search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indonesia"

    • இந்த விமான விபத்தினால் யாரும் உயிரிழக்கவில்லை
    • பயணிகள் அலறியடித்து ஓடியதால் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இந்தோனேசியா நாட்டின் ஜெயபுராவில் உள்ள சென்டானி விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த திரிகானா ஏர் 737-500 என்ற விமானத்தின் என்ஜினில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் அலறியடித்த படி விமானத்தில் இருந்து அவசரமாக வெளியேறினர்.

    விமானத்தின் இறக்கையில் இருந்து தீப்பொறி பறப்பது மற்றும் பயணிகள் விமானத்தில் இருந்து அவசர அவசரமாக கீழே இறங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விபத்தினால் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் சென்டானி விமான நிலைய அதிகாரி சூர்யா ஏகா தெரிவித்தார்.

    இந்த விபத்து காரணமாக இந்த விமான பயணம் ரத்து செய்யப்பட்டது என்றும் பயணிகளை வேறு விமானத்தில் மாற்றி அனுப்பி வைக்க உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மராபி எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • சிதைந்த வீடுகளுக்குள் சிக்கி பலர் பலியாகியிருக்கலாம் என்று அச்சம்.

    பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்திருப்பதால் இந்தோனேசியாவில் செயல்படும் பல எரிமலைகள் காணப்படுகின்றன.

    அவற்றில் சுமத்ரா மாகாணத்தில் உள்ள மராபி எரிமலை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இங்கு மலையேற்ற வீரர்கள் சாகசத்தில் ஈடுபடுவதால் சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.

    இந்தநிலையில் மராபி எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதில், சுமார் 6 ஆயிரத்து 500 அடி உயரத்துக்கு கரும்புகை வெளியேறியது. எனவே அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.

    இதனால் எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    இதில், வீடுகள் எரிந்து 9 பேர் பலியாகியுள்ளனர். நெருப்புக்குழம்பு வெளியேறுவதால், அருகில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகள் எரிந்து சாம்பலாகின.

    சிதைந்த வீடுகளுக்குள் சிக்கி பலர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என கூறப்படுகிறது.

    • ஐபோன் 16 சீரியஸ் மொபைல் போன்களின் விற்பனைக்கு இந்தோனேசியா அரசு தடை விதித்தது.
    • பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தோனேசியாவில் தொழில் தொடங்க அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்து வருகிறது.

    ஐபோன் 16 சீரியஸ் மற்றும் கூகுள் பிக்சல் மொபைல் போன்களின் விற்பனைக்கு இந்தோனேசியா அரசு தடை விதித்துள்ளது.

    உள்ளூர் உற்பத்தியாளர்களின் வணிகத்தை கருத்தில் கொண்டு 40% உள்ளூரில் தயாரித்த உதிரிப் பாகங்கள் இடம்பெற வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்யும் வரை இத்தடை நீடிக்கும் என்று இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது.

    பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தோனேசியாவில் உற்பத்தி ஆலை தொடங்க அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்து வருகிறது. இதன்மூலம் அந்நாட்டில் வேலைவாய்ப்பும் உள்ளூர் பொருளாதாரமும் உயரும் என்று அந்நாட்டு அரசு கருதுகிறது.

    அவ்வகையில் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தோனேசியாவில் தொழிற்சாலை தொடங்க நெருக்கடி கொடுக்கவே இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    • சுமத்ரா மாகாணத்தில் உள்ள மராபி எரிமலை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
    • எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    ஜகார்த்தா:

    பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்திருப்பதால் இந்தோனேசியாவில் செயல்படும் பல எரிமலைகள் காணப்படுகின்றன. அவற்றில் சுமத்ரா மாகாணத்தில் உள்ள மராபி எரிமலை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இங்கு மலையேற்ற வீரர்கள் சாகசத்தில் ஈடுபடுவதால் சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.

    இந்தநிலையில் மராபி எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது சுமார் 6 ஆயிரத்து 500 அடி உயரத்துக்கு கரும்புகை வெளியேறியது. எனவே அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    • சுற்றுலாப் பயணிகள் காசு கொடுத்து அவ்வூர் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம்
    • இந்த முறையில் ஒரே பெண்ணுக்கு 20 முறைகள் கூட திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது

    இந்தோனேசியவில் சுற்றுலாப்  பயணிகளை குறிவைத்து தற்காலிக திருமணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தோனேசிய கிராமங்களில் உள்ள இளம்பெண்கள் இந்த வகை திருமணங்களுக்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மேற்கு இந்தோனேசியாவில் உள்ள பன்கக் [Puncak] நகரில் சுற்றுலாப் பயணிகளை இந்த வகை திருமணங்கள் ஈர்த்து வருகிறன. மத்திய கிழக்கில் உள்ள சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிகம் வருகின்றனர்.

    PLEASURE மேரேஜ் எனப்படும் இந்த வகை திருமணத்தில் அங்கு சுற்றுலாப் பயணிகள் காசு கொடுத்து அவ்வூர் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம். சுற்றுலாப் பயணிகள் அங்குத் தங்கியுள்ள காலம் வரை, வாரக் கணக்காகவோ மாதக் கணக்காகவோ அவர்களுக்கு இப்பெண்கள் மனைவியாக வாழ்வர். சுற்றுலாப் பயணிகள் கிளம்பியவுடன் திருமணம் செல்லாததாகி விடுகிறது.

     

    ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்கள் தங்கள் வீட்டுப் பெண்களை கட்டாயப்படுத்தி இந்த வகை திருமணத்தில் தள்ளுகின்றன. பெண்களை அழைத்து வருதல், சுற்றுலாப் பயணிகளை அணுகுதல், திருமணம் செய்து வைத்தல் என பிரத்யேக நெட்வொர்க் அங்கு செயல்பட்டு வருகிறது. இந்த முறையில் ஒரே பெண்ணுக்கு 20 முறைகள் கூட திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் இம்முறைக்குக் கண்டனங்கள் எழுந்து வருகிறன. விஜய் சிம்ரன் நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த 'பிரயமானவளே' படத்தில் ஹீரோ ஹீரோயினை கான்டிராக்ட் திருமணம் செய்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

    • மிகப்பெரிய புத்த நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும்.
    • ஜாவானியர்களின் தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

    இந்தோனேசிய நாட்டின் மத்திய ஜாவாவில் உள்ள மகேலாங் ரீஜென்சி பகுதியில் போரோபுதூர் என்ற இடம் உள்ளது. இங்கே கி.பி. 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மகாயான புத்தர் கோவில் உள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய புத்தர் கோவிலாகும்.

    மேலும் மிகப்பெரிய புத்த நினைவுச் சின்னங்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது. சைலேந்திர வம்சத்தினரின் ஆட்சி காலத்தில், கி.பி. 8-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த புத்தர் கோவில் எழுப்பப்பட்டிருக்கிறது.

    இந்தோனேசியாவின் சாவகத் தீவில் அமைந்துள்ள, யோக்யகர்த்தா நகரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் வடமேற்கில் இருக்கிறது போரோபுதூர் என்ற பகுதி.

    இங்கே சுண்டோரோ-சம்பிங் மற்றும் மெர்பாபு-மெராபி என்ற இரட்டை எரிமலைகள், புரோகோ மற்றும் எலோ ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடையில் ஒரு உயரமான பகுதியில் புத்தர் கோவில் அமைந்திருக்கிறது.

    உள்ளூர் புராணங்களின் படி ஜாவானியர்களின் புனித இடமாக கருதப்படும் இது, 'ஜாவானின் தோட்டம்' என்று அழைக்கப்படுகிறது.

    சாம்பல் நிற ஆண்டிசைட் போன்ற கற்களால் கட்டப்பட்ட இந்த புத்தக் கோவிலானது, அடுக்கடுக்காக ஒன்பது தளங்களைக் கொண்டு அமைந்துள்ளது.


    கீழ் இருந்து முதல் ஆறு அடுக்குகள் சதுர வடிவத்திலும், மேலே உள்ள மூன்று அடுக்குகள் வட்டமாகவும், அதன் மேல் பகுதியில் மையக் குவிமாடமும் இருக்கிறது.

    இந்த கோவிலானது சுமார் 2 மில்லியன் கன அடி கற்களைக் கொண்டு கட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த ஒன்பது தளங்களின் வழியாகவும் சென்று மேல் பகுதியைக் கண்டுகளிக்க, சுமார் 4 கிலோமீட்டர் வரை நாம் நடக்க வேண்டியதிருக்கும்.


    இந்த கோவிலில் சுமார் 2 ஆயிரத்து 700 புடைப்புச் சிற்பங்களும், 504 புத்தர் சிலைகளும் இருக்கின்றன.

    1975 முதல் 1982-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தோனேசிய அரசும், யுனெஸ்கோவும் இந்த புத்த நினைவுச் சின்னத்தை ஆய்வு செய்து, இதனை உலக பாரம்பரிய பட்டியலில் இணைத்துள்ளன.

    மறுசீரமைப்பு பணியின் போது, இந்த பகுதியில் உள்ள மூன்று புத்தக்கோவில்கள், அதாவது போரோபுதூர், பாவோன் மற்றும் மெண்டுட் ஆகியவை நேர்கோட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதோடு அந்த காலத்தில் போரோபுதூரில் இருந்து மெண்டுட் வரை இரு புறமும் சுவர்கள் கொண்ட செங்கல் சாலை இருந்துள்ளது. மூன்று கோவில்களும் ஒரே மாதிரியான கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பைப் பெற்றிருக்கின்றன.

    • இந்தோனேசியா வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பலியாகினர்.
    • மாயமான பலரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் மழைக்காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படுகிறது. லட்சக்கணக்கானோர் மலைப் பகுதிகள் மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளுக்கு அருகில் வசித்து வருவதால் பேரிடர் காலங்களில் உயிர்ச்சேதம், பொருட்சேதம் அதிகமாக உள்ளது.

    இதற்கிடையே, இந்தோனேசியாவின் வடக்கு மலுகு மாகாணம், டெர்னேட் தீவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

    ருவா கிராமத்தில் குடியிருப்புகளை வெள்ளம் அடித்துச் சென்றதுடன், பிரதான சாலை மற்றும் அந்த கிராமத்திற்கான தரைவழி தொடர்பு துண்டிக்கப்பட்டது. பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேற்றில் புதைந்தன.

    இந்நிலையில், இந்தோனேசியா கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக பலியாகினர் என்றும், மாயமான பலரை மீட்புக் குழு தேடி வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறாய் என்று கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
    • முதியவரின் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளார்.

    எப்போ கல்யாணம் என்று தன்னை அடிக்கடி கேட்டு நச்சரித்து வந்த பக்கத்து வீட்டு முதியவரை 45 வயது நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் உள்ள குடியிருப்பில் அசிம் இரியான்டோ [Asgim Irianto]என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வாழ்ந்து வந்தார்.

    இவரது பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த 45 வயது சிரேகர் [Siregar] மீது கொண்ட அக்கறையில் அவரைப் அடிக்கடி பார்க்கும்போதெல்லாம் எப்போ திருமணம் செய்து  கொள்ளபோகிறாய்?, 45 வயதாகியும் ஏன் சிங்கிளாக இருக்கிறாய்? என்று கேட்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிரேகர் கடந்த ஜூலை 29 ஆம் தேதி திங்கள்கிழமையன்று முதியவரின் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளார்.

    முதியவரின் மனைவியின் முன்னிலையிலேயே அவரை மரக்கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் வந்து சிரேகரைத் தடுத்து நிறுத்தி முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால் வழியிலேயே முதியவர் உயிரிழந்துள்ளார்.

    இதனைத்தொடர்ந்து சிரேகரை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணம் குறித்து அவர் தொடர்ந்து கேள்வி கேட்டு வந்ததால் தான் மனதவளவில் பாதிக்கப்பட்டு  முதியவரைத் தாக்கியதாக சிரேகர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    • கைது செய்யப்பட்ட நபர் தனது நண்பர் கதிர் மார்கஸை மது அருந்த அழைத்துள்ளார்.
    • 'கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா' என்று மார்கஸிடம் அவர் நண்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்தோனேசியா நாட்டில் 'கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா' என்று புதிரின் விவாதத்தில் நண்பரை கத்தியால் குதி கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஜூலை 24 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று, கைது செய்யப்பட்ட நபர் தனது நண்பர் கதிர் மார்கஸை மது அருந்த அழைத்துள்ளார். இருவரும் மது அருந்திய பொழுது, 'கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா' என்று மார்கஸிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்த விவாதம் வாக்குவாதமாக மாறிய பிறகு, கதிர் மார்கஸ் விவாதம் செய்ய விரும்பாமல் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். இதனால் கோபமடைந்த அவரது நண்பர் ஆத்திரத்தில் மார்க்ஸை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

    மார்கஸ் ஜூலை 26 அன்று அடக்கம் செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 18 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்தோனேசியா நாட்டில் வாட்சப் குழுவிலிருந்து நீக்கியதற்காக நண்பரை ஒருவர் கத்தியால் குத்திகொன்ற சம்பவம் கடந்தாண்டு நடந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி அற்ப காரணங்களுக்காக கொலை செய்வது இந்தேனோசியா நாட்டில் அதிகரித்துள்ளது. 

    • இந்தோனேசியாவின் தென்மேற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதம் குறித்த தகவல் இல்லை.

    இந்தோனேசியாவில் 6.0 என்கிற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்தோனேசியாவின் தென்மேற்கு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.0 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் அல்லது பெரிய சேதம் குறித்த உடனடி தகவல்கள் வெளிவரவில்லை.

    நிலநடுக்கம் கணிசமான ஆழத்தில் தாக்கியதால், கடுமையான சேதத்திற்கான சாத்தியம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியில் பார்த்ததுபோல் மழை நீரை சேகரித்தும், கூடாரம் அமைத்தும் 30 மணி நேரமாக உயிர் வாழ்ந்துள்ளனர்.
    • மீட்பு குழுவினரின் உதவியுடன் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    இங்கிலாந்தின் தொலைக்காட்சி தொகுப்பாளராக கேத்தரின் ஃபார்ஸ்டர் தனது மகன்களுடன் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு மேத்யூ (22), ஆண்ட்ரூ (18) என்ற அவரின் 2 மகன்களும் வழிதவறி பாலியில் உள்ள எரிமலையின் மீது எறியுள்ளனர். அங்கிருந்து எப்படி இறங்குவது என தெரியாமல் எரிமலையில் அவர்கள் மாட்டிக் கொண்டனர்.

    அவர்களை மீட்க மீட்புக்குழுவினர் அந்த எரிமலைக்கு புறப்பட்டனர். எரிமலையில் 30 மணிநேரத்திற்கு மேலாக சிக்கி கொண்டதால், அவர்கள் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் க்ரில்ஸ் வீடியோவில் கூறிய அறிவுரைகளை வைத்து உயிர்பிழைத்துள்ளனர்.

    பியர் க்ரில்ஸ் நிகழ்ச்சியில் பார்த்ததுபோல் மழை நீரை சேகரித்தும், கூடாரம் அமைத்தும் 30 மணி நேரமாக உயிர் வாழ்ந்துள்ளனர்.

    கிட்டத்தட்ட 40 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு குழுவினரின் உதவியுடன் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கச் சுரங்கத்தில் உள்ள குறுகிய குழியில் உள்ளூர் கிராமவாசிகள் 33 பேர் தங்கத்தை தோண்டியெடுக்கும் பணியில் ஈடுயப்பட்டிருந்தனர்.
    • 18 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று [ஜூலை 7] ஞாயிற்றுக்கிழமை  சுலவேசி தீவின் கோரோண்டாலோ பகுதியில் உள்ள போன் பொலாங்கோ என்ற இடத்தில சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கத்தில் உள்ள குறுகிய குழியில் உள்ளூர் கிராமவாசிகள் 33 பேர் தங்கத்தை தோண்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது திடீரென மேரோபகுதியில் இருந்த மண் சரிந்து குழிக்குள் இருந்தவர்கள் மீது விழுந்து அடைத்தது. இந்த விபத்தில் 12 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்டுப்படையினர் 12 பேரின் உடல்களை மண்ணுக்குள் இருந்து மீட்டனர். இந்த விபத்தில் சிக்கிய மேலும் 18 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

     

     

    ×