என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "injection"
- பாதியாக உடைந்த ஊசியின் ஒரு பாகம் அவரின் வயிற்றில் சிக்கியுள்ளது.
- ஊசி உடைந்து வேறு எங்கோ விழுந்துவிட்டதாக அவர் அலட்சியமாக இருந்துள்ளார்.
பெண்ணின் வயிற்றுக்குள் 3 ஆண்டுகளாக இருந்த ஊசியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ள சம்பவம் நிகழ்ந்ததுள்ளது. டெல்லியைச் சேர்ந்த 49 வயதான ரம்பா தேவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வீட்டில் ஊசியை வைத்து துணி தைத்துக்கொண்டிருந்தபோது ஊசியை படுக்கையில் வைத்திவிட்டு எழுந்துள்ளார். பின் நிலை தடுமாறி படுக்கையில் இருந்த ஊசியில் மீது விழுந்துள்ளார்.
இதனால் பாதியாக உடைந்த ஊசியின் ஒரு பாகம் அவரின் வயிற்றில் சிக்கியுள்ளது. ஆனால் ஊசி உடைந்து வேறு எங்கோ விழுந்துவிட்டதாக அவர் அலட்சியமாக இருந்துள்ளார். ஊசி உள்ளே இறங்கும்போது அவரின் வயிற்றில் ஏற்பட்ட வலி, தவறி விழுந்ததால் ஏற்பட்டது என்று நினைத்துள்ளார்.
நாளாக நாளாக அவரின் இடுப்புப் பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. 3 வருடங்களாக வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் மருத்துவர்கள் அவரின் வயிற்றில் எக்ஸ்ரே எடுத்துப்பார்த்தபோது பாதி உடைந்த ஊசி உள்ளே இருத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் சிறிய பொருள் என்பதால் முதலில் வயிற்றுக்குள் ஊசி எந்த இடத்தில் இருக்கிறது என கண்டுபிடித்து அகற்றுவது சிக்கலான ஒரு வேலையாக இருந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதில் மருத்துவர்களுக்கு தயக்கம் இருந்தது.
இதன்பின்னர், சி-ஆர்எம் என்ற மேம்பட்ட எக்ஸ்ரே தொழில்நுட்ப இயந்திரம் மூலம் ஊசியை துல்லியமாகக் கண்டறிய பல எக்ஸ்ரேக்கள் எடுக்கப்பட்டு இறுதியாக, ஊசியைக் கண்டுபிடித்து அதை உடைக்காமல் ஒரே துண்டாகப் பிரித்தெடுத்தது இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். அறுவை சிகிச்சைக்குப் பின் ரம்பா தேவி நலமாக என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- உயிர் காக்கும் ஊசி மருந்துக்காக 9 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது
- இதில் பிரபல நடிகர், கிரிக்கெட் வீரர் முதல் காய்கறி விற்பனையாளர் வரை அனைவரும் அடக்கம்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் போலீஸ் எஸ்.ஐ. ஆக இருந்து வருபவர் நரேஷ் ஷர்மா. இவரது 2 வயதில் ஹிருதயான்ஷ் ஷர்மா என்ற மகன் உள்ளார்.
ஷர்மா ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி (எஸ்எம்ஏ) எனப்படும் அரிய மரபணு கோளாறால் பாதிப்பு அடைந்துள்ளார். இதற்கு ஒற்றை டோஸ் மரபணு சிகிச்சை ஊசி மூலம் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். இந்த மருந்தின் விலை ரூ.17. கோடி. இது உலகின் மிக விலை உயர்ந்த மருந்துகளில் ஒன்றாகும்.
ஷர்மா இடுப்பிற்குக் கீழே உள்ள அனைத்து உடல் செயல்பாடுகளையும் கிட்டத்தட்ட இழந்திருந்தான். ஊசி போடப்படுவதற்கு முன் அவனால் இயல்பான வாழ்க்கையை நடத்தமுடியும் என்பதை உறுதிப்படுத்தினர்.
ஜெய்ப்பூரில் உள்ள ஜே.கே.லோன் மருத்துவமனையில் 3 மாதத்துக்குள் ₹9 கோடி திரட்டப்பட்டு, ஹிருதயன்ஷுக்கு ஊசி போடப்பட்டது. மீதமுள்ள தொகையை ஒரு வருடத்திற்குள் 3 முறை செலுத்தவேண்டும்.
பிரபல நடிகர், கிரிக்கெட் வீரர் முதல் காய்கறி விற்பனையாளர் வரையிலான பலரது முயற்சியால் நிதி திரட்டப்பட்டது.
பிரபல நடிகர் சோனு சூட் மற்றும் கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் ஆகியோர் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்தனர். ஜெய்ப்பூரில் பழம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பழங்களை விற்பவர்கள் உள்பட அனைத்து இனத்தைச் சேர்ந்த தனிநபர்களும் நிதி திரட்டுவதில் பங்களித்தனர். பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக குழுக்கள் பிரசாரத்திற்காக நிதி திரட்ட உதவியது.
மாநில காவல்துறை பணியாளர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான 5 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர். ராஜஸ்தானில் இதுபோன்று நிதி திரட்டப்படுவது முதல் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
- அந்தியூரில் போதை மாத்திரை, ஊசி பயன்படுத்திய வழக்கில் தலைமறைவாக இருக்கும் 2 பேரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்
- மேலும் இது குறித்து போலீசார் விசார ணை மேற்கொண்டு வருகி ன்றனர்.
அந்தியூர்,
அந்தியூர் அருகே சண்டி ப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள மயான த்தில் 7 பேர் கொண்ட கும்பல் போதை ஊசி, போதை மாத்திரை போ ட்டுக் கொண்டிருந்தனர். அதில் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். பின்னர் போலீசார் பிடி பட்டவர்களை அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழை த்து சென்றனர். விசாரணை யில் அவர்கள் அதே பகுதி யைச் சேர்ந்த மகாதேவன், ரூபேஷ், மகேஸ்வரன், வெ ங்கடேசன், சவுந்தர் ஆகியோ ர் என தெரியவந்தது.
இவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து போதை ஊசி, போதை மாத்திரை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பி லான போதை ஊசி, மாத்தி ரையை போலீசார் பறிமு தல் செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் பாலாஜி, திருமூர்த்தி ஆகி யோரை பிடிக்க இன்ஸ்பெ க்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். தலைமறை வாக இருக்கும் 2 பேரை பிடித்தால் தான் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரி யவரும் என போலீசார் தரப்பில் தெரிவித்து ள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் விசார ணை மேற்கொண்டு வருகி ன்றனர்.
- தனி படை போலீசார் அதிரடியாக அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்
- சூர்யா மற்றும் கிடங்கல் 2 பகுதியைச் சேர்ந்த பொற்செல்வன் ஆகியோர் போதை மாத்திரை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
விழுப்புரம்:
திண்டிவனத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போதை ஊசி,போதை மாத்திரை பயன்படுத்துவதாகவும் விற்பனையில் ஈடுபடுவதாகவும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திண்டிவனம் டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீசார் போதை மாத்திரைகளை பயன்படுத்துவர்கள் மற்றும் விற்பவர்களை ரகசிய தகவலின் பேரில் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் திண்டிவனம் சின்ன முதலி தெருவில் சூர்யா என்பவர் வீட்டில் போதை மாத்திரை விற்பனை செய்வதாகவும் மற்றும் பயன்படுத்தி வருவதாகவும் சுடி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தனி படை போலீசார் அதிரடியாக அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது சூர்யா மற்றும் கிடங்கல் 2 பகுதியைச் சேர்ந்த பொற்செல்வன் ஆகியோர் போதை மாத்திரை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.அவர்களை பிடிக்க முற்பட்டபோது பொற்செல்வன் அங்கிருந்து தப்பி ஓடி அருகே உள்ள வீட்டில் மறைந்து கொண்டான் . ஆனாலும் போலீசார் அவனை மடக்கி பிடித்தனர். பொற்செல்வன் மற்றும் சூர்யாவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று அவர்களிடம் இருந்த போதை மாத்திரை ,போதை ஊசியை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியன் கூறும் போது, திண்டிவனம் உட்கோட்ட பகுதியில் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் பயன்படுத்தினாலோ, விற்றாலோ,அதற்கு துணை போனாலும் யாராக இருந்தாலும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .மேலும் பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை தெரிவித்தால் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்