என் மலர்
நீங்கள் தேடியது "INDvEND"
- இங்கிலாந்து அணியில் அதிக பட்சமாக சாக் கிராலி 76 ரன்கள் எடுத்தார்.
- இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
விசாகப்பட்டினம்:
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்திருந்தது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும், அஸ்வின் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அவர் 209 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 112 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 396 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், பஷீர், ரெஹான் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக சாக் கிராலி- பென் டக்கெட் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சுலபமாக எதிர் கொண்டனர். இதனால் ரோகித், சுழற்பந்து வீச்சை பந்து வீச அழைத்தார். அதன்படி விக்கெட்டும் கிடைத்தது. பென் டக்கெட் 21 ரன்னில் அவுட் ஆனார். முதல் டெஸ்ட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போப் பும்ரா பந்து வீச்சில் ஸ்டெம்புகள் சிதற விக்கெட் ஆனார்.
அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ரூட் 5, பேர்ஸ்டோவ் 25, போக்ஸ் 6, ரெஹன் 6, டாம் ஹார்ட்லி 21 என ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் அணிக்காக போராடிய பென் ஸ்டோக்ஸ் 47 ரன்னில் பும்ரா பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆனார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 253 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டும் குல்தீப் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இங்கிலாந்து அணியில் அதிக ரன் எடுத்தவர் கிராலி ஆவார்.
- பும்ராவின் பந்து வீச்சு நம்ப முடியாத வகையில் அபாரமாக இருந்தது.
இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் ஜெய்ஸ்வால் 209 ரன் குவித்து முத்திரை பதித்தார். தனது 6-வது டெஸ்டில் முதல் முறையாக இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதேபோல பும்ரா 45 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த இருவரது பங்களிப்பையும் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் கிராலி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஜெய்ஸ்வாலின் ஆட்டம் அபாரமாக இருந்தது. நம்ப முடியாத இன்னிங்ஸ் அவர் ஒரு அற்புதமான வீரராக திகழ்கிறார். அவர் நட்சத்திர வீரராக உருவெடுப்பார்.
பும்ராவின் பந்து வீச்சு நம்ப முடியாத வகையில் அபாரமாக இருந்தது. இது மாதிரியான ஆடுகளத்தில் சிறப்பாக வீசியது பாராட்டத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்து அணியில் அதிக ரன் எடுத்தவர் கிராலி ஆவார். தனது 26-வது பிறந்தநாளில் அவர் 76 ரன்கள் எடுத்தார்.
- 2017-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் 3-வது பேட்ஸ்மேன் சதம் அடித்தது இல்லை.
- சுப்மன் கில் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது சதம் அடித்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் போட்டியின்போது இந்திய அணியின் சுப்மன் கில் சதம் விளாசினார்.
டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து சொதப்பி வரும் சுப்மன் கில்லை ரஞ்சி போட்டியில் விளையாட சொல்ல வேண்டும் என தொடர்ந்து விமர்சனம் வைக்கப்பட்டது. இந்த விமர்சனத்திற்கு சுப்மன் கில் முற்றுப் புள்ளி வைத்தார்.
மேலும், இந்திய டெஸ்ட் அணியில் 3-வது நபராக களம் இறங்கும் பேட்ஸ்மேன் இந்திய மண்ணில் சதம் அடித்து ஏழு வருடங்கள் ஆகிறது. புஜாரா கடந்த 2017-ம் ஆண்டு சதம் அடித்திருந்தார். அதன்பின் 3-வது வீரராக களம் இறங்கிய வீரர்கள் இந்திய மண்ணில் சதம் அடித்தது கிடையாது. தற்போது சுப்மன் கில் சதம் அடித்து ஏழு ஆண்டு காத்திருப்பை பூர்த்தி செய்துள்ளார்.
விசாகப்பட்டினம் டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 396 ரன்கள் குவித்தது. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 255 ரன்னில் சுருண்டது.
இந்தியா 2-வது இன்னிங்சில் 253 ரன்னில் ஆல்அவுட் ஆக, இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
- முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2- 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2- 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல் ஆகியோர் விலகியுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
பணிச்சுமை கருதி பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதாகவும், காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் கே.எல்.ராகுல் விலகியுள்ளதாகவும் பி.சி.சி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பும்ராவுக்கு பதிலாக முகேஷ் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் விலகிய நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம் பின்வருமாறு;-
ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரேல், கே.எஸ்.பாரத், படிக்கல், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், அகாஷ் தீப்.
- இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
- இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் டி20 தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 6) நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. ஒருநாள் போட்டியில் மீண்டும் ஜோரூட் களமிறங்குகிறார். கிட்டதட்ட 14 மாதங்களுக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ரூட் இடம் பிடித்துள்ளார். இவர் கடைசியாக ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடினார்.
முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணி:-
பென் டக்கெட், பில் சால்ட் (கீப்பர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஆதில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாகிப் மஹ்மூத்.
- இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த பல தொடர்களாகவே பேட்டிங்கில் மோசமான ஆட்டத்தை சந்தித்து வருகிறார். இது அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே நடைபெற்று முடிந்த பல்வேறு தொடர்களில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த ரோகித் இந்த இங்கிலாந்து தொடரிலாவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மோசமான ஆட்டத்தை தொடரும் பட்சத்திலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை அவர் கைப்பற்றவில்லை என்றாலும் இந்திய அணியில் இருந்தும் நீக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இருந்தாலும் இந்த போட்டியில் ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தது அனைவரது மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் 91 ரன்கள் மட்டுமே அடித்த அவர் ஆஸ்திரேலிய தொடரின் போது ஒட்டுமொத்தமாகவே 31 ரன்கள் மட்டுமே அடித்து மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கடைசியாக அவர் விளையாடிய பத்து இன்னிங்ஸ்களில் 0,8,18,1,3,6,10,3,9,2 என்று ஒருமுறை கூட 20 ரன்களை கூட தாண்டாமல் ஆட்டம் இழந்திருக்கிறார். இதன் காரணமாக எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவரது இந்த மோசமான பேட்டிங் பார்ம் தொடர்ந்தால் அவர் இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
- இந்திய தரப்பில் சுப்மன் கில் அதிகபட்சமாக 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பட்லர் 52 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஹர்ஷித் ராணா, ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 87 ரன்கள் குவித்த சுப்மன் கில் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் விராட் கோலி மற்றும் முகமது சமியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
2022 முதல் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளைப் பெற்ற வீரர்களில் முகமது ஷமி மற்றும் விராட் கோலியை சுப்மன் கில் சமன் செய்துள்ளார்.
முகமது சமி, விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோர் 5 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். அதற்கு அடுத்தப்படியாக ஷ்ரேயாஸ் 4, ரோகித் சர்மா, குல்தீப் யாதவ் 3 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளனர்.
- சுப்மன் கில் 102 பந்தில் 14 பவுண்டரி, 3 சிக்சருடன் 112 ரன்கள் விளாசினார்.
- ஷ்ரேயாஸ் அய்யர் 64 பந்தில் 78 ரன்களும், விராட் கோலி 55 பந்தில் 52 ரன்களும் சேர்த்தனர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். ரோகித் சர்மா 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து சுப்மன் கில் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. இந்தியா 10 ஓவரில் 52 ரன்களை கடந்தது.
17-வது ஓவரை ரஷித் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி சுப்மன் கில் அரைசதம் அடித்தார். இந்த தொடரின் 3-வது அரைசதம் இதுவாகும். அவர் 51 பந்தில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

மறுமுனையில் விராட் கோலி அடுத்த ஓவரின் 2-வது பந்தில் சிக்ஸ், 3-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 50 பந்தில் அரைசதம் அடித்தார். இந்திய அணியின் ஸ்கோர் 19 ஓவரில் 122 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. விராட் கோலி 55 பந்தில் 52 ரன்கள் எடுத்த நிலையில் அடில் ரஷித் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார். சுப்மன் கில்- விராட் கோலி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தது.
சுப்மன் கில் உடன் இணைந்து ஷ்ரேயாஸ் அய்யரும் சிறப்பாக விளையாடினார்.
சுப்மன் சில் 95 பந்தில் சதம் விளாசினார். மறுமுனையில் ஷ்ரேயாஸ் அய்யர் 43 பந்தில் அரைசதம் அடித்தார். இந்திய அணியின் ஸ்கோர் 226 ரன்னாக இருக்கும்போது சுப்மன் கில் 112 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில்- ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் குவித்தது.

சுப்மன் கில் அவுட்டான சிறிது நேரத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் 64 பந்தில் 78 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது இந்தியாவின் ஸ்குார் 38.2 ஓவரில் 259 ரன்னாக இருந்தது.
கே.எல். ராகுல் 29 பந்தில் 40 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 9 பந்தில் 17 ரன்களும், அக்சார் படேல் 12 பந்தில் 13 ரன்களும் இந்தியாவின் ஸ்கோர் 350 ரன்களை தாண்டியது. 49-வது ஓவரில் ஹர்ஷித் ராணா தலா ஒரு பவுண்டரி, சிக்ஸ் அடித்து ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் இந்தியா 3 ரன் எடுத்து 2 விக்கெட்டை இழக்க சரியாக 50 ஓவரில் 356 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 357 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. விராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. தவான், 4. சுரேஷ் ரெய்னா, 5. கேஎல் ராகுல், 6. டோனி, 7. ஹர்திக் பாண்டியா, 8. சித்தார்த் கவுல், 9. உமேஷ் யாதவ், 10. சாஹல், 11. குல்தீப் யாதவ்.