என் மலர்
நீங்கள் தேடியது "Internet service"
- 10,000 அடி உயரத்திற்கு மேல் விமானத்தில் பறக்கும்போதே அதிவேக இணைய சேவையை பயன்படுத்த முடியும்.
- வை-ஃபை இயங்கும் அனைத்து கருவிகளிலும் இந்த இலவச இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.
டாடா குழுமத்துக்கு சொந்தமான இந்தியாவின் பிரபல விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
உள்நாட்டு வழித்தடங்களில் விமானத்தில் வைஃபை இணைப்பை வழங்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. இதன்படி உள்நாட்டு விமானத்தில் இன்பிளைட் இன்டர்நெட் வழங்கும் இந்தியாவின் முதல் விமான நிறுவனமாக ஏர் இந்தியா மாறியுள்ளது.
இந்த சேவையின் மூலம், 10,000 அடி உயரத்திற்கு மேல் விமானத்தில் பறக்கும்போதே அதிவேக இணைய சேவையை பயன்படுத்த முடியும்.

ஏர் இந்தியாவின் கூற்றுப்படி, பயணிகள் ஏர்பஸ் ஏ350, போயிங் 787-9 மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏர்பஸ் ஏ321நியோ விமானங்களில் உள்நாட்டு வழித்தடங்களில் இந்த இலவச வைஃபை இணைய சேவையைப் பெறலாம்.
பயணிகள் தங்கள் லேப்டாப், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட வை-ஃபை இயங்கும் அனைத்து கருவிகளிலும் இந்த இலவச இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.

இந்த சாதனங்களை 'ஏர் இந்தியா வைஃபை' நெட்வொர்க்குடன் இணைத்து தங்கள் PNR மற்றும் கடைசி பெயரை உள்ளிட்டு பயணிகள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
முன்னதாக நியூயார்க், லண்டன், பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற சர்வதேச தடங்களில் பயணிகளுக்கு ஏர் இந்தியா இந்த புதிய வைஃபை வசதி சோதனையை நடத்தியதைத் தொடர்ந்து தற்போது இந்த சேவை விரிவாக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் செயல்பட GMPCS உரிமம் (செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமம்) தேவை.
- ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நெருக்கடியாக அமையும்.
இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்கும் உரிமத்தை பெற மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளை எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் ஏற்றுக்கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் இந்திய தொலைத்தொடர்பு சேவை சந்தையில் ஸ்டார்லிங்க் விரைவில் இணைய உள்ளது.
இந்தியாவில் செயல்படுவதற்கான GMPCS உரிமம் என்றும் அழைக்கப்படும் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை வழங்க டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை மத்திய அரசு விதித்திருந்தது.
அதன்படி பயனர்களின் தரவுகளை இந்தியாவிலேயே சேமிக்கவும் தேசிய பாதுகாப்புகளுக்குத் தேவைப்படும்போது புலனாய்வு அமைப்புகளுக்கு ஸ்டார்லிங்க்-ன் அணுகலை வழங்கவும் வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது.

இன்னும் ஸ்டார்லிங்க் எழுத்துப்பூர்வமாக இதை உறுதி செய்யவில்லை என்றாலும் இந்தாண்டு இறுதிக்குள் செயற்கைக்கோள் ஸ்டார்லிங்க் இணைய சேவைகள் இந்தியாவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
நேரடியாக சாட்டிலைட் மூலம் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை ஸ்டார்லிங்க் வழங்குவதால் டவர் பயன்பாடு குறையும்.
ஸ்டார்லிங்க் வருகை இந்தியாவில் கோலோச்சி வரும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நெருக்கடியாக அமையும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

- இந்தியாவிலும் இந்த வருட இறுதிக்குள் ஸ்டார்லிங்க் சேவைகளை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.
- 25 Mbps முதல் 110 Mbps வரை பதிவிறக்க வேகம் கிடைக்கும்.
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் மூலம் இணையதள வசதியை வழங்கி வருகிறது.
பல்வேறு நாடுகளில் ஸ்டார்லிங்க் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இந்த வருட இறுதிக்குள் ஸ்டார்லிங்க் சேவைகளை அறிமுகப்டுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்தியாவின் பாதுகாப்பு விதிமுறைகளை ஏற்பதில் ஸ்பேஸ் எக்ஸ் தாமதிப்பதால் ஸ்டார்லிங்க் சேவைகான ஒப்புதலில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்டை நாடான பூடானில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
25 Mbps முதல் 110 Mbps வரை பதிவிறக்க வேகத்தையும், 5 Mbps முதல் 10 Mbps வரை பதிவேற்ற வேகத்தையும் வழங்கும் அன்லிமிடெட் டேட்டாவை உள்ளடக்கிய மாதாந்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்து.
இதற்கான கட்டணமாக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.4,167 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
- ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
- மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்காமல் இருந்தது.
எலான் மஸ்க்கின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த சேவையை இந்தியாவிற்கு கொண்டு வர தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதை ஏர்டெல் நிறுவனம் இன்று (செய்வ்வாய்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் ஸ்பேஸ்எக்ஸ், இந்தியாவில் ஸ்டார்லிங்க்கை விற்பனை செய்வதற்கான அங்கீகாரங்களைப் பெறுவதற்கு உட்பட்டது என்று அறிக்கையில் ஏர்டெல் தெரிவித்துள்ளது.
மேலும், ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாவும் ஏர்டெல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .
முன்னதாக இந்தியாவில் செயல்படுவதற்கான GMPCS உரிமம் என்றும் அழைக்கப்படும் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை பெற மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்காமல் இருந்தது.
இதற்கிடையே கடந்த மாதம் விதிகளுக்கு உட்பட்டு ஸ்பேஸ் எக்ஸ் கையெழுத்திட்டு உரிமத்தை விரைவில் பெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது முதற்கட்டமாக ஏர்டெல் உடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் தொடர்பான தகவல்கள் வாட்ஸ்அப், பேஸ்புக் குறுஞ்செய்திகள் மூலமாக பொதுமக்கள் மத்தியில் பரவியது. இதனால் ஏற்பட்ட பதட்டத்தை தணிக்கும் விதமாக தமிழக அரசு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய தள சேவையை ரத்து செய்தது.
இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். ஆன்லைன் மூலம் நடைபெறும் சேவைகள் பாதிக்கப்பட்டன. வங்கி பணபரிவர்த்தனைகளும் பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இனையதள சேவையை தொடங்க வலியுறுத்தி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வாறு கலெக்டர் கூறினார். #SandeepNanduri #Thoothukudi
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக புறப்பட்டது முதல் போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூடு, கல்வீச்சு, பலியானவர்களின் புகைப்படம் என பல்வேறு விவரங்கள் வாட்சாப், பேஸ்புக், டுவிட்டர் என சமூக வலைதளங்கள் மூலமாக எளிதில் பரவின. இதன் உச்சகட்டமாக துப்பாக்கி சூடு நடத்திய சீருடை அணியாத போலீசார் கலெக்டருடன் சேர்ந்து எடுத்த புகைப்படமும் வலைதளங்களில் வெளியானது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
போராட்டத்துக்கு ஆதரவான, அரசுக்கும், போலீசாருக்கும் எதிரான பதிவுகளே சமூக வலைதளங்களில் அதிகம் இடம்பெற்றது. இதன் எதிரொலியாக போராட்டத்தை முடக்கவும், போராட்டக்காரர்களிடம் விவரங்கள் செல்லாமல் இருக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இணையதள முடக்கம். வன்முறை பரவாமல் இருக்க நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் வருகிற 27-ந்தேதிவரை 5 நாட்களுக்கு இணையதள சேவையை அரசு முடக்கியுள்ளது.
அரசால் சாதாரணமாக செய்து விட்ட இந்த நடவடிக்கை நெல்லை உள்ளிட்ட தென்மாவட்ட மக்களை கலங்க செய்துவிட்டது. ஏற்கனவே மக்களின் அன்றாட அனைத்து உபயோகங்களிலும் கணினி பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. எந்த அலுவலகம் இயங்கவேண்டும் என்றாலும், கணினியும், இணையமும் தேவை. இதயம் போன்ற இணையம் முடக்கப்பட்டது மக்களை பெரிதும் பாதித்து விட்டது எனலாம். இன்றைய சூழலில் பிறப்பு முதல் இறப்பு வரை கணினி தேவை என ஆகிவிட்டது.
குழந்தை பிறந்ததும் பிறப்புசான்றிதழ் கணினி மூலமே வழங்கப்படுகிறது. அந்த குழந்தை வளர்ந்ததும் சாதி சான்றிதழ், கல்விக்கான சான்றிதழ்கள், உயர்கல்வியில் சேர சான்றிதழ்கள் அனைத்துமே கணினி மூலமே பெறப்படுகிறது. மேலும் மின் கட்டணம், வங்கி பண பரிவர்த்தனைகள் அனைத்துமே ஆன்லைன் மூலமே செய்யப்படுகிறது. இந்த பணிகள் அனைத்துமே தற்போது முடங்கியுள்ளன.
பணமில்லா பரிவர்த்தனை எனப்படும் நெட் பேங்கிங் பயனற்று போனது. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா முழக்கம் கேள்விக்குறியாகிவிட்டது. சமீபத்தில் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த முயற்சிகளை ஆன்லைன் மூலமே மேற்கொள்வார்கள். அதேபோல என்ஜினீயரிங், கல்லூரி விண்ணப்பங்கள் அனைத்துமே இப்போதுஆன்லைன் மூலமே அனுப்பப்படுகிறது.
இணையதள சேவை முடக்கத்தால் இந்த பணி முற்றிலும் பாதிக்கப்பட்டு மாணவர்கள் கலங்கும் நிலை உருவாகியுள்ளது. நாடு முழுவதும் வங்கிகள் அனைத்துமே கோர்பேங்கிங் முறைப்படி இணையம் மூலமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இணையம் நின்றுபோனதால் வங்கிப்பணிகளுமே முடங்கிவிட்டன. ஏ.டி.எம் எந்திரங்களும் நெட் ஒர்க் கிடைக்காமல் பணம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.
ஓரிரு ஏ.டி.எம்கள் மட்டுமே செயல்பட்டன. இதனால் ஏ.டி.எம் மையங்களில் மக்கள் காத்து நிற்கும் நிலை உண்டானது. இ-சேவை மையங்களும் சில மையங்களே செயல்பட்டன. ரெயில்வே கேபிள் மூலமாக வரக்கூடிய இணையதள சேவையும் முடங்கியதால் ரெயில் வருவது, புறப்பட்டு செல்வது போன்ற தகவல்கள் பெற முடியாமல் மக்கள் தவித்தனர்.
இணையதள சேவை முடங்கியதால் மாணவர்களால் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. மாவட்டத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்கள், தனியார் இன்டர்நெட் மையங்களிலும் பணிகள் முடங்கியுள்ளன. இ-சேவை மையங்கள் மூலமாக சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் அட்டை சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இணையதளம் மூலமாக மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளுமே முடங்கியுள்ளன. எனவே அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இணையதள சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள். இதுபற்றி பொதுமக்கள் தரப்பில் கூறும்போது,” ஏற்கனவே ஸ்டெர்லைட் பிரச்சினை, துப்பாக்கி சூடு, தடியடி சம்பவங்கள் காரணமாக அரசு மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் இணையதள சேவையையும் முடக்கியிருப்பது பொதுமக்கள் மற்றும் நடுநிலையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அரசு உடனடியாக இணையதள சேவையை தொடங்கவேண்டும்“ என்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றம் நிலவி வருவதை தவிர்ப்பதற்காக தமிழக அரசு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களிலும் இணையதள சேவையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு உள்ளது.

தற்போது என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு மாணவர்கள் சேர்க்கைக்காக விண்ணப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இணையதளம் மூலமாகவே மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டதால், மாணவர்களால் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை.
அண்ணா பல்கலைக்கழகம் நெல்லை மண்டல அலுவலகம், நெல்லை அரசு பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர்கள் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு சேவை மையங்கள், தனியார் இண்டர்நெட் மையங்களிலும் இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பெயர் மாற்றம், ஆதார் அட்டை இணைப்பு, முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. ரெயில் டிக்கெட், பத்திரப்பதிவு ஆகியவைகளும் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும், வங்கிகளின் பணப்பரிவர்த்தனை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வங்கிகளுக்கு வந்தவர்கள் காசோலை, வரைவோலை எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். #sterliteprotest
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

போராட்டத்திற்கு ஆதரவாகவும், அரசு மற்றும் போலீசாருக்கு எதிரான பதிவுகளையும் ஏராளமானோர் பதிவிட்டனர். இதனால் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவியது.
போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்பட்டாலும் தொடர்ந்து தூத்துக்குடி பகுதியில் நடைபெறும் சம்பவங்கள் உடனடியாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. இதன் தாக்கத்தை போலீசார் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இதையடுத்து வன்முறை பரவாமல் இருப்பதற்காக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு (27-ந் தேதி வரை) இணையதள சேவையை நிறுத்தி தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணி முதல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைய தள சேவை முற்றிலும் முடங்கியது.
ஆனால் தொலைபேசி சேவையில் எந்தவித பாதிப்பும் இல்லை. வழக்கம் போல் மற்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பேச முடிகிறது.
இணையதள சேவை முடங்கியதால் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவை சமூக வலை தளங்களில் பதிவிடுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில் ரீதியாக இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். #sterliteprotest