search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "injured in accident"

    • பிரசாந்த் (வயது 29). இவர் பவானியில் ஸ்டேட் வங்கியில் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
    • லாரியை முந்தி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், கலையரசன் முன்னால் வேகமாக வந்தார். அப்போது எதிர்பா ராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    குமாரபாளையம்:

    பள்ளிபாளையம் அக்ர ஹாரம் பகுதியில் வசிப்பவர் பிரசாந்த் (வயது 29). இவர் பவானியில் ஸ்டேட் வங்கி யில் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 12-ந் தேதி பணி முடிந்து இரவில் தனது மோட்டார் சைக்கி ளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

    அதே நேரம், எதிர் திசை யில் சித்தோடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கலையரசன்(22) மோட்டார்சைக்கிளில் வந்தார். அவருக்கு முன்னால் ஒரு லாரி வந்தது. லாரியை முந்தி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், கலையர சன் முன்னால் வேகமாக வந்தார். அப்போது எதிர்பா ராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பிரசாந்த், கலையரசன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்த னர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனும திக்கப்பட்டடு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது பற்றி குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • தீபாவளிக்கு துணி எடுப்பதற்காக சித்தோடு அடுத்த கங்காபுரம் பகுதிக்கு ேமாடடார் சைக்கிளில் தனது மகனுடன் சென்றார்.
    • இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பவானி:

    பவானி மூன் ரோடு கொங்கு நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவரது மனைவி பிரியா (42). இவர்களது மகன் சஞ்சூதீப் (13). பிரியா சின்ன பெரிச்சி பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவர் தீபாவளிக்கு துணி எடுப்பதற்காக சித்தோடு அடுத்த கங்காபுரம் பகுதிக்கு ேமாடடார் சைக்கிளில் தனது மகனுடன் சென்றார்.

    அவர்கள் சித்தோடு செல்லப்பம்பாளையம் பிரிவு ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தாய்-மகன் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பவானி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சை க்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அதேபோல் பவானி, ஜம்பை, சின்ன வடமலை பாளையம் ஆலமரத்து வீதியை சேர்ந்தவர் ஆறு முகம் (46). டைலர். இவர் தனது நண்பர் பூவேந்திரன் என்பவருடன் மொபட்டில் பவானி அடுத்த லட்சுமி நகர் பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மொபட் மீது எதிர்பாராவிதமாக மோதியது. இதில் ஆறுமுகம் மற்றும் பூவேந்திரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பவானி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வரு கிறார்கள்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×