஸ்கட் மட்டும்தான்.
இடப்பங்கீடு, பிரதமர் வேட்பாளர் என எந்த விஷயத்திலும் முடிவும் எட்டப்படாமல்தான் சந்திப்பு நிறைவடைந்தது.
இவ்வாறு பின்டு கூறினார்.
- முற்போக்கு சிந்தனைகளை முன்னெடுத்து 2009ல் தொடங்கப்பட்டது இந்த ஊடகம்
- சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
முற்போக்கு சிந்தனைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க இந்தியாவிலிருந்து இயங்கும் இணையதள ஊடகம், நியூஸ்க்ளிக்.
2009ல் தொடங்கப்பட்ட நியூஸ்க்ளிக், பல்வேறு மக்கள் இயக்கங்கள் மற்றும் போராட்டங்களை குறித்து செய்தியளிப்பதிலும், அரசின் தவறான கொள்கைகள் குறித்து விரிவாக செய்திகளை தருவதிலும் புகழ் பெற்றது. பிபிகே நியூஸ் க்ளிக் ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான இந்நிறுவனம் பிரபீர் புர்கயாஸ்தா என்பவரால் நிறுவப்பட்டது.
இந்நிலையில், நியூஸ்க்ளிக் ஊடகத்தின் அலுவகத்திலும், அதன் பல்வேறு நிரூபர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் இல்லங்களிலும், டெல்லி காவல்துறை சோதனை நடத்தியது. இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சீனாவிடமிருந்து மறைமுகமாக பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையின் சிறப்பு பிரிவின் மூலமாக நடைபெற்ற இந்த சோதனை, 30 இடங்களில் நடத்தப்பட்டது.
சோதனை நிறைவடைந்ததை அடுத்து, நியூஸ்க்ளிக் அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பா.ஜ.க.வின் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக உருவாகிய இந்தியா எதிர்கட்சிகள் கூட்டணி இந்த சோதனைகளை கடுமையாக விமர்சித்துள்ளது.
அக்கூட்டணி இது குறித்து அறிவித்திருப்பதாவது:
உண்மையை மக்களிடையே விளக்கி சொல்பவர்களுக்கு எதிராக பா.ஜ.க. தொடர்ந்து செயல்படுகிறது. வன்முறையையும் பிரிவினையையும் தூண்டுபவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. தங்களுக்கு வேண்டிய தொழிலதிபர்கள் ஊடகங்களை கைப்பற்ற உதவுவதற்காக, இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஊடகங்கள் பகுப்பாய்வு செய்து புள்ளி விவரங்களோடு அரசின் தவறுகளை வெளியே சொல்வதை இந்த அரசு தடுக்க விரும்புகிறது. உலக அரங்கில் முதிர்ச்சியடைந்த ஜனநாயகம் என கருதப்பட்டு வந்த இந்தியாவிற்கு, இதன் மூலம் பெரும் பின்னடைவு ஏற்பட போகிறது. பிபிசி, நியூஸ் லாண்ட்ரி, டைனிக் பஜார், பாரத் சமாச்சார் மற்றும் வயர் ஆகிய ஊடகங்கள் குறி வைக்கப்பட்ட வரிசையில் நியூஸ்க்ளிக் சேர்ந்துள்ளது.
இவ்வாறு எதிர்கட்சிகள் கூட்டணி அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், நியூஸ்க்ளிக் பத்திரிக்கைக்கு ஆதரவாகவும் இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கமும் கருத்து தெரிவித்திருக்கிறது.
- பல மாநிலங்களிலிருந்து 28 கட்சிகள் ஒன்று சேர்ந்து I.N.D.I.A. கூட்டணியை அமைத்துள்ளது
- பா.ஜ.க. ஏ.ஐ.எம்.ஐ.எம். மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி ஆகிய 3 கட்சிகளையும் காங்கிரஸ் எதிர்க்கிறது
வரும் 2024 இந்திய பாராளுமன்ற தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியையும், அதனை சேர்ந்த மத்தியில் ஆளும் பா.ஜ.க.வையும் எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி I.N.D.I.A. கூட்டணி எனும் எதிர்கட்சிகள் கூட்டணி மிக தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆங்காங்கே பிரச்சாரம் செய்து வருகிறார்.
தெலுங்கானாவில் உள்ள துக்குகுடா பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் அம்மாநில கட்சிகளையும் விமர்சித்து பேசினார்.
அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கும் அக்கட்சியை மறைமுகமாக ஆதரிக்கும் கட்சிகளுக்கும், அத்தகைய கட்சிகளின் தலைவர்களுக்கும் எதிராக எந்த வழக்கும் எந்த மத்திய விசாரணை அமைப்பாலும் பதிவு செய்யபடுவதில்லை. ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி இதுவரை ஒரு வழக்கையும் சந்திக்கவில்லை. தெலுங்கானா முதல்வரையும், ஒவைசியையும் மோடி தனது அணியை சேர்ந்தவராகவே பார்க்கிறார். அதனால் அவர்கள் மீது வழக்குகள் கிடையாது. ஆனால் எதிர்கட்சி கூட்டணியை சேர்ந்தவர்கள் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வை மட்டுமல்ல, ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆகிய கட்சிகளையும் சேர்த்து எதிர்க்கிறோம். அவை தனித்தனி கட்சிகளாக இயங்கினாலும் மறைமுகமாக மூன்றும் கை கோர்த்து இயங்குகின்றன.
இவ்வாறு ராகுல் விமர்சனம் செய்தார்.
நேற்று, இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஒவைசி தெரிவித்ததாவது:
ராகுல் அவர்களே, நீங்கள் தொடர்ந்து பெரிதாக பேசுகிறீர்கள். இனிமேல் கேரளாவில் உள்ள உங்கள் தற்போதைய தொகுதியான வயநாட்டிலிருந்து போட்டியிடாதீர்கள். உங்களுக்கு துணிச்சல் இருந்தால் ஹைதராபாத் தொகுதிக்கு வந்து என்னை எதிர்த்து போட்டியிட்டு காட்டுங்கள்.
இவ்வாறு சவால் விடும் வகையில் ஒவைசி பதிலளித்தார்.
எதிர்கட்சிகள் கூட்டணியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 25 கட்சிகளுக்கும் மேல் ஒன்றிணைந்து பா.ஜ.க.வின் தேசிய கூட்டணியை எதிர்த்து வருகிறது. ஆனால், இக்கூட்டணியில் சேருமாறு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு அழைப்பு கூட விடப்படவில்லை என ஒவைசி சில நாட்களுக்கு முன் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- "ட்ராஃபி டூர்" தற்போது சென்னையை வந்தடைத்திருக்கிறது
- பா.ஜ.க.விற்கு எதிரான "இந்தியா" கூட்டணியில் தி.மு.க.வும் அங்கம் வகிக்கிறது
வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் ஐ.சி.சி. ஆண்கள் உலக கோப்பைக்கான போட்டித்தொடர் நடைபெறவிருக்கிறது. நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த உலக கோப்பை போட்டி, தற்போது 2023ல் 13-வது போட்டி தொடராக நடக்க இருக்கிறது.
போட்டிக்கு முன்னதாக "ட்ராஃபி டூர்" எனும் வழக்கப்படி ஓவ்வொரு நாட்டின் முக்கிய நகரங்களிலும் இந்த கோப்பை பார்வைக்கு எடுத்து செல்லப்படும். அதன்படி சென்னைக்கு கொண்டு வரப்பட்ட போது தமிழ்நாட்டின் கிரிக்கெட் சங்க தலைவரும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான அசோக் சிகாமணியின் முன்னிலையில் தமிழக முதல்வர் இக்கோப்பையுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
அதனுடன் "இந்தியா வெற்றி பெறும்" என ஒரு குறுஞ்செய்தியை ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் இந்திய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.விற்கு எதிராக "இந்தியா கூட்டணி" எனும் பெயரில் பல மாநிலங்களில் இருந்து 25க்கும் மேற்பட்ட கட்சிகள் அமைத்திருக்கும் கூட்டணியில் தி.மு.க.வும் ஒரு உறுப்பினர் என்பதால், ஸ்டாலின் இந்திய கிரிக்கெட் அணியுடன் சேர்த்து, தங்களது அரசியல் கூட்டணியும் வெற்றி பெறும் என மறைமுகமாக தெரிவித்திருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகிறது.
- ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல் புரிந்தவர்கள் அவர்கள்
- ரெயில்வே மந்திரியாக இருந்த போது லல்லு பிரசாத் பல கோடிக்கு ஊழல் செய்தார்
இந்தியாவின் 18-வது மக்களவைக்கான தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும், பா.ஜ.க. கூட்டணியை எதிர்க்க "இந்தியா கூட்டணி" எனும் பெயரில் 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகளை உள்ளடக்கிய எதிர்கட்சி கூட்டணியும் இப்போதிலிருந்தே மும்முரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றன.
பா.ஜ.க.வின் சார்பில் "லோக் சபா பிரவஸ்" எனும் திட்டத்தின் கீழ் தற்போது நாடு முழுவதும் ஆங்காங்கே அதன் சாதனை விளக்க பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆளும் பா.ஜ.க.வின் உள்துறை அமைச்சரான அமித் ஷா, பீகார் மாநில மதுபானி மாவட்டத்தில் லோக் சபா பிரவஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜஞ்சர்பூர் நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது இந்தியா கூட்டணியை எதிர்த்து அமித் ஷா பேசியதாவது:
"எதிர் கட்சியினர் ஒரு புது பெயரில் பழைய கூட்டணியையே உருவாக்கியுள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி எனும் பெயரில் ஒரு கூட்டணி அமைத்து முன்பு ஆட்சியில் இருந்த போது ரூ.12 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் செய்தனர்."
"அப்போது ரெயில்வே மந்திரியாக இருந்த பீகாரின் லல்லு பிரசாத் யாதவ் பல கோடிக்கு ஊழல் செய்தார். அதே பெயரில் மீண்டும் அவர்கள் ஓட்டு கேட்டு ஆட்சிக்கு வர முடியாது என உணர்ந்து இந்தியா கூட்டணி என புது பெயரிட்டு உலா வருகிறார்கள். இக்கூட்டணியை சேர்ந்தவர்கள் இந்துக்களின் புனித ராம்சரிதமானசை அவமானப்படுத்துகிறார்கள்."
"ரக்ஷாபந்தன் மற்றும் ஜன்மாஷ்டமி ஆகிய இந்துக்களின் பண்டிகை தினங்களுக்கு விடுமுறையை ரத்து செய்கிறார்கள். இந்துக்களின் சனாதன தர்மத்தை வியாதிகளோடு ஒப்பிடுகிறார்கள். ஆனால் வேறு சிலரோடு மற்றும் சமாதான அணுகுமுறையை கடைபிடிக்கிறார்கள்," என்று கூறினார்.
- மோடியை வீழ்த்த அனைத்து எதிர்கட்சியினரும் பிரமாண்ட கூட்டணி அமைத்துள்ளனர்
- முன்னரே இரண்டு சந்திப்புகள் பாட்னாவிலும், பெங்களூரூவிலும் நடத்தப்பட்டது
இந்தியாவில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றன.
ஆளும் பா.ஜ.க. தலமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தவும், குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 26 கட்சிகள் இந்தியா (I.N.D.I.A.) எனும் பெயரில் ஒரு பிரமாண்ட கூட்டணியை அமைத்துள்ளன.
இக்கூட்டணியின் முதல் சந்திப்பு கூட்டம் கடந்த ஜூன் 23 அன்று பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இரண்டாவது சந்திப்பு கூட்டம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இந்நிலையில் இக்கூட்டணியின் அடுத்த சந்திப்பு மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தற்போது நடந்து வருகிறது.
இதில் தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடுகள், கூட்டு செயல் கமிட்டிகள் அமைத்தல், கூட்டணியின் இலச்சினையை மக்களிடம் அறிமுகப்படுத்துதல், கூட்டணியின் கொள்கைகள் மற்றும் குறைந்தபட்ச செயல் திட்டங்கள் உட்பட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
முக்கியமாக, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டிய வியூகம் அமைப்பது தொடர்பாகவும் முடிவெடுக்கப்படும். கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.
கூட்டணிக்கான செய்தித்தொடர்பாளர்கள் யார் யார் என்பது குறித்தும் இன்று அறிவிக்கப்படும் என தெரிகிறது.
ஆளும் கட்சி கூட்டணிக்கும், எதிர்கட்சி கூட்டணிக்கும் 2024 தேர்தல் ஒரு வாழ்வா, சாவா பிரச்சனை போல் தோன்றுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
முன்னதாக இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ வல்லுனர்களுக்கு சந்திரயான்-3 வெற்றிக்காக இக்கூட்டணி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 முயற்சிக்காகவும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்