search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Installment"

    • ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான தவணைத் தொகையை பெற பி.எம் கிசான் இணையதளத்தில் ஆதார் தகவல்களை பதிவேற்றம் செய்தால் மட்டுமே தவணை தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    • விவசாயிகள் பொது இ-சேவை மையத்தில், கணினி உபகரணத்தில் கைவிரல் ரேகை வைத்து பி.எம். கிசான் இணையதளம் சென்று தங்களுடைய விவரங்களை நிறைவு செய்ய வேண்டும்

    மேட்டூர்:

    விவசாயிகள் ஆதார் எண் அடிப்படையில் விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் வாங்க மத்திய அரசு ஆண்டுதோறும் 3 தவணையாக ரூ.6000 உதவித்தொகை வழங்குகிறது.

    இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான தவணைத் தொகையை பெற பி.எம் கிசான் இணையதளத்தில் ஆதார் தகவல்களை பதிவேற்றம் செய்தால் மட்டுமே தவணை தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    எனவே விவசாயிகள் பொது இ-சேவை மையத்தில், கணினி உபகரணத்தில் கைவிரல் ரேகை வைத்து பி.எம். கிசான் இணையதளம் சென்று தங்களுடைய விவரங்களை நிறைவு செய்ய வேண்டும்.

    மேலும் இது குறித்து விவரங்களை பெற வட்டார வேளாண் விரிவாக்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கொளத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜகோபால் தெரிவித்து உள்ளார்.

    • 7ஆண்டுக்கு முன் கோவை தனியார் வங்கி கிளையில் வீட்டு கடன் வாங்கி இருந்தார்.
    • ரத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூரை சேர்ந்தவர் மாணிக்கம்( வயது 47) . தனியார் வங்கி ஊழியர். இவர் கடந்த 7ஆண்டுக்கு முன் கோவை தனியார் வங்கி கிளையில் வீட்டு கடன் வாங்கி இருந்தார். இதற்கான மாத தவணை கடந்த மாதமாக சில செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் அந்த வங்கி கிளை சார்பில் தவணை தொகையை வசூல் செய்ய நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் என்பவர் மாணிக்கத்தின் வீட்டுக்கு வந்துள்ளார். அவருடன் வாக்கு வாதம் செய்து தகராறில் ஈடுபட்ட மாணிக்கம் கட்டையால் அவரது தலையில் தாக்கினார். இதில் தலையில் ரத்த காயம் அடைந்த நிலையில் சிவராமகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சிவராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் மாணிக்கத்தை கைது செய்து பல்லடம் போலீசார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

    • மகளிர் குழுக்களுக்கு ரூ.186 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
    • 3 கிராமங்களைச் சேர்ந்த குழுக்களுக்கு விருதுகளும், பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கருப்பூர், கவ்டெசி தொண்டு நிறுவனத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மகளிர் குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் விழா மற்றும் சிறந்த மகளிர் குழுக்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தமிழ்நாடுமண்டல ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

    சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட 25 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ 1.50 கோடி வங்கி கடனுதவிகளை வழங்கி பேசும்போது கடந்த 10 ஆண்டுகளாக கவ்டெசி தொண்டு நிறுவன வழிகாட்டுதலோடு செயல்பட்டு வரும் மகளிர் குழுக்களுக்கு ரூ.186 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    தவணை தொகையும் முறையாக செலுத்தப்பட்டு வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்.

    நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் அனிஷ்குமார், தஞ்சை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக உதவி பேராசியர் மற்றும் தலைவர் ஜெகதீசன், ஐசிஐசிஐ வங்கி அதிகாரிகள் சீனிவாசன், சாமிநாதன், எழில் இளங்கோ, லோகேஷ்குமார், கவ்டெசி தொண்டு நிறுவன செயலாளர் மற்றும் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கருணாமூர்த்தி கலந்து கொண்டனர்.

    முன்னதாக கவ்டெசி தொண்டு நிறுவனத்தின் தலைவர் மாவடியான் வரவேற்றார்.

    இவ்விழாவில் சிறப்பாக செயல்பட்ட 3 கிராமங்களைச் சேர்ந்த குழுக்களுக்கு விருதுகளும், பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    விழாவில் 300-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களும், 25-க்கும் மேற்பட்ட கவ்டெசி தொண்டு நிறுவன பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கவ்டெசி தொண்டு நிறுவன அலுவலகப் பணியாளர்கள் சுபாஷினி, கோமதி, கனேஷ்வரி, ஆர்த்தி, ரூபன் ஆகியோர் செய்திருந்தனர்.

    விழா நிறைவில் வினோபாஜி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாஸ்கர் நன்றி கூறினர்.

    ×