search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvsSA"

    • நிறைய யோசித்தால் உணர்ச்சிவசப்படுவேன்.
    • நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், நன்றியுடனும், ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருக்கிறேன்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று டர்பனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 202 ரன்கள் குவித்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் 50 பந்தில் 7 பவுண்டரி, 10 சிக்சருடன் 107 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 141 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

    சதம் விளாசிய சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகள் விருதை வென்றார். ஆட்ட நாயகன் விருதை வென்ற சஞ்சு சாம்சன் கூறுகையில் "நிறைய யோசித்தால் உணர்ச்சிவசப்படுவேன். இந்த தருணத்திற்காக நான் 10 ஆண்டுகளாக காத்திருந்தேன். நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், நன்றியுடனும், ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருக்கிறேன். ஆனால் நான் என் கால்களை தரையில் வைக்க விரும்புகிறேன், இந்த தருணத்தில் அதில் இருக்க விரும்புகிறேன்.

    ஆடுகளத்தில் என்னுடைய நேரத்தை மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்தேன். ஆக்ரோசமாக விளையாடி அணியை நீங்களே முன்னதாக கொண்டு சொல்ல வேண்டும் என அணியில் பேசிக்கொண்டோம். அந்த எண்ணத்துடன் விளையாடினேன்.

    மூன்று நான்கு பந்துகளை சந்தித்தபின், பவுண்டரி அடிக்க வேண்டும் எனத் தோன்றும். நான் அதை பற்றி அதிகமாக சிந்திக்கவில்லை. சில நேரம் இது சாத்தியமாகும். சில நேரம் சறுக்கல் ஏற்படும். இன்று எனக்கு சரியாக வேலை செய்தது மகிழ்ச்சியாக விசயம். இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியது மிக முக்கியமானது. சிறந்த அணியான தென்ஆப்பிரிக்காவுக்கு சொந்த மண் கூடுதல் சாதகமாக இருக்கும்.

    இவ்வாறு சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

    டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார்.

    • டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது.
    • லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76 ரன்களை குவித்தார்.

    15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்நிலையில் இந்த தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் பெனோனியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களை குவித்தது. அந்த அணி சார்பில் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76 ரன்களையும், ரிச்சர்ட் செலட்ஸ்வேன் 64 ரன்களையும் சேர்த்தனர்.

    இந்தியா சார்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளையும், முஷீர் கான் 2 விக்கெட்டுகளையும், நர்மன் திவாரி மற்றும் பாண்டே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 245 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

    இந்திய அணியின் துவக்க வீரர்களான ஆதார்ஷ் சிங் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இவருடன் களமிறங்கிய அர்ஷின் குல்கர்னி 12 ரன்களிலும், அடுத்து வந்த முஷீர் கான் 4 ரன்களிலும், பிரியன்ஷூ மொலியா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக இந்திய அணி தடுமாறியது.

    ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மறுபக்கம் கேப்டன் உதய் சஹாரன் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். இவர் 69 ரன்களை குவித்த நிலையில், இவருடன் ஆடிய சச்சின் தாஸ் அதிரடியாக விளையாடி 96 ரன்களை குவித்தார்.

    போட்டி முடிவில் இந்திய அணி 48.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களை குவித்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜ் லிம்பானி 13 ரன்களுடனும், நமன் திவாரி ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் உதய் சஹாரன் 81 ரன்களையும், சச்சின் தாஸ் 96 ரன்களையும் விளாசினார்.

    இந்த வெற்றி மூலம் இந்திய அணி U19 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இறுதி போட்டி பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    • தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரில் விளையாடுகிறது.
    • இரு அணிகளிடையே முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற இருந்தது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. அந்த வகையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற இருந்தது.

    போட்டி நடைபெறும் டர்பனில் மழை பெய்து வருவதால் டாஸ் மற்றும் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் போடப்படாத நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 


    • தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரில் விளையாடுகிறது.
    • இரு அணிகளிடையே முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற இருக்கிறது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. அந்த வகையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் நடைபெற இருந்தது.

    போட்டி நடைபெறும் டர்பனில் மழை பெய்து வருவதால் டாஸ் மற்றும் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. 

    • உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்துவருகிறது.
    • கொல்கத்தாவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உலக கோப்பை தொடரின் 37-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. 

    • முதலில் ஆடிய இந்தியா 237 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 221 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    கவுகாத்தி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி அசாமின் கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை குவித்தது. சிறப்பாக தொடக்கம் கொடுத்த கே.எல்.ராகுல் 28 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். கேப்டன் ரோகித் சர்மா 43 ரன் அடித்தார்.

    அதிரடியில் மிரட்டிய சூரியகுமார் யாதவ் 22 பந்துகளில் 5சிக்சர், 5 பவுண்டரி உள்பட 61 ரன்கள் குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி 49 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 17 ரன் அடித்தார்.

    இதையடுத்து, 238 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடியது. கேப்டன் பவுமா, ரூசோவ் டக் அவுட்டாகினர். மார்கிராம் 33 ரன்னில் அவுட்டானார்.

    டி காக், டேவிட் மில்லர் பொறுமையுடன் ஆடினர். டி காக் அரை சதமடித்தார். டி காக் 69 ரன் எடுத்தார். டேவிட் மில்லர் சதமடித்து அசத்தினார். அவர் 106 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா ௧௬ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி 20 தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.

    • அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 22 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்
    • தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 57 ரன் அடித்தார்.

    கவுகாத்தி:

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. 


    இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் கே.என்.ராகுல் 28 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். கேப்டன் ரோகித் சர்மா 43 ரன் அடித்தார். அதிரடி காட்டிய சூரியகுமார் யாதவ் 22 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளும் அடங்கும்.

    அவருடன் ஜோடி சேர்ந்த விராத் கோலி 49 ரன் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 17 ரன் அடித்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை எடுத்தது. இதையடுத்து 238 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடுகிறது. 

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
    • முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    கவுகாத்தி:

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் திருவனந்தபுரத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றது.

    இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பாவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் .அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.

    • ஆடுகளம் 20 ஓவர்களுக்கும் உதவியதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
    • தொடக்கம் முதலே அர்ஷ்தீப் சிங், தீபக் சாகர் விக்கெட்களை எடுத்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளதாவது:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், ஆரம்பம் முதலே வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மற்றும் தீபக் சாகர் விக்கெட்களை எடுக்க ஆரம்பித்து விட்டனர். பவர்பிளேயின் போது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணிக்கு சாதகமாக மாற்றியது. விக்கெட் கடினமாக இருந்தது.

    இதுபோன்ற விளையாட்டை விளையாடுவதில் நீங்கள் நிறைய கற்றுக் கொள்கிறீர்கள். ஆடுகளம் 20 ஓவர்களுக்கும் உதவியதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக ஆடுகளம் இருக்கும் போது எப்படி பந்து வீச வேண்டும் என்பதற்கு இந்த போட்டி சரியான காட்சியாக இருந்தது.

    • முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் சேர்த்தது
    • கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ் இருவரும் கடைசி வரை நிலைத்து நின்று வெற்றியை உறுதி செய்தனர்

    திருவனந்தபுரம்:

    இந்தியா-தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. 9 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய தென் ஆப்பிரிக்கா பின்னர் ஒரு வழியாக 100 ரன்னை கடந்தது. 20 ஓவர் முடிவில 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேசவ் மகராஜ் 41 ரன்கள் சேர்த்தார்.

    இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தீபக் சாகர், ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். விராட் கோலி 3 ரன்னில் நடையை கட்டினார்.

    அதன்பின்னர் கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ் இருவரும், கடைசி வரை நிலைத்து நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர். சூரியகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும், கே.எல்.ராகுல் 51 ரன்களும் சேர்க்க, இந்தியா 20 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. 2 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் சேர்த்ததால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. 

    • முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து திணறியது
    • பார்னெல் 24 ரன்களும், கேசவ் மகராஜ் 41 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர்.

    திருவனந்தபுரம்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.

    டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. 9 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தன. கேப்டன் பவுமா, ரோசோ, டேவிட் மில்லர், ஸ்டப்ஸ் ஆகியோர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். 2வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    கேசவ் மகராஜ்

    கேசவ் மகராஜ்

    இதைத்தொடர்ந்து சற்றுநேரம் தாக்குப்பிடித்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு போக்கு காட்டிய மார்க்ராம், 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பார்னெல் 24 ரன்களும், கேசவ் மகராஜ் 41 ரன்களும் எடுத்து ஆறுதல் அளித்தனர். இதனால் அணியின் ஸ்கோர் 100ஐ தாண்டியது. ரபாடா 7, நோர்ட்ஜே 2 ரன்கள் சேர்க்க, தென் ஆப்பிரிக்க அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் சேர்த்தது.

    இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தீபக் சாகர், ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
    • சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி கைப்பற்றியதில்லை

    திருவனந்தபுரம்:

    இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

    சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி இதுவரை கைப்பற்றியதில்லை. எனவே, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைக்கும் முனைப்பில் களமிறங்குகிறது.

    ×