என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "infectious diseases"
திருவனந்தபுரம்:
பருவநிலை மாற்றத்தின் போது சில தொற்று நோய்கள் பரவுவது சகஜமான ஒன்று. ஆனால் கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. ஜனவரி மாதத்தில் இருந்தே அடுத்தடுத்து ஒவ்வொரு நோயாக பரவுகிறது.
நோய் பரவலை தடுக்க மாநில சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் ஏதாவது ஒரு நோய் பாதித்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பல்வேறு தொற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தொற்றக்கூடிய காய்ச்ச லால் 78, 718 பேரும், சளி தொல்லையால் 1,567 பேரும், சின்னம்மையால் 971 பேரும், டெங்கு காய்ச்சலால் 328 பேரும், மஞ்சள் காமாலையால் 294 பேரும், மலேரியாவால் 20 பேரும், எலி காய்ச்சலால் 70 பேரும், பன்றி காய்ச்சலால் 37 பேரும் பாதிக்கப்பட் டுள்ளனர்.
அது மட்டுமின்றி மேற்கு நைல் காய்ச்சலால் 9 பேரும், ஷிகெல்லா தொற்றால் 4 பேரும் பாதிக்கப்பட்டி ருக்கின்றனர். இவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். இது தவிர தனியார் ஆஸ்பத்திரி களிலும் பல்வேறு தொற்று நோய் பாதிப்புகளுக்கு உள்ளான ஆயிரக் கணக்கான சிகிச்சை பெறுகின்றனர்.
இவ்வாறு தொற்று நோய்கள் அதிக அளவில் பரவுவதற்கு மாநிலத்தில் வழக்கத்தை விட அதிகமாக நிலவிய வெப்பம் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்ேபாது மழை காரணமாக தொற்று காய்ச்சலால் ஏராள மானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தொற்றுநோய்களின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருப்பதால் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் நோயாளிகள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற தொடங்க உள்ளது.
இது தொற்று நோய்கள் பரவலை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. தொற்று நோய்கள் பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், தண்ணீரை காய்ச்சி குடிக்கு மாறும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
கேரளாவில் பரவி வரும் தொற்று நோய்கள் உயிர் பலியையும் ஏற்படுத்தி வருகிறது. கடந்த 5 மாதங்களில் எலி காய்ச்சலுக்கு 39 பேர், டெங்கு காய்ச்சலுக்கு 16 பேர், ஹைபடைடிஸ் ஏ மற்றும் பி தொற்று பாதிப்புக்கு 16 பேர், சின்னமைக்கு 10 பேர், மலேரியாவுக்கு 3 பேர், தொற்றக்கூடிய காய்ச்சலுக்கு 3 பேர் என 91 பேர் இறந்துள்ளனர். இது மக்கள் மத்தியில்அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரளாவில் அதிகரித்து வரும் தொற்று நோய்களில் பல எளிதில் பரவக்கூடியது என்பதால், தமிழகத்தில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் தமிழக சுகாதாரத்துறை கவனமாக இருக்கிறது. இதன் காரணமாக கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல ஆயிரம் பேர் வந்து செல்லும் பெரிய சந்தை ஆகும்.
- வாரசந்தையில் குவியும் கோழி கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சியில் வருவாய் இனங்களாக உள்ள வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் கூடுகிறது.
இங்கு தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல ஆயிரம் பேர் வந்து செல்லும் பெரிய சந்தை ஆகும்.
இந்நிலையில் சந்தைப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் கறிக்கோழி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதால் கடை வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால் வியாபாரிகளின் வருகை குறைந்து வருவாய் இழப்பு ஏற்படுவதால் .சந்தையை சுத்தப்படுத்த வேண்டுமென குத்தகைதாரர்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும் சந்தை பேட்டையில் உள்ள கழிவறை கட்டிடத்தில் இருந்து முறையற்ற மின்சார இணைப்பை கறி கோழி கடைகளுக்கு வழங்கி வருவதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர் .
இதுபற்றி வாரசந்தையின் குத்தகைதாரர் பெரியசாமி கூறுகையில், வாரச்சந்தை பகுதியில் குத்தகை காலம் முடிந்தும் இயங்கி வரும் கறிக்கோழி கடைகளுக்கு வழங்கப்பட்டு வரும் முறையற்ற மின்சார இணைப்பை துண்டித்து, கடைகளை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும். சந்தை பகுதி வளாகத்தை தூய்மை படுத்தி தொற்றுநோய் பரவாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் .
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்