search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Induction Ceremony"

    • சோழவந்தானில் ஆசிய சாம்பியன் ஆடவர் ஆக்கி போட்டி கோப்பை அறிமுக விழா நடந்தது.
    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஆக்கி இந்தியா இணைந்து நடத்துகிறது.

    சோழவந்தான்

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஆக்கி இந்தியா இணைந்து நடத்தும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான 7-வது ஆடவர் ஆக்கி போட்டிகள் வருகிற ஆகஸ்ட் 3-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சென்னையில் நடை–பெற உள்ளது. இந்த போட் டியில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொ–ரியா, ஜப்பான், சீனா, மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் வெற்றிக் கோப்பை தமிழ்நாடு முழுவ–தும் வலம் வர உள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த 20-ந்தேதி சென்னை மெரினா–வில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச் சர் உதயநிதி ஸ்டா–லின் அறிமுக விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதன் தொடர் நிகழ்வாக சோழவந்தான் கல்வி சர்வ–தேச பொதுப்பள்ளி மைதா–னத்தில் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் ஆடவர் வெற்றி கோப்பையை அறி–முகம் செய்யும் விழா நடந்தது. இவ்விழாவில் கல்வி குழுமம் தலைவர் டாக்டர். செந்தில்குமார் உதவி தலைமை ஆசிரியர்கள் அபி–ராமி, டயானா, பள்ளி மாணவர் தலைவர் அர்ஜூன், பள்ளி மாணவர் துணை தலைவர் பொற்கலை ரிஷிகா, பள்ளி விளையாட்டுத்துறை அமைச்சர் கௌஷிக், பள்ளி விளையாட்டுத்துறை துணை அமைச்சர் சனோஜ் மற்றும் ஆசிரியர், ஆசிரி–யைகள், மாணவ, மாணவி–கள் பங்கேற்றனர்.

    முன்னதாக கோப்பையை மாணவர்கள் கொடி பிடித்து ஊர்வலமாக மைதானத்திற்கு கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து கோப்பை தேனி மாவட்டத் திற்கு தொடர்ந்து பயணித்தது.

    • கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக முத்துக்குமரன் பதவி ஏற்று கொண்டார்.
    • தலைமை உறுப்பினராக ஜெகன், பாலசுந்தரமூர்த்தி ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.

    புதுச்சேரி:

    மண்ணாடிப்பட்டு கொம்யூன் திருபுவனை தொகுதியில் உள்ள திருபுவனைபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர், இயக்குனர்கள் பதவியேற்பு விழா துலுக்கான மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    புதுவை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், கூட்டுறவுத்துறை நிர்வாக அலுவலர் ஆகியோரின் கடித உத்தரவின் பேரில் 3 நபர் கமிட்டி அமைக்கப்பட்டு திருபுவனைப்பாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக முத்துக்குமரன் பதவி ஏற்று கொண்டார். அதனைத் தொடர்ந்து தலைமை உறுப்பினராக ஜெகன், பாலசுந்தரமூர்த்தி ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.

    நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தைச் சேர்ந்த துணைத் தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோபிகா எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, பதவி ஏற்று கொண்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியில் மதகடிப்பட்ட கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் துளசிங்க பெருமாள் வரவேற்று பேசினார். மதகடிப்பட்டு பாளையம் துலுக்கான மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கோதண்டராமன் அனைவரையும் வாழ்த்தி பேசினார்.

    திருபுவனை பாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகத்திற்கு புதிதாக நிலம் வாங்கி புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்பன உள்பட பல்வேறுதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    விழாவில் திருபுவனைபாளையம், மதகடிப்பட்டுபாளையம், கஸ்தூரிபாய் நகர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க அலுவலக செயலாளர் குமரேசன் நன்றி கூறினார்.

    • காலை, மதியம் என இரு பகுதிகளாக நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி.
    • கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தி இலக்குகளை அடைய மாணவர்களுக்கு அறிவுரை.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் அமைந்துள்ள வேலம்மாள் தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வகையில் ஃப்ரஷர்ஸ் டே வெகுவிமர்சையாக நடைபெற்றது.

    காலை மற்றும் மதியம் என இரு பகுதிகளாக நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளில், சிறப்பு விருந்தினர்களாக ஜோஹோ ஸ்கூல் ஆஃப் லேர்ணிங் தலைவர் ராஜேந்திரன் தண்டபாணி, வழக்கறிஞர் அருள்மணி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரை நிகழ்த்தினர். 


    கல்லூரியின் இயக்குனர் எம்.வி.எம் சசிகுமார், கல்லூரியின் முதல்வர் முனைவர் என்.பாலாஜி சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தனர். வேலம்மாள் கல்விக் குழுமத்தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம், இயக்குனர் எம்.வி.எம். சசிகுமார் , ஆலோசகர்கள் பேராசிரியர். கே.ரசாக் மற்றும் வாசு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து பங்கேற்றனர்.

    மாணாக்கர்கள் தவறான பாதையில் சென்றுவிடாமல் மிகுந்த ஒழுக்கத்துடன் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தி தங்கள் இலக்குகளை அடைய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் எஸ். சௌந்தரராஜன் நன்றி தெரிவித்தார். 

    ×