search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inspections"

    • காற்றில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மை, வாயுக்களின் தரம் அறியும் இயந்திரம் கொண்டு சோதனை.
    • பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டத்திற்கு அழைக்காததால் அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை திருவொற்றியூர் கிராமத்தெருவில் தனியாருக்கு சொந்தமான விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளி கட்டிடத்தின் 3-வது தளத்தில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். அதற்கு எதிர் தளத்தில் ஆய்வுக்கூடமும் உள்ளது.

    கடந்த மாதம் 26-ந் தேதி இந்த ஆய்வுக்கூடத்தில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் வகுப்பறையில் இருந்த 45 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. சில மாணவிகள் வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இதனால் கடந்த 1 வாரமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளியில் உள்ள ஆய்வுக்கூடத்தை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் தற்போது வரை ஆய்வுக்கூடத்தில் ரசாயன வாயுகசிவு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

    தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. ஆனால் ரசாயன வாயுகசிவு குறித்து மாவட்ட கல்வி துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறையிடமிருந்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் ஏதும் கூறவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது திடீரென்று 9 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். மீண்டும் பள்ளியில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதால் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் அலறி அடித்துக்கொண்டு தங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றனர். மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் எல்லையம்மன் கோவில் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர், தாசில்தார் சகாயராணி, திருவொற்றியூர் மண்டல அதிகாரி புருஷோத்தமன், மருத்துவத்துறை அதிகாரிகள் உடனடியாக பள்ளிக்கு வந்தனர். மாநகராட்சி வடக்கு வட்டாரத் துணை கமிஷனர் ரவிகட்டா தேஜா அதிகாரிகளுடன் பள்ளியை ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில் தனியார் பள்ளியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து இன்று 3-வது நாளாக சோதனை நடத்தினர்.

    காற்றில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மை, வாயுக்களின் தரம் அறியும் இயந்திரம் கொண்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சோதனை நடத்தினர்.

    இதற்கிடையே, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை, பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு கூட்டத்திற்கு அழைக்காததால் அவர்கள் நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மேட்டுப்பாளையம் தி.மு.க நகர செயலாளர் ஆலோசனை பேரில் சத்துணவு முட்டைகளை வைத்திருந்ததாக தகவல்
    • பள்ளி கட்டிடத்தின் ஏதேனும் ஒரு இடத்தில் வைத்து முட்டைகளை விநியோகிக்க அறிவுறுத்தல்

     மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். ஆட்டோ டிரைவர்.

    இவரது வீட்டின் அருகில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சத்துணவு முட்டைகளை வாங்கி வைத்துள்ளதாகவும், இதனை ஆட்டோவில் எடுத்து சென்று கடைகளில் விற்பனை செய்வதாக சுற்று வட்டார பொதுமக்கள் சார்பில் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது பால்ராஜ் காலியாக உள்ள தனது பக்கத்து வீட்டில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சத்துணவு முட்டைகளை அட்டை, அட்டையாக பதுக்கி வைத்திருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    தொடர்ந்து பால்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மேட்டுப்பாளையம் தி.மு.க நகர செயலாளர் முகமது யூனுஸ் ஆலோசனையின் பேரில் சத்துணவு முட்டைகளை வைத்திருந்ததாக கூறினார்.

    அதன்பின் சம்பவ இடத்திற்கு தி.மு.க நகர செயலாளர் முகமது யூனுஸ் வந்து போலீசாரிடம் மேட்டுப்பாளையம் நகரப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக முட்டைகள் இங்கு வைத்துள்ளோம்.

    அரசு பள்ளிகளில் இந்த முட்டைகளை வைப்பதற்கு போதிய இடவசதி இல்லாததால் இவரது வீட்டின் அருகில் வைத்து பள்ளிகளுக்கு விநியோகம் செய்ததாக கூறினார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் அரசு பள்ளியின் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய சத்துணவு முட்டைகளை தனியார் கட்டிடத்தில் வைக்க அனுமதி இல்லை.

    எனவே தாசில்தாரிடமோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமோ உரிய அனுமதி சீட்டு பெற்று முட்டைகள் வைத்திருந்த வீட்டின் முன்பு நோட்டீஸ் ஒட்ட வேண்டும். அல்லது பள்ளி கட்டிடத்தின் ஏதேனும் ஒரு இடத்தில் வைத்து முட்டைகளை விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தி சென்றார். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மதுரையில் பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழை பொழி வின் போது மேற்கொள்ளப் பட வேண்டிய முன்னேற் பாடுகள் தொடர்பாகவும், இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள் தொடர் பாகவும் அனைத்துத் துறை அலுவர்களுடன் கலெக்டர் சங்கீதா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-

    தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநக ராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் நீரோட்ட பாதைகளை சரி செய்து தும்புகளில் சேர்ந்துள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்,

    இடியும் நிலை யில் உள்ள கட்டிடங்கள், சேதமடைந்த கட்டிடங்களின் அருகே பொது மக்கள் அணுகாத வண்ணம் தேவை யான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இடியும் நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றிட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் துறை வாரியாக சிறப்பு குழுக்கள், சிறப்பு பணிகள் ஏற்படுத்தவும், மீட்பு வாகனங்கள் மற்றும் மீட்பு கருவிகள் தயார் நிலை யில் வைத்திருக்கவும், மழை யினால் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுக்காப்பான இடங்களில் தங்கும் வைக்கும் சிறப்பு முகாம்களில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளனவா என்று ஆய்வு செய்யவும், மலேரியா/டெங்கு காய்ச்சல் முதலிய பருவகால நோய்கள் பரவாத வண்ணம் தேவை யான முன்னெசரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

    தனியார் மருத்துவமனை கள் பட்டியல் மற்றும் அம்மருத்துவமனையில் உள்ள மருந்து வகைகள் மற்றும் இதர வசதி விபரம் அடங்கிய பதிவேடு பரா மரிக்கப்பட வேண்டும். கன மழையில் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்றிடவும், வெள்ளத்தினால் ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்க வும் 24 x 7 கால அளவிலும் தயார் நிலையில் இருக்க தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கும், கடந்த மழைக்காலங்களில் ஏற்கனவே பாதிப்படைந்த பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது,

    இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் காலத்தில், அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×