search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Invasions"

    • திருப்பூா் சாலை பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து பிரமாண்ட முறையில் கடைகளை அமைத்துள்ளன.
    • காங்கயம் நகரின் பிரதான சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    காங்கயம்:

    காங்கயம் நகரின் பிரதான சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து பாரதிய கிசான் சங்க மாவட்ட துணைத் தலைவா் மு.பெரியசாமி, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:- காங்கயம் நகரில் பல்வேறு இடங்களில் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக காங்கயம் பேருந்து நிலையம் அருகில், திருப்பூா் சாலை பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து பிரமாண்ட முறையில் கடைகளை அமைத்துள்ளன.இதனால், அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதுடன், பாதசாரிகளும் அவதியடைந்து வருகின்றனா்.

    எனவே, திருப்பூா் சாலை பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களின் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, சாலையை ஆக்கிரமித்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சிதம்பரம் ரத வீதிகள் மற்றும் சுற்றியுளள பகுதி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
    • நெடுஞ்சாலைத் துறையினரால் அகற்றப்படுமென வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலூர்:

    கோவில் நகரமான சிதம்பரத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதாமேனன் தலைமையில் வர்த்தக சங்கத்தினர், சிதம்பரம் நகராட்சியினர், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் பொதுநல அமைப்பினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிதம்பரம் ரத வீதிகள் மற்றும் சுற்றியுளள பகுதி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நெடுஞ்சாலை த்துறை உதவி பொறி யாளர் விஜய ராகவன் தலைமை யிலான ஊழியர்கள் ஜே.சி.பி. பொக்லைன் எந்திரங்க ளின் உதவியுடன் சிதம்ப ரம் ரத வீதிகளில் உள்ள சாலைகளில் ஆக்கிரமி ப்புகளை அகற்றும் பணியில் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளாவிட்டால், நெடு ஞ்சாலைத் துறையினரால் அகற்றப்படுமென வருவாய்த் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • Removal of encroachments on houses built encroaching on streets in Veypur
    • ஆக்கிரமிப்புகளை அகற்றி அதில் வடிகால் வாய்க்கால் கட்ட தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சியில் கிராம தெரு என்பது கடந்த காலங்களில் மிகவும் அகலமானதாக இருந்துள்ளது. நாளைடைவில் வீடு கட்டியவர்கள் தங்களது வீடுகளை தங்களது பட்டா இடத்தை தாண்டி தெருக்களை ஆக்கிரமித்து பலர் வீடு கட்டியிருந்தனர்.

    இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தெருவில் தேங்கி நின்றது. அப்படி தேங்கி நிற்கும் தண்ணீர் வெளியேறவும் வழியில்லை . இக்குறைகளை போக்க ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி திருஞானம், துணை தலைவர் மஞ்சுளா செல்வராஜ், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றி வேப்பூர் கிராம தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதில் வடிகால் வாய்க்கால் கட்ட தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதன் படி ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஊராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுத்தும் அவர்கள் அகற்றாததால் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்ற பட்டன.இதனால் வேப்பூரில் சிறிது நேரம் பரபரப்பு எற்பட்டது.

    • பெரம்பலூரில் உழவர் சந்தை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது
    • பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு உழவர் சந்தைகளை சுற்றி 100 மீட்டர் தூரத்திற்கு கடைகள் எதுவும் இருக்க கூடாது என்ற அரசின் உத்தரவை அமுல்படுத்த கோரி கலெக்டர் கற்பகம் உத்தரவி ட்டிருந்தார்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் உழவர் சந்தை அருகில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த தரைக்கடைகள் நேற்று அகற்றம் செய்யப்பட்டது. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடந்தது. பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு உழவர் சந்தைகளை சுற்றி 100 மீட்டர் தூரத்திற்கு கடைகள் எதுவும் இருக்க கூடாது என்ற அரசின் உத்தரவை அமுல்படுத்த கோரி கலெக்டர் கற்பகம் உத்தரவி ட்டிருந்தார். இதன்படி நகராட்சி ஆணையர் (பொ) ராதா தலைமையில் நகராட்சி பணியாளர்கள் உழவர் சந்தை அருகில் ஆக்கி ரமித்து கட்டப்ப ட்டிருந்த தரைக்கடைகளை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு சார்பில் மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட தரைக்கடை வியபாரிகள் கலந்து கொண்டனர்.

    • சுடுகாட்டுப்பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அப்புறப்படுத்தினர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூரில் சுடுகாட்டிற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனால் சுடுகாட்டிற்கு செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. எனவே அப்பகுதி மக்கள் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வேப்பந்தட்டை மண்டல துணை தாசில்தார் தங்கராசு மற்றும் கை.களத்தூர் போலீசார் இணைந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அப்புறப்படுத்தினர்.



    • தொட்டியம் பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன
    • நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் தேர்வுநிலை பேரூராட்சி 8-வது வார்டு பண்டிதர்த் தெருவில் நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்புகள் இருந்துள்ளது. இதை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கோரிக்கையை ஏற்று பேரூராட்சி கவுன்சிலர்கள் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்றினர். இதை தொடர்ந்து சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


    • வருவாய் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோவில்வழியில் ஆய்வு நடத்தினர்.
    • நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்கள் அளவீடு செய்து எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளது

    திருப்பூர் : 

    திருப்பூர் தாராபுரம் ரோடு கோவில்வழி பஸ் நிலையம் நிழற்குடை அருகே குடியிருப்பு பகுதி, கடைகள் நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்பில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறைக்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் மனு அளித்திருந்தனர்.

    இதையடுத்து வருவாய் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோவில்வழியில் ஆய்வு நடத்தினர்.

    அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் அளித்த புகாரை தொடர்ந்து ஆவணங் களில் உள்ளவற்றுக்கு மாறாக ஏதேனும் குடியிருப்புகள் ஆக்கிரமிப்பில் உள்ளதா என்பது குறித்த ஆய்வு நடத்தப்பட்டது .நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்கள் அளவீடு செய்து எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளது.விரைவில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் என்றனர். 

    • மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதாக புகார்
    • உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தகவல்

    நெமிலி:

    நெமிலி அடுத்த பரமேஸ்வர மங்களத்தில் தென்றல் நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    பல வருடங்களாக வசித்து வரும் இந்த பகுதியில் சிமெண்ட் சாலை வசதி இல்லை இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல தேங்கி இருக்கிறது.

    மேலும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா டெங்கு போன்ற விஷக் காய்ச்சல் பரவுகிறது. இந்த வழியாக ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி கல்லூரி வாகனங்கள் கூட செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்ப டுகின்றனர்.

    தென்றல் நகர் வரும் வழியில் நீர் நிலை கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் வழி குறுகலாக உள்ளது. எனவே நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நெமிலி பி.டி.ஓ. அலுவலகம் சென்று ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, துணை சேர்மன் தீனதயாளன் மற்றும் பி.டி.ஓ. சிவராமன் முன்னிலையில் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் வருவாய் துறை அதிகாரியிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    • திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக விவசாயிகள் வந்தனா்.
    • திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலங்களில் பலமுறை மனு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் தெற்கு அவிநாசிபாளையம் செங்காட்டுபாளையம் பகுதியில் பி.ஏ.பி. கிளை கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, நீா் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். நீா் இல்லாததால் விவசாயிகள் உள்பட பலா் சிரமத்தை சந்தித்து வருகின்றனா் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சாா்பில், திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலங்களில் பலமுறை மனு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இருப்பினும், உரிய நடவடிக்கை எடுக்காததால், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்துவதாக விவசாயிகள் சாா்பில் அறிவிக்கப்பட்டது.அதன்படி, திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக விவசாயிகள் வந்தனா்.

    இதற்கிடையே, போராட்டத்துக்கு வந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி, விவசாயிகளுடன் வட்டாட்சியா் கோவிந்தராஜ் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.இதில், பி.ஏ.பி. வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்பட்டு, விவசாயிகளுக்கு நீா் கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தாா்.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட வந்த விவசாயிகள் கலைந்து சென்றனா்.

    • கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பூங்கா திறக்கப்படாமல் உள்ளது.
    • பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி எல்லையில் ஆண்டிபாளையம் குளம் உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளம் மாநகராட்சி நிர்வாகம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.இதன் அருகே சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, வெற்றி அமைப்பு உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் முயற்சியால் சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.கடந்த 2 ஆண்டாக கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பூங்கா திறக்கப்படாமல் உள்ளது.

    இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குளத்தின் கரையில், தூய்மை காக்கும் உறுதிமொழியேற்பு நடந்தது.மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் கிராந்திகுமார் முன்னிலை வகித்தனர். மண்டல குழு தலைவர், கவுன்சிலர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து குளத்தின் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றி சுத்தம் செய்யும் பணி துவங்கியது.நீண்ட நாள் திறக்கப்படாமல் உள்ள சிறுவர் பூங்காவை மேயர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். சீரமைப்பு பணிகள் செய்து பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    ×