என் மலர்
நீங்கள் தேடியது "INDvSL"
- முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற உள்ளது.
- நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ளது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அசாம் தலைநகர் கவுகாத்தி நகரில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கவுகாத்தியில் உள்ள ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் நாளை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மதியம் ஒரு மணிக்கு மேல் விடுமுறை என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார். மேலும் விராட் கோலி, கேஎல் ராகுல் உள்பட பலர் விளையாடுவார்கள்.
- நீண்ட இடைவெளிக்கு பிறகு வேகப்பந்து வீரர் பும்ராவும் இந்த அணியில் இடம் பெற்றிருந்தார்.
- கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் விளையாடவில்லை.
கவுகாத்தி:
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 போட்டிகொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை நடக்கிறது.
கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்பி உள்ளார். அவர் காயம் காரணமாக வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் சமீபத்தில் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் ஆகியவற்றில் விளையாடவில்லை.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல முன்னாள் கேப்டன் விராட் கோலி, கேஎல் ராகுல் அணிக்கு திரும்பி உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு வேகப்பந்து வீரர் பும்ராவும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் உடற்தகுதி காரணமாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து பும்ரா நீக்கப்பட்டாரா என்பதை பிசிசிஐ இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
- இரு அணிகளும் நாளை மோதுவது 162-வது ஒருநாள் போட்டியாகும்.
- இந்தியா 93-ல், இலங்கை 57-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. 11 போட்டி முடிவு இல்லை.
கவுகாத்தி:
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 போட்டிகொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் 2 ரன்னிலும், ராஜ்கோட்டில் நடந்த கடைசி ஆட்டத்தில் 91 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.
புனேயில் நடந்த 2-வது போட்டியில் இலங்கை 16 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது.
அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்பி உள்ளார். அவர் காயம் காரணமாக வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் சமீபத்தில் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் ஆகியவற்றில் விளையாடவில்லை.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதே போல முன்னாள் கேப்டன் விராட் கோலியும் அணிக்கு திரும்பி உள்ளார். அவருக்கும் 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. லோகேஷ் ராகுலும் திரும்பி உள்ளார்.
இந்திய அணி கடைசியாக வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை அந்நாட்டில் 1-2 என்ற கணக்கில் இழந்தது.
20 ஓவர் தொடரை இழந்த இலங்கை அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் இருக்கிறது. அந்த அணி வீரர்கள் இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி கடைசியாக ஆப்கானிஸ்தானுடன் மோதிய 3 போட்டி கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இரு அணிகளும் நாளை மோதுவது 162-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 162 ஆட்டத்தில் இந்தியா 93-ல், இலங்கை 57-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. 11 போட்டி முடிவு இல்லை.
கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி மோதிய போட்டியில் இலங்கை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த பயணத்தில் இந்தியா முதல் 2 போட்டியில் வென்று தொடரை கைப்பற்றி இருந்தது.
நாளைய போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்த்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), இஷான் கிஷன், சுப்மன் கில், வீராட் கோலி, லோகேஷ் ராகுல், சூர்ய குமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், அர்ஷ்தீப்சிங், யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக், முகமது ஷமி
இலங்கை: தசுன் ஷனகா (கேப்டன்), குஷால் மெண்டீஸ் (துணை கேப்டன்), அசலென்கா, பண்டாரா, தனஞ்செய டி சில்வா, ஹசரங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, நுவன் பெர்னாண்டோ, கருணாரத்னே, லகிரு குமாரா, மதுஷனகா, நிஷங்கா, பிரமோத் மதுஷான், கசுன் ரஜிதா, சமர விக்ரமா, தீக்சனா, வான்டர்சே, துனித்.
- ஆஸ்திரேலிய அணி பிப்ரவரி மாதம் இந்தியா வந்து 4 டெஸ்டிலும், 3 ஒருநாள் போட்டியிலும் ஆடுகிறது.
- அவர் ஏதாவது 2 டெஸ்ட்டில் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை:
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா.
30 டெஸ்டில் 128 விக்கெட்டும், 72 ஒருநாள் ஆட்டத்தில் 121 விக்கெட்டும், 60 இருபது ஓவர் போட்டியில் 70 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளார்.
29 வயதான பும்ரா காயத்தால் சர்வதேச போட்டியில் தொடர்ந்து ஆட முடியாத நிலையில் உள்ளார். அவர் கடைசியாக டெஸ்ட், ஒரு நாள் போட்டியில் ஜூலை மாதமும், 20 ஓவரில் செப்டம்பர் மாதமும் விளையாடி இருந்தார்.
காயத்தில் இருந்து முழு குணம் அடைந்ததால் இலங்கைக்கு எதிராக இன்று தொடங்கும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற்று இருந்தார். இந்த நிலையில் முதுகுப் பகுதியில் தொடர்ந்து பிடிப்பு இருப்பதால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ளார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் விளையாடுவது சந்தேகம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு நுழைய இந்தியாவுக்கு இந்த தொடர் முக்கியமானது. பும்ரா இல்லாமல் போனால் பாதிப்பு இருக்கும்.
இதனால் அவர் ஏதாவது 2 டெஸ்ட்டில் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணி பிப்ரவரி மாதம் இந்தியா வந்து 4 டெஸ்டிலும், 3 ஒருநாள் போட்டியிலும் ஆடுகிறது. முதல் டெஸ்ட் நாக்பூரில் 9-ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 13-ந்தேதி டெஸ்ட் தொடர் முடிகிறது. அதன்பிறகு ஒருநாள் தொடர் மார்ச் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் நடக்கிறது.
- கடைசி நேரத்தில் உடல்தகுதியை எட்டிவிட்டதாக சேர்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மறுபடியும் விலகியுள்ளார்.
- 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் அணிக்கு திரும்புகிறார்கள்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் அணிக்கு திரும்புகிறார்கள். கடைசி நேரத்தில் உடல் தகுதியை எட்டிவிட்டதாக சேர்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மறுபடியும் விலகியுள்ளார்.
இந்நிலையில் இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் பகல்- இரவு போட்டியாக இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.
இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல், முகமது ஷமி, உம்ரான் மாலிக், முகமது சிராஜ்.
இலங்கை: குசல் மென்டிஸ் (விக்கெட் கீப்பர்), பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, தனஞ்ஜெயா டி சில்வா, சாரித் அசலங்கா, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, கசுன் ரஜிதா, மதுஷன்கா, துனித் வெல்லலகே.
- துவக்க வீரர்கள் ஷூப்மான் கில், கேப்டன் ரோகித் சர்மா ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்
- மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி, சர்வதேச போட்டிகளில் 73வது சதம் அடித்தார்.
கவுகாத்தி:
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஷூப்மான் கில், கேப்டன் ரோகித் சர்மா ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர். ரோகித் சர்மா 83 ரன்களும், ஷூப்மான் கில் 70 ரன்களும் சேர்த்தனர்.
3வது வீரராக களமிறங்கிய விராட் கோலியும் அதிரடியில் மிரட்டினார். அவருடன் இணைந்த ஸ்ரேயாஸ் அய்யர் 28 ரன்களும், கே.எல்.ராகுல் 39 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பந்துகளை பவுண்டரிகளாக பறக்கவிட்ட விராட் கோலி, சர்வதேச போட்டிகளில் 73வது சதம் அடித்து அசத்தினார். 80 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அவர் இந்த இலக்கை எட்டினார். அவர் 113 ரன்கள் எடுத்த நிலையில், விக்கெட்டை இழந்தார். முன்னதாக அக்சர் பட்டேல் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
50 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது. முகமது ஷமி (4), சிராஜ் (7) ஆகியோர் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் கசுன் ரஜிதா 3 விக்கெட் கைப்பற்றினார். தில்சன் மதுசங்கா, கருணாரத்னே, தசுன் சனகா, தனஞ்செய டி சில்வா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்குகிறது.
- நெருக்கடிக்கு மத்தியில் அசராமல் நின்று ஆடிய கேப்டன் தசுன் சனகா சதம் அடித்தார்.
- இந்தியா தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
கவுகாத்தி:
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. முதலில் ஆடிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய விராட் கோலி, 113 ரன்கள் குவித்தார். ரோகித் சர்மா 83 ரன்களும், ஷூப்மான் கில் 70 ரன்களும் விளாசினர்.
இதையடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின், துவக்க வீரர் பதும் நிசங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தார். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் நிலைக்கவில்லை. அவிஸ்கா பெர்னாண்டோ 5 ரன்னிலும், குஷால் மெண்டிஸ் ரன் எடுக்காமலும், அசலங்கா 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதிரடியாக ஆடிய தனஞ்செயா டி சில்வா 9 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் வலுவான நிலையில் இருந்த பதும் நிசங்கா, 72 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
ஹசரங்கா டி சில்வா (16) துனித் வெல்லாலகே (0), கருணாரத்னே (14) என பின்கள வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். நெருக்கடிக்கு மத்தியில் அசராமல் நின்று ஆடிய கேப்டன் தசுன் சனகா சதம் அடித்தார். எனினும், 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களே சேர்த்தது. எனவே இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி வரை போராடிய கேப்டன் தசுன் சனகா 108 ரன்களுடனும், ரஜிதா 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிராஜ் 2 விக்கெட் எடுத்தார்.
இந்த வெற்றியின்மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி 12ம்தேதி (நாளை மறுநாள்) நடக்கிறது.
- இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா 83 ரன்கள் எடுத்தார்.
- இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனகா அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தினார்.
இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை 2 - 1 (3) என்ற கணக்கில் இந்தியா வென்றது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதது.
அதன்படி களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 7 விக்கெட்டுகளை இழந்து 373 ரன்கள் குவித்தது. விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 45வது சதத்தை விளாசி 113 (87) அவுட்டானார். அதைத்தொடர்ந்து 374 என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு பெர்னாண்டோ 5, குசல் மெண்டிஸ் 0, அசலங்கா 23 என முக்கிய வீரர்கள் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் மிடில் ஆர்டரில் வழக்கம் போல கேப்டன் தசுன் சனாக்கா சவாலை கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்து அரை சதம் கடந்து வெற்றிக்கு போராடினார். நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்திய அவர் வெற்றி பறிபோனாலும் குறைந்தபட்சம் சதத்தை நெருங்கி கடைசி ஓவரில் 98 ரன்களில் பேட்டிங் செய்தார்.
That's that from the 1st ODI.#TeamIndia win by 67 runs and take a 1-0 lead in the series.
— BCCI (@BCCI) January 10, 2023
Scorecard - https://t.co/262rcUdafb #INDvSL @mastercardindia pic.twitter.com/KVRiLOf2uf
கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி 4-வது பந்தில் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறினார் என்பதற்காக சனக்காவை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். அதன் காரணமாக போட்டியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டதுடன் சனாக்கா ஏமாற்றமடைந்த நிலையில் அதை சோதிப்பதற்காக நடுவரும் 3வது நடுவரை அணுகினார்.
இருப்பினும் அப்போது வேகமாக ஓடி வந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு போராடும் அவரை சதமடிக்க விடாமல் அவுட்டாவதற்கு இது சரியான வழியல்ல என்று சிரித்த முகத்துடன் முகமது சமியிடம் பேசி சமாதானப்படுத்தினார்.
அவரது வார்த்தைகளை புரிந்து கொண்ட முகமது ஷமி தாமாகவே நடுவரிடம் சென்று தாம் முன்வைத்த அவுட்டை வாபஸ் பெறுவதாக கூறினார். அதை தொடர்ந்து கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்த பவுண்டரிகளுடன் 12 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்த சனாக்கா 108* (88) ரன்கள் குவித்த போதிலும் 50 ஓவர்களில் இலங்கை 306/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கை கேப்டனை சதமடிக்க விடாமல் தடுக்க நேரடியாக அவுட் செய்ய முடியாமல் மன்கட் முறையில் அவுட் செய்த முகமது ஷமியின் செயலுக்கு நிறைய இந்திய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக வெற்றி இரு பக்கத்திற்கும் சமமாக இருக்கும் போது மன்கட் செய்திருக்க வேண்டும் அல்லது சனாக்கா 60, 70 போன்ற ரன்களில் இருந்த போது மன்கட் செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் இந்திய ரசிகர்கள் வெற்றி உறுதியான பின்பு சதமடிக்க விடக்கூடாது என்ற எண்ணத்துடன் இவ்வாறு செய்வது சரியல்ல என சமூக வலைத்தளங்களில் சமியை விமர்சிக்கிறார்கள்.
அதையே போட்டியின் முடிவில் "சிறப்பாக விளையாடிய சனாக்காவை நாங்கள் அந்த வழியில் அதுவும் 98 ரன்னில் அவுட் செய்ய விரும்பவில்லை" என்று ரோகித் சர்மா தெரிவித்தார். அந்த வகையில் வெற்றி பறிபோனாலும் தனி ஒருவனாக போராடி தகுதியான சதத்தை நெருங்கிய சனாகாவுக்கு எதிரான மன்கட் அவுட்டை வாபஸ் பெற்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை ரசிகர்கள் மனதார பாராட்டுகிறார்கள்.
- இலங்கை அணி கேப்டன் சனகா 98 ரன்களில் இருந்த போது முகமது ஷமியால் மன்கட் முறையில் ரன் அவுட் செய்யப்பட்டார்.
- பல கேப்டன்கள் இதைச் செய்ய மாட்டார்கள் என இலங்கை முன்னாள் வீரர் மேத்யூஸ் பாராட்டி உள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 373 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து 374 என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் எடுத்தது.
இந்த போட்டியில் இலங்கை அணி கேப்டன் சனகா 98 ரன்களில் இருந்த போது முகமது ஷமியால் மன்கட் முறையில் ரன் அவுட் செய்யப்பட்டார். அதை சோதிப்பதற்காக நடுவரும் 3-வது நடுவரை அணுகினார். அந்த சமயத்தில் வேகமாக ஓடி வந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா சிரித்த முகத்துடன் முகமது சமியிடம் சென்று பேசி இப்படி அவுட் தேவையில்லை என தெரிவித்தார்.
அவரது வார்த்தைகளை புரிந்து கொண்ட முகமது ஷமி நடுவரிடம் சென்று தாம் முன்வைத்த அவுட்டை வாபஸ் பெறுவதாக கூறினார். இதனால் அடுத்த 2 பந்துகளில் பவுண்டரி மற்றும் சிக்சர் விளாசி தனது 2-வது சதத்தை பதிவு செய்தார்.
சனாகாவுக்கு எதிரான மன்கட் அவுட்டை வாபஸ் பெற்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை இலங்கை ஜாம்பவான் பாராட்டி உள்ளார்.
The real winner was the sportsmanship of Rohit Sharma for refusing to take the run out. I doff my cap to you ! https://t.co/KhMV5n50Ob
— Sanath Jayasuriya (@Sanath07) January 10, 2023
இந்நிலையில் அவர் கூறியதாவது:-
நடுவரிடம் ரன் அவுட்டை வாபஸ் பெற்ற ரோகித் சர்மா ஸ்போர்ட்மேன்ஷிப்பின் உண்மையான வெற்றியாளர். அவரின் செயலுக்கு தலை வணங்குகிறேன்.
மேலும் ஒரு இலங்கை அணியின் முன்னாள் வீரர் கூறியதாவது:-
Not many captains would do this but hats off to @ImRo45 for withdrawing the appeal even though the law says so! Displaying great sportsmanship ? pic.twitter.com/Dm2U3TAoc9
— Angelo Mathews (@Angelo69Mathews) January 10, 2023
பல கேப்டன்கள் இதைச் செய்ய மாட்டார்கள். விதிமுறை சொன்னாலும் மேல்முறையீட்டை வாபஸ் பெற்றதற்காக சிறந்த விளையாட்டுத்திறனை வெளிப்படுத்துகிறது. ஹேட்ஸ் ஆஃப் ரோகித் சர்மா.
இவ்வாறு கூறினார்கள்.
- 2010-ம் ஆண்டு நடந்த போட்டியில் சேவாக் 99 ரன்னில் கடைசி வரை களத்தில் இருந்தார்.
- ஒரு ரன் தேவைப்படும் போது நோபால் போட்டதால் அவர் சதத்தை எட்டமுடியவில்லை.
இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் பெரிய இலக்கை துரத்திய இலங்கை ஆரம்பத்திலேயே முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கிய போது வழக்கம் போல கேப்டன் சனாகா அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார்.
அதே வேகத்தில் சதத்தை நெருங்கிய அவர் கடைசி ஓவரில் 98 ரன்களில் இருந்த போது 4-வது பந்தில் இந்திய வீரர் முகமது ஷமி மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். நடுவர் தீர்ப்பு வழங்குவதற்காக 3வது நடுவரை நாடினார்.
இருப்பினும் அந்த சமயத்தில் கேப்டன் ரோகித் சர்மா அதற்கு மறுப்பு தெரிவித்து ஷமியை சமாதானப்படுத்தி அவரது வாயாலேயே அவுட்டை வாபஸ் பெற வைத்தார். மேலும் மிகச் சிறப்பாக விளையாடி 98 ரன்களை எடுத்த சனாக்காவை அவுட் செய்வதற்கு அது சரியான வழியல்ல என்றும் போட்டியின் முடிவில் ரோஹித் சர்மா தெரிவித்தது அனைவரது நெஞ்சங்களை தொட்டு பாராட்ட வைத்தது. அதனால் நெகிழ்ச்சியடைந்த இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த நிகழ்வின் புகைப்படத்தை பதிவிட்டு பாராட்டியது.
அதே போல் ஜெயசூர்யா, ஏஞ்சலோ மேத்யூஸ் போன்ற நிறைய முன்னாள் இலங்கை வீரர்களும் ரசிகர்களும் ரோகித் சர்மா மற்றும் இந்தியாவின் அந்த செயலை மனதார பாராட்டினார்கள். ஆனால் அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் 2010-ம் ஆண்டு இலங்கை அணியினர் செய்த காலத்திற்கும் அழிக்க முடியாத நிகழ்வை நினைவு கூர்ந்து பதிலடி கொடுத்தனர்.
அதாவது கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் தம்புலாவில் நடைபெற்ற 3-வது போட்டியில் இலங்கை 170 ரன்கள் எடுத்தது. இதனை துரத்திய இந்தியாவுக்கு வழக்கம் போல அதிரடியாக விளையாடிய சேவாக் 11 பவுண்டரி 2 சிக்சருடன் 99* (100) ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்தார்.
குறிப்பாக கடைசி நேரத்தில் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்ட போது வழக்கம் போல சிக்சரைப் பறக்க விட்ட சேவாக் ஆசையுடன் பேட்டை உயர்த்தி சதத்தை கொண்டாடினார். ஆனால் அந்த பந்தை அம்பையர் நோ-பால் என்று அறிவித்ததால் கடைசியில் 99* ரன்கள் மட்டுமே எடுத்த அவர் சதத்தை புள்ளிவிவரங்களின் படி எட்ட முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்தார்.
அதை விட அந்தப் பந்தை ரிப்ளையில் பார்க்கும் போது அதை வீசிய சுராஜ் ரண்டிவ் வேண்டுமென்றே சதமடிக்க கூடாது என்பதற்காக வெள்ளை கோட்டை விட வெகு தூரம் காலை வைத்து நோ-பால் வீசியதும் அதற்கு இலங்கையின் ஜாம்பவானாக கருதப்படும் கேப்டன் குமார் சங்ககாரா பந்தை வீசுவதற்கு முன்பாகவே திட்டம் போட்டுக் கொடுத்ததும் அம்பலமானது.
அப்படி சதமடிக்க விடக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே தீட்டப்பட்ட திட்டத்தை நேற்று நினைத்திருந்தால் இந்தியா நடுவர்களின் அனுமதியுடன் செய்திருக்கலாம்.
ஆனால் செய்யாத நாங்கள் தான் இந்தியர்கள் இன்றும் இதுதான் எங்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்றும் இலங்கைக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். மேலும் இனிமேலாவது அது போன்ற செயலை மீண்டும் செய்ய வேண்டாம் என்றும் இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
- முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
கொல்கத்தா:
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
முதலில் நடைபெற்ற டி20 தொடரை இலங்கை அணி 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.
இந்தியா, இலங்கை இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இந்திய அணி முனைப்பு காட்டும். முதல் போட்டியில் கிடைத்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை அணி முனைப்பு காட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
- இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- மது சனங்கா, பதும் நிசங்கா இலங்கை அணியில் இடம் பெறவில்லை.
கொல்கத்தா:
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கவுகாத்தியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் இடம் பெற்றுள்ளார். இலங்கையில் 2 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மது சனங்கா, பதும் நிசங்காவுக்கு பதிலாக நுவனிது பெர்னாண்டோ அறிமுகமானார் மற்றும் லஹிரு குமார மீண்டும் அணிக்கு திரும்பினார்.
போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ்.
இலங்கை:
நுவனிது பெர்னாண்டோ, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மென்டிஸ், சாரித் அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, வெல்லாலகே, சமிகா கருணாரத்னே, கசுன் ரஜிதா, லாஹிரு குமாரா.