என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "INS Vikrant"
- கோவாவில் உள்ள கடற்படை விமான தளமான ஹன்சாவுக்கு வருகை தந்தார்.
- கப்பலில் இருந்தவாறு கடற்படை பணிகள் அனைத்தையும் பார்வையிட்டார்.
இந்திய கடற்படை வரலாற்றில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பல் கடந்த 2022-ம் ஆண்டு நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ரூ.20 கோடி செலவில் இந்த கப்பல் அதிநவீன ஆட்டோமெடிக் அம்சங்களுடன் கட்டப்பட்டது. சுமார் 262.5 மீட்டர் நீளமும், 61.6 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பல் 43 ஆயிரம் டன் எடை கொண்டது. இதுவரை கட்டப்பட்ட கப்பல்களில் இதுதான் மிகப்பெரிய கடற்படை கப்பலாகும்.
இது 75 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரானது. இந்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட சிறு,குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உருவாக்கிய எந்திரங்கள், உபகரணங்கள் மூலம் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டது.
இந்த போர்க்கப்பலில் மிக் 29 கே. ரக போர் விமானம், கமோல் 31 ரக ஹெலிகாப்டர்கள், எம்.எச்.60 ஆர். மல்டி போர் ஹெலிகாப்டர் மற்றும் உள்நாட்டு தயாரிப்பான இலகு ரக ஹெலிகாப்டர்கள் உள்பட 30 விமானங்கள் நிறுத்தி வைக்கலாம்.
அதி நவீன வசதிகளுடன் உருவான ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்கப்பலில் நீர் மூழ்கி கப்பல் பயிற்சிகள், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் புறப்படுதல், தரை இறங்குதல் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளது.
இந்த கப்பலில் 2,200 பெட்டிகள் உள்ளது. பெண் அதிகாரிகள், மாலுமிகள், பணியாளர்கள் உள்ளிட்ட 1,600 பேர் இந்த கப்பலில் தங்கி கொள்ளலாம். அவர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் இக்கப்பலில் உள்ளது.
இந்திய கடற்படையில் ஒரு மைல்கல்லாக திகழும் ஐ.என்.எஸ் விக்ராந்த் போர் கப்பலில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்காக அவர் இன்று கோவாவில் உள்ள கடற்படை விமான தளமான ஹன்சாவுக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜனாதிபதி முர்முவை கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். பின்னர் கோவா கடற்கரையில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு போர்க்கப்பலில் பயணம் செய்தார். ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு அவர் முதன் முறையாக போர் கப்பலில் பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கப்பலில் இருந்தவாறு கடற்படை பணிகள் அனைத்தையும் பார்வையிட்டார். கப்பலின் செயல்பாடுகள், சிறப்பு அம்சங்கள் குறித்து கடற்படை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
#WATCH | President of India, Droupadi Murmu embarked on the Indigenous aircraft carrier INS Vikrant today and witnessed the full spectrum of the Indian Navy's multi-domain operations at the Arabian Sea off Goa Coast pic.twitter.com/we5GiVEpUY
— ANI (@ANI) November 7, 2024
- கப்பலில் பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த சுசாந்த்குமார் என்பவர் கடற்படை மாலுமியாக இருந்தார்.
- சுசாந்த்குமார் தற்கொலை குறித்து எர்ணாகுளம் டவுன் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதிந்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
இந்திய கப்பற்கடைக்கு சொந்தமான விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த சுசாந்த்குமார்(வயது19) என்பவர் கடற்படை மாலுமியாக இருந்தார். இந்நிலையில் அவர் அங்கு தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து தகவலறிந்த கடற்படை அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தனர். சுசாந்த்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை.
இது தொடர்பாக கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சுசாந்த்குமார் தற்கொலை குறித்து எர்ணாகுளம் டவுன் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதிந்துள்ளனர்.
- முதற்கட்ட விசாரணையில், இது ஒரு தற்கொலை வழக்காகத் தெரிகிறது.
- சம்பவம் குறித்து உள்ளூர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற விமானம் தாங்கி கப்பலில் இன்று அதிகாலையில் 19 வயது இந்திய கடற்படை மாலுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், இது ஒரு தற்கொலை வழக்காகத் தெரிகிறது.
சம்பவம் குறித்து உள்ளூர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பூர்வ விசாரணைக் குழுவிற்கு உத்தரவிடப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
- இரவு நேர லேண்டிங் சோதனையை வெற்றிகரமாக முடித்த கடற்படையினரை பாதுகாப்புத்துறை மந்திரி பாராட்டி உள்ளார்.
- கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி கடற்படைக்கு அர்ப்பணித்தார்.
புதுடெல்லி:
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில், மிக்-29கே ரக போர் விமானம் முதல் முறையாக இரவு நேரத்தில் தரையிறங்கியது. இது வரலாற்று மைல்கல் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று இரவு அரபிக்கடலில் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் போர்க்கப்பலில் விமானத்தை தரையிறக்குவது சவாலான விஷயம், இந்த சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டிருப்பது, ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் பணியாளர்கள் மற்றும் கடற்படை விமானிகளின் மன உறுதி, திறமையை நிரூபித்திருப்பதாக கடற்படை கூறியுள்ளது.
இதுதொடர்பாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், ஐஎன்எஸ் விக்ராந்தில் மிக்-29கே விமானத்தை முதல்முறையாக இரவு நேரத்தில் தரையிறக்கியதன் மூலம் இந்திய கடற்படை மற்றொரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. இது தன்னம்பிக்கையை நோக்கிய கடற்படையின் உத்வேகத்தை குறிக்கிறது, என்றார்.
இரவு நேர லேண்டிங் சோதனையை வெற்றிகரமாக முடித்த கடற்படையினரை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார்.
#IndianNavy achieves another historic milestone by undertaking maiden night landing of MiG-29K on @IN_R11Vikrant indicative of the Navy's impetus towards #aatmanirbharta.#AatmaNirbharBharat@PMOIndia @DefenceMinIndia pic.twitter.com/HUAvYBCnTH
— SpokespersonNavy (@indiannavy) May 25, 2023
விக்ராந்த் கப்பலில் போர் விமானம் தரையிறங்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவை கடற்படை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பான ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் மோடி கடற்படைக்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் 40,000 டன் எடை கொண்ட விமானந்தாங்கி கப்பல்களை தயாரிக்கும் திறன் கொண்ட நாடுகளின் உயரடுக்கு குழுவில் இந்தியாவும் இணைந்தது.
- இந்தியா முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது.
- ஐ.என்.எஸ். விக்ராந்த் மூலம் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா தன்னை சேர்த்துக்கொண்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியா முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது.
இந்த ஆற்றலை கொண்டுள்ள பிற நாடுகள் என்று பார்த்தால் அவை, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, சீனா, பிரான்ஸ் ஆகும். இந்த 5 நாடுகளும் வல்லரசு நாடுகள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகள் ஆகும்.
இந்தியாவும் உள்நாட்டில் விமானம்தாங்கி போர்க்கப்பலை வடிவமைத்து கட்டியதின் மூலம் இந்த வளர்ந்த நாடுகளின் பட்டியலில் தன்னை சேர்த்துக்கொண்டுள்ளது.
- ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலை பொறுத்தமட்டில் மோடி அரசு எதுவும் செய்தது இல்லை
- மோடி அரசு செய்தது, நாட்டுக்கு அர்ப்பணித்ததும், அதற்கான பெயரைத்தட்டிச்சென்றதும்தான்.
புதுடெல்லி:
இந்தியாவில் முற்றிலும் வடிவமைத்து கட்டப்பட்டுள்ள விமானம் தாங்கி போர்க்கப்பல், ஐ.என்.எஸ். விக்ராந்தை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்து பேசினார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-
இந்த கப்பலை பொறுத்தமட்டில் மோடி அரசு எதுவும் செய்தது இல்லை. இந்த கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த நேரத்தில் மோடி அரசு ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. உள்ளபடியே சொல்வதென்றால், பல்லாண்டுகளுக்கு முன்னர் (காங்கிரஸ் கட்சியின்) ஏ.கே.அந்தோணி ராணுவ மந்திரியாக இருந்தபோதுதான் இந்த கப்பல் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். இதை வடிவமைத்து, கட்டி, வெள்ளோட்டம் விட்டு, வெளியிட்டு, இன்று கடைசியாக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மோடி அரசு செய்தது, நாட்டுக்கு அர்ப்பணித்ததும், அதற்கான பெயரைத்தட்டிச்சென்றதும்தான். ஐ.என்.எஸ். விக்ராந்த் முந்தைய அரசுகளின் கூட்டு முயற்சி ஆகும்.
எனவே இது தற்போதைய பிரதமருக்கு வழக்கமாகிவிட்ட கபட நாடகம். இந்த கப்பலுக்கான பெயர், முந்தைய அரசுகளுக்கும், இந்திய கடற்படைக்கும், விஞ்ஞானிகளுக்கும், கப்பல் கட்டும் தளத்தில் உள்ள என்ஜினீயர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் சேர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 15 அடுக்குகள் கொண்ட இந்த கப்பலில் 2,500 அறைகள் உள்ளன.
- 30 விமானப்படை விமானங்களுடன் பயணிக்க கூடிய வல்லமை இந்த போர்க்கப்பலில் உள்ளது.
முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த பிரமாண்டமான போர்க்கப்பலின் தொடக்க விழா கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்றது.
ரூ.20 ஆயிரம் கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த போர்க்கப்பலை பி.எச்.இ.எல். மற்றும் எல்.என்.டி. உள்ளிட்ட சுமார் 500 இந்திய நிறுவனங்கள் ஒருங்கிணைந்து உருவாக்கி உள்ளன. இந்த கப்பல் இந்திய கடற்படைக்கு மேலும் பலத்தை கூட்டுவதாக அமைந்துள்ளது. மேலும் இந்து மகா சமுத்திரத்தில் இந்திய கடற்படைக்கு வலுசேர்த்து கடல் எல்லைகளை காக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போர்க்கப்பலின் நீளம் 262 மீட்டர்கள் ஆகும். அகலம் 62 மீட்டர்கள் ஆகும். 59 மீட்டர் உயரம் கொண்ட இந்த போர்க்கப்பல் 45 ஆயிரம் டன் எடையை தாங்கும். மேலும் 7,500 நாட்டிக்கல் மைல் வரை தொடர்ந்து பயணிக்கும் வல்லமை கொண்டது. 15 அடுக்குகள் கொண்ட இந்த கப்பலில் 2,500 அறைகள் உள்ளன.
அதில் பெண் அதிகாரிகளுக்கு என்று தனித்தனி கேபின்கள் உள்ளன. இந்த கப்பலில் இருந்து மிக் 29 கே போர்விமானங்கள், கமோவ் 31 ஹெலிகாப்டர்கள், எம்.எச்.-60, ஆர் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை இயக்கவும், தரையிறக்கவும் முடியும். மேலும் 30 விமானப்படை விமானங்களுடன் பயணிக்க கூடிய வல்லமை இந்த போர்க்கப்பலில் உள்ளது.
இதன் அதிகபட்ச வேகம் 28 நாட் ஆகும். 1,700 வீரர்கள் பயணிக்கும்படியாக உருவாகி உள்ள இந்த கப்பலில் 2 அறுவை சிகிச்சை அறைகள், 16 படுக்கைள், பரிசோதனை மையங்கள், சி.டி.ஸ்கேன் வசதி என மினி மருத்துவமனையே இடம் பெற்றுள்ளது. மருத்துவபணிக்காக மட்டும் 5 மருத்துவ அதிகாரிகள் உள்பட 21 மருத்துவ பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டன.
ஈபிள் கோபுரம் கட்டுவதற்கு உபயோகிக்கப்பட்டுள்ள இரும்புகளை விட நான்கு மடங்கு இரும்புகள் விக்ராந்த் போர்க்கப்பல் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கப்பலில் 2,400 கிலோமீட்டர் அளவிற்கு நீளமுள்ள கேபிள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு சிறிய நகரத்திற்கு தேவையான மின்சாரத்தை உருவாக்கும் திறன் இந்த கப்பலுக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலின் முதலாவது சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர், கடந்த ஜனவரி, ஜூலை மாதம் என மொத்தம் 4 சோதனை ஓட்டங்கள் நடைபெற்ற நிலையில் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- விக்ராந்த் போர்க்கப்பலை, கடற்படையில் இணைத்து வைக்கிறார்.
- புதிய கடற்படை கொடியை பிரதமர் அறிமுகம் செய்கிறார்.
நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி கேரளா மாநிலம் கொச்சிக்கு வருகை தருகிறார். அதன் அருகே உள்ள ஸ்ரீ ஆதிசங்கரர் அவதரித்த காலடி கிராமத்திற்கு பிரதமர் செல்கிறார்.
செப்டம்பர் இரண்டாம் தேதி காலை 9:30 மணிக்கு கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில், முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை கடற்படையில் இணைத்து வைக்கிறார். '
தொடர்ந்து புதிய கடற்படை கொடியை பிரதமர் அறிமுகப்படுத்த உள்ளார் இதன் பின்னர் மதியம் 1:30 மணிக்கு கர்நாடகா மாநிலம் மங்களூருவில் ரூ. 3800 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை திறந்து வைக்கும் பிரதமர், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
- 1,700 வீரர்கள் பயணிக்கும்படியாக உருவாகி உள்ள இந்த கப்பலில் 2 அறுவை சிகிச்சை அறைகள், 16 படுக்கைள், பரிசோதனை மையங்கள், சி.டி.ஸ்கேன் வசதி என மினி மருத்துவமனையே இடம் பெற்றுள்ளது.
- மருத்துவபணிக்காக மட்டும் 5 மருத்துவ அதிகாரிகள் உள்பட 21 மருத்துவ பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டன.
புதுடெல்லி:
முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.விக்ராந்த் கப்பலை வருகிற 2-ந் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த பிரமாண்டமான போர்க்கப்பலில் தொடக்க விழா 2-ந் தேதி கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நடைபெறுகிறது.
அன்றைய தினம் கடற்படையில் இணைய உள்ள ஐ.என்.எக்ஸ்.விக்ராந்த் கப்பலில் ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன.
ரூ.20 ஆயிரம் கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த போர்க்கப்பலை பி.எச்.இ.எல். மற்றும் எல்.என்.டி. உள்ளிட்ட சுமார் 500 இந்திய நிறுவனங்கள் ஒருங்கிணைந்து உருவாக்கி உள்ளன.
இந்த கப்பல் இந்திய கடற்படைக்கு மேலும் பலத்தை கூட்டுவதாக அமைந்துள்ளது. மேலும் இந்து மகா சமுத்திரத்தில் இந்திய கடற்படைக்கு வலுசேர்த்து கடல் எல்லைகளை காக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போர்க்கப்பலின் நீளம் 262 மீட்டர்கள் ஆகும். அகலம் 62 மீட்டர்கள் ஆகும். 59 மீட்டர் உயரம் கொண்ட இந்த போர்க்கப்பல் 45 ஆயிரம் டன் எடையை தாங்கும். மேலும் 7,500 நாட்டிக்கல் மைல் வரை தொடர்ந்து பயணிக்கும் வல்லமை கொண்டது.
15 அடுக்குகள் கொண்ட இந்த கப்பலில் 2,500 அறைகள் உள்ளன. அதில் பெண் அதிகாரிகளுக்கு என்று தனித்தனி கேபின்கள் உள்ளன.
இந்த கப்பலில் இருந்து மிக் 29 கே போர்விமானங்கள், கமோவ் 31 ஹெலிகாப்டர்கள், எம்.எச்.-60, ஆர் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை இயக்கவும், தரையிறக்கவும் முடியும்.
மேலும் 30 விமானப்படை விமானங்களுடன் பயணிக்க கூடிய வல்லமை இந்த போர்க்கப்பலில் உள்ளது. இதன் அதிகபட்ச வேகம் 28 நாட் ஆகும்.
1,700 வீரர்கள் பயணிக்கும்படியாக உருவாகி உள்ள இந்த கப்பலில் 2 அறுவை சிகிச்சை அறைகள், 16 படுக்கைள், பரிசோதனை மையங்கள், சி.டி.ஸ்கேன் வசதி என மினி மருத்துவமனையே இடம் பெற்றுள்ளது. மருத்துவபணிக்காக மட்டும் 5 மருத்துவ அதிகாரிகள் உள்பட 21 மருத்துவ பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டன.
ஈபிள் கோபுரம் கட்டுவதற்கு உபயோகிக்கப்பட்டுள்ள இரும்புகளை விட நான்கு மடங்கு இரும்புகள் விக்ராந்த் போர்க்கப்பல் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கப்பலில் 2,400 கிலோமீட்டர் அளவிற்கு நீளமுள்ள கேபிள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சிறிய நகரத்திற்கு தேவையான மின்சாரத்தை உருவாக்கும் திறன் இந்த கப்பலுக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலின் முதலாவது சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்நடைபெற்றது. அதன்பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர், கடந்த ஜனவரி, ஜூலை மாதம் என மொத்தம் 4 சோதனை ஓட்டங்கள் நடைபெற்ற நிலையில் வருகிற 2-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
- செப்டம்பர் 2-ந்தேதி கடற்படையில் இணைய இருக்கும் ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் 1700 வீரர்கள் பயணம் செய்யலாம்.
- கப்பலின் மேல் தளத்தில் மிக் 29 ரக விமானங்கள், காமோவ் 31 ரக ஹெலிகாப்டர்கள், எம்.எச்,60 ஆர் ரக ஹெலிகாப்டர்கள் இறங்கவும், பறந்து செல்லவும் வசதிகள் உள்ளது.
திருவனந்தபுரம்:
இந்திய கடற்படைக்கு ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர் கப்பல் கட்டப்பட்டு உள்ளது.
ரூ.20 ஆயிரம் கோடி செலவில் முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே இந்த போர்கப்பல் தயாரிக்கப்பட்டது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இதற்கான கட்டுமான பணிகள் நடந்து வந்தது.
கப்பல் கட்டும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதன் 4-வது மற்றும் இறுதி கட்ட சோதனை ஓட்டம் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி நடைபெற்றது.
சோதனை ஓட்டத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இக்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி செப்டம்பர் 2-ந்தேதி நடக்கிறது. கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இதற்கான விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று போர் கப்பல் ஐ.என்.எஸ். விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கொச்சி கடற்படை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
செப்டம்பர் 2-ந்தேதி கடற்படையில் இணைய இருக்கும் ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் 1700 வீரர்கள் பயணம் செய்யலாம்.
கப்பலின் மேல் தளத்தில் மிக் 29 ரக விமானங்கள், காமோவ் 31 ரக ஹெலிகாப்டர்கள், எம்.எச்,60 ஆர் ரக ஹெலிகாப்டர்கள் இறங்கவும், பறந்து செல்லவும் வசதிகள் உள்ளது. மேலும் கடற்படை வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரியும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கப்பல் செயல்பாட்டுக்கு வந்ததும் இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் கடலோர பாதுகாப்பு வலுப்படும். மேலும் கடல் கண்காணிப்பும் அதிகரிக்கும்.
மேலும் விமானம் தாங்கி கப்பலை உள்நாட்டிலேயே தயாரிக்கும் வலிமை கொண்ட நாடுகள் பட்டியலில் இதன்மூலம் இந்தியாவும் இணைந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்