என் மலர்
நீங்கள் தேடியது "International kite festival"
- சர்வதேச பட்டம் விடும் திருவிழா 4 நாட்கள் நடைபெற்றது.
- கடைசி நாளான நேற்று மக்கள் குவிந்ததால் இசிஆரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், குளோபல் மீடியா பாக்ஸ் தனியார் நிறுவனமும் இணைந்து 4 நாட்கள் நடத்திய சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று இரவுடன் நிறைவடைந்தது.
கடைசி நாளான நேற்று ஏராளமான மக்கள் குவிந்ததால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து, உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் தமிழகம், குஜராத், ஒடிசா, பஞ்சாப், கோவா பகுதிகளில் இருந்து வந்திருந்த பட்டம் விடும் கலைஞர்களுக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மாமல்லபுரம் கடற்கரை கோவில் சிலையை பரிசாக வழங்கி பாராட்டினார்.
சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
- தாய்லாந்து, அமெரிக்கா, மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
- வெளிநாடுகளில் நடப்பதைப் போல ராட்சத உருவங்களில் பாராசூட்களுக்கு பயன்படுத்தும் நைலான் மெட்டிரியலில் இந்தக் காற்றாடிகள் பறக்கவிடப்பட உள்ளன.
மாமல்லபுரம்:
சர்வதேச காற்றாடி திருவிழா ஆகஸ்டு மாதம் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இரண்டாவது ஆண்டாக இந்த திருவிழா மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.
காற்றாடித் திருவிழாவில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
தாய்லாந்து, அமெரிக்கா, மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
வெளிநாடுகளில் நடப்பதைப் போல ராட்சத உருவங்களில் பாராசூட்களுக்கு பயன்படுத்தும் நைலான் மெட்டிரியலில் இந்தக் காற்றாடிகள் பறக்கவிடப்பட உள்ளன.
வெளிநாடுகளில் டிராகன், யானை, குதிரை போன்ற உருவங்கள், கார்ட்டூன் கேரக்டர்கள் உள்ளிட்ட காற்றாடிகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் பல வண்ணங்களில் 4 நாட்கள் காற்றாடி திருவிழா நடைபெற உள்ளது.
3 அடி முதல் சுமார் 20 அடி வரையிலான காற்றாடிகள் மாமல்லபுரத்தில் பறக்கவிடப்படும் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.